நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Tuesday, September 27, 2011

செல்போனில் தேவையற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் தொல்லை இனி கிடையாது!

வாடிக்கையாளர்களுக்கு வரும் தேவையற்ற வர்த்தக அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களை தடுத்து நிறுத்துமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்,வங்கி கடன் உள்ளிட்ட சேவை விவரங்கள்,விளம்பரங்கள் என தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகின்றன.

இதுகுறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றதையடுத்து, இந்த பிரச்சனையைத் தீர்க்கும் வகையில், தேவையற்ற அழைப்புகளின் பதிவு என்ற புதிய திட்டத்தை 'டிராய்'அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.inஎன்ற இணையதளத்தில் சென்று வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்ணை பதிய வேண்டும். 

அவ்வாறு பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகும் வாடிக்கையாளர்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால், அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். 

தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று டிராய் எச்சரித்துள்ளது.

இருப்பினும் இ டிக்கெட் சேவை அளிக்கும் இ டிக்கெட் ஏஜென்சிகள் மற்றும் சமூக வலைத்தள இணையங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை தாரர்களுக்கு இந்த கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளித்துள்ள டிராய், ஒரு நாளைக்கு சிம் கார்டு ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்-கள் மட்டும் அனுப்பிக்கொள்ளலாம் என்று விலக்கு அளித்துள்ளது.

No comments:

Post a Comment