இதுபற்றி அன்னாவின் ஆதரவாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
மக்களிடம் இருந்து எங்களுக்கு வந்த யோசனைகளில் ஒன்று லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எம்.பி.க்களின் வீடுகள் முன்பு மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்பதும் ஒன்று ஆகும். இந்த யோசனை சரியானது என்பதால் இதை பின்பற்றலாம் என்று தீர்மானித்து இருக்கிறோம். மக்கள் எம்.பி.க்களின் வீடுகள் முன்பு மறியல் போராட்டம் நடத்த முன்வரவேண்டும். எம்.பி.க்களிடம் சென்று லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற அவர் முன்வரவேண்டும் என்று கூறவேண்டும். அவர் அவ்வாறு செய்ய மறுத்தால், அடுத்த தேர்தலில் அவருக்கு நீங்கள் ஓட்டுப்போட மாட்டீர்கள் என்பதை சொல்ல வேண்டும். இணையதளங்கள் எல்லா எம்.பி.க்களின் வீட்டு முகவரிகள் தொடர்பு எண்கள் ஆகியவற்றை விளம்பரப்படுத்த வேண்டும். அப்போது தான் எம்.பி.க்களை மக்கள் தொடர்பு கொள்ள முடியும். போராட்டம் நடத்த முடியும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
No comments:
Post a Comment