நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Saturday, August 20, 2011

தமிழகத்தில் 7 ரயில்களில் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு


  சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினார்கள். சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம், பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய  7 ரயில்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.  சி.பி.ஐ. அதிகாரிகள் ரயிலில் ஏறி பயணிகள் வைத்திருந்த டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது பயணிகள் பலருக்கு இ.கியூ (அவசர ஒதுக்கீடு) டிக்கெட்டு முறைகேடாக ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரயில் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படாதது, பராமரிப்பு செய்தது போல் கணக்கு காட்டப்பட்டது,  குளிர் சாதன வசதி, முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்பு வழங்குவதில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குறைகளும் கண்டிபிடிக்கப்பட்டது.முதன்முறையாக ரயில்களில் சி.பி.ஐ., ரெய்டு நடத்திருப்பது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment