ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமான், "ஈழத் தமிழர்கள் குறித்த நிலையில் கருணாநிதியின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்யும் போது ராஜபக்சே பரவாயில்லை" என்றும் ராஜபக்சே இன உணர்வோடு செயல்படுவதாக தம்மிடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முன்னர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் "ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டதைத் தடுத்து நிறுத்தத் தவறிய கருணாநிதி, ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறி விட்டதாக பிரபாகரன் தம்மிடம் கூறினார்" என்றும் சீமான் பேசினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள மூவரையும் இன்னும் ஏன் தூக்கில் போட வில்லையென மத்திய அரசுக்கு 7 முறை நினைவூட்டல் கடிதங்களைக் கருணாநிதி எழுதியுள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment