"பைத்தியக்காரர்களுக்கு பதில் சொல்வதில்லை' என, கருணாநிதி கூறியுள்ளதற்கு, விஜயகாந்த் நெத்தியடியாக பதில் சொல்லியிருக்கிறார்,
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதை மறு பரிசீலனை செய்து, தூக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும். லஞ்சம், ஊழலில் கைதானவர்களை, திகார் சிறையில் அடைத்துள்ள நிலையில், ஊழலை எதிர்ப்போருக்கும் திகார் சிறை என்பது, மத்திய அரசுக்கு நியாயமா? ஆளுங்கட்சியினர் சர்வாதிகாரமாக நடப்பதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியில், மக்கள் அளித்த வாய்ப்பை தி.மு.க., நல்ல முறையில் பயன்படுத்தாமல், இப்போது என்ன புதிய ஜனநாயகக் கடமை ஆற்றப் போகிறது. போலீஸ் அதிகாரி ஜாபர்சேட் இஸ்லாமியர் என்பதால், அவர் மீது, அ.தி.மு.க., அரசு நடவடிக்கை எடுப்பதாக, கருணாநிதி சொன்னார். இதற்கு, "அப்துல் கலாமை இரண்டாவது முறை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுத்துப் பழி வாங்கியவர் கருணாநிதி' என, சட்டசபையில் நான் பேசினேன். ஆனால்,"பைத்தியக்காரர்களுக்கு பதில் சொல்வதில்லை' என, கருணாநிதி கூறியுள்ளார். அவரை "கலைஞர்' என, இன்று வரை கண்ணியத்துடன் தான் பேசுகிறேன். அவர், எந்தக் காலத்தில் கண்ணியத்துடன் பேசினார்? இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Thanks to Sathis777
No comments:
Post a Comment