நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Tuesday, May 10, 2011

2ஜி வழக்கு: ஆஜராவதில் கனிமொழிக்கு விலக்கு


புதுடெல்லி, மே 10,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மே 12 மற்றும் 13 ஆகிய இருநாட்களுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், தமிழக முதல்வரின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் தங்களை சிபிஐ கைது செய்யாமல் இருக்க நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.


அந்த மனுக்களை விசாரித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், மே 14-ம் தேதிக்கு உத்தரவை ஒத்திவைத்தது. அதுவரை இருவரும் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கனிமொழியும் சரத்குமாரும் மே 7-ல் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் இன்று ஆஜரான இருவரும் விலக்கு கோரும் மனுவை மீண்டும் புதிதாக தாக்கல் செய்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் மே 12, 13 ஆகிய இருநாட்களுக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளித்தார். 

நன்றி : ஜூனியர்விகடன்

No comments:

Post a Comment