நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Tuesday, August 23, 2011

திமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ரூ.100 கோடி ஊழல்

திமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறையில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டினார்.

சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அவர்,

கடந்த திமுக ஆட்சியில் கொள்ளை அடித்துள்ளனர். கூட்டுறவுத் துறையில் பல்வேறு இனங்களில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.7,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்ததாக கடந்த ஆட்சியில் திமுகவினர் தம்பட்டம் அடித்தனர். ஆனால் ரூ.5,346 கோடி கடன்தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.506 கோடியை அவர்கள் தராமல் போய்விட்டதால் கூட்டுறவு நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளுக்காக ரூ.1.21 கோடி அளவுக்கு கடன் கொடுத்துள்ளனர்.

குறித்த காலத்துக்குள் பயிர்க்கடனை செலுத்தியவர்களிடம் வட்டி வசூலிக்கக்கூடாது என்று அம்மா ஆணையிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.17 கோடி கடன் வழங்கப்படும்.

ஸ்ரீரங்கத்துக்கு சலுகை...

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஸ்ரீரங்கம், பேட்டைவாய்த்தலை கிளைகள், ஸ்ரீரங்கம் நகர கூட்டுறவு வங்கி ஆகியவை ரூ.30 லட்சம் செலவில் நவீனமயமாக்கப்படும்.

கலைக்கப்பட்ட திருவாடனைக்காவல் கூட்டுறவு நகர வங்கியை, நகரக் கூட்டுறவு கடன் சங்கமாக மாற்றி புத்துயிரூட்டப்படும்.

தேங்காயை கொப்பரையாக மாற்றுவதற்கு தென்னை விவசாயிகளுக்காக ரூ.1.30 கோடி செலவில் சூரிய உலர்கலன்கள் அமைக்கப்படும்.

மதுரையில் நடந்த இடைத் தேர்தல்களின்போது காவல் துறையினரை மத்திய அமைச்சர் அழகிரி கட்டுப்படுத்தி வந்தார். அந்தத் தேர்தல்களின்போது அதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு, தேர்தல் பணியாற்ற விடாமல் தடுத்தார்.

ஒரு மாநில அமைச்சர் சட்டசபையில் மத்திய அமைச்சரவைப் பற்றி இப்படிப் பேசுகிறாரே என்று நீங்கள் கருதலாம். ஆனால், அந்த அளவுக்கு அழகிரி நடந்து கொண்டார் என்றார் ராஜு.

இக் கூட்டத் தொடரை திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துவிட்ட நிலையில், ராஜுவுக்கு யாரும் பதில் தரவில்லை.


Thanks to OneIndia

No comments:

Post a Comment