மதுரை சத்யசாயி நகரில் இருக்கிறது மு.க.அழகிரியின் வீடு. சாதாரணமாக இந்த ஏரியாவில் எந்த வாகனமும் நுழைய முடியாது; அவ்வளவு கெடுபிடிகள். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோதே, மூன்று ஆட்டோக்களில் வலம் வந்தவர்கள், அ.தி.மு.க. வெற்றிக்கு ஆதரவு கோஷம் எழுப்பிவிட்டுப் போனார்கள். சத்யசாயி நகருக்கு இப்போதுதான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது! திருமங்கலம் இடைத் தேர்தல் வெற்றிக்குப் பரிசாக, மு.க.அழகிரிக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்தது கட்சித் தலைமை. தென் மண்டலத்தில் உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அழகிரிதான் பொறுப்பாளர். திருமங்கலம் ஃபார்முலாவைப் பயன்படுத்தி, தெற்கில் அடுத்தடுத்து நடந்த நான்கு இடைத் தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியை ஜெயிக்கவைத்து, 'இடைத் தேர்தல் நாயகர்’ ஆனார் அழகிரி. அதனால், பொதுத் தேர்தலிலும் அவரை மலைபோல் நம்பியது தி.மு.க. தலைமை. அதற்காகவே, அவர் அடையாளம் காட்டிய நபர்களுக்கு எல்லாம் ஸீட் கொடுக்கப்பட்டது. ''தென் மாவட்டங்களில் 45 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்!'' என வாக்குச் சாவடி வாசலிலேயே வாக்குக் கொடுத்தார் அழகிரி. ஆனால், 12 தொகுதிகளைப் பிடிப்பதற்கே, தி.மு.க. கூட்டணிக்கு நுரை தள்ளிவிட்டது. தென் மண்டலத்தில், மற்ற எட்டு மாவட்டங்களில் குறைந்தது ஒரு தொகுதியிலாவது தி.மு.க. ஜெயித்து இருக்கிறது. ஆனால், அழகிரியின் தலைமை பீடமான மதுரை மாவட்டத்தில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மண்ணைக் கவ்வியது.
பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களான சுப.தங்கவேலன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி போன்றவர்கள் எல்லாம் ஜெயித்து இருக்கும்போது, மதுரை மாநகர், புறநகர் மாவட்டச் செயலாளர்கள் இருவரையும் கங்கணம்கட்டி தோற்கடித்து இருக்கிறார்கள் மதுரை மக்கள்.
இது அழகிரி கனவிலும் எதிர்பார்க்காத முடிவு.
''மதுரை மாவட்டத்தில், மேலூர், மதுரை கிழக்கு, மேற்கு, மத்தி ஆகிய தொகுதிகளில் வெற்றி நிச்சயம்!'' என்று முழங்கினார்கள் அழகிரியின் விசுவாசிகள். ஆனால், அழகிரி வசிக்கும் மதுரை மேற்குத் தொகுதியில்கூட தி.மு.க. ஜெயிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அழகிரி, ''அரசு ஊழியர்களை நம்பினோம். அவங்க நமக்கு தேனைத் தடவிட்டாங்க. பணத்தை வாங்கிக்கிட்டு எல்லோரும் துரோகம் பண்ணிட்டாங்க. என்கிட்ட உண்மை நிலவரத்தைச் சொல்லாம மறைச்சிட்டாங்க...'' என்று சத்தம் போட்டாராம்.
''காலம் கடந்து ஞானம் பிறந்து இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஓட்டுக்கு 500 கொடுத்தார்கள். ஆனாலும், அழகிரி எதிர்பார்த்த ஓட்டு விழவில்லை. அந்தத் தேர்தலுக்குப் பிறகு தன்னை மக்கள் தொண்டனாகக் காட்டிக்கொள்ள, மனு வாங்கும் படலம் உள்ளிட்ட வைபோகங்களை நடத்தினார் அழகிரி. சில மனுக்களுக்கு தீர்வும் சொல்லப்பட்டது. அழகிரியிடம் மாற்றம் தெரிந்தாலும், அவரைச் சுற்றி இருப்பவர்கள் மாறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அழகிரியை முன்னிலைப்படுத்தித் தங்களை வளப்படுத்திக்கொண்டவர்கள், ஒசைப்படாமல் அவரது அரசியல் அஸ்திவாரத்துக்கும் ஆப்படித்தார்கள்!'' என்கிறார்கள் மதுரையின் விவரமான உடன்பிறப்புகள்,
சொத்துகளை மிரட்டி வாங்க ஒரு கூட்டம் அலைந்தது. தனியாக வசிக்கும் தம்பதியைத் தேடிப் பிடித்து அவர்களிடம், 'உனக்கென்ன புள்ளையா குட்டியா... பேசாம நாங்க குடுக்குறதை வாங்கிக்கிட்டு கையெழுத்தைப் போடு!’ என்று மிரட்டியே மதுரைக்குள் ஏகப்பட்ட சொத்துகளை அடித்துப் பறித்தது இந்தக் கூட்டம். மதுரை மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பத்திரப் பதிவு நடந்தாலும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் கமிஷன் வாங்க ஒரு கூட்டம். 25 லட்சத்துக்கு மேல் சொத்து வாங்கினால், அதற்கான 'கட்டிங்’கை இந்தக் கும்பலுக்குக் கொடுத்தால்தான் பத்திரம் பதியவே முடியும்.
தென் மண்டல ஐ.ஜி. அலுவலகம் மதுரையில் இருப்பது பலருக்குத் தெரியும். ஆனால், தி.மு.க-வினரால் நடத்தப்பட்ட தென் மண்டல டி.ஜி.பி. அலுவலகம் ஒன்றும் மதுரையில் இருந்தது. தென் மாவட்டங்களில் எந்த போலீஸ் அதிகாரியை எந்த ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் போட வேண்டும்; எந்த அதிகாரியை மதுரைக்குக் கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுப்பது இங்குதான். நேர்மையான அதிகாரிகள் பலர் பந்தாடப்பட்டார்கள்.
மதுரை வடக்குத் தொகுதியில் அரசு ஊழியர் ஓட்டுகள் 30 சதவிகிதம் இருக்கிறது. போலீஸ் குடியிருப்புகளும் இதற்குள்தான் வருகின்றன. போலீஸ் குடும்பங்களும் அரசு ஊழியர்களில் கணிசமானவர்களும் தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால்தான், அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் 46,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.
எதற்கெடுத்தாலும் அழகிரியின் பெயர் 'மிஸ்யூஸ்' பண்ணப்படுவதால், போலீஸில் கொடுக்கப்படும் புகார்களுக்கும் நடவடிக்கை இல்லாமல் போனது. எந்தப் பிரச்னை என்றாலும், புகார் கொடுத்தவர்களை போலீஸே மிரட்டி பைசல் பண்ணிவிடும். பொதுமக்களுக்கு மட்டும் அல்ல... போலீஸுக்குப் பிரச்னை என்றாலும் இப்படித்தான் நடந்தது.
ஐந்து மாதங்களுக்கு முன்பு தெற்கு வாசல் அருகே பள்ளிவாசல் ஏரியாவில் பணியில் இருந்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் ஒருவர், குடிபோதையில் ஒரே பைக்கில் வந்த மூவரைப் பிடித்து வழக்குப் போட முயன்றார். விஷயம் தெரிந்து அடியாட்களுடன் காரில் வந்த தி.மு.க. அதிரடிப் பிரமுகர், இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்துக் கீழே தள்ளிவிட்டு, குடிபோதை ஆட்களை மீட்டுப்போனார். உடனே, விஷயத்தை அப்போது இருந்த கமிஷனரிடம் கொண்டுபோனார், இன்ஸ்பெக்டர். ''இதென்ன கொலை கேஸாய்யா..? அந்தாளுதான் கட்சிக்காரன்னு சொல்லி இருக்கான்ல. பேசாம விட வேண்டியதுதானே?'' என்று ஏச்சு விழுந்ததாம்.
இது இப்படி என்றால்... மாநகராட்சி கவுன்சிலர்களும் பண வேட்டையில் இறங்கினார்கள். விளம்பர நிறுவனங்கள்கூட தொழில் செய்ய முடியாதபடி, அண்ணன் பெயரைச் சொல்லி ஆட்டம் போட்டது ஒரு கூட்டம். மாநகருக்குள் அழகிரி பெயரைச் சொல்லி தி.மு.க-வினர் செய்த அடாவடிகளை, புறநகரில் ஒன்றியச் செயலாளர்கள் அந்தஸ்தில் இருப்பவர்களும் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த சமாசாரங்களை எல்லாம் கண்டும், காணாததுபோல் இருந்ததால்தான் அழகிரிக்கு இப்படி ஒரு பின்னடைவு!
அ.தி.மு.க. கோட்டையான கொங்கு மண்டலத்தில்தான் வாக்கு வித்தியாசம் 30,000, 40,000 என்று இருக்கும். இந்தத் தேர்தலில் மதுரை மாவட்டத்திலும் அ.தி.மு.க-வுக்கு அவ்வளவு பெரிய ஓட்டு வித்தியாசம் கிடைத்தது. மதுரை மாவட்டத்தில் 16,000 முதல் 48,000 வரை வித்தியாசத்தில் வென்று இருக்கிறது அ.தி.மு.க. கூட்டணி.
மதுரை தெற்குத் தொகுதியில், புதுமுக வேட்பாளரான சி.பி.எம். கட்சியின் அண்ணாதுரை, சுமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்திலும், திருப்பரங்குன்றம் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜா சுமார் 48,000 வாக்குகள் வித்தியாசத்திலும் ஜெயித்து இருப்பது அழகிரிக்கு விடப்பட்ட சவால். யார் வேட்பாளர், எந்தச் சின்னத்தில் போட்டி இடுகிறார் என்றெல்லாம் பார்க்காமல், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக யார் நின்றாலும், அவர்களுக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து இருக்கிறார்கள் மதுரை மக்கள். கருணாநிதியே மதுரையில் நின்று இருந்தாலும் இதுதான் கதி!
அந்த அளவுக்கு நடந்தது, மௌனப் புரட்சி. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை அழகிரிக்கு 1.40 லட்சம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 2.30 லட்சம் வாக்குகள் கூடுதல்!
மதுரைக்குள் தனது பெயர் கெட்டுக்கிடப்பது தெரிந்தோ என்னவோ மதுரைக்குள் அழகிரி ஓட்டு கேட்டுப் போகவே இல்லை. பணம் மட்டுமே கட்சியை ஜெயிக்கவைக்கும் என்று நம்பினார். ஆனால், ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்தது... வாக்காளர்களை வசவு பாட வைத்ததே தவிர, வாக்காக மாறவில்லை.
தன்னைச் சுற்றி இத்தனை வில்லங்கங்களை வைத்துக்கொண்டு, ''தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது!'' என்று எந்த தைரியத்தில் சொன்னார் அழகிரி? உண்மையில் காணாமல்போனது அழகிரி தி.மு.க-தான்!
- குள.சண்முகசுந்தரம்