. | |
ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் இன்று 6வது நாளை எட்டியது. | |
. | |
உண்ணாவிரதம் நடைபெறும் ராம்லீலா மைதானத்தில் அவரது ஆதரவாளர்கள் வெள்ளம் என திரண்டதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. அன்னா ஹசாரேயின் போராட்டத் துக்கு ஆதரவாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் லட்சக்கணக்கானோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்று கோரி 73 வயதாகும் சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரது உண்ணாவிரதம் இன்று 6வது நாளை எட்டியது. உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை முதல் ஏராளமானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். அன்னா ஹசாரேயின் நெருங்கிய ஆதரவாளர்கள் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, சாந்திபூஷன், மனீஷ் சிசோடியா, மேத்கா பட்கர் ஆகியோரும் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்தனர். உண்ணாவிரத பந்தலில் நேற்று ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அன்னா ஹசாரே லோக்பால் மசோதாவுடன் எனது போராட்டம் நின்று விடாது. தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கும் விவசாயிகளின் நலன் காக்கவும் தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார். நாட்டு நலன் கருதி இந்த போராட்டங்களை முன்நடத்திச் செல்ல மாபெரும் சக்தியாக இளைஞர் சமுதாயம் தயாராக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நாட்டு மக்கள் எத்தனையோ இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தங்களுக்காக குரல் கொடுக்க நேர்மையானவர்களை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியாத சூழலில் மக்கள் உள்ளனர். இதற்கு நடைமுறையில் உள்ள தேர்தல் முறையே முழுக்காரணமாகும். இதனால் தேர்தல் சீர்திருத்தம் அவசியமாகும். விவசாயிகளின் வாழ்க்கை நிலையை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. நிலங்களை கையகப்படுத்துவது விவசாயிகளின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமாகும். எனவே விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார். உண்ணாவிரத பந்தலில் இளைஞர்கள், தேசபக்தி பாடல்களையும் பஜனை பாடல்களையும் பாடினார்கள். மேலும் மேலும் அதிகமானோர் ராம்லீலா மைதானத்துக்கு வந்ததால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. கிரண்பேடி கண்டனம் இதனிடையே லோக்பால் மசோதா விஷயத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவதாகவும், இதன் மூலம் அன்னா ஹசாரேயின் உடல்நலத்தில் அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது என்றும் ஹசாரேயின் ஆதரவாளர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்தார். கடந்த 6 நாட்களாக அன்னா ஹசாரே எந்த உணவும் உட்கொள்ளவில்லை. ஆனால் அரசில் யாருக்கும் அதைப் பற்றி கவலையில்லை. ஹசாரே ஜன் லோக்பால் மசோதாவை விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். லோக்பால் மசோதா குறித்த பேச்சுவார்த்தைக்கு தயார் என்று நேற்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அரவிந்த் கேஜ்ரிவால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் யாரை சந்திப்பது, எங்கு சந்திப்பது, எப்போது சந்திப்பது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்றார். இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது |
நெற்றிக்கண்

Sunday, August 21, 2011
ஹசாரேவுக்கு ஆதரவு பெருகுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment