நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, September 26, 2011

கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறிக்க சோனா திட்டம் - சரண்!



சோனா விவகாரம் அவ்வளவு எளிதில் முடியாது போலிருக்கிறது.

சரணின் அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறிய பின்பும் தனது புகாரை வாபஸ் வாங்குவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார் சோனா. எந்த நேரத்திலும் போலீஸ் கைது செய்யலாம் என்று நினைக்கும் எஸ்.பி.பி.சரண், முன் ஜாமீன் வழங்கும்படி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்கள் சோனாவை மேலும் எரிச்சலுட்டும் போலிருக்கிறது.

சரண் தன் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது-

"நான் அமெரிக்காவில் பி.பி.ஏ. பட்டம் படித்துள்ளேன். சினிமாவில் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். சமுதாயத்தில் மதிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவன் நான். 'மங்காத்தா' படத்தின் வெற்றியைகொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்தத் தொடங்கினோம்.

நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடக் கூடியவர். சினிமாவில் வெற்றி பெற முடியாத நிலையில், படங்களைத் தயாரித்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்சினையில் சிக்கினார். சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரிகிறது.

அந்த எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். நல்ல போதையில் அவர் இருந்தார். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என்னிடம் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்துகொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன். அவரை அனைவரது முன்பாகவும் நான் எச்சரிக்கை செய்ததால், அவருக்கு அவமானமாக போய்விட்டது. அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மறுநாள் போலீசில் என்மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. என்னை விசாரிக்காமலேயே வழக்குப்பதிவு செய்துவிட்டனர். நான் தவறு செய்யவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் கஜிதா தீனதயாளன் ஆஜரானார். அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜராகி, மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். அதைத்தொடர்ந்து விசாரணையை 20-ந் திகதிக்கு (இன்று) நீதிபதி தள்ளிவைத்தார்


No comments:

Post a Comment