நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, July 2, 2012

ராவா சரக்கடிச்சு...சாமி பெயரால் சகட்டுமேனிக்கு கற்பை வேட்டையாடிய நித்தியானந்தா: ஆர்த்திராவ்

 Arati Rao Accused Nithyanada Sexually Abusing Her
சென்னை: மது அருந்திவிட்டு கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
மொத்தம் 43 பக்கங்களைக் கொண்ட அந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் என்பது குறித்து ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்துள்ள விவரம்:
2004-ம் ஆண்டு தொடக்கத்திலேயே நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டேன். சன்னியாசி வாழ்க்கையில் இருந்தபோது குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அப்போது சென்னையில் கணவருடன் சிறிதுகாலம் இருந்தேன். நான் கர்ப்பமாகவும் இருந்தேன். அப்போது 2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்தியானந்தாவை சந்தித்தேன். "குடும்ப வாழ்க்கை வாழ்கிறவர்களால் ஜீவன் முக்தி அடைய முடியாது.. முதலில் கர்ப்பத்தை கலைத்துவிடு" என்று அவர் என்னிடம் கூறினார்.
கர்ப்பத்தைக் கலைப்பது குற்றம் இல்லையா என்ற கேள்விக்கும் கூட, "குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு ஆன்மா இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்" என்று கூறி கருவைக் கலைக்க வைத்தார். நானும் கணவரிடம் கரு கலைந்து போய்விட்டது என்று பொய் சொன்னேன்.
பின்னர் சேலத்துக்கு என்னை வருமாறு அழைத்தார். ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது அவரது செயலாளராக இருந்த ராகினி என்னை "பெர்சனல் சேவை செய்ய" போகுமாறு கூறினார். அப்போது என்னை இறுக்கமாக அவர் அணைத்து முத்தமிட்ட போது கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன். அதற்கு, இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்" என்று கூறி அனுபவித்தார்.
தேவி...தாசி...
மேலும் "இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி" என்று கூறினார்.
இதேபோல் ஏற்காடு கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும் 'நான் ஆனந்தேஷ்வரன்... நீ ஆனந்தேஷ்வரி" என்று கூறி அனுபவித்தார்.
ராவா சரக்கு....
2006-ம் ஆண்டில் பிடதி ஆசிரமத்தில் இருந்தபோது அவர் தனது காவி உடைகளுக்கு கீழே மதுபாட்டில் வைத்திருப்பதை எடுத்து வரச் சொன்னார். நான் எடுத்துக் கொடுத்ததுதான் மாயம்.. கடகடவென "ரா"வாகவே ஊற்றிய கையோடு என் வாயிலும் ராவாக ஊற்றிவிட்டார். ஆனால் கட்டாயப் படுத்தி வாயில் ஊற்றிவிட நான் மயங்கிப் போனேன். காலையில் எழுந்து பார்த்தபோது நிர்வாணமாகவே கிடந்தேன்.
2006-ம் ஆண்டு வாரணாசிக்கு சென்றபோது அவர் விஷ்வம் ஹோட்டலில் தங்கியிருந்தார். நாங்கள் ஹோட்டல் பிளாசாவில் தங்கினோம். நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து விருப்பம் இல்லாமலேயே அனுபவித்தார். வாரணசாமியில் "தாசி" பட்டம் கொடுத்து அதற்கு ஒரு விளக்கம் கூறி அனுபவித்தார்.
2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போனது ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போட்டுக் கொண்டு நைட் கிளப்புக்கு அழைத்துச் சென்று குத்தாட்டம் போட்டார். அங்கேயும் ஜீவன் முக்தி என்ற பெயரில் அனுபவித்தார். இதே கதைதான் அமெரிக்காவிலும் நடந்தது.
கும்பமேளாவில் கும்மாளம்
2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்ற போதும் கூட என்னை சும்மா இருக்கவிடவில்லை. புனிதமான இடத்தில் உடலுறவு கொள்வதால் சக்தி கிடைக்கும் என்று கூறி டெண்ட்டில் வைத்தே அனுபவித்தார்.
அமெரிக்காவுக்கு சென்ற போது நான் உடன்பட மறுத்த நாட்களில் ஒரு மனநோயாளி போல் சாடிஸ்டாக நடந்து கொண்டு அடித்திருக்கிறார். அமெரிக்க சீடரான விநய் பரத்வாஜையும் இப்படித்தான் கெடுத்திருப்பதை அறிந்து கொண்டேன். அதன் பின்னர்தான் லெனினுடன் சேர்ந்துநித்தியானந்தாவின் பெட்ரூமில் கேமராவை வைத்தோம் என்று ஆர்த்திராவ் கூறியுள்ளார்.
Thanks to One India tamil

+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் திருப்பிக் கூப்பிடாதீங்க!

 Beware Missed Calls That Can Clone
உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர். +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து யார் செல்போனுக்காவது விஷமிகள் மிஸ்ட் கால் கொடுக்கிறார்கள். யாரோ அழைத்துள்ளார்களே என்று நினைத்து அந்த நபரும் அந்த எண்ணை திருப்பி அழைத்தால் சிம் கார்டு குளோன் செய்யப்பட்டு சிம், மெமரி மற்றும் டேட்டா கார்டுகளில் உள்ள விவரங்களை விஷமிகள் எடுத்துவிடுகின்றனர்.
அவ்வாறு அவர்கள் மிஸ்ட் கால் கொடுக்கையில் யாரேனும் போனை எடுத்து பேசிவிட்டால் நாங்கள் கால்சென்டரில் இருந்து பேசுகிறோம். உங்கள் செல்போன் சேவை ஒழுங்காக உள்ளதா என்பதை அறியவே அழைத்தோம் என்று கூறி # 09 அல்லது # 90 என்ற எண்ணை அழுத்தி அவர்களுடைய எண்ணுக்கு அழைக்குமாறு கூறுவார்கள். அவ்வாறு நாம் அழைத்தால் நம் சிம் கார்டை குளோன் செய்து நாம் அதில் வைத்துள்ள எண்களை அழைத்து மோசடி செய்கிறார்கள்.
அதனால் இதுபோன்ற எண்களில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திரும்பி அழைக்க வேண்டாம். மேலும் செல்போனில் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து வைக்க வேண்டாம்.
இதுபோன்று மிஸ்ட் கால் வந்த எண்ணை மீண்டும் அழைத்து சுமார் 1 லட்சம் பேர் ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to One India

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!



தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா 

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். 

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. 

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல 

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை 

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , 
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . 

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்
. தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்

Thanks To : Sharath Kumar
 

Tuesday, April 3, 2012

பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
Kfc Pepsi Mcdonalds Pizza
அவசர உணவுகள்

இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரைடு சிக்கன்

மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.

இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர். எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

குளிர்பானங்கள்

பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு, கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.

நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையாகும்.

Thanks to OneIndia

Friday, January 27, 2012

இது தாண்டா போலீஸ்



Thanks to Dinamalar

Sunday, January 22, 2012

2011ஆம் ஆண்டு டாப் டென் ஊழல்




1. சுதந்திர இந்தியாவின் மெகா ஊழலான அலைக் கற்றை ஊழல் ஏற்படுத்திய சுனாமியில் பதவி இழந்தவர்கள், மத்திய அமைச்சர் ராசா மற்றும் தயாநிதி மாறன். பிப்ரவரி 17ஆம் தேதி, திஹார் சிறையில் நுழைந்த ராசா, 2012ல்தான் ஜாமீனில் வெளி வருவார். இதே விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டை இழுக்கடித்து, அந்த நிறுவனத்தைத் தமது லாபத்துக்காக உள்நோக்கத்துடன் கைமாற வைத்த விவகாரத்தில் தயாநிதிமாறன் அவுட். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் லாபம் பெற்ற நிறுவனம் 214 கோடியை, கலைஞர் தொலைக்காட்சிக்குக் கொடுத்த விவகாரம் பங்குதாரர் கனிமொழியை, ஆறுமாத காலம் திஹார் சிறையில் போட்டு விட்டது. ராசாவின் நண்பர சாதிக்பாட்சா இறப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இப்போது மறக்கப்பட்டு விட்டது.
2. 2011ன் இந்தியக் கதாநாயகன் அண்ணா ஹசாரே - ரேலேகான் சித்தி என்ற குக்கிராமத்திலிருந்து புறப்பட்ட இந்த முன்னாள் ராணுவ வீரர், இன்று இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு பிம்பம். எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத இவர் பின்னால் காஷ்மீரிலிருந்து குமரி வரை திரண்டது ஊழல் எதிர்ப்புப் படை. இவரது உண்ணாவிரதங்கள் ஏற்படுத்திய பதற்றத்தில் தடுமாறிய மத்திய அரசு, ஒரு வழியாக, டீம் அண்ணாவைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையை வளர்க்கிறது.
3. அண்ணா எங்கே தங்களுக்கு எதிராக வந்து விடுவாரோ என்ற களத்தில் (ரதத்தில்) குதித்தார் எல்.கே.அத்வானி. 1992ல் செய்ததுபோல நமது நிலப்பரப்பு முழுவதும் செல்லவில்லை அத்வானிஜி (வயதாகிவிட்டது). 7600 கி.மீ. 38 நாட்கள்; 27 மாநிலங்கள். இந்த யாத்திரையில் 14 முறை விமானத்திலும் 6 முறை ஹெலிகாப்டரிலும் பயணித்திருக்கிறார் அத்வானி. இடையில் ஊழலை ஒழிக்க பாபா ராம்தேவ் இருந்த உண்ணாவிரதம் கேலிக்கூத்து என்றால், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திய நரேந்திரமோடி கேலிச்சித்திரம்.
4. மல்லோ ஜூலா கோடே ஸ்வரராவ்! இவரை கிஷண்ஜி என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். நக்ஸலைட் பிரிவு பொதுவுடைமை இயக்கத்தில் சிறு வயது முதற்கொண்டு தம்மை ஈடுபடுத்திக் கொண்டு உச்சத்துக்கு வந்த கிஷண்ஜி, நமது பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு சவாலாகவே விளங்கி வந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட கிஷண்ஜி, மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது என்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்களா என்ற சர்ச்சை நீடிக்கிறது. மாவோயிஸ்ட்டுகளுக்குப் பெரிய பின்னடைவு.
5. ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வுக்கு மற்றொரு உதாரணம் தலைமைக் கண்காணிப்பு ஆணையர் (விஜிலன்ஸ் கமிஷனர்) நியமனம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப் பட்டது. விஷயம் என்னவென்றால், தாமஸ் அண்ணன் கேரளாவில் உணவுத் துறைச் செயலாளராக இருந்தபோது, மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ததில் ஆதாயம் பார்த்தார் என்பதுதான். ‘இவரை ஊழலை ஒழிக்கும் பணியில் போடுவதா’ என்று புறப்பட்டது பொதுநல வழக்கு. உச்சநீதிமன்றம் கறையைப் போக்கியது.
6. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும் கூட ஊழலுக்கு எதிராகத் திரண்ட மக்கள் கருணாநிதியின் அரசைத் தூக்கிப் போட்டார்கள். மிக புத்திசாலித்தனமாக, விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் கூட்டணி கண்ட ஜெயலலிதா, மூன்றாவது முறை ஆட்சியைப் பிடித்தார். ஆறே மாதத்தில் கூட்டணி ஹனிமூன் முடிந்து, ‘தனியா நின்னா வெற்றி பெற்றிருக்க முடியுமா?’ என்று கேப்டன் சவால் விடும் நிலை வந்திருக்கிறது. புரட்சித் தலைவியும்,கேப்டனும் மோதிக் கொள்ள இன்னமும் பல களங்கள் காத்திருக்கின்றன. 
7. தமிழ் நாட்டின் மின் தேவை அதிகரிக்க, உற்பத்தி சரிந்த நிலையில் மின் வெட்டோ வெட்டு. இந்த நிலையில் டிசம்பரில் மின் உற்பத்தியைத் தொடங்க இருந்த கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு பிரேக் போட்டு விட்டார்கள் உள்ளூர் மக்கள். 13000 கோடி ரூபாய் செலவழித்த நிலையில் ஷாக் அடித்து நிற்கிறது மத்திய அரசு. மின்பற்றாக்குறை போக்கப் பாடுபடும் ஜெயலலிதா, உள்ளூர் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்துப் பேசாமல் இருக்கிறார். மக்களின் அச்ச உணர்வைப் போக்கி, அணுமின் நிலையத்தைச் செயல்பட வையுங்கள் என்று சொல்பவர்களின் குரல் வலுவாகிக் கொண்டே வரும் நிலையில் எதிர்ப்பாளர்கள் பக்கம் சோர்வு தெரிகிறது.
8. கூட்டணிக் கட்சிகள் தயவே வேண்டாம்’ என்று அவர்களை கட் செய்துவிட்டு, தனியாகவே உள்ளாட்சித் தேர்தல் களத்தில் குதித்தது அ.தி.மு.க. மொத்தம் உள்ள 20000 உள்ளாட்சிப் பதவிகளில், 50 சதவிகிதத்தை அள்ளிக் கொண்டு போனார் ஜெயலலிதா. நீண்ட காலத்துக்குப் பிறகு கட்சிகள் தனியாகவே தேர்தலைச் சந்தித்ததுதான் குறிப்பிடத்தக்க விஷயம். மிகக் குறைவான இடங்களைப் பிடித்த பா.ம.க.மற்றும் ம.தி.மு.க. கட்சிகளும் கூட ‘வெற்றி... வெற்றி...’ என்று முழங்கியது சற்று வினோதம்தான். 
9. நல்ல மாற்றத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ஜெ.வுக்கு வோட்டுப் போட்டார்கள் மக்கள். சமச்சீர் கல்வி குழப்பம், தலைமைச் செயலகக் கட்டடம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் ஆகியவை மருத்துவ மனைகளாக மாறும் என்ற அறிவிப்புகள் மக்களால் அவ்வளவு ரசிக்கப்படவில்லை. மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது, உச்ச நீதிமன்றத்தால் விமர்சிக்கப்பட்டது. பால் கட்டணம், பஸ் கட்டண உயர்வு மக்களைக் காயப்படுத்தி விட்டது. கடனைக் குவித்து கஜானாவைக் காலி செய்துவிட்டார் கருணாநிதி. நிதி ஒழுக்கத்தைக் கொண்டுவந்து, எனது திட்டங்களைச் செயல்படுத்த இந்தக் கசப்பு மருந்து அவசியம்," என்றார் ஜெ.
10. வருடம் முடியும் நேரத்தில் தமிழகத்தைக் கலக்கிவிட்டது முல்லைப் பெரியாறு அணை விவகாரம். ‘120 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கி வைக்கலாம்’ என்று அழிச்சாட்டியம் பண்ணும் கேரளாவுக்கு எதிராக, தமிழகமே திரண்டுவிட்டது. ஆட்சியில் இருப்பதால் ரொம்பவே பொறுப்புணர்வுடன் விவகாரத்தைக் கையாள்கிறார் முதல்வர். ஆனால், மத்திய அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்தால், அம்மா தமது வழக்கமான அதிரடியால் மன்மோகன்சிங்கை அதிர்ச்சியடைய வைப்பார். 2012ல் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்குமென்று நம்புவோமாக!   
தொகுப்பு : ப்ரியன்

பில் கேட்ஸ்


மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கியவரும், உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ், செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அப்பா வில்லியம் ஹென்றி ஜூனியர் பிரபலமான வக்கீல். அம்மா மேரி மேக்ஸ் வெல் பள்ளி ஆசிரியர். கேட்ஸுக்கு கிறிஸ்டி என்ற அக்காவும் லிப்பி என்ற தங்கையும் உண்டு. பில்கேட்ஸ் சிறு வயது முதலே படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தார். கணக்கும் அறிவியலும் அவனுக்கு மிகவும் பிடித்த பாடங்களாக இருந்தன. கேட்ஸின் முழுப்பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ்.சியாட்டில் நகரத்தில் இருந்த படிப்புக்கு பெயர் போன லேக்சைடு பள்ளியில் படித்தான் கேட்ஸ். அங்கே நிலவிய சூழ்நிலை, பாடத் திட்டம், கற்பிக்கும் முறை, ஆசிரியர்களின் அரவணைப்பு போன்ற பல அம்சங்களும், கேட்ஸின் அறிவு வளர்ச்சிக்கு உரமிட்டன. கேட்ஸுக்கு முதன் முதலாக கம்ப்யூட்டர் அறிமுகமானது அங்கேதான்! ஞாயிற்றுக் கிழமைகளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து டின்னர் சாப்பிடுவது வழக்கம். அது கேட்ஸுக்கு மிகவும் பிடிக்கும். சீட்டுக் கட்டு, டேபிள் டென்னிஸ் போன்றவை கேட்ஸ் விரும்பிய விளையாட்டுகள். ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்துமஸ் சமயத்தில் தானே வாழ்த்து அட்டைகள் தயாரித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைப்பார் கேட்ஸ். 
கேட்ஸின் பெற்றோர் தங்கள் மகனை ஒரு வக்கீலாக்க விரும்பினார்கள். ஆனால் கேட்ஸையும் பால் ஆலன் உள்ளிட்ட அவனுடைய நண்பர்களையும், அந்தப் பள்ளியின் கம்ப்யூட்டர் கவர்ந்து இழுத்தது. அந்த மாணவர்கள் நாள் முழுக்க கம்ப்யூட்டர் அறையிலேயே தவமாகக் கிடந்தார்கள். பல நாள்கள் இரவு வெகு நேரம் வரை கண் விழித்து கம்ப்யூட்டர் பற்றிய புத்தகங்களைப் படிப்பது, புரோகிராம்கள் எழுதுவது என்று நேரத்தைச் செலவிட்டார்கள். கேட்ஸுக்கும் நண்பர்களுக்கும் மற்ற பாடங்களில் ஆர்வம் குறைந்தது.  கேட்ஸ் குழுவினரின் ஆர்வத்தால், பள்ளி கம்ப்யூட்டரே அடிக்கடி ரிப்பேர் ஆனது. கம்ப்யூட்டர் அறைக்குள்ளேயே நுழையக் கூடாது என்று தடை வந்தது. இவர்களின் திறமையை அறிந்த கம்ப்யூட்டர் சென்டர் கார்பரேஷன் நிறுவனம், கேட்ஸ் குழுவினரை அழைத்து, வேலை கொடுத்தது. அப்போது கேட்ஸுக்கு வயது 15. கேட்ஸ் குழுவினர் தங்களை ‘லேக்சைடு புரோக்ராமர்கள் குழு’ என்று அழைத்துக் கொண்டார்கள். ஒரு வருடத்தில் அவர்களுக்கு இன்ஃபர்மேஷன் சயின்ஸஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கணக்கிடும் பணியைச் செய்ய ஒரு கம்ப்யூட்டரை உருவாக்கினார்கள். இதற்குள், கேட்ஸ் ஒரு திறமையான கம்ப்யூட்டர் புரோகிராமராகத் தன்னை நிரூபித்துக்கொண்டார். கேட்ஸ் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1975-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘பாபுலர் மெக்கனிக்’ பத்திரிகையில் 350 டாலரில் ‘ஆல்டர்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைக்ரோ கம்ப்யூட்டர் பற்றிய விரிவான கட்டுரை வெளியாகி இருந்தது. நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்த அந்தப் புதிய கம்ப்யூட்டர் பற்றி மேலும் பல தகவல்களைத் தேடிப் படித்தார்கள் கேட்ஸும் ஆலனும். ‘இனி கம்ப்யூட்டர்கள் இந்த உலகில் புதிய சரித்திரம் படைக்கப் போகின்றன’ என்பதையும், இந்த கம்ப்யூட்டர்களுக்கான புரோகிராம்களை எழுதும் பணிக்கு எதிர்காலத்தில் பெரும் வாய்ப்புகள் இருப்பதையும் தெரிந்துகொண்டார்கள்.
அதே ஆண்டில், ஹார்வர்ட் பல்கலைக் கழக படிப்புக்கு குட் பை சொல்லி விட்டு, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் நுழைய முடிவு செய்தார்கள். இருவரும் சேர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். கம்ப்யூட்டர்களைக் கொண்டு பல்வேறு வேலைகளைச் செய்வதற்குத் தேவையான சாஃப்ட்வேர் புரோகிராம்களை எழுதித் தர ஆரம்பித்தார்கள். ஓராண்டுக்குள்ளாகவே, உலகப் புகழ்பெற்ற ஐ.பி.எம். நிறுவனத்துக்கு எம்.எஸ்.டாஸ் (MS&DOS) என அழைக்கப்படும் கம்ப்யூட்டர் ஆபரேடிங் சிஸ்டத்தை உருவாக்கிக் கொடுக்க பெரும் வாய்ப்பு வந்தது.  
கெளதம் ராம்

தூக்கமின்மை பிரச்னை..



'கட்டாந்தரையில் துண்டை விரித்தேன்... கண்ணில் தூக்கம் சொக்குமே... அது அந்த காலமே!
மெத்தை விரித்தும், பன்னீர் தெளித்தும்... கண்ணில் தூக்கம் இல்லையே... இது இந்த காலமே!’

- தூக்கத்தின் ரகசியத்தைப் பளிச்சென போட்டு சொல்லும் பாடல் வரிகள்தான் இது!

கடின உடல் உழைப்பும், உயிரியல் கடிகாரத்தை மீறாத வாழ்க்கை முறையையும் கொண்டவர்களுக்கு தூக்கம் என்பது வரம்! ஆனால், கடின உடல் உழைப்பு இல்லாத அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலருக்கும் நிம்மதியானத் தூக்கம் என்பது கனவே. இதே பிரச்னை இவர்களுக்கு தொடர்ந்து நீடித்தால், உடலும் மனமும் சோர்ந்துவிடுவதோடு புதுப்புது நோய்களையும் வரவழைத்துவிடும்.  ''நம் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். உடம்புக்குத் தேவையான ஓய்வும், புத்துணர்ச்சியும் தூக்கத்தில் மட்டும்தான் கிடைக்கிறது. ஏ.சி. அறை, சொகுசு மெத்தையில் தூக்கத்தைத் தேடினாலும், இயல்பான வாழ்க்கை முறையை பின்பற்றும்போதுதான் தூக்கமும் கண்களைத் தழுவும் என்பதே மருத்துவ உண்மை!இரவில், ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். நல்ல ஆழ்ந்த தூக்கம் தூங்குபவர்கள் ஆறு மணி நேரம் தூங்கினாலே போதும். நன்றாகத் தூங்கி எழுபவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்காது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

படுக்கை அறையிலும் லேப்டாப், செல்போன் சகிதம் அலுவலகம் நடத்துபவர்களும் பகலில் தூக்கம் இரவில் வேலை என்று வாழ்க்கை முறையையே தலைகீழாக மாற்றிக் கொண்டவர்களும் இன்றைய நாளில் பெருகிவிட்டார்கள். இதனால், சுறுசுறுப்பின்மை, கவனமின்மை போன்ற தொல்லைகளுக்கு ஆளாகி, நல்லத் தூக்கமின்றி தவிப்பவர்களும் ஏராளம்.பாலில் உள்ள டிரிப்டோபன் அமினோ ஆசிட்டுக்கு (Trypto-phan amino ac)  தூக்கத்தை வரவழைக்கும் சக்தி இருப்பதால், படுக்க செல்லும் முன் மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் பால் அருந்தலாம். வாழைப்பழம், ஓட்ஸ், தேனிலும் இந்த அமிலம் அதிக அளவில் இருக்கிறது. டீ, காபி போன்ற பானங்கள் தூக்கத்தை விரட்டியடிக்கும். எனவே, தூங்குவதற்கு ஐந்து மணி நேரம் முன்பாகவே பானங்கள் அருந்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. புகை, மது போன்ற தீயப் பழக்கங்களும் தூக்கத்துக்கு எதிரான செயல்கள்தான். வயிறுமுட்ட, சாப்பிட்டுவிட்டு தூங்குவதும் நல்லதல்ல. குறைந்தபட்சம் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே சாப்பாட்டை முடித்துக் கொள்ளவேண்டும். இரவில் தூங்குவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியும் செய்து முடித்துவிடுவது நல்லது!''

படுக்கை அறை என்பது உறங்குவதற்கு மட்டுமே. வீடு, அலுவலகப் பிரச்னைகள் பற்றிப் பேசுவது, கணக்கு வழக்கு பார்ப்பது, பட்ஜெட் போடுவது இவற்றையெல்லாம் படுக்கையறையில் வைத்துக் கொண்டால், நித்திரை கெடுவதோடு மன நிம்மதியும் போய்விடும். எனவே படுக்கையில் சாய்வதற்கு முன்னரே, அன்றையப் பொழுதில் நடந்த நிகழ்வுகளையும் அடுத்த நாள் செய்யவேண்டிய வேலைகளையும் மனதுக்குள்ளேயே ஓட்டிப்பார்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ண ஓட்டங்களை முழுவதுமாக ஓட்டிப் பார்த்துவிட்டு நிம்மதியாகப் படுக்கையில் சாய்வதே ஆழ்ந்த தூக்கத்துக்கு அழைத்துப் போகும்!''

டாக்டர் மதனமோகன்.
டாக்டர் விகடன்

சீனப் பெருஞ்சுவர் அழியுமா?

சீனப் பெருஞ்சுவர் அழிந்து கொண்டே வருகிறது என்று கூறுகிறார்களே, உண்மையா? 
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது சீனப் பெருஞ்சுவர். தொழிநுட்பம் வளராத சூழ்நிலையில் மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இந்தச் சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. செங்கல், மண், மரம் போன்ற பொருள்களால் கட்டப்பட்டுள்ள இந்தச் சுவர் சில இடங்களில் மிகவும் பாதுகாப்பாக நல்ல நிலையில் இருக்கிறது. சில இடங்களில் சுவற்றைச் சரி செய்திருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை. அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கையும் அவ்வளவாக மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தப் பகுதிகள் மணற் புயலால் அழியும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் மம்தாராம்.
 
--Thanks to MalaiKhahidam

ஐஸ் கட்டிய வரலாறு


ன்று வீட்டுக்கு வீடு குளிர்சாதனப் பெட்டி யில் ஐஸ் தயாரித்துக்கொள்கிறோம்; வீதிக்கு வீதி ஐஸ்கிரீம் கடைகள் இருக்கின்றன.  ஐஸ் கட்டிகளின் பின்னேயும்கூட கரையாத வரலாறு ஒன்று இருக்கிறது தெரியுமா?175 வருடங்களுக்கு முன், ஒரு சாதாரண மனிதன் ஐஸ் கட்டி வாங்க வேண்டும் என்றால், அவன் டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்கொண்டு போக வேண்டும். காரணம், ஐஸ் கட்டி அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. மருத்துவர்களுக்கும் பிரபுக்களுக்கும் மட்டுமே ஐஸ் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதுவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியான ஐஸ்.இந்தியாவுக்கு ஐஸ் அறிமுகமானதன் பின்னால் மிகப் பெரிய கதை இருக் கிறது. சென்னையில் வசிக்கும் பலருக் கும் கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் தெரிந்து இருக்கும். அந்த இடத்தை இன்றும் 'ஐஸ் ஹவுஸ்’ என்றுதான் அழைக்கிறார்கள். அது என்ன ஐஸ் ஹவுஸ்? அங்கே யார் ஐஸ் வணிகம் செய்தது? எப்போது அந்த வணிகம் நடைபெற்றது?இந்தியாவுக்கு ஐஸ் கட்டிகள் அறிமுகமானதன் விளைவு... வெறும் குளிர்ச்சி சார்ந்தது மட்டும்இல்லை, அது இந்தியர்களின் மன இயல்பை பெருமளவு மாற்றியது. அந்த மாற்றத்தின் உச்சபட்சம்தான் இன்று குளிர்சாதன வசதி இல்லாமல் பெரும்பாலான இந்தியர்களால் தூங்க முடியவில்லை. பயணம் செய்ய முடியவில்லை, அலுவலகத்தில் வேலை செய்ய முடியவில்லை. குளிரூட்டப்படாத பானங்களைக் குடிக்க முடியவில்லை. குளிர்ச்சி இல்லாத அத்தனையும் வெறுக்கக்கூடியதாக மாறி இருக்கிறது சூழல்.
வெள்ளையர்களைப் போலவே நமக்கும் இந்திய வெப்பம் எரிச்சல் ஏற்படுத்துகிறது. இந்த மன நிலை மாற்றத்தின் வேர், அமெரிக்காவில் இருந்து கல்கத்தாவுக்கு ஐஸ் கட்டிகள் வந்து இறங்கிய செப்டம்பர் 14-ம் தேதி, 1833-ல் தொடங்குகிறது.அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இயற்கையாக உருவான பனிக் கட்டிகளை வெட்டி எடுத்து இந்தியாவுக்கு அனுப்பி, வருடத்துக்கு இரண்டு லட்சம் டாலர்கள் பணம் சம்பாதித்த ஃபிரெட்ரிக் டூடரின் கதை, இந்திய வரலாற்றில் மறக்க முடியாதது. ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் உள்ள குளங்கள், ஏரிகள் உறைந்துபோய் பனிப் பாளங்கள் ஆகிவிடும். வீணாகக்கிடக்கும் அந்தப் பனிக் கட்டிகளை வெட்டி எடுத்து கப்பலில் வேறு நாடுகளுக்கு அனுப்பி, ஒரு புதிய வணிகத்தை மேற்கொள்ளலாமே என்ற எண்ணம், டூடருக்கு உருவானது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஐஸ் அனுப்பும் வணிகத்தைத் தொடங் கினார். ஆனால், அவர் நினைத்தது போல ஐஸ் கட்டிகளை, உருகாமல் கப்பலில் கொண்டுபோக முடியவில்லை. 100 டன் ஐஸ் கட்டிகளை கப்பலில் அனுப்பினால் போய்ச் சேரும்போது, அதில் 80 டன் கரைந்துபோயிருக்கும். ஆகவே, உருகாமல் பனிக் கட்டிகளை அனுப்புவதற்காக அவர் வைக்கோல் சுற்றிய பெட்டிகளில் அனுப்பத் தொடங்கினார். அப்படியும் பாதி ஐஸ்கட்டிகள் உருகின.1830-ம் ஆண்டு ஐஸ் கட்டிகள் விற்பனையில் இருந்து மாறி, காபி வணிகத்தில் ஈடுபட்ட டூடர் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்தார். இரண்டு லட்சம் டாலருக்கும் மேலாகக் கடன் அவருக்கு ஏற்பட் டது. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியத அவர் மீது, கடன்காரர்கள்  வழக்கு தொடுத்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டார். அதில் இருந்து, தற்காலிகமாக மீண்டு வந்த டூடரிடம் அவரது நண்பரான சாமுவெல் ஆஸ்டின், தான் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஒரு கப்பல் வைத்திருப்பதாகவும், அது அமெரிக்காவில் இருந்து இந்தியா போகும்போது காலியாகத்தான் போகிறது என்பதால், அதை டூடர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உதவ முன்வந்தார்.
ஆஸ்டினை ஒரு பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டு, இந்தியாவுக்கு ஐஸ் அனுப்பும் வேலையை மீண்டும் தொடங்கினார் டூடர். இவருடைய அப்பா வழக்கறிஞர். மூத்த சகோதரர் வில்லியம் டூடர், ஓர் இலக்கியவாதி. ஹார்வர்டில் படித்த டூடர், இள வயதிலே வணிகம் செய்யத் தொடங்கிவிட்டார்.தனது 23 வயதில் அவர், ஒரு கப்பல் நிறைய ஐஸ் கட்டிகளை ஏற்றுமதி செய்ய முயன்றபோது, அது முழு முட்டாள்தனம் என்று ஊரே அவரைக் கேலி செய்தது. துறைமுகத்தில் இருந்து, பனிக் கட்டிகளைக் கப்பலில் ஏற்றுவதற்குக்கூட யாரும் முன்வரவில்லை. ஆனால், ஐஸ் கட்டி வணிகத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க முடியும் என்று டூடர் உறுதியாக நம்பினார். ஒரு கப்பல் நிறைய ஐஸ் கட்டிகளை ஏற்றி அனுப்பி, 4,500 டாலர்கள் சம்பாதித்துக் காட்டினார் டூடர்.ஆனால் சில முறை, ஐஸ் கட்டிகள் ஏற்றிச் சென்ற கப்பல் வழியில் கவிழ்ந்துபோய், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பனிக் கட்டிகளுடன் சேர்த்து ஏற்றி அனுப்பப்பட்ட பழங்கள் அழுகிப்போயின. அதனால், அவரது கடன் சுமை அதிகமாகி, அதில் இருந்து மீள முடியாமல் சிறை வாசமும் அனுபவித் தார்.கடனில் இருந்து விடுபட உள்ள ஒரே வழி இந்தியாவுக்கு ஐஸ் அனுப்புவதே என்று உணர்ந்துகொண்ட டூடர், அதன் மூலம் சுலபமாகப் பணம் சம்பாதிக்க முடிவு செய் தார். அந்த நாட்களில் பனிப் பாளங்களை அறுவடை செய்வது கஷ்டமான காரியம். அதை முறைப்படுத்தி பனிக் கட்டிகளைச் சதுர வடிவில் வெட்டி, வைக்கோல் சுற்றி அனுப்பினால், அதை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று திட்டமிட்டார் டூடர்.அதன்படி, பாஸ்டன் பகுதியில் உள்ள ஏரிகளில் உறைந்த பனிக் கட்டிகளை அறு வடை செய்து கப்பலில் ஏற்றினார். 180 டன் கொள்ளவு உள்ள கிளிப்பர் டுஸ்கானி கப்பல், அமெரிக்காவில் இருந்து 1833-ம் வருடம் மே மாதம் 7-ம் தேதி இந்தியாவுக்குப் புறப்பட்டது. 16,000 மைல்கள் தூரத்தைக் கடந்து, அது கொல்கத்தாவை அடைய வேண்டும். அதற்கு நான்கு மாதங்கள் ஆகும். அது வரை ஐஸ் கட்டிகள் கரையாமல் இருக்க, முறையான பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு இருந் தது. அதன் கேப்டனாக இருந்தவர் லிட்டில் ஃபீல்டு.  டூடரின் சார்பில் விற்பனைப் பிரதியாக கப்பலில் உடன் வந்தவர் வில்லியம் ரோஜர்ஸ்.  
1833-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவை வந்து அடைந்தது டூடரின் கப்பல். 50 டன்னுக்கும் மேலான ஐஸ், வழியிலே கரைந்துபோய்விட்டது. வங்காள மக்கள் அப்போதுதான் முதன் முறையாக ஐஸ் கட்டிகளைப் பார்த்தார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை. தொட்டால் கைகளைச் சில்லிடவைக்கும் அந்த மாயப் பொருளை வியப்போடு பார்த்தார்கள்.கல்கத்தா துறைமுகத்தில், ஐஸ் கட்டிக்கு வரி போடுவதா, வேண்டாமா என்ற விவாதம் நடந்தது. ஐஸுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை  கவர்னர் வில்லியம் பென்டிக் ஏற்றுக்கொண்டார். அத்துடன், ஐஸ் கட்டிகளை ஏற்றி வரும் கப்பலில் இருந்து இரவில் சரக்குகளை இறக்கிக்கொள்வதற்கும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.'இந்தியக் கோடையின் வெப்பத்தில் தகித்துப் போயிருந்த வெள்ளையர்களுக்கு, அந்த ஐஸ் கட்டிகள் கடவுள் கொடுத்த அரிய பரிசைப்போல இருந்தது’ என்று எழுதுகிறார் ஹோர்டிங் என்ற ஆங்கில அதிகாரி. ஐஸ் கட்டி இறக்குமதி, அந்தக் காலத்தில் கல்கத்தா நகரில் பரபரப்பாகப் பேசப்பட்டது.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது 'நூற்றாண்டு காலத் தனிமை’ நாவலில், ஐஸ் கட்டியை முதன்முதலாகப் பார்க்கப் போன சம்பவம் ஒன்றை விவரித்திருப்பார். அதில், ஐஸ் கட்டியைத் தொடும் சிறுவன் 'அது ஒரு விந்தை, இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு’ என்று சொல்வான். அந்த மன நிலையே கல்கத்தாவுக்கு ஐஸ் வந்தபோது மக்களிடமும் இருந்தது.மருத்துவர்களும் மிகவும் வசதியானவர்களும் மட்டுமே ஐஸ் வாங்க அனுமதிக்கப்பட்டார்கள். ஐஸ் கட்டிகளை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்று மக்களுக்குத் தெரியவில்லை.  அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதும் புரியவில்லை. ஐஸ் கட்டியை மண்ணில் முளைக்கவைத்தால், ஐஸ் மரம் வருமா என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட் டார்கள்.குளிர்பானம், மது, சுவையூட்டப்பட்ட பால் ஏடு, பழச் சாறு ஆகியவற்றுடன் ஐஸ் சேர்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தது. அதைவிடவும், சமைத்த உணவுகளை இரண்டு நாட்கள் வரை கெட்டுப்போகாமல் ஐஸ் கட்டிகள் பாதுகாத்த விந்தை ஆங்கிலேயக் குடும்பங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. காய்ச்சல் மற்றும் வயிற்று நோவைப் போக்க மருத்துவர்கள் ஐஸைப் பரிந்துரை செய்ய ஆரம்பித்தார்கள்.
 விகடன்