வேதாரண்யம்: நடுக்கடலில் புஷ்பவனம் மீனவர்களை இலங்கை ராணுவத்தினர்
இரும்புகுழாயால் தாக்கி, தலையில் ஐஸ்கட்டிகளை வைத்து கொடுமைப்படுத்தினர்.
நாகை
மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயபால், வீரமணி,
சுந்தரமூர்த்தி ஆகிய 3 மீனவர்களும் நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்
பிடிக்கச் சென்றனர். இரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு படகில்
இருபதுக்கும் மேற்பட்ட இலங்கை ராணுவத்தினர் புஷ்பவனம் மீனவர்களை மிரட்டி
இரும்பு குழாயால் தாக்கினர். தொடர்ந்து ஜெயபாலை தண்ணீரில் குதிக்கச் சொல்லி
வெகுநேரம் நீந்த வைத்துள்ளனர். பின்னர் படகில் ஏற்றி ஐஸ்கட்டியை அவர்
தலையில் தூக்கி வைத்து நீண்டநேரம் நிற்கச் சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதில் ஜெயபால் மயக்கமுற்று படகிலேயே விழுந்தார். பின்னர் மற்ற 2
மீனவர்களையும் கடுமையாக தாக்கி உள்ளனர். அச்சமடைந்த மீனவர்கள் வலைகளை
எடுத்துக் கொண்டு நேற்று மதியம் கரை திரும்பினர்.
காயமடைந்த 3 மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடந்த 2 நாளில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் ஐந்து முறை தாக்குதல் நடத்தி மீன்களை பறித்து சென்றனர்.
தொடர்ந்து இலங்கை மீனவர்களும், இலங்கை கடற்படையினரும் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதால் மீனவ கிராமங்களில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காயமடைந்த மீனவர்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. சீனாவோடும், இந்தியாவுடனும் நட்புறவு வைத்துக்கொண்டு இலங்கை அரசு நாடகமாடுகிறது என்றார்.

No comments:
Post a Comment