நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, August 11, 2011

நீ எம்.எல்.ஏ..வா இருந்தா எனக்கென்ன..?

இதாண்டா போலீஸ்...ராஜசேகர் போல காலரை தூக்கிக்கொண்டு,முஷ்டியை மடக்கி க்காட்டி தமிழக போலீஸ் புகுந்து விளையாடுகிறது....நடப்பது அ.தி.மு.க ஆட்சியா இல்லை..போலீஸ் ஆட்சியா என்ற சந்தேகம் வரலாம்..
ஜெயலலிதா போலீஸ் இலாகா தலைவர் என்பதால்..இது நிச்சயம் ஜெ..ஆட்சிதான்...தி.மு.க காரன் ஒருத்தன் கூட வெளியே இருக்க கூடாதுன்னு இந்தம்மா நினைக்குது என முன்னாள் அமைச்சர்கள் அலறுகிறார்கள்...ஈரோடு சூரப்புலி என்.கே.கே.ராஜாவை படுக்கையறையிலேயே சென்று தூக்கினார்கள்.திருச்செந்தூர் அடங்காத சிங்கம்,அனிதா ராதாகிருஷ்ணனை சுற்றி வளைத்து கைது செய்தார்கள்..என தமிழக போலீஸ் காட்டும் வேகம் பார்த்தால் இத்த்னை நாளா இந்த புலியை எல்லாம் வேலை வாங்க தெரியாம சொன்னதை மட்டும் செய்யும் பூனையா வெச்சிருந்திருக்காங்கப்பா என தோன்றுகிறது....

எல்லா கைதுக்கும் மக்கள் புகார் என்னும் ஆதாரம் இருக்கு.யாரும் அ.தி.மு.க அனுதாபி இல்லை..தி.மு.க ஆட்சியில் புகார் கொடுத்தேன்..மிரட்டப்பட்டேன் இப்போது அம்மா ஆட்சியில் பயமில்லாமல் புகார் கொடுக்கிறேன் என்பவர்கள்தான் அதிகம்.

மதுரை எப்படியிருந்தது..சின்ன தகராறுன்னா கூட யேய்..அண்ணனுக்கு ப்ஹோன் போடவா....நான் அண்ணன் வீட்டு வாட்ச்மேனோட மச்சினன் என்கிட்டேயேவா என்னும் அளவுக்கு மதுரை அழகிரி பெயருக்கு மந்திரம் போல கட்டுட்டு கிடந்தது..இன்று அண்ணன் என சொன்னாலே கன்னத்தில் பொறி பறக்க அடி விழும்..என்பதுதான் நிலைமை.....மதுரையை மீட்ட மீனாட்சி என ஜெயலலிதாவை மதுரை மக்கள் கும்பிடுகிறார்கள்.சில்லுவண்டுகளிடம் கூட ஒவ்வொரு முதலாளிகளும் நடுங்குவார்கள்.இன்று பெரும் அப்பாடக்கர் தாதா முதல் சில்லுவண்டு வரை ராஜபாளையம்,மதுரை சிறைகளில் விக்கித்து கிடக்கிறார்கள்.

96 ல் கலைஞர் முதல்வர் ஆனது முதல் அ.தி.மு.க வின் முக்கியஸ்தர்களின் தொழில்கள் முதல் கொண்டு ஒடுக்கப்பட்டன...ரவுடிகளை அள்ளி உள்ளே போடுகிறோம் என்ற பெயரில் அவர்களையெல்லாம் உள்ளே தள்ளியது போலீஸ்.இன்று அதற்கு பழிவாங்கும் நடவடிக்கைதான் என சொல்லப்பட்டாலும் ,நில மீட்பு என்பது புதுசு.காரணம் ரியல் எஸ்டேட் என்பது கோடிகளை குவிக்கும் புதையல் பிசினஸ்.ஷேர் மார்க்கெட் கூட விழுந்துவிடும்.ஆனால் ரியல் எஸ்டேட் எப்போதும் படுக்காது.அதனால்தான் தி.மு.க முக்கியஸ்தர்கள் தமிழ்கத்தில் ஒரு காலி இடம் கூட இல்லாமல் 100 ஏக்கர் 50 ஏக்கர் என கபளீகரம் செய்தார்கள்.சரியான வாரிசு இல்லாத குடும்பங்களை மிரட்டி வாங்கினார்கள்.எனவே நில மீட்பு வழக்கு என்பது மிக அவசியம்.நாளை அதி.மு.க ஆட்சியை இழந்தாலும் இது தொடர வேண்டும்.அப்போதுதான் நம் சமூகத்தின் சொத்துக்கள் காப்பற்றப்படும்.ஒரே மனிதரிடம் நம் முப்பாட்டன் சொத்துக்கள் அடிமை ஆகாமல் காப்பற்றப்படும்.

மதுரையில் ஒரு நல்ல இடம் இருக்கிறது என்றால் அந்த வீட்டுக்குள் நுழைந்து அதன் உரிஉமையாளரை அம்மணம் ஆக்குவார்களாம்.இதே நிலை உன் பொண்டாட்டி,புள்ளைகளுக்கு வரக்கூடாதுன்னா பத்திரத்துல கையெழுத்து போடு என்பார்களாம்.மலத்தை கொண்டுபோய் வீட்டிற்குள் ஊற்றுவார்களாம்....என்னென்ன கொடுமை இருக்கோ எல்லாம் செய்து பத்திரத்தை பாதி பணம் கொடுத்து எழுதி வாங்குவார்களாம்...இவையெல்லாம் அடிப்பொடிகள்தான்..மெயின் கைக்கு கால்வாசி பணம் மாமூல்....போலீஸ்க்கு புகாரே போகாது....

இவற்றுக்கெல்லாம் இன்று விடிவு பிறந்துள்ளது...அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க வில் அசைக்க முடியாத சக்தியாக திருச்செந்தூரில் இருந்தவர்..கடுமையாக உழைத்து,திருச்செந்தூரில் தொடர் வெற்றியை பெற்றவர்..சீனியர்களுக்கே சீட் கொடுக்ககூடாது...புதுமுகங்களுக்கும் சீட் தரவேண்டும் என்பது..அ.தி.மு.க வில் மட்டுமே இருக்கும் கொள்கை.அதன்படி அவருஇக்கு சீட் மறுக்கப்பட்டபோது தி.மு.க வில் சேர்ந்து எம்.எல்.ஏ ஆனவர்....தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ..வை ஏகத்துக்கும் அர்சித்தவர்...தி.மு.க வில் சேர்ந்தபின் அங்கிருக்கும் ஆட்கள் அவரை வளரவிடுவார்களா...தடை போட்டால் இவரும் சும்மா இருப்பாரா...திருச்செந்தூர் அரசியல்...மிக கொடூரமானது...தனக்கு முட்டுகட்டையாக இருந்த தி.மு.க செயலாளரை காலி செய்த வழக்கில்தான் அண்ணன் இப்போ உள்ளே போயிருக்கிறார்....சூறாவளியாய் ஜெ..பின்னி பெடலெடுக்கும்போது..சிங்கம் சிலிர்த்துகிட்டு வரும்போது....எம்.எல்.ஏ வாக இருந்தா மட்டும்..? என்ன பண்ண முடியும்....ஏற்கனவே ஒரு எம்.எல்.ஏ..ஜெ.அன்பழகன்..உள்ளே..அடுத்து இவரு...தி.மு.க எம்.எல்.ஏ லிஸ்டும் குறைகிறது....

Thanks to Savukku

No comments:

Post a Comment