இன்று சட்டப் பேரவையில் பட்ஜெட் விவாதத்தில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், ஜாபர் சேட் மீது தாக்குதல் தொடுத்தார்.
இன்று அவர் பேசுகையில்,
காவல் துறை அதிகாரிகள் என்றால் நேர்மையாக இருக்க வேண்டும். ஆனால் எல்லா நெறிமுறைகளுக்கும் புறம்பாக தி.மு.கவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியைப் போலவே கடந்த கால ஆட்சியில் உளவுத் துறை தலைமை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட் செயல்பட்டுள்ளார். பொதுவாக நாட்டிற்கோ, மக்களுக்கோ ஆபத்து விளைவிக்கக் கூடிய தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் தொலைபேசியை ஒட்டுக் கேட்பதுதான் வாடிக்கை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களின் அல்லது முக்கியஸ்தர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதும், அதை வைத்து தி.மு.கவிற்கு சாதகமாக அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதையும், தி.மு.கவிற்கு எதிராக உள்ளவர்களை ஒன்று சேர விடாமல் தடுப்பதையும் தன்னுடைய முக்கிய கடமையாகக் கொண்டு செயலாற்றினார். பொதுமக்கள் தாங்கள் விரும்பியதை, விரும்பியவர்களிடம் பேசும் அடிப்படை உரிமையான பேச்சுரிமையை தடுக்கும் வகையில் செயல்பட்ட அதிகாரிதான் முன்னாள் உளவுத் துறை தலைமை அதிகாரி. அவர் எந்த அளவுக்கு கலைஞரின் விசுவாசியாக இருந்தார் என்றால், ஜாபர் சேட் குடும்பத்தினருக்கு கலைஞர் அரசு, வீட்டுவசதி வாரிய விதிகளை பொருட்படுத்தாமல் அதன் வீட்டு மனைகளை சமூக சேவகர் என்ற பெயரில் தாராளமாக வழங்கியதில் இருந்தே நன்கு புலனாகும். நேர்மை தவறிய இவர் மீது நடவடிக்கை இந்த அரசு எடுத்தால், உடனே அவர் ஒரு இஸ்லாமியர் என்று மதத்தை இழுக்கிறார். என்று பேசினார்.

No comments:
Post a Comment