நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Friday, September 30, 2011

சன் டிவி பங்குகள் சரிவு

தயாநிதி மாறனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வது தொடர்பாக முடிவெடுக்க உள்ளதாக உச்சநீதிமன்றத்திடம் சிபிஐ தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவி நிறுவனத்தின் பங்குகளின் விலையில் சரிவு ஏற்பட்டது.

சன்டிவி நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகத்தின்போது 8.44 சதவீதம் சரிந்து 240.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நண்பகலில் 248.05 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடந்த மாதத்தை ஒப்பிடும்போது சன் டிவி நிறுவனத்தின் பங்குகள் இந்த மாதம் 14.5 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதன் பங்குகளில் 100 சதவீதம் வரை சரிந்துள்ளன.