நெற்றிக்கண்
Tuesday, May 10, 2011
Fish
Fish: "Add a touch of nature to your page with these hungry little fish. Watch them as they follow your mouse hoping you will feed them by clicking the surface of the water."
ஆ. ராசாவின் சிறை வாழ்க்கை தகவல்கள்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இரவில் ஒரு போர்வையின் மீது மட்டுமே படுத்து உறங்குகிறார். சிறைக்குள் இவரின் ஒவ்வொரு பொழுதும் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சி கூடம், நூலகத்துக்கு இவரை அனுப்புவதில்லை.
காலை 6.30 மணிக்கு ஒரு கப் டீயும், 2 ரொட்டி துண்டுகளும் கிடைக்கும்.
காலை 9 மணிக்கெல்லாம் குளித்து தயாராகிவிட வேண்டும். இரண்டே இரண்டு சப்பாத்திகள் டிபனுக்கு கிடைக்கும். கொஞ்சம் சாதம், பருப்பு, காய்கறி பொரியல் கிடைக்கும். அதை மதிய உணவாக காலை 9 மணிக்கே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
நண்பகலில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார். பின்னர் மாலை 3 மணி வரை சிறை அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பார்.
இந்த நேரத்தில் அவர் படிக்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம். மாலை 3 மணிக்கு 2 பிஸ்கட்டும் ஒரு கப் டீயும் வழங்கப்படும்.
மாலை 6 மணிக்கெல்லாம் இரவு உணவை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுவார்.

25000 பேர் ”ஓ” போட்டார்கள்
சென்னை: சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுவதும், 24 ஆயிரத்து 591 பேர், "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். சட்டசபை தேர்தலில், அதிகபட்சமாக கீழ்வேளூர் தொகுதியில், 91.89 சதவீதமும், குறைந்தபட்சமாக, துறைமுகம் தொகுதியில், 63.65 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந் த சட்டசபை தேர்தலில், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதற்காக, "49 ஓ' வாய்ப்பை, 24 ஆயிரத்து 591 பேர், பதிவு செய்துள்ளனர். இதில், கே.வி.குப்பம் தொகுதியில் பதிவானவர்கள் விவரம் வரவில்லை. நெய்வேலி, ரிஷிவந்தியம், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருது நகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஒருவர் கூட, "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
மாவட்ட வாரியாக, "49 ஓ' பயன்படுத்தியவர்கள் விவரம் வருமாறு:
திருவள்ளூர் 1,347
சென்னை 3,407
காஞ்சிபுரம் 1,391
வேலூர் 464
கிருஷ்ணகிரி 381
தர்மபுரி 252
திருவண்ணாமலை 209
விழுப்புரம் 280
சேலம் 940
நாமக்கல் 530
ஈரோடு 1,133
திருப்பூர் 1,796
நீலகிரி 1,306
கோவை 3,061
திண்டுக்கல் 554
கரூர் 335
திருச்சி 1,046
பெரம்பலூர் 203
அரியலூர் 106
கடலூர் 430
நாகப்பட்டினம் 377
திருவாரூர் 181
தஞ்சை 543
புதுக்கோட்டை 331
சிவகங்கை 233
மதுரை 783
தேனி 336
விருதுநகர் 269
ராமநாதபுரம் 209
தூத்துக்குடி 879
திருநெல்வேலி 1,109
கன்னியாகுமரி 170
திருவாரூர் தொகுதியில் 59 பேரும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 31 பேரும், கொளத்தூர் தொகுதியில் 209 பேரும், மயிலாப்பூர் தொகுதியில் 260 பேரும், "49 ஓ' வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர். மொத்த ஓட்டுப்பதிவை பொறுத்தவரை, துறைமுகம் தொகுதியில் தான் மிகக் குறைவாக 63.65 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கீழ்வேளூர் (தனி) தொகுதியில் 91.89 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இதில், 88.23 சதவீதம் ஆண்கள்; 95.57 சதவீதம் பெண்கள். அதிகபட்சமாக, 86 சதவீதம் ஓட்டுக்கள் பதிவான கரூர் மாவட்டத்தில், குளித்தலை தொகுதியில் தான் அதிகமாக 88.66 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 2.88 லட்சம் அரசு ஊழியர்கள், 66 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கியோர், தபால் ஓட்டு போட்டு உள்ளனர். இந்த தபால் ஓட்டுக்கள், இன்னும் வந்து சேரவில்லை. எட்டு ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெரிந்த பின் தான், முழுமையான ஓட்டுப்பதிவு சதவீதம் வெளிவரும். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.
மேலும் ஒரு ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு: இதுபற்றி பிரவீன்குமார் கூறியதாவது: சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி, ஊராட்சி தொடக்கப் பள்ளி, எண் 2ஏவி என்ற ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழு ஓட்டுச்சாவடிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடப்பது போல, இந்த ஓட்டுச்சாவடிக்கும் ஓட்டுப்பதிவு நடக்கும். தொகுதியில் பதிவான மொத்த ஓட்டுப்பதிவு சதவீதத்தில் 15 சதவீதம் அதிகமாகவோ, குறைவாகவோ பதிவான ஓட்டுச்சாவடிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில், புளியம்பட்டியில், ஏஜன்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையிலும், பார்வையாளர் செய்த ஆய்வில், வாக்காளர்களை ஏஜன்ட்கள் ஓட்டு இயந்திரத்துக்கு அருகே அழைத்துச் சென்றதும், ஓட்டுப் போட உதவியதும், வீடியோவில் பதிவாகி இருந்தது. இதை ஓட்டுச்சாவடியின் தேர்தல் அதிகாரி தடுக்கவில்லை. மேலும், தனது டைரியில் இதுபற்றி குறிப்பிடவும் இல்லை. எனவே, அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, வாக்காளர்களுக்கு உதவிய ஏஜன்ட்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த ஓட்டுச்சாவடியில் மொத்தமுள்ள 855 ஓட்டுக்களில், 782 பதிவாகி இருந்தன. எனினும், மறு ஓட்டுப்பதிவின் போது, ஓட்டுப் போடாதவர்களும் ஓட்டுப் போடலாம். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

2ஜி வழக்கு: ஆஜராவதில் கனிமொழிக்கு விலக்கு
புதுடெல்லி, மே 10,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மே 12 மற்றும் 13 ஆகிய இருநாட்களுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், தமிழக முதல்வரின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் தங்களை சிபிஐ கைது செய்யாமல் இருக்க நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், மே 14-ம் தேதிக்கு உத்தரவை ஒத்திவைத்தது. அதுவரை இருவரும் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கனிமொழியும் சரத்குமாரும் மே 7-ல் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று ஆஜரான இருவரும் விலக்கு கோரும் மனுவை மீண்டும் புதிதாக தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் மே 12, 13 ஆகிய இருநாட்களுக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளித்தார்.
நன்றி : ஜூனியர்விகடன்
2009 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் விளையாடிய ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம்..!
என் இனிய தமிழ் மக்களே..!
2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் பணம் எப்படி நடமாடியது என்பதற்கு ஆதாரமாக, ஒரு வாக்குமூலத்தை எடுத்துப் போடுகிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!
'நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், பண நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது, தேர்தல் ஆணையம்.
ஆனால், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முழுமையான பண பலத்தோடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் பண விளையாட்டுக்கும், 2-ஜி ஊழலுக்கும் நேரடித் தொடர்பு உண்டு’ என்று அதிகார வட்டாரம் சொல்கிறது.
ஆ. ராசா - கனிமொழி சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கிய முக்கிய சாட்சி ஒருவரின் வாக்குமூலத்தை இந்தப் பண விளையாட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெரம்பலூர் துரைமங்களம், கவின் அமிர்தராஜ், சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவரும் விருகம்பாக்கத்தில் 'ஸ்ரீ’ என்கிற பெயரில் தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தும் வரதராஜ், டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் போன்றவர்கள், 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படியில்தான், பண விவகாரம் பற்றி பல பரபரப்பான விவரங்கள் டெல்லி வட்டாரத்தில் அடிபட ஆரம்பித்து உள்ளன. இது குறித்த முன்னோட்டமான தகவலை, 7.11.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலேயே கழுகார் சொல்லி இருந்தார். இப்போது, அதெல்லாம் சி.பி.ஐ-யின் குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்று உள்ளது.
''2009-ம் ஆண்டு ஒரு டவேரா வாகனத்தின் மூலம், சென்னை அண்ணா சாலையில் உள்ள மிகப் பிரபலமான கட்டடத்தில் இருந்து, 23 பெட்டிகளில் பணம் கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு கட்டடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது!'' என்கிறது சி.பி.ஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அந்த வாக்குமூலங்கள்.
2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை கலைஞர் டி.வி-க்கு 200 கோடியை, டி.பி. ரியாலிட்டி பல தவணைகளில் கொடுத்தது என்று சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் சொல்லி இருக்கிறது. கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட 200 கோடி, வங்கி வழியாக சென்றதால், பெட்டிகள் நடமாட்டத்துக்கும் அதற்கும் நேரடி சம்பந்தம் இருக்க முடியாது. ஆனால், அப்போது நடந்த தேர்தலுக்கும், டவேரா வாகனத்தில் பறிமாறப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. ஆனால், அதிலும் 'ஸ்பெக்ட்ரம்' புகழ் டி.பி. ரியாலிட்டி நிறுவனம் சம்பந்தப்பட்டு இருப்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
டி.பி. ரியாலிட்டியைச் சேர்ந்த அஸ்ரஃப், சென்னைக்கு வந்தாராம். அவர் பயணம் செய்வதற்காக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கவின் அமிர்தராஜ் ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளார். அந்த காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், அதாவது 2009, மே 10 அன்று நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் தனது குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. குறிப்பிட்டு உள்ளது.
டவேரா வாகன டிரைவர் சொல்லும் தகவல் இதுதான்...
''அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மும்பையில் இருந்து வந்த அஸ்ரஃபையும், அவருடன் வந்த சிலரையும் அழைத்துக் கொண்டு நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய கட்டடத்துக்குச் சென்றேன். அங்கே இருந்த பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை(ஈ.வெ.ரா.சாலை) சந்திப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்டடத்துக்கு நான்கு தடவைகள் போய் வந்தேன்.
முதல் டிரிப்பில், 7 பெட்டிகள்; 2-வது டிரிப்பில் 4 பெட்டிகள்; 3-வது டிரிப்பில் 8 பெட்டிகள்; 4-வது டிரிப்பில் 4 பெட்டிகளை கொண்டு சென்றேன். அந்த 4-வது டிரிப்பில் 3 பெட்டிகளை மட்டுமே அந்தக் கட்டடத்துக்குள் கொண்டு சென்றேன். ஒரு பெட்டி மட்டும் காரிலேயே இருந்தது. அந்தப் பெட்டியை யாரோ ஒருவர் வாங்கிச் செல்வார் என்று சொன்னதால் இறக்கவில்லை.
ஒவ்வொரு பெட்டியையும் இறக்கி, கட்டடத்துக்குள் கொண்டு போனபோது, அந்தப் பெட்டிகளுடன் அஸ்ரஃப் மற்றும் மூன்று பேர்கள் கூடவே பாதுகாப்புக்காகப் போனார்கள். ஒரு பெட்டி வாகனத்தில் அப்படியே இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் நான்காவது பெட்டியுடன் டவேரா வாகனத்தைக் காணவில்லை!'' என்று அந்த டிரைவர் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சி.பி.ஐ. வட்டாரம் கூறுகிறது.
பணம் கடத்தியவர்கள் விசாரித்தபோது டிரைவர், 'நான் பாத்ரூம் போனேன். திரும்பி வந்தபோது, காரைக் காணவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். உடனே, அண்ணா சாலை அலுவலகத்துக்கும், க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்கும் அந்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்.
அஸ்ரஃப், உடனே இந்த சம்பவத்தை, மும்பையில் இருந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் அகர்வாலுக்கு (இவர் இப்போது கைதாகி சிறையில் இருக்கிறார்.) சொல்லி இருக்கிறார். காணாமல் போன பெட்டியில் மட்டுமே நாலு கோடி ரூபாய் இருந்ததாக அவர்கள் பேசிக் கொண்டார்களாம். இதன்படி பார்த்தால், மொத்தமாக 23 பெட்டிகளில் சுமார் 92 கோடி ரூபாய்வரை இருந்து இருக்கலாம் என்கிறது சி.பி.ஐ.
பணத்துடன் வாகனம் காணாமல் போனதில், வாகன ஓட்டுநர் மீதே க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸுக்கும், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் சந்தேகம். அதனால், டிரைவரைப் பிடித்துக் கொண்டனர். 'பணமும் காரும் எங்கே?’ என்று கேட்டு தொடர்ந்து சில நாட்கள் தங்கள் கஸ்டடியில் வைத்து டிரைவரை செமத்தியாகக் கவனித்து இருக்கிறார்கள். அவர் சம்பந்தப்பட்ட இடங்களிலும் பணத்தைத் தேடி இருக்கிறார்கள். ஆனால், பலன் கிடைக்கவில்லை. அதன் பிறகே, அந்த டிரைவரை போலீஸிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.
போலீஸ்காரர்கள் கடுமையாக மிரட்டியும், டிரைவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. அதனால், மீண்டும் டிரைவரை க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தாரே, தங்கள் கஸ்டடிக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்த 2009 மே 13 அன்று டிரைவரை அழைத்துச் சென்ற கவின் அமிர்தராஜ், அந்த டிரைவரை வைத்தே, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கார் திருடு போனது குறித்து புகார் கொடுக்கவைத்தார். ஆனால், அதில் பணம் இருந்ததாகச் சொல்லவில்லை. அதன் பிறகு, மும்பையில் இருந்து வந்திருந்த ராஜீவ் அகர்வாலிடம், டிரைவரை அழைத்துப் போய் இருக்கிறார். டிரைவர் மீது பரிதாபப்படுவதுபோல் நடித்த அகர்வால், அவரை அனுப்பி விட்டாராம்.
அதன் பிறகு டிரைவரை சுதந்திரமாகவிட்டார்கள் என்றாலும், க்ரீன் ஹவுஸ் ஆட்கள் பின் தொடர்ந்து உள்ளார்கள். 'நிச்சயமாக இந்த வாடகை கார் டிரைவர்தான் பணப் பெட்டியைக் கடத்துவதற்காக, கார் திருடு போனதாக நாடகம் ஆடுகிறார்’ என்றே இவர்கள் நம்பி இருக்கிறார்கள்.
அதனால், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம், சொல்லி அதை விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். 'எங்களுடைய பணத்தை, இந்த டிரைவர் திருடி மறைத்துவிட்டார். அதனால், அவரைத் தீவிரமாகக் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று அந்த ஏஜென்சிக்கு மனு கொடுத்தார்கள்.
காணாமல்போன டவேரா வாகனம் 25 நாட்களுக்குப் பிறகு, சென்னை மூலக்கடைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 'வாகனம் கிடைத்துவிட்டதால், நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று அந்த டிரைவரை வற்புறுத்தி இருக்கிறார்கள்.
டிடெக்டிவ் ஏஜென்ஸியும் சில உண்மைகளைக் கண்டுபிடித்தது. மாத ஊதியம் வாங்கும் இந்த டிரைவரின் வாழ்க்கைத் தரத்தில் எதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கண்காணித்து, சில தகவல்களைக் கொடுத்தது.
அந்த டிரைவரின் சகோதரரும் ஒரு கார் டிரைவர். ஆனால், அவர் திடீரென நான்கு கார்கள் வாங்கி இருப்பதோடு, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியது தெரிய வந்தது. அண்ணன் அடித்துக் கொடுத்த பணத்தை வைத்துத்தான் தம்பி வளர்ந்துள்ளார் என்று டிடெக்டிவ் ஏஜென்சி கண்டுபிடித்தது.
ஆனால், காணாமல் போன பணப் பெட்டி எங்கே என்பது பற்றியான உருப்படியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இது குறித்து டிடெக்டிவ் ஏஜென்ஸி நிறுவனர் வரதராஜ் என்பவரிடமும் சி.பி.ஐ. வாக்குமூலம் வாங்கி இருப்பதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலோடு, டிபி ரியாலிட்டி, அண்ணா சாலையில் உள்ள அந்த முக்கிய அலுவலகம், 2009 தேர்தல், க்ரீன் ஹவுஸ் நிறுவனம் மற்றும் கலைஞர் டி.வி. போன்றவையும் பின்னிப் பிணைகின்றன.
இதில் இன்னொரு தகவலாக, க்ரீன் ஹவுஸ் நிறுவனத்தின் எம்.டி-யாக இருந்து தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்சாவின் மனைவியும், 'அந்த டிரைவர் பணத்துடன் மாயமானது’ குறித்து சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறாராம்!
கவின் அமிர்தராஜ் மற்றும் சிலரும் கொடுத்த தகவல்களை சி.பி.ஐ., வாக்குமூலமாக குற்றப் பத்திரிகையில் சேர்த்து உள்ளது. ஆனால், இந்த வாக்குமூலங்கள் ஆ.ராசாவின் முன்னாள் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி மாதிரி நீதிபதியிடம் (சிஆர்.பி.சி. 164) கொடுத்தது அல்ல. இவர்கள் சி.பி.ஐ-யிடம் (சிஆர்.பி.சி. 161) வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்கள்.
டெல்லி, மும்பை வழியாக சென்னையில் எந்த மாதிரி எல்லாம் பணம் பாய்ந்துள்ளது... அதில் தேர்தல் களத்தில் பணம் பாய்ந்த திசைகள் என்னென்ன என்பதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இந்த சாட்சியங்களைக் கொண்டு வரப் போகிறது!
நன்றி : ஜூனியர்விகடன் - 11-05-2011

TAX...... TAX......... TAX............ What a Great job from Govt. of India !!!!!!
What a Great job from Govt. of India !!!!!! for we Indians
|
சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர் டிவி -இன் முக்கிய செய்திகள்
1. ரஜினி காந்த் மருத்துவ மனையில் அனுமதி.
2. எங்கேயும் காதல் திரைப்படம் ரிலீஸ்.
இந்த மாதிரி முக்கிய செய்திகள் சொன்ன சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர் டிவி ஆகிய சேனல் -ல்
கனிமொழி பற்றி ஒரு நியூஸ் கூட இல்லையா?
என்ன கொடுமை சார் இது?
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சன் டிவி மற்றும் கலைஞர் டிவி பாருங்கோ...................
Subscribe to:
Posts (Atom)