நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, June 9, 2011

கனிமொழி அவ்வளவுதானா..? அரசியல் அதிரடி செய்திகள்

கனிமொழி திஹார் பறவை;

டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, தனது கணவர் வேலை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதால் ‌தனது மகனை கவனித்து கொள்வதற்காக தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிபிஐ தரப்பில் பலமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இம்மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், கனிமொழிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
கண்ணீர் விட்ட ராஜாத்தி அம்மாள்: மகளின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை கேட்ட கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கோர்ட் வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

என்ன செய்றது,,,,இன்னிக்காவது ஜாமீன் கிடைக்கும்னு பார்த்தோம்..ஆனா கிடைக்கலையே ராஜாத்தியம்மா....கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்க் போல..நீராராடியா கிட்ட இனிமே பேசுவீங்க..?
----------------
பொன்முடிக்கு ஆப்பு..!
திருவாரூரில் குற்றம் செய்யாத கனிமொழி திஹார் சிறையில் இருப்பதை சொல்லி,கண்ணிர் விட்ட கருணாநிதிக்கு பின் பேசிய,பொன்முடி வந்தவுடன் வேலையை காட்டிவிட்டார் ஜெயலலிதா...அந்த அம்மாவுக்கு பல மொழிகள் தெரியும் என சொல்கின்றனர்.தொழிலுக்காக பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.நான் படத்தில் நடிப்பதை சொல்கின்றேன்..என டபுள் மீனிங்கில் பேசினார்..உளவுத்துறை இதை நோட் செய்து முதல்வருக்கு அனுப்பி விட்டது...நேற்று திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட குடவாசல் ராஜேந்திரன் பொன்முடி மீது புகார் கொடுத்துள்ளார்...முதல்வரை தரக்குறைவாக பேசியதாக..மூன்று செக்‌ஷன்களில் கேஸ் பதிவாகிவிட்டது...எந்த நேரமும் பொன்முடி கைது செய்யப்படும் நிலை...

இரண்டு முறை முதல்வராக இருந்து மூன்றாவது முறையாகவும் முதல்வர் ஆனவரை இன்னும் நடிகை என்றே கொச்சையாக பேசியவருக்கு இது தேவைதான்!!

Thanks to Sathis777

வெடிகுண்டுக்கே பயப்படாதவர் சீமான்..!


வெடிகுண்டுக்கே பயப்படாதவன் இந்த சீமான்..பெண் குண்டுக்கா பயப்படுவான் என சீறுகிறார் சீமான்..கோர்ட்டில் வழக்கை சந்திப்பேன்..அவர்கள் ஆதாரத்தை காட்டடும்.விஜயலட்சுமி க்கு இது ஆறாவது கேஸ்....இதுவே பொழப்பு...என் தம்பிகளுக்கு என்னை பற்றி தெரியும்..ஈழ மக்கள் துயரத்தை ஊர் ஊராக சென்று முறையிடும் எனக்கு காதல் செய்ய ஏது நேரம்..?ஊர் தோறும் என் தம்பிகள் விஜயலட்சுமி மீது மான நஷ்ட வழக்கு போடுவார்கள் என்கிறார்..

எதுல வேணா கெட்டப்பெயர் வாங்கலாம்..பெண் விசயத்துல பேர் கெட்டுச்சின்னா அவ்வளவுதான் என சரித்திரம் சொல்கிறது!
--------------------------------------------
தி.மு.க., இனி ஆட்சிக்கு வந்து, சட்ட மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமான சூரியன் அஸ்தமனமானது தான்; இனி உதிக்கவே உதிக்காது,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்..

ஆண்டவனே உங்க பக்கம்...மேடம்..கலக்குங்க!!
 
Thanks to SATHIS777

ஊழல் எதிர்ப்ப்பு..!



யோகா குரு ராம்தேவ் டில்லியிருந்து நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளார். மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வந்துடுச்சி..இனியும் காங்கிரஸ் ஏமாத்தவோ..ஊழல்வாதிகளுக்கு துணை போகவோ முடியாது..கறுப்புப்பணம் வைத்திருக்கும் முக்கிய மந்திரிகளும் இனி அவ்வளவுதான்..உண்மையை உணர்ந்து மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தா ஓகே...இல்லைன்னா கட்சி மொக்கையாகிடும்...!ஏற்கனவே உலகளவில் இந்தியாவின் அரசியல் நாறிகிட்டு இருக்கு..இனியும் ஆமை வேகத்துல போகாம ஜெட் வேகத்துல நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

Thanks

Sathis777

ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்த தமிழ்க அரசு!

இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.

 
இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது


அஞ்சு வருசத்துல தமிழின தலைவர் முதல்வரா இருந்தப்ப..இது போல தீர்மானம் நிறைவேற்றி இருப்பாரா..? ஜெயலலிதா இலங்கை தமிழ்ர்களுக்காக கொடுத்த குரல் எப்படி..சிம்ம குரல்தான்...ஜெ...அதிரடி..எப்பவும் கலக்கல்தான்....ஈழத்தமிழர்களுக்காக முதன்முதலில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்..நன்றி முதல்வரே!!

Thanks
Sathis777

மதுரையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்!-ரிப்போர்ட்டர்

ரவுடிகளால் சிக்கித்தவிக்கும் மதுரையை மீண்டும் ஆன்மீக நகராக மாற்றுவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.இந்நிலையில் ,மதுரைக்கு மீண்டும் உதவி கமிஷனராக வெள்ளைத்துரையை நியமித்ததின் மூலம் இந்த வாக்குறுதியையும் முதல்வர் நிறைவேற்றத்தயாராகி விட்டார் என்று நம்புகிறார்கள் மதுரை வாசிகள்.


Thanks

Sathis777

கருணாநிதி விடும் கண்ணீர்....எனது ஒரே ஒரு கேள்வி!

கலைஞரின் கண்ணிரும் எனது கேள்வியும்;

திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலைஞர் தன் மகள் சிறையில் வாடுவதை எண்ணி கண்ணீர் சிந்தினார்..எந்த தவறும் செய்யாத அப்பாவி கனிமொழி என்றார்..ஆச்சர்யமாக இருக்கிறார்..பொதுவாழ்வில் எத்தனை போராட்டம்,வழக்குகளை சந்தித்திருப்பார் கருணாநிதி..தவறு செய்யாதவர்களை தண்டிக்கும் நீதிமன்றத்தை இவர் இவர் மகள் விசயத்தில் இப்போது கண்டுபிடித்திருக்கிறாரே..இது தமிழுக்கு நேர்ந்த துயரம் அல்லவா..தமிழின தலைவருக்கு ஏற்பட்ட துரோகம் என தமிழக மக்கள் ஏன் பொங்கவில்லை..?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இன்றும் சிறையில் இருக்கும் நளினியும் ஒரு பெண் தானே..? விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர் என இலங்கை அரசு தெரிவித்தபின்னும்,பிரபாகரனே கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அர்சு சொன்னபின்னும் 5 வருடங்களாக அவரை விடுதலை செய்யக்கூடாது என அரசு தரப்பில் மறுத்துக்கொண்டே இருந்தாரே கலைஞர்..அந்த பரிதாப நிலைதான் இன்று இவர் பெண்ணிற்கு வந்துள்ளது...கொஞ்ச நாளைக்கே கலங்காதீர்கள் அய்யா...இன்னும் நாள் இருக்கிறது!


ஏன்னா தமிழனுக்கு தெரியும்..தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்....பணம் மட்டும் வேணும்..ஆனா சிறை கூடாதாம் என்னய்யா அநியாயமா இருக்கு!

மலரை போன்ற மென்மையான கனிமொழியை சிறையில் அடைத்து வாடவிடுகிறார்கள் என்கிறார் கலைஞர்.
40 வயது பெண்மணியை மலர் என்பவர் உண்மையான மலர்கள் பிஞ்சு குழந்தைகள் மீது வெடிகுண்டுகளை வீசி சிங்களப்படைகள் நாசம் செய்ததே..அப்போது கண்ணீர் விட்டாரா..? என்ன சுய நலம் பாருங்கள் மக்களே!

அடுத்தவனுக்கு ஆப்பு வைக்கும்போது நமக்கு வலிக்கலை..நமக்கு ஆப்பு வைக்கும்போது வலிக்குது...!
தமிழக முதல்வர்னா தமிழன் எங்கே அடிபட்டாலும் ,போராடணும்...மீட்கணும்..அதுக்குதான் தமிழ்க முதல்வர்..எவனாவது காப்பத்துவான்...இருக்ககூடாது!அப்படி இருந்தால் இப்படித்தான் மக்கள் டவுசர் கிழிப்பார்கள்!!
-------------------------------------------
ஜெயலலிதா முதல்வர் ஆனதும் அவர் புத்தியை காட்டிவிட்டார்..கலைஞர் திட்டத்தை நிறுத்திவிட்டார் என்பவர்களுக்காக;


சட்டசபை மாற்றம்//

இதில் ஊழல் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்..அஸ்திவாரம் தோண்டியதிலேயே பல கோடி ஊழல் என்கிறார்கள்..விசாரணை விரைவில் வருமாம்...அதுவுமில்லாமல் சட்டசபை ஒரு பக்கம் நடக்க கட்டிடப்பணி ஒருபக்கம் நடப்பது பாதுகாப்பில்லை...

►கலைஞர் காப்பீடு திட்டம் ரத்து//ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கும் திட்டம்..அரசு மருத்துவமனை ஊரெல்லாம் இருக்க பல கோடி வரிபணத்தை தனியார் மருத்துவமனைகளுக்கு அள்ளி கொடுப்பது ஏன்...? 

►மோனோ ரயில்//

மெட்ரோ ரயில் திட்டத்தை விட சுலபமானது மோனோ ரயில் திட்டம் என நிபுணர்களே சொல்கிறார்கள்..அடிப்படை கட்டமைப்பு வசதி செய்வது சுலபமாம்

►சமத்துவ கல்வி திட்டம் ரத்து//
அதில் போய் கலைஞர் கவிதை எதுக்கு சொருகணும்..?கலைஞர் என்ன திருவள்ளுவரா..?

►திருமண உதவி திட்டம் ரத்து//
இது என்ன கூத்து..இன்று தாலிக்கு தங்கம்..ரொக்கப்பணம் உதவி ஜெ..தொடங்கி வைத்ததை பேப்பரில் பார்க்கவில்லையா..?

►கல்வி கட்டணம் பிரச்சனை//
5 வருடத்தில்..கலைஞர் என்ன சாதித்தார்...?இருப்பினும் இன்னும் சில நாட்களில் அதிரடி அறிவிப்பு வரும் என நம்புகிறேன்!


இப்பதான் பதவி ஏத்துகிட்டிருக்காங்க..இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்பா..அதுக்கப்புறம் பொங்குங்க!!
.------------------------------------------------------------
சூப்பர் ஹிட்டு;
கறுப்பு பணம் ,ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் தொடங்கிய ராம்தேவ்..5000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாம்...இவரே ஏகப்பட்ட கறுப்புபணம் வெச்சிருப்பார் போலிருக்கே!
நடுராத்திரியில் இவர் உண்ணாவிரத்தை போலீஸ் கொண்டு கலைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்..அதே சமயம் ராம்தேவ் போலீஸ்க்கு பயந்து கொண்டு சல்வார்கம்மீஸ் அணிந்துகொண்டு பெண்கள் கூட்டத்தில் ஒளிந்து கொண்டதை நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்...பாவம் பயபுள்ள ரொம்ப பயந்திருச்சி!

                                     சல்வார்கம்மீஸ் உடையில் ராம்தேவ்...


முன்னதாக உண்ணாவிரதம் தொடங்கும் முன் காலில் விழாத குறையாக அவரிடம் மத்திய மூத்த மந்திரிகள் ஏர்போர்ட்டில் கெஞ்சியதும்,உண்ணாவிரதம் தொடங்கியபின்..அவர் மோசடிக்காரர்...என சொல்லுவதும் பார்த்தால் கறுப்புபண குவியலே இவங்களுதுதான் போலிருக்கு என சந்தேகம் வருது!

மாறன் சகோதரர்கள் கொலை மிரட்டல்: ஏர்செல் முன்னாள் தலைவர் புகார்

தனக்கு, மாறன் சகோதரர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக சிபிஐ விசாரணையின்போது ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவன முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் கூறியதாக தெரியவந்துள்ளது.2001 ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 http://inthiya.in/ta/wp-content/uploads/2011/05/kalanidhi+-dayanidhi-Maran.jpg
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரனிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. 

http://www.firstpost.com/wp-content/uploads/2011/06/dayanidhimaran2.jpg
அப்போது, அவர் குறிப்பிடுகையில், தனது நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிடும்படி அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இதை தயாநிதி மாறன் மறுத்துள்ளார்.

Saturday, June 4, 2011

விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா

விரக்தியில் கருணாநிதி;

திஹார் சிறையில் இருக்கும் மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமென்றால் 7 கடல் தாண்டி குகையில் இருக்கும் கிளியை கொண்டு வரச்சொன்னாலும் கொண்டு வந்துவிடுவார் கருணாநிதி....நாட்டை பத்தி இவருக்கு கவலையில்லை...கட்சியை பத்தி கவலையில்லை..மகள் மீது கவலைதான் இவருக்கு என அழகிரியே கோபமாக வெடித்தாராம்...


இதற்கிடையே எவனோ 30 ஆம்தேதி கனிக்கு ஜாமீன் என புரளி கிளப்பிவிட,அன்று முழுவதும் வட இந்திய சேனல்களை திருப்பி திருப்பி பார்த்து ஏமாந்து போனாராம் தாத்தா.

 உடன்பிறப்பே..என்னைப்போல கப்சிப் என்று இருந்தால் அம்மையார் ஆட்சியில் நீயும் தப்பிக்கலாம்!




தமிழக மக்களை ஜெயலலிதா பார்த்துக்கொள்வார்..தன் மகளை இனி தாந்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கலைஞர் ரொம்பவே விரக்தியில் இருக்கிறார்.

பூரிப்பில் ஜெயலலிதா;

தமிழ்க மக்களுக்கு இலவச அரிசி இலவசம்...திருமணத்திற்கு தாலி க்கு தங்கம் இலவசம் என ஜெட் வேகத்தில் உத்தரவுகளை போட்டுவிட்டு,மெட்ரிகுலேசன் பள்ளி கொள்ளை பற்றி பெற்றோர் புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லியிருக்கிறார்.

இனி தங்க நகைகளை நீங்கள் அணிய வேண்டும் இல்லையெனில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிப்பேன் என தொண்டர்கள் சொன்னதால் சிறிய தோடு அணிவதாக கூறினார்.
சிறிய தோட்டுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்....

இந்தம்மா அரிசி சும்மாவே தருது..இந்த கருணாநிதி 5 வருசமா கிலோவுக்கு ஒரு ரூபான்னு வாங்கி ஏமாத்திருக்காரு பாருக்கா இதுக்குத்தான் அந்தம்மா வரணுங்கிறது..என ரேசன் கடை க்யூக்களில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

தயாநிதி தப்பு செய்யல;கதறும் சன் டிவி

எந்த நிறுவனமும் ஆதாயம் பெறும் வகையில் செயல்படவில்லை..விதிமுறைகளை மீறி எதுவும் செய்யவில்லை-தயாநிதி விளக்கம் என சன் டிவி திரும்ப திரும்ப செய்தி ஒளிபரப்பி வருகிறது..காலை சன் நியூஸ் பார்க்கும்போது ஃப்ளாஸ் செய்திகளில் 3 செய்திகளுக்கு அடுத்து இந்த வரி ஓடுகிறது..கணக்கு பார்த்தால் இன்று மட்டும் ஒரு லட்சம் முறை வந்து விடும் போலிருக்கிறது....

ராசா சொன்னது போல,விதி முறை மீறி எதுவும் செய்யவில்லை என்கிறார்.வட இந்திய சேனல்கள் த்யாவை குறி வைத்துவிட்டன...அகோர பசியில் இருக்கும் ஊடகங்கள் நிரபராதியை கூட நிர்க்கதி ஆக்கிவிடும் போல உள்ள இந்த காலகட்டத்தில் ....பல ஆயிரம் கோடி சொத்துக்களை கண் முன்னால் லவட்டும் கோஸ்டிகளை சும்மா விடுமா...சன் டிவி முதலீடு ஆதி அந்தம் வரை தோண்டினாலும் ஆச்சர்யமில்லை...இதனால் அண்ணன் தம்பிகள் மு.க வை காட்டிக்கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை...

Friday, June 3, 2011

தயாநிதி அவர்களே..440 கோடிக்கு கணக்கு காட்டுங்க..வழக்கு போடாதீங்க..!

என்ன அநியாயமா இருக்கு..?ஒருத்தரை மத்திய மந்திரியாக மக்கள் உயர்த்துகிறார்கள்..அவர் அங்கு சென்று இந்திய அரசுக்கும்,மக்கள் வரிப்பணத்துக்கும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்துகிறார்..என்றால் அதை ஊடகங்கள் தட்டிக்கேட்க கூடாதாம்..கேட்டால் வழக்கு பாயுமாம்...

தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல் பயன்படுத்து தன் அண்ணன் நிறுவனத்துக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார்...கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்படுத்தியிருக்கிறார்..அதை அம்பலமாக்கிய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை மீது தவறான தகவல் சொல்லி தன்னை இழிவுபடுத்திவிட்டதாக(ம்க்கும் இது வேற இருக்கா)10 கோடி நஸ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்...ஏனிந்த பாய்ச்சல்...?இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லி அறிக்கை வெளியிடாமல் ஏன் இந்த திடீர் வழக்கு..?

தாத்தா கருணாநிதி கற்று தந்த பழக்கமான மானநஷ்ட ஈடு கோரி வழக்கு போட்டு கேள்வி கேட்பவனை முடக்கும் தந்திரத்தை இன்று பேரனும் கையெலெடுத்திருக்கிறார்.

முந்தாநாள் டெகல்ஹா மீது இதே 10 கோடி கேட்டு வழக்கு போட்டார்.இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மீது...!

டெகல்ஹா கட்டுரை படிக்க க்ளிக் செய்யவும்

1970 கருணாநிதி ஊடகங்களை வழக்கு போட்டு முடக்கினாரே அந்த காலம் அல்ல இது அண்ணே...!சுத்தி சுத்தி ஊடகங்கள் சந்தி சிரிக்க வைத்துவிடுவார்கள்!

இணையதளங்களே ஆயிரக்கணக்கில் ,லட்சக்கணக்கில் இதை எழுதும் காலம் இது!


தினமணி தயாநிதியின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றும் கட்டுரை இதோ;


நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.  இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.  பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? 

அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.  அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.  

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.  இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.  

டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.  இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.  இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.  மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.  கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. 

இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.  இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும். 

கதை இத்தோடு முடியவில்லை.  இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை

நன்றி-தினமணி

இவர்களுக்கு பாவம் பார்க்கலாமா.... ?







கனிமொழி கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டதும், பலர் மகிழ்ந்தாலும், சிலர் வருந்தவே செய்தார்கள். ஒரு சிலர், கனிமொழி பாவம் என்றார்கள். மற்றும் சிலர், கருணாநிதிக்கு இந்த முதிர்ந்த வயதில், எத்தனை துன்பம் என்றார்கள்.
இவர்களுக்கு பாவம் பார்க்கலாமா.... ?
கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பட்டியல், சவுக்கு விசாரித்து சேகரித்த பட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல.   இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை.
  
1.    கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி. 
2.    முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி
3.    முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி
4.    சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி
5.    மு.க.முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி
6.    அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி
7.    செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.
8.    சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5 கோடி.
9.    மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.
10.    ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி
11.   மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.
12.   உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.
13.   கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
14.   கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.
15.   ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.
16.   கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.

17.   சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். 5 கோடி.
18.    சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
19.   கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.
20.   பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.
21.    பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80 கோடி.
22.   மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.
23.   பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.
24.    மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.
25.   மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள்.   மதிப்பு 30 லட்சம்.
26.   சன் டிவியின் டெல்லி அலுவலகம்.   மதிப்பு 50 கோடி.
27.   எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)
28.   தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
29.   சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
30.   முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை) 
31.   ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.
32.   தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்
33.   தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம், கருணாநிதி பெயரில்.
34.   தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு 1 கோடி.
35.   துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.
36.     மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.
37.   மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு 2 கோடி.
38.   மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி. 
39.   மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.
40.   மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
41.    மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு 1 கோடி.
42.   மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.
43.   மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு 2 கோடி. 
44.   மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.
45.   மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.
46.    மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம், தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.
 47.   மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
 48.   கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.
 49.    தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.
 50.   சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5 கோடி.
 51.   சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு 3 கோடி.
 52.   காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.
 53.   சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.
 54.   சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2 கோடி.
 55.   மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.
 56.   மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.
 57.   மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.
 58.    சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-A என்ற முகவரியில் 5 கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.
59.   வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.

60.   கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி. 
61.   ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.

உறுதி செய்யப் படாத சொத்துக்கள்
62.    அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.
63.   கூர்க் பகுதியில் காபித் தோட்டம். 
64.   தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.
65.   எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2 விமானங்கள்.
66.   மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ். 
67.   சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப் பட்டு, மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.
68.   கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட் சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்....... இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா ?