மங்காத்தா பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் மதுவிருந்து நடத்திய நடிகர் வைபவ்,
அதில் பங்கேற்ற நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, மகத் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மங்காத்தா பட வெற்றிக்காக அதில் நடித்த வைபவ் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு அப்படத்தில் நடித்த வைபவ், மகத் உள்ளிட்ட 30 பேர் இதில் பங்கேற்றனர்.
நடிகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி. பி.சரண், நடிகை சோனா ஆகியோரும் இவ்விருந்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். மது விருந்தில் எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சோனா குற்றம் சாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாண்டி பஜார் போலீசிலும் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கட்பிரபு மற்றும் மது விருந்தில் பங்கேற்ற நடிகர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையில் சோனாவுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சோனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய வைபவ் மற்றும் அதில் பங்கேற்ற நடிகர் நடிகைகளை கைது செய்யக் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
நடிகர் வைபவ் வீட்டில் மது விருந்து நடந்ததாகவும் அதில் எஸ்.பி.பி.சரண் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நடிகை சோனா புகார் அளித்துள்ளார்.

நட்சத்திர ஓட்டல்களில் இரவு 11 மணிக்கு மேல் மது பார்கள் திறக்க போலீசார் அனுமதிப்பது இல்லை. வீடுகளிலும் கூட்டத்தினரை வைத்து மது விருந்து நடத்த தடை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் 30 பேரை அழைத்து நடிகர் வைபவ் மது விருந்து நடத்தியது கண்டிக்கத்தக்கது.
அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. நடிகை சோனா பல படங்களில் கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் விரோத மாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடித்தார். இப்போது ஆண்கள் நடத்திய மது விருந்திலும் கலந்து கொண்டு குடித்தும் இருக்கிறார்.

எனவே வைபவ், சோனா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் இதுபோன்ற மது விருந்துகள் நடத்துபவர்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டலும், கழித்தலுமாக இந்த பாலியல் விவகாரத்தை மட்டும் கர்ம சிரத்தையாக அலசிக் கொண்டிருக்கிறார்கள் மக்களும். என்னதான் நடந்தது? விசாரித்தால் தலை சுற்றிப் போகிறது நமக்கு.
மங்காத்தா படத்தின் வெற்றியை முழுமையாக கொண்டாடி தீர்த்தார்கள் அப்படத்தில் பங்குபெற்ற நடிகர்களான அரவிந்த், பிரேம்ஜி, அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் ஆகியோர். இவர்களுடன் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவும் சேர்ந்து கொண்டார். மங்காத்தா-வில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத எஸ்.பி.பி.சரணும், நடிகை சோனாவும் வெங்கட், பிரேம்ஜியின் நட்பு வட்டத்திற்குள் இருக்க, அவர்களும் வந்திருந்தார்கள்.
இந்த விருந்து மங்காத்தாவில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்திருந்த வைபவ் வீட்டில் நடந்தது. இந்த நண்பர்களுடன் சோனா சேர்வது புதிதல்ல. இதற்கு முன்பு பலமுறை விருந்து கேளிக்கைகள் என்று இவர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டிருக்கிறார் சோனா. ஆனால் கடந்த ஒரு வருடமாகவே மது அருந்துவதை முற்றிலும் நிறுத்தியிருந்தாராம் அவர். இந்த பார்ட்டிக்கு அவர் வந்ததே வெங்கட்பிரபுவுடன் பேச வேண்டும் என்பதால்தான்.
அதற்கு காரணமும் இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன் ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பதற்காக வெங்கட் பிரபு சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் வாங்கியிருந்தாராம் சோனாவிடம். (தற்போது இன்னொரு வீட்டை மைலாப்பூரில் சாய்பாபா கோவிலுக்கு பின்புறம் கட்டி வருகிறார் அவர்) தனது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கித் தர வேண்டும் என்பதற்காக சோனா கொடுத்த பணமாம் அது. ஆனால் இந்த பணத்தை வாங்கிய பிறகுதான் அவருக்கு ரஜினி மகள் சவுந்தர்யா தயாரித்த கோவா படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது.
கோவாவை முடித்துவிட்டு உங்களுக்கு படம் இயக்கி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பினார் வெங்கட். நினைத்த மாதிரியே படமும் முடிந்தது. படம் வெளியாகிற நேரத்தில், வெங்கட்டின் அட்வைஸ்படி கோவா படத்தின் ஒரு ஏரியாவையும் வாங்கி விநியோகம் செய்தார் சோனா. அதில் பலத்த அடி. சரி போகட்டும்… இது நண்பனுக்காக என்று அதையும் பொறுத்துக் கொண்ட சோனா அடுத்த படம் நமக்குதான் என்று காத்திருந்தார்.
ஆனால் மீண்டும் சோதனை. அஜீத்தே வெங்கட்பிரபு படத்தில் நடிக்க விரும்ப, ஒரே நாளில் உச்ச இயக்குனரானார் வெங்கட்பிரபு. அப்போதும் நண்பனுக்காக தனது படத்தை தள்ளிப் போட்டார் சோனா. நினைத்த மாதிரியே படம் வெளிவந்தது. பெரிய ஹிட். ரஜினி படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் கிடைத்தது மங்காத்தாவுக்கு. கலெக்ஷனும் இதுவரை அஜீத் படம் அறியாதது.
இதையடுத்து மீண்டும் வெங்கட்பிரபுவுடன் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்று விரும்பினாராம் அஜீத். பில்லா-2 க்கு பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டு மீண்டும் வெங்கட்பிரபுவுடன் இணைவது என்று முடிவெடுத்திருந்தார் அஜீத். ஏற்கனவே வெங்கட்பிரபுவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கும் சோனா, இந்த படத்தை நாமே தயாரிக்கலாமே என்று நினைத்தார். அங்குதான் சோதனை ஆரம்பித்தது.
வெங்கட்பிரபுவும் சரணும் நெடுநாளைய நண்பர்கள். தொடர்ந்து மூன்று படங்களை தயாரித்து கடும் கடன் நெருக்கடியில் இருக்கும் சரண், வெங்கட்பிரபுவின் தற்போதைய வெற்றியை பயன்படுத்தி அதிலிருந்து மீண்டு விடலாம் என்று ஒரு கணக்கு போட, ஆரம்பித்தது மங்காத்தா ஆட்டம்.
மேற்படி விருந்தில் இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. நிதானமாக பேசினாலே நாக்கு திருகும் சில நேரத்தில். இதில் மது வேறு. என்னாகும்? சோனாவின் மனசே கிழிந்து போகிற மாதிரி பேசினார்களாம் அங்கே. ஒரு கவர்ச்சி நடிகைக்கு நான் படம் இயக்கி தருவதா? அவமானம். வேணும்னா வேறு ஒரு பினாமி பெயரில் படம் தயாரிங்க. நான் இயக்கி தருகிறேன் என்று வெங்கட்பிரபு கூறியதாக தெரிகிறது. சரணிடம் அந்த கால்ஷீட்டை மாற்றிவிடுங்க. அதற்கான பணத்தை வட்டியோடு வசூல் பண்ணிக்கலாம் என்று அவரே ஒரு திட்டமும் வகுத்து கொடுத்தாக சொல்கிறார்கள்.
வெங்கட்பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வட்டாரத்தை எங்கெங்கோ சுற்றுலா அழைத்து சென்றிருக்கிறாராம் சோனா. இவரது பணத்தில்தான் அவர்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் என்னை கவர்ச்சி நடிகை என்று நினைக்காதவர்கள் இப்போது மட்டும் ஏன் ஒதுக்க வேண்டும்? இதுதான் சோனாவின் மன உளைச்சல் என்கிறது சோனா வட்டாரம்.
அந்த பார்ட்டியில் என்ன நடந்தது? ஏன் சிக்கினார் எஸ்.பி.பி.சரண்? என்பதை பற்றியெல்லாம் ஆராய்ச்சிக்கு போகாமல் தற்போது நடப்பது என்ன என்பதை பற்றி மட்டும் விசாரித்தால், அதுவும் பெரிய கேம் ஷோவாக இருக்கிறது.
முதல் நாள் பார்ட்டி முடிந்ததும் எப்படியும் தன்னை சமாதானப்படுத்த வெங்கட், பிரேம்ஜி உள்ளிட்ட நண்பர்கள் வருவார்கள் என்பது தெரிந்து தனது வீட்டுக்கு போகாமல் நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டுக்கு போய் விட்டார் சோனா. செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாராம்.
இவரை சமாதானப்படுத்த முயன்றவர்கள் அது முடியாமல் போக என்ன செய்வதென்று கை பிசைந்து நிற்கிற நேரத்தில்தான் பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் சரண் மீது புகார் கொடுத்திருந்தார் சோனா. அன்று மாலையே தினசரி நிருபர்களை அழைத்து சுட சுட பேட்டியும் கொடுத்துவிட்டார். சரண் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டவுடன் ஐதராபாத்திலிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு ஓடிவந்தார் பாடகர் எஸ்.பி.பி.
காவல் நிலையத்தில், நீங்க சரண் மீது பாலியல் புகார் கொடுக்கிறீங்க. ஆனால் அதுக்கு ஆதாரம் வேணுமே. ஏதாவது புகைப்பட பதிவு இருக்கா, வாய்ஸ் டேப் இருக்கா என்றெல்லாம் கேட்டார்களாம் சோனாவிடம். இது எதுவுமே இல்லாமல் விழித்திருந்த அவரிடம் வசமாக சிக்கினார்கள் சரண் குடும்பத்தினர்.
சோனாவை சந்திச்சு நானே பேசுறேன் என்றாராம் எஸ்.பி.பி. இதை தொடர்ந்து ஓரிடத்திற்கு வரச்சொன்னார் சோனா. ஆனால் முன்பே அங்கு வாய்ஸ் ரெக்கார்டரை மறைத்து வைத்திருந்தாராம். இதையெல்லாம் அறிந்து கொள்ளாத எஸ்.பி.பி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வைபவ் ஆகிய நால்வரும் சோனாவிடம் நடந்த தவறுகளுக்கு பலவிதத்தில் சமாதானம் பேசினார்களாம். என் மகனையே பிரஸ்சுக்கு முன்னாடி வரச்சொல்லி பொதுமன்னிப்பு கேட்க சொல்றேன். வழக்கை வாபஸ் வாங்கும்மா என்றாராம் எஸ்.பி.பி.
இந்த வாய்ஸ்கள் எல்லாவற்றையுமே ஆதாரமாக பதிவு செய்து கொண்டாராம் சோனா. அதுமட்டுமல்ல, இவர் காவல் நிலையத்திற்கு போகிறார் என்பது தெரிந்ததுமே, வைபவ் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாராம் சோனாவுக்கு. அதில், பார்ட்டி என் வீட்டில் நடந்ததா போலீஸ்ல சொல்லிடாதே, என் அம்மா என்னை கொன்னுடுவார் என்று புலம்பியிருந்தாராம். அதையும் இந்த வழக்கின் சாட்சியாக சேர்த்துக் கொள்கிற முடிவிலிருக்கிறாராம் சோனா.
இதற்கிடையில் இந்த விஷயம் எல்லாவற்றையும் ஐதராபாத்திலிருக்கிற அஜீத்தும் கேள்விப்பட்டு செம அப்செட். வெங்கட்பிரபுவை அழைத்தவர் இந்த பார்ட்டி மங்காத்தா பார்ட்டின்னு இனிமே பேசினா நல்லாயிருக்காது என்று எச்சரிக்க, உடனே தனது ட்விட்டரில் ‘அது மங்காத்தா பார்ட்டி அல்ல’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் வெங்கட். அது மட்டுமல்ல, இது நண்பர்களுக்குள் நடந்த விஷயம். சீக்கிரம் சரியாகிவிடும் என்று ட்விட் பண்ணியிருக்கிறார் அவர்.
ஆனால் அவ்வளவு சீக்கிரம் முடிவதாக இல்லை விவாகாரம். லேசான மாரடைப்பு என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கும் சோனா இப்போது மருத்துவமனையில். ‘இதுபற்றி நிறைய பேசிட்டேன்’ என்ற சோனாவிடம், ‘எஸ்.பி.பி உங்களை பார்த்துட்டு போயிருக்காரே?’ என்றோம்.
‘ஆமாம். நான் அவரை ரொம்பவே மதிக்கிறேன். அன்னைக்கு நான் பட்ட காயத்திற்கு எங்கு போய் மருந்து போடுவது? வழக்கை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் நான் இல்லை என்று மட்டும் போடுங்க’ என்று கூறி முடித்துக் கொண்டார்.
- ஆர்.எஸ்.அந்தணன்
No comments:
Post a Comment