நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Sunday, July 31, 2011

ஈரோடு அரசு மருத்துவமனை கொடூரம்

என் நண்பரும் ,சித்தோடு காதுகேளாதோர் பள்ளி ஆசிரியருமான திரு செல்வம் அவர்கள் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்தார்.அவர் சித்தோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.பிரசவ வலி வந்ததும் சித்தோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும்.அதனால் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல எழுதி தருகிறோம் என எழுதி கொடுத்தனர்.

அதன்படி அவர்களும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல,அங்கு வரவேற்பாக கடும் வசவுகள் தான் கிடைத்தன...சித்தோடு ஜி.ஹெச்சுக்கு இதே பொழப்பா போச்சு.முடியாத கேஸ் எல்லாம் எங்க தலையில கட்டிடுறாங்க..அப்புறம் எதுக்கு அவங்க அங்க இருக்காங்க..இங்க பாரு டெலிவரி டேட் தாண்டி போயிருச்சி..அதனால தாயும் சேயும் பொழக்கிறது கஸ்டம்.ஜன்னி கண்டுடும்..என பயமுறுத்தி இருக்கிறார்கள் டாகடர்களும் நர்சுகளும்.

உடனே என் நண்பர் மனைவி முடியாதுன்னா சிகிச்சை தர முடியாதுன்னு எழுத்து பூர்வமா எழுதி கொடுங்க..என்றிருக்கிறார்.
உடனே டாக்டர் கோபமாகி ஓ..நீ அவ்வளவு பெரிய தில்லாலங்கடி விவரமா..சரி இங்கியே அட்மிட் பண்றோம் என பல்லை கடித்துக்கொண்டு அட்மிட் செய்தனர்.

அப்போது டூட்டியில் இருந்த கனகா நர்ஸ்,பெட்டில் இருந்த என் நண்பர் மனைவியை பார்த்து என்ன நைட்டி போட்டுகிட்டு வந்திருக்க..ஏன் சேலை கட்ட மாட்டியா..நீ என்ன வெளிநாட்டுலியா பொறந்த..?என காது கூசும்படி நாகரீகம் இல்லாமல் பேசியிருக்கிறார்.எனக்கு இதுதான் வசதியா இருக்கு..என இவர் சொல்ல...இரு உன்னை வெச்சிகிறேன் என பரம எதிரியாய் முறைத்திருக்கிறார் அந்த நர்ஸ்.

அதன் பின் நைட் டூட்டிக்கு வந்த இன்னொரு நர்ஸிடம் பணியை ஒப்படைக்கும்போது அதோ அந்த பெட்ல படுத்திருக்கிற மேனகா (என் நண்பர் மனைவி பெயர்)ரொம்ப வாய்க்கொழுப்பா பேசுறா..நைட்டிதான் போடுவாளாம்.சித்தோட்டுல இருந்து தள்ளி விட்ட கேசு...பார்த்து பேக்கப் பண்ணிரு..என்றிருக்கிறார்.இதை அருகில் இருந்து கேட்டுவிட்ட என் நண்பர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

உடனே தன் மனைவியிடம் நடந்ததை சொல்லி இங்கு தரும் மாத்திரை,மருந்து,ஊசி எதுவும் போட்டுக்கொள்ள வேண்டாம்..உடனே டிஸ் சார்ஜ் ஆகிடலாம் என சொல்லிவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து திருப்பூர் சென்றனர்.அங்கு தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை சுகப்பிரசவம் ஆனது....


பேக்கப் பண்ணிடு என சொன்னால் என்ன அர்த்தம்...முடிச்சிரு என்று அர்த்தமா...என சொல்லி சொல்லி என் நண்பர் கண்கலங்குகிறார்...தனியார் மருத்துவமனை செல்லும் வசதியுள்ள என் நண்பர் தன் மனைவியை காப்பாற்றிக்கொண்டார்.சாப்பாட்டுக்கே வழியில்லாத குப்பன்,சுப்பன் தன் மனைவியை இந்த இரக்கமற்றவர்களிடமிருந்து எப்படி காப்பாற்றிக்கொள்வார்கள்..?
 
Thanks to Sathis777

Saturday, July 30, 2011

நான்காவது 'ஜி' ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா?


ஸ்பெக்ட்ரம் புயலில் காங்கிரஸ்
தொலைத் தொடர்புத் துறை​யில் இரண்டாம் தலை​முறை,மூன்றாம் தலை​முறை எனப்படும் தொழில்​நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என்​கிறார்கள். வரும் அக்டோபர் மாதம் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.இதை வைத்தே, டெல்லியில் தமிழக அரசியல்​வாதிகளைக் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கெனவே ராசாஜி, கனிமொழிஜி, தயாநிதிஜி என்று மூன்று 'ஜி’-க்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிப் பதவியை இழந்துவிட, விரைவில் நான்காவது 'ஜி’ சிக்குகிறார் என்கிறார்கள். அவர், ப.சிதம்பரம்ஜி.
4ஜி எனப்படும் நான்காம் தலை​முறைத் தொழில்நுட்பத்தில் நான்கு விதமான வசதிகள் இருக்கும்.  என்ன பொருத்த​மோ... ப.சிதம்பரம் மீதும் நான்கு விதமான குற்றச்சாட்டுகள். சிதம்பரம் மீது முதன் முதலில் சந்தேகம் எழுப்பியவர் சுப்ரமணியன் சுவாமி. இதைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி பி.ஜே.பி. மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரகாஷ் ஜவடேகர், மாயாசிங் மற்றும் மக்களவை உறுப்பினர் சிவகுமார் உடேசி, பி.ஜே.பி-யின் செயலாளரும் வழக்கறிஞருமான பூபேந்திர யாதவ் ஆகியோர் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வந்து, சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங்கிடம் சிதம்பரம் மீதான புகார் மனுவைக் கொடுத்தனர்.
குற்றச்சாட்டு - 1:
2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக, கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்கள் அவையில் பதில் கொடுத்தபோது, '2003-ம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படவேண்டும் என்கிற கொள்கை முடிவை அரசு எடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில், ஆரம்பத்தில் நிதி அமைச்சர் தொலைத் தொடர்பு அமைச்சரோடு ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படுவதில் வேறுபட்டு இருந்ததாக 15.1.2008 அன்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் கலந்து பேசியதில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது என்று 4.7.2008 நடந்த கூட்டத்தில் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதில் இருந்து ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில்,  தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து பேசி முடிவு எடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. 'ராசாவுக்குத் தெரிந்த மாதிரியே சிதம்பரத்துக்கும் எல்லா விவரங்களும் தெரியும்!’ என்று பிரதமரே சொல்கிறார். இரண்டு துறை அமைச்சர்களும் ஒன்றாக உட்கார்ந்துதான் இறுதி முடிவு எடுத்து உள்ளனர். தொலைத் தொ​டர்பு அமைச்​சர் ஆ.ராசா குற்றவாளி என்றால், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் குற்றவாளிதானே?
குற்றச்சாட்டு - 2 :
டிபி ரியாலிட்டி, யுனி​டெக் போன்றவை டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இல்லை. ஆனால், இவர்கள் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றனர். அதோடு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்களுக்கு விற்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் பங்குகளை வாங்குவதற்கும் நிதி அமைச்சகத்தின் அனுமதி தேவை. இதற்கு இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர். இதைப் பரிசீலனை செய்து அனுமதி கொடுத்தது, நிதி அமைச்சகம். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில் ஒரு ஊழல். இந்த ஊழல் முடிந்து மற்றொரு ஊழலும் தொடர்ந்து உள்ளது. இதுவும் நிதி அமைச்சகத்துக்கு வந்தது. ஸ்வான் மற்றும் யுனிடெக் பங்குகளை பெற்ற வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்கள் எஃப்.ஐ.பி.பி-யிடம் அனுமதி பெற்றுள்ளன. இந்த எஃப்.ஐ.பி.பி., நிதி அமைச்சகத்தின் கீழே இருப்பதுதானே? நிதி அமைச்சகம் எப்படி இப்படி அனுமதி கொடுத்தது? ஸ்வான் டெலிகாம் 1,650 கோடிகளுக்குத்தான்தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கியது. ஆனால், இந்த நிறுவனம் 50 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்றதன் மூலமே 10,000 கோடியை சம்பாதித்து உள்ளது. நிதி அமைச்சகம் அனுமதி இல்லாமல் பங்குகள் திருப்பிவிடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தானே  இதற்கு முழுப் பொறுப்பு?
குற்றச்சாட்டு - 3
ஆ.ராசா எழுதிய குறிப்புகளை நாங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்றோம். பத்திரிகைகளில் இந்த ஊழல் குறித்துச் செய்தியாக வந்த நேரத்தில், நிதி அமைச்சருடன் தான் சந்தித்துப் பேசியதை ஆ.ராசா குறிப்பிடுகிறார். 'பங்குகள் மாறியுள்ளன, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வியாபார விருத்திக்கும்தான்’ என்று ராசா குறிப்பிடுவதோடு, 'பங்குகள் விற்பனையானதை, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், கம்பெனி சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த பங்குகளின் பரிவர்த்தனைகள் நடந்து உள்ளன’ என்று சிதம்பரத்திடம் கூறியதாக ஆ.ராசா குறிப்பு எழுதி இருக்கிறார். அப்படி ஆ.ராசா கூறி இருந்தால், சிதம்பரம் அதை ஏற்றுக்கொண்டாரா?
குற்றச்சாட்டு-  4 :
தொலைபேசி ஒட்டுக்கேட்பில், நீரா ராடியாவும் ராசாவும் பேசிய விவகாரங்கள் வெளியாகின. இதில் ப.சிதம்பரம் பெயரும் வருகிறது. இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டாமா?''
இன்னொரு புயல் கண்ணுக்குத் தெரிகிறது!
ஜூனியர் விகடன்

முடிவுக்கு வராத மு.க. கலாட்டா!

ருணாநிதிக்கு அடுத்த இடம் அண்ணன் அழகிரிக்கா... தம்பி ஸ்டாலினுக்கா என்ற கலாட்டா வுக்கு இன்று வயது 15. கோவையில் கடந்த வாரம் நடந்த பொதுக் குழுவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்தான் தி.மு.க. தொண்டன். ஆனால், மீண்டும் கால் புள்ளி, அரைப் புள்ளிவைத்து வந்த கருணாநிதி, மீண்டும் முக்கால் புள்ளிதான் வைத்தார்!
'ஸ்டாலினை முதல்வர் ஆக்குங்கள். கலைஞர் கட்சித் தலைவராக இருந்து வழி நடத்தட்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தார்கள். 'ஸ்டாலினுக்கு மிக முக்கியமான பொறுப்பு காத்திருக் கிறது’ என்று நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார் கருணாநிதி. பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஸ்டாலின். ஆனால், பேராசிரியர் அன்பழகனைக் காயப்படுத்திய காரணத்தால், ஆற்காடு வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருளாளர் பதவிதான் ஸ்டாலின் வசமானது. தம்பிக்கு சாக்லேட் கொடுக்கும்போது எல்லாம் அண்ணனுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டும் அல்லவா? தென் மண்டலச் செயலாளர் ஆனார் அழகிரி. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதும், ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி தரப்பட்டது. அடுத்து, ஸ்டாலினும் அழகிரியும் அடைய இரண்டே இரண்டு நாற்காலிகள்தான் இருக்கின்றன. அது, கருணாநிதி உட்கார்ந்திருக்கும் தலைவர் பதவி. அன்பழகன் அமர்ந்திருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு. இந்த இரண்டைக் குறிவைத்த மியூஸிக்கல் சேர் விளையாட்டில், ஸ்டாலினும் அழகிரியும் மட்டும் சுற்றி வர... மற்ற நிர்வாகிகள் வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் செயற் குழு, பொதுக் குழுவாக மாறிப்போனது! 
கோவையிலும் அதேதான்.  வழக்கம்போல, நாற்காலியை கருணாநிதியும் அன்பழகனுமே மடக்கி எடுத்துச் சென்றுவிட்டார் கள்! செயல் தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர் என்ற பெயரில் ஏதாவது ஒரு பதவியை ஸ்டாலினுக்குத் தந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்னால் நடந்த இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும் 'தளபதிதான் தலைவராக வேண்டும்’ என்று பேசினார்கள். 'இது எல்லாம் பொதுக் குழுவில் பேச வேண்டிய விஷயம்’ என்று ஸ்டாலின் அப்போது சமாதானம் சொன்னார். அதை கருணாநிதியிடம் போட்டுக் கொடுத்த நல்ல மனிதர் ஒருவர், 'தன்னைத் தலைவராக்கச் சொல்லி பொதுக் குழுவில் பேச ஸ்டாலின் தூண்டிவிட்டார்’ என்று சொல்ல... கருணாநிதிக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. 'நீ ஒருத்தன்தான் எனக்கு மனக் கஷ்டம் கொடுக்காதவன் என்று நினைத்தேன். ஆனால், நீயே இப்படிப் பேசலாமா?’ என்று கருணாநிதி கேட்க... ஸ்டாலின் அதற்குச் சமாதானம் சொல்ல... தந்தை, மகன் இடையே 10 நாட்கள் சரியான பேச்சுவார்த்தைகூட இல்லை.'ஸ்டாலினை இப்போதே தலைவராக அறிவித்தால்தான், பின்னால் குழப்பம் இல்லாமல் இருக்கும்’ என்று சிலர் தூண்டி னார்கள். அதனால் செயல் தலைவர் அந்தஸ்துகூட அவருக்குத் தரப்படலாம் என்று இளைஞர் அணி ஆட்கள் சொல்ல ஆரம்பித்தனர். இது மதுரையில் இருந்த அழகிரிக்கு மன வருத்தம் கொடுத்தது. 'பொதுக் குழுவுக்கு நானும் வர மாட்டேன். நீங்களும் போக வேண்டாம்’ என்று அழகிரி உத்தரவு போட்டு இருக்கிறார் என்ற செய்தியைக் கிளப்பியதே மதுரை நிர்வாகிகள்தான். ஸ்டாலினுக்கு மீண்டும் உயர்வு என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்னொரு நபர், ராஜாத்தி அம்மாள். மகள் கனிமொழிக்குப் பிடிக்காத ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனால், கனிமொழியின் எதிர்காலத்தையே இது கேள்விக் குறியாக்கும் என்று நினைத்தார். இந்த கலாட்டாவில் அழகிரியும் ராஜாத்தி யும் ஒன்றாக, ஸ்டாலினுக்கான நாற்காலி தட்டிப் பறிக்கப்பட்டது.
 'நீங்க பொதுக் குழுவுக்கு வராமல் போனால், ஸ்டாலினுக்கு அதுவே வசதியாகப் போய்விடும்!’ என்று சென்னையில் இருந்து அழகிரிக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதன் பிறகே உஷாரான மனிதர், கோவை வந்து இறங்கினார். கனிமொழி கைதானது முதல் டெல்லியிலேயே தங்கிவிட்ட ராஜாத்தி அம்மாளும் கோவை வந்து கருணாநிதியின் நாற்காலிக்குப் பின்னால் இடம் பிடித்தார். ஸ்டாலின் நினைப்பு மொத்தமாகப் பணால் ஆனது.''நான் உனக்கு அப்பாவாக மட்டுமா இருக்கிறேன்? நான் உன்னுடைய கட்சியின் தலைவராக இருக்கிறேன். நீ கட்சியில் உறுப்பினராக இருக்கிறாய். அதனால்தான் மாநகராட்சி மன்றத்திலே உன்னை மேயராக்கி, உனக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, மேயருக்கு உரிய உடையைப் பூட்டி அழகு பார்த்தேன். இது எனக்குப் புரிகிறது. ஸ்டாலினுக்குப் புரிகிறது. சில நண்பர்களுக்குத்தான் புரியவில்லை!'' என்று கருணாநிதி சமாதானம் சொல்லும்போது, பொதுக் குழுவில் இருந்த ஸ்டாலின் முகம் கடுப்பால் சிவந்தது. பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாத்தியே... கவலை மறந்து சிரித்துவிட்டார். ஆனால், இதைப் பார்க்க அழகிரி கோவையில் இல்லை. மதியத்துக்கு மேல் மதுரைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.
''ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவியை விட்டுத்தர கலைஞர் தயாராக இல்லை. இதை அவரால் வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. 'உனக்குக் கொடுத்தால் அழகிரியும் கேட் பான்’ என்று காரணம் சொல்வது; 'உன்னைத் தலைவராக ஆக்கி னால், ராஜாத்திக்குப் பிடிக்காது’ என்று சொல்வது; இப்படிப் பல காரணங்களை அவரே சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார். கலைஞர், தனக்குப் பிறகு இன்னார்தான் தலைவர் என்பதை உடனே அறிவித்தாக வேண்டும். இதில்தாமதம் செய்யச் செய்ய... கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடும். இப்போதே கட்சியில் யாரும் யார் பேச்சையும் கேட்பது இல்லை. இது இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், உள்ளாட்சித் தேர்தலின்போதே பல ஊர்களில் பிரளயம் வெடிக்கும்!'' என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஒருவர்...''ஸ்டாலின் முழுமையான தகுதியை அடைந்துவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால், கலைஞருக்கு அடுத்து தலைவர்ஆகும் தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையும் புறக்கணித்தால், தலைமை அற்ற கட்சியாக கழகம் மாறிவிடும்!'' என்றார். ஆனால், இதனை அழகிரி ஆட்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.  'ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தால், நீங்கள் கட்சியைவிட்டு விலகுங்கள்!’ என்று அழகிரிக்கு ஆலோசனைகள் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. இந்த சைக்கிள் கேப்பில் கனிமொழிக்கு தலைமைக்கான தகுதி இல்லையா என்று ராஜாத்தி தூண்டுதலுடன் இன்னொரு அணி களத்தில் குதித்து உள்ளது.
''விரைவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியில் வருவார். கலைஞரின் எழுத்து, பேச்சுத் திறமைகொண்ட வாரிசு இவர் மட்டுமே என்பதை நிரூபிப்பார்.  சிறையில் இருந்தபோது கிடைத்த அனுதாபங்களை மூலதனமாகக்கொண்டு அவரைத் தலைவர் ஆக்கலாம்'' என்கிறார்கள் ராஜாத்தி ஆதரவாளர்கள். நெல்லை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சாளர் வாகை முத்தழகன் இதற்கான ஆரம்பத்தைச் செய்துவிட்டார். சில மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை இதை நோக்கித் திருப்பும் காரியத்தையும் ராஜாத்தி செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.உள்கட்சிக் கலவரங்களுக்கும் தலைமைக்கான போட்டிக்கும் மத்தியில் ரத்தம் சிந்திய சம்பவங்கள் தி.மு.க-வில் ஏராளமாக நடந்து உள்ளன. இந்த கடந்த காலத் தவறுகளில் இருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரும் எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது அவர்களது தவறு அல்ல. அதை சொல்லித் தராத கருணாநிதியின் தவறுதான்!
நன்றி - விகடன்

நில மோசடி சில தகவல்கள்..


5 கோடிக்கு 50 லட்சம் தான்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவனாண்டி - பாப்பா தம்பதிகள். இவர்களுக்கு நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல இருந்த விவசாய நிலத்தை விற்று விடுவது என்று முடிவெடுத்தார்கள். ஐந்து கோடி மதிப்புள்ள அந்த நிலத்துக்கு நான்கு கோடி வரை கேட்டுப் பார்த்தனர் பலர். இந்த நிலையில்தான் மதுரை தி.மு.க. புள்ளியின் ஆட்கள், தம்பதிகளைச் சந்தித்தனர். மரியாதையா நிலத்தை எங்களுக்கு விற்றுவிடு," என்று மிரட்டினர். அந்த வயதான தம்பதிகளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்தப் புள்ளியின் ஆட்கள் பயமுறுத்தி வெறும் 50 லட்ச ரூபாய்க்கு நிலத்தை கிரயம் செய்துவிட்டார்கள். பாவம் அந்தத் தம்பதிகள். லோக்கல் போலீஸ், மதுரை என்று அலைந்தும் பலனில்லை. அவங்ககிட்ட ஏன் மோதறீங்க?" என்று ஆளாளுக்குக் கழன்று கொண்டார்கள். ஆட்சி மாறியது. நில அபகரிப்புப் புகார்கள் பெறுகிறது போலீஸ் என்று கேள்விப்பட்ட சிவனாண்டி - பாப்பா தம்பதிகள் மதுரை காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். புகாரை விசாரித்த காவல்துறை, அழகிரியின் நெருங்கிய தோழர்களான மாவட்டச் செயலாளர்கள் தளபதி, பொட்டு சுரேஷ், எஸ்.ஆர்.கோபி ஆகியோரை, கொத்தாகக் கைது செய்து பாளையங்கோட்டையில் கம்பி எண்ண வைத்திருக்கிறது.

இதே புகாரின் பேரில் மதுரையில் தி.மு.க. பிரமுகர் அட்டாக் பாண்டியும் கைதாகியிருக்கிறார். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நாமக்கல்லில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் நில அபகரிப்புப் புகார்களில் சிக்கியுள்ளனர். தவிர, தமிழகமெங்கும் சுமார் 2500 புகார்கள் வந்திருக்கின்றன. இதில் 200 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டது.  கீழ் மட்டங்களில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள் ரியல் எஸ்டேட் பிரமுகர்களோடு சேர்ந்து கொண்டு இந்த நில அபகரிப்புகளில் ஈடுபட்டனர்," என்கிறது காவல் துறை.

தேர்தல் பிரசாரத்துக்கு முன்பே, ஜெயலலிதாவுக்கு இது தொடர்பாகக் கடிதங்கள் வந்தன. விசாரித்த போது தி.மு.க.வினர் மிக பரந்துபட்ட அளவில் அபகரிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. எனவேதான் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘கருணாநிதி குடும்பம், மற்றும் முன்னாள் தி.மு.க. அமைச்சர்களின் கூலிப்படையினர், மக்களிடம் அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படும்,’ என்று சொல்லப்பட்டிருந்தது.ஒரு நிலத்தையோ வீட்டையோ அடாவடியாக ஆக்கிரமித்துக் கொள்வது, அடியாட்களைக் கொண்டு காலி செய்து மடக்கிப் போடுவது, போலி ஆவணங்களைத் தயாரித்து உண்மையான உரிமையாளருக்குத் தெரியாமல் உரிமையை மாற்றுவது, தங்களுக்கு வேண்டிய சொத்தை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்குவது என நான்குவிதமான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது புகார் கொடுக்கிறார்கள்.

பெரும்பாலும் மூத்த குடிமக்களும், விதவைகளுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்," என்கிறார் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ்.தி.மு.க. பிரமுகர்கள், காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டதுமே புகார் கொடுத்தவரோடு பேச்சுவார்த்தை நடத்தி கணக்கை செட்டில் செய்து வழக்கிலிருந்து தப்பிப்பதும் நடக்கிறது. சென்னையை ஒட்டியுள்ள தாம்பரத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்காக 35 லட்சம் முன்தொகையாகக் கொடுத்தார் ஒரு பெண். ஆனால் பில்டர், குடியிருப்பையும் கொடுக்கவில்லை; பணத்தையும் கொடுக்கவில்லை. அந்தப் பெண் பரங்கிமலை ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் செய்ய, விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த பில்டர், சில மணி நேரத்துக்குள்ளேயே பணத்தை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்து விட்டார்.இந்த நில அபகரிப்புப் புகார்கள் வண்டி, வண்டியாகக் கிளம்ப, தமிழகமெங்கும் கீழ்மட்ட தி.மு.க. பிரமுகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். 

இதில் மற்றொரு மோசடியும் நடக்கிறது. எங்களிடம் அப்போதிருந்த மார்க்கெட் ரேட்டுக்கு நியாயமாக விற்ற ஒருவர், இப்போது அதன் மதிப்பு ஏறியிருக்கிறது என்று தெரிந்தும், ‘ஏமாற்றிவிட்டார்கள்’ என்று புகார் கொடுக்கிறார்கள். இதைக் கீழ்நிலையில் உள்ள சில காவல் துறை அதிகாரிகளும் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் கட்டைப் பஞ்சாயத்தில் இறங்குகிறார்கள்," என்று சொல்கிறார் சென்னை மாநகராட்சி கவுன்ஸிலர் ஒருவர். கொடுக்கப்பட்ட புகார்கள் எல்லாம் வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை. புகார்களை விசாரிக்கிறோம் என்று புறப்படும் அடிமட்ட காவல்துறை அதிகாரிகள் அவர்கள் பங்குக்கு கொஞ்சம் ஆடுகிறார்கள்," என்கின்றனர் தி.மு.க.வினர்.இந்தச் சூழலில் புகார்களைப் பற்றி விசாரிக்க சிறப்பு காவல் பிரிவுகளும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்களும் அமைக்க இருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரை தண்டனையாம்.  

உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சியின் முதுகெலும்பாக உள்ள லோக்கல் பிரமுகர்களை ‘உள்ளே போடும் வகையில் அரசு செயல்படுகிறது,’ என்று புலம்புகிறார்கள் தி.மு.க. பிரமுகர்கள். அதனால்தான் உள்துறைச் செயலாளர், மற்றும் கவர்னரிடம் புகார். தொடர் போராட்டம் என்றெல்லாம் அறிவித்திருக்கிறது தி.மு.க. தான் அபகரித்த சிறுதாவூர் நிலத்தை ஜெ. திருப்பிக் கொடுக்கட்டும்," என்று சொல்கிறார் கருணாநிதி. அபகரிப்புப் புகார்களுக்கு அ.தி.மு.க. வினரும் தப்பவில்லை. அமைச்சர் அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, எம்.எல்.ஏ. கருப்பையா மீதும் ‘எந்தப் பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை வேண்டும்,’ என்று நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

 

நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கிக் கொண்ட அழகிரியின் வலது கையான பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. தொடர்ச்சியாக, மதுரை அட்டாக் பாண்டி, எஸ்.ஆர்.கோபி, சேலம் வீரபாண்டி ஆறுமுகம், அவரது உறவினர் பாரப்பட்டி சுரேஷ் ஆகியோர் தவிர பல மாவட்டங்களில் முக்கிய தி.மு.க. பிரமுகர்களை உள்ளே குண்டாஸில் போட ஏற்பாடு நடக்கிறதாம். நிலம் விவகாரம் என்பது சிவில் மேட்டர் என்றும் அதை கிரிமினலாக மாற்றுவது நீதிமன்றம் முன் நிற்காது என்றும் சொல்கிறது தி.மு.க. தரப்பு. முன்பெல்லாம் மூன்று வழக்குகளுக்கு மேல் ஒருவர் மீது பதிவு செய்தால் குண்டாஸில் போடலாம். இப்போதெல்லாம் ஒரு வழக்கு போடப்பட்டால் கூட குண்டாஸில் போடலாமாம்.

- ப்ரியன்

அன்பழகன் எம்எல்ஏ கைது செய்யப் பட்ட வழக்கில், சக்சேனா 7வது குற்றவாளியாக சேர்ப்பு

சேப்பாக்கம் தொகுதி, திமுக எம்எல்ஏ அன்பழகன், இன்று காலை, திருப்பூரைச் சேர்ந்த காகித ஆலை அதிபரை மிரட்டி, அவர் நிலத்தை எழுதி வாங்கியதாக கைது செய்யப் பட்டார்.  இந்த வழக்கில், சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா, 7வது குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார்.   ஏற்கனவே 6க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப் பட்டு சிறையில் இருக்கும் சக்சேனா ஜாமீனில் வருவது கடினமாகி உள்ளது.

ஆடிய ஆட்டமென்ன ? பேசிய வார்த்தை என்ன ?

அன்பார்ந்த உறவுகளே….   நமக்கும் ஜாபர் சேட்டுக்கும் நெருக்கமான உறவு உள்ளது என்பதை அறிவீர்கள். இந்த ஜாபர் சேட்டை நாம் தீவிரமாக எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் ஏற்கனவே பல முறை பதிவு செய்திருக்கிறோம். ஜாபரும், நம்மை விடாமல் என்னென்ன தொல்லைகள் செய்தார் என்பதையும் நாம் படித்திருக்கிறோம்.
 jaffer
அதிகார துஷ்பிரயோகம் என்பதன் மொத்த உருவம் ஜாபர் சேட் தான். தான் ஒரு அரசு ஊழியர் என்பதையும் மறந்து சர்வ வல்லமை பொருந்திய கடவுளைப் போல உணர்ந்தார்.   கடவுளைப் போல அதிகாரங்கள் கிடைத்தாலும், அவற்றை நல்ல காரியங்களுக்கு பயன் படுத்த ஜாபர் தவறினார்.

உளவுத்துறையின் வரலாற்றில், ஜாபரைப் போன்ற அதிகாரம் படைத்தவர்கள் யாருமே இல்லை எனும் அளவுக்கு ஜாபர் கோலோச்சிக் கொண்டிருந்தார். அவரின் அதிகாரத்திற்கு எல்லையே இல்லை என்னும் அளவுக்கு ஒரு சக்ரவர்த்தி போல தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்படி அவருக்கு வழங்கப் பட்ட அதிகாரத்தை தனக்கு சொத்து சேர்த்துக் கொள்ளவும், அதிகார மையங்களில் உள்ளவர்களின் சொத்துக்களை பாதுகாக்கவும், அவர்கள் அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொள்ளவும், எதிர்ப்பவர்களை என்கவுண்டர் செய்தும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தும், பிடிக்காத அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையை வைத்து வழக்கு போட்டும், இந்த ஜாபர் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப் பட்டோரின் பட்டியல், அண்ணா நகர் தொகுதி வாக்காளர் பட்டியலை விட பெரியது.

அப்படி ஆடிய ஆட்டத்திற்குத் தான் இன்று விலை கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஜாபர் சேட். ஒரு மனிதனின் வீழ்ச்சியில் உலகமே மகிழ்வதைப் போன்ற ஒரு வேதனையான தருணம் இருக்க முடியாது. இது போன்ற மனிதனின் வீழ்ச்சியில் ஊரே மகிழ்ந்த ஒரு தருணம் என்றால், நக்கீரன் காமராஜ் வீட்டிலும், ராசா வீட்டிலும், சிபிஐ சோதனை நடத்திய போதும், தயாநிதி மாறன் பதவியை ராஜினாமா செய்த போதும் தான்.

அதே போல இன்று ஜாபர் சேட் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை நடைபெற்றது என்ற தகவலை தெரிந்ததும், பத்திரிக்கையாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது… அதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.
7-3

ஆரம்பக் கட்டத்தில் வந்த செய்திகள் ஜாபர் சேட் வீட்டோடு, காமராஜ் வீட்டிலும், ட்ராலி பாய்ஸ் பாண்டியன், விநோதன் மற்றும் கணேசன் வீட்டிலும் சோதனைகள் நடைபெறுகிறது என்று தான். ஆனால் பின்னால் சரிபார்த்ததில், அவ்வாறு நடைபெற வில்லை என்று தெரிய வருகிறது.
தலைமைச் செயலாளருக்கு மே 2011ல் அளிக்கப் பட்ட புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கை பதிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.

Jaffer_Complaint_Page_1

Jaffer-Complaint_Page_2
இன்று லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜாபர் சேட் மற்றும் மற்றவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 120-B, 420, மற்றும் லஞ்ச ஒழிப்பு சட்டப் பிரிவுகள் 13 (c) மற்றும் 13 (d) மற்றும் 13 (2) ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து கீழ் கண்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

1)  ஜெய்சங்கர் மேற்கு மாம்பலம் (ஜாபர் சேட் பினாமி)
2)  பால்ராஜ் ஜான்சன், திருவான்மியூர்
3)  கஸ்தூரி ராஜ், அண்ணா நகர்
4)  நஜிம்முதின், எழும்பூர்
5)  பர்னாஸ் இன்டர்நேஷனல், வேப்பேரி, சென்னை
(ஆளுனர் பர்னாலாவின் மகனின் நிறுவனம்)
6)  ஜாபர் சேட் வீடு, அண்ணா நகர்
7)  துர்கா சங்கர், கருணாநிதியின் செயலாளர் ராஜமாணிக்கத்தின்
மகன்
8)  லேன்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், தி.நகர்
9)  ஜாபர் சேட்டின் மாமனார், பெரியக்குளம்

இந்த வழக்குகளை ஒட்டி, ஜாபர் சேட் எந்த நேரமும், பணி இடை நீக்கம் செய்ய படுவார்.

ஜாபர் சேட்டின் ஆணவத்தின் விளைவு என்ன தெரியுமா ? அவரின் மனைவி பர்வீன் மீதும், மகள் ஜெனிபர் மீதும் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எத்தனையோ பேர் வயிற்றில் அடித்து, அவர்கள் மனதார இட்ட சாபமும், ஈழப் போரின் போது, அப்பாவித் தமிழர்களை பிடித்து செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி முகாமில் அடைத்ததால் அவர்கள் விட்ட சாபமும், ஈழத் தமிழர்களுக்கு மருந்து கடத்துவதற்கான புலம் பெயர்ந்த தமிழர்கள் சேகரித்து வழங்கிய பணத்தை, அவர்களிடமிருந்து கொள்ளையடித்த சாபமும், ஈழத் தமிழருக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்த ரத்த உறைகளை அழித்தற்காக விட்ட சாபமும்தான் இன்று ஜாபரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது.
 cartoon-for-Jaf
ஜாபருக்கு கண்ணதாசனின் வரிகளைத் தான் நினைவூட்டத் தோன்றுகிறது.

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன...?

THANKS TO SAVUKKU

காங்கிரஸை கருவறுப்போம்….

நாம் தமிழர்கள் தானே….? அரசியல் ரீதியாகப் பார்த்தால் நமக்கு துரோகம் இழைத்தது ஒரு கட்சி. எதிரி, காங்கிரஸ் கட்சி.   பல முறை நாம் விவாதித்தது போலவும், இயற்கை நியதியைப் போலவும், எதிரிகளை நாம் மன்னிக்கலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்கவே முடியாது.

அது போலவே துரோகிகளை நாம் பழி தீர்த்து விட்டதாகவே சவுக்கு கருதுகிறது. இன்றும் பல பேர், கருணாநிதியை தூக்கில் போட வேண்டும், கனிமொழியை தூக்கில் போட வேண்டும், ஜெகத் கஸ்பரை தூக்கில் போட வேண்டும், நக்கீரன் காமராஜை தூக்கில் போட வேண்டும் என்று குறுஞ்செய்தி மூலமாகவும், மற்ற தொலைத் தொடர்பு வழி முறைகள் மூலமாகவும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
 DSC_3838
சவுக்கு தூக்கு தண்டனைக்கு எப்போதுமே எதிரானது என்பது ஒரு புறம் இருக்கட்டும். தூக்கு ஒரு தண்டனையா ? அது ஒரு தண்டனையாக இருந்து விட்டால், எதற்காக இத்தனை தற்கொலைகள் ?   தூக்கில் போட்டு விட்டால், கருணாநிதி ஒரு வினாடியில் இறந்து விடுவார்.   அதுவா நமக்கு வேண்டும் ? கருணாநிதி அணு அணுவாக சாக வேண்டாமா ?   சக மனிதனை காப்பாற்றும் வலு இருந்தும், அந்த சக மனிதன் குண்டு வீச்சால், ரத்தத்தை இழந்து இறப்பதை புறக்கணித்து, ஸ்பெக்ட்ரமில் வந்த லஞ்ச பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ஒரு மனிதன் ஒரு வினாடியில் சாகலாமா ? அப்படிப் பட்ட கருணாநிதி அணு அணுவாக துடி துடித்து, வேதனையில் நெளிந்து, மனம் புழுங்கி, கையறு நிலையை உணர்ந்து, அவமானப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளக் கூட வலுவில்லாத நிலையில், வேதனைப் பட வேண்டாமா ?

அதனால் தான் கருணாநிதி உட்பட யாருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப் படவே கூடாது என்று சவுக்கு கருதுகிறது.   சொந்த மகள் சிறையில் வாடுகையில், அதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியின் காலை நக்கிக் கொண்டிருப்பதை விட, கருணாநிதிக்கு வேறு என்ன தண்டனை வேண்டும் ?   பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு, சிபிஐ அமைப்பை கண்டிக்கத் தெரிந்ததே !!! அந்த சிபிஐ அமைப்பை மேற்பார்வை செய்யும் கட்சியாக உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியை கண்டிக்கத் துப்பு இருக்கிறதா கருணாநிதிக்கு ?   கேவலம், தான் பெற்ற மகன்களையே கட்டுப் படுத்தத் தெரியாத கருணாநிதிக்கு இனி வாழ்க்கை முழுவதும் துன்பம் தான்.

துரோகிக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தாகி விட்டது என்றே சவுக்கு நினைக்கிறது. சரி.. இப்போது எதிரியை பழி வாங்க வேண்டாமா ?

அதற்கு என்ன செய்ய வேண்டும் ? நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். எதிரியே புதைகுழியை நோக்கிப் போகும் போது நாம் என்ன செய்ய வேண்டும் ? அருகில் கயிறு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எதிரியான காங்கிரஸ் புதைகுழிக்குப் போகிறதா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆச்சர்யப் படாதீர்கள். குண்டு வீச்சில் தன் பச்சிளம் குழந்தையை பறிகொடுத்த பல தாய்மார்கள்ஒரு தாய் விட்ட சாபம் சும்மாவா விட்டு விடும் ?

திங்கட் கிழமை பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறதல்லவா ? அப்போது பாருங்கள் தமாஷை.   இத்தனை நாள் வரை, பாரதீய ஜனதா கட்சிக்கு ஊழலைப் பற்றிப் பேச தகுதி இல்லை என்று, காங்கிரஸ் கட்சி சார்பாக கொடுத்த காசுக்கு கூவும் அபிஷேக் மனு சிங்வி, மனீஷ் திவாரி ஆகியோர் இனி பேச முடியாத வண்ணம், எடியூரப்பாவை பதவி விலகச் சொல்லி பாஜக உத்தரவிட்டு விட்டது. இன்றைய இரவு நிலவரம் வரை, எடியூரப்பாவும் பதவி விலகி விட்டார். இனி பாஜக கட்சியைப் பற்றி ஊழல் என்று நாக்கு மேல் பல்லைப் போட்டு சொல்ல முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி ஆகி விட்டது.

அடுத்து என்ன ஆகும் ?   இப்போதுதான் கதாநாயகன் ஆகிறார் ஆண்டிமுத்து ராசா.   பாஜக வட்டாரத் தகவல்களின் படி, மன்மோகன் சிங் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.   மன்மோகன்சிங் ஒரு சூடு சொரணையற்ற (எருமை மாடு என்றால் திட்டுகிறார்கள்) என்ன சொல்வது ? பஞ்சாயத்து வெற்றிலைத் தொட்டி.   பஞ்சாயத்து தலைவர்கள் வெற்றிலையை மென்று விட்டு துப்புவார்கள் அல்லவா ? (இப்போ சவுக்கை திட்ட முடியாதே….. !!!!)
 aaarajaaa
தகத்தகாய கதிரவன், அருமைத் தலைவன் ஆ.ராசா, மன்மோகன் சிங்குக்கு தெரிந்தே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அத்தனை முடிவுகளும் எடுக்கப் பட்டன. தைரியம் இருந்தால், இந்த முடிவுகள் பற்றித் தெரியாது என்று, ப.சிதம்பரத்தையும், மன்மோகன் சிங்கையும் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று நீதிமன்றத்தில் கர்ஜ்த்தார். இவ்வாறு நீதிமன்றத்தில் ராசா சொன்ன விவகாரத்தை பாஜக சும்மா விடப் போவதில்லை.   சவுக்குக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி, பாஜக, இடது சாரிகளோடு, பாராளுமன்றத்தில் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்து ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.

காங்கிரஸ் போன்ற, ஒரு கேடு கெட்ட, மானங்கெட்ட, வெட்கமில்லாத கட்சியை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது. அதன் தலைவியாக, வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி, இன்று ஒரு வெள்ளைக் காரியை தலைவியாகக் கொண்டு கட்சி நடத்துவது காலத்தின் கோலமல்லவா ?   சவுக்கு தனது வாசகர்களுக்கு சவால் விடுகிறது.   எனக்கு சூடு சொரணை இருக்கிறது என்று நிரூபிக்கக் கூடிய ஒரே ஒரு காங்கிரஸ் கட்சிக் காரனைக் காட்டுங்கள் பார்போம் ? முடியாது உங்களால். ஏனென்றால், அத்தனை காங்கிரஸ் காரனும், ஒத்துக் கொள்வான், “சாரி சார்.   அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது” என்று. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.   சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு சேப்பாக்கம் நுழைவாயில் வழியாக நுழைந்தீர்கள் என்றால், அங்கே குதிரைகள் கட்டப் பட்டிருக்கும். அந்த குதிரைகள் போடும் விட்டையை எடுத்து, அதுதான் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்று அறிவிப்பு வரட்டுமே……   “சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட விட்டையே…… எங்கள் தலைவர் தலை சொட்டையே (தங்கபாலு)” என்று டபுள் பிட் போஸ்டர் அடித்து தமிழகம் எங்கும் ஒட்டுவார்கள் காங்கிரஸ் காரர்கள்.

பல்வேறு நபர்கள், பல்வேறு கட்சிகள் தொடங்கி பலவீனப்பட்டு, வலுவிழந்து காலத்தில் கரைந்து போகையில், காங்கிரஸ் கட்சி மட்டும் ஏன் இப்படி வலுவாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா ? பணம் அய்யா… !!!! பணம்.   120 வருடங்களாக நடந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கான கோடிக்கு சொத்து இருக்கிறது.   தமிழகத்தை எடுத்துக் கொண்டீர்கள் ஆனால், கோடிக்கணக்கான சொத்துக்களும், பணமும் ஏராளமாக இருக்கிறது. அந்தப் பணத்தையும், சொத்துக்களையும் அனுபவிப்பதற்கு மட்டுமே, ஒரு கூட்டம், குதிரை சாணத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.
 5277574038_5b42a361c2_b
உண்மையில், நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்று நினைக்கும் ஒரு தொண்டனாவது ஒரு இத்தாலிக் காரியை தலைவியாக ஏற்றுக் கொள்வானா ? 110 கோடி மக்கள் தொகையைக் கொண்ட, இந்தியாவில் அப்படியா ஒரு தலைவியோ தலைவனோ இல்லாமல் போய் விட்டார்கள் ? இப்படி ஒரு வெளிநாட்டுக் காரியைத் தலைவியாக ஏற்றுக் கொள்வதற்கு, கொல்கத்தா சோனாகஞ்ச் பகுதியில், தன் உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு பெண்ணை தலைவியாக ஏற்றுக் கொள்ளலாமே? அப்படி, தன் உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு பெண், தன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக 2 லட்சம் உயிர்களை அழிக்க சம்மதித்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ?

ஒரு பெண், ஒரு ஆணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. இந்த ஒரே காரணத்துக்காக உலகில், இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆளும் பொறுப்பை கொடுத்து விட முடியுமா ? காதலித்து மணம் புரிந்து புகுந்த வீட்டை அபகரித்தது இல்லாமல், அந்த வீடு இருக்கும் நாட்டையே அபகரிப்பதை எங்காவது ஏற்றுக் கொள்ள முடியுமா ? அதுதானே நடந்திருக்கிறது நம் நாட்டில் ?

இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், இடது சாரிகளும், பாஜகவும் ஒன்று சேர்ந்து விட்டால், பாராளுமன்றம் அதகளப் படும்.   இன்றும் 11 மாதங்களுக்குள் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னா பட்டுக் கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சி போன்ற ஒரு சுமையை முதுகில் ஏற்றிக் கொள்ள, மாயாவதியும் தயாரில்லை, முலாயம் சிங்கும் தயார் இல்லை.   அமைச்சர் பதவி கொடுக்காத காண்டில் இருக்கும் லல்லுவும் காங்கிரசுக்கு கைகொடுக்கப் போவதில்லை.
2134375
இத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடு தூக்குகிறது என்றால், சொந்த ஆட்சி நடக்கும் ஆந்திராவில், தெலுங்கான பிரச்சினையால் காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு தயாராகிக் கொண்டு இருக்கிறது.   தெலுங்கானா உருவானால் 13 எம்பி காலி. தெலுங்கானா உருவாகவில்லை என்றால் 10 எம்பி காலி. இது போக, ராஜசேகர ரெட்டியின் மகன் வடிவில் ஒரு பெரிய பூதம் காங்கிரசின் சங்கை அறுக்க காத்துக் கொண்டிருக்கிறது. தன் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியை காயடிக்க ஜெகன் மோகன் ரெட்டி காத்துக் கொண்டிருக்கிறார்.

மற்ற மாநிலங்களிலும், மக்கள் காங்கிரசோடு ஒன்றும் காதலாக இல்லை. மேற்கு வங்கத்தில் படு தோல்வியைச் சந்தித்து, பட்டா பட்டி அண்டர்வேரோடு நிற்கும் சிபிஎம் கட்சி, பாராளுமன்றத் தேர்தல் போன்ற ஒரு சூழல் வந்தால் மட்டுமே, கட்சித் தொண்டர்களை உற்சாகப் படுத்த முடியும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
 4473461162_6ba903d5f2_b
சரி, காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று நினைக்கக் கூட தயங்குகிறது.   நிதீஷ் குமார் சொன்னது போல, ஒரு மாநிலத்தை நிர்வகிக்கக் கூட அனுபவம் இல்லாத ராகுல் காந்தியால், பள்ளிக் கூட பிள்ளைகளோடு உரையாடுவதைத் தவிர உருப்படியாக வேறு எதுவும் செய்ய முடியவில்லை (சார், தமிழ்நாட்டில் பிள்ளைகள் புத்தகம் இல்லாமல் கஷ்டப் படுகிறார்கள். வந்து அவங்க கூட பேசிக்கிட்டு இருங்க சார்) ஆகையால், ராகுலை நம்பி தேர்தலில் இறங்க முடியாது.
சரி… எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டு, பிரணாப் முகர்ஜியை பிரதமர் ஆக்கலாம் என்றால், அந்த ஆளை நம்ப முடியாது. மத்திய உளவுத் துறை அளிக்கும் தகவலின் படி, பிரணாப் முகர்ஜி சமீபத்தில் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்த போது, தன்னை பிரதமர் ஆக்கும் சூழல் வந்தால், தனக்கு ஆதரவு தருமாறும், அப்படி பிரதமர் ஆகும் பட்சத்தில், 2ஜி விவகாரத்தில் இருந்து கனிமொழி மற்றும் திமுகவைச் சார்ந்த அனைவரையும் காப்பாற்றுவதாகவும் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, கருணாநிதி காங்கிரசுடன் கூட்டணி சுமூகமாக உள்ளது என்று கருத்து தெரிவித்தார்.   அந்த காரணத்தாலேயே, கோவை பொதுக்குழுவில், கருணாநிதி, காங்கிரஸ் கட்சி, கழுதை மூத்திரத்தில் நனைத்த செருப்பில் தன்னை அடித்தாலும், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்.
 3057671007_c17d8da8bd_o
ஆனால், மற்ற அனைவரையும் போலவே, கனவு காணுவதற்கு பிரணாப் முகர்ஜிக்கு மட்டும் உரிமை இல்லையா என்ன ? அப்படியே ஒரு வேளை பிரணாப் பிரதமர் ஆன பின், கனிமொழியை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்டாரென்றால், நாம் எல்லாம் சும்மாவா விட்டு விடுவோம் ?   அதையும் மீறி, பிரணாப் பிரதமராக நீடிக்க விட்டு விடுவோமா என்ன ?

இவை தவிர்த்தும், காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பான்மை நிரூபிக்கக் கூடிய அளவில், மத்தியில் பெரும்பான்மை இல்லை. மம்தா பானர்ஜி தன் ஆதரவை கொடுத்தாலும் கூட, கடைசி நேரத்தில், இன்று இப்படி காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் திமுக கூட, ஆதரவை வாபஸ் வாங்குவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்.
 manmohanpranab_20110614
இவை எல்லாவற்றையும அலசி ஆராய்கையில், மத்திய அரசு கவிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை கூர்மைப் படுத்தி, இந்த அரசை கவிழ்க்க வேண்டிய பொறுப்பு, தமிழர்களாகிய நமக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது.

பல்வேறு இடங்களில் இருக்கக் கூடிய சவுக்கு வாசகர்கள், பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள்.   பல்வேறு தொடர்புகளை கொண்டவர்கள்.   உயர் அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் இருப்பீர்கள்.

இந்த அன்பு உறவுகளுக்கு சவுக்கின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். பாராளுமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், தமிழர்களாகிய சவுக்கு வாசகர்கள், எப்படியாவது, இந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். நாம் தமிழர்களாக, இறந்த ஈழத் தமிழர்களுக்கான ஒரு சொட்டு கண்ணீர் சிந்துவதை விட, எதிரிகளின் சங்கை அறுப்பதே சாலச் சிறந்தது.

காலத்தின் கோலமாக, நாளை இடது சாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும், பாரதீய ஜனதா ஆட்சி கூட அமைய வாய்ப்பிருக்கிறது. அப்படி, இடது சாரிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தார்களேயானால், அது இடது சாரிகளின் அரசாங்கம் தான்.   ஆளுவது பாஜகவாக இருந்தாலும், உண்மையில் ஆளப்போவது இடது சாரிகள் தான்.

அதற்கு காங்கிரஸ் கட்சியை கருவறுப்பது மிக மிக முக்கியம்.   உறுதி பூணுங்கள் தோழர்களே……..

THANKS TO SAVUKKU

ஜாபர் சேட் உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

வீட்டு வசதித் துறையின் நிலத்தை மோசடியாக ஒதுக்கீடு பெற்று, அதில் வியாபாரம் செய்ததாக முன்னாள் உளவுத் துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் உள்ளிட்டோர் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை சவுக்கு மழிக்சிச்சியோடு அறிவித்துக் கொள்கிறது

jaffer-houseசோதனை நடைபெறும் ஜாபரின் அண்ணா நகர் வீடு
வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளை சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் மோசடியாக ஒதுக்கீடு பெற்றதாக, கருணாநிதியின் முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம், அவர் மகன் ராஜாசங்கர், நக்கீரன் காமராஜ், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளான பாண்டியன், விநோதன், கணேசன் ஆகியோர் வீடுகளிலும், அவர்கள் வீட்டை விற்ற ஆயில் சண்முகத்தின் மகள் பத்மா வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

ரஞ்சிதாவின் பிரத்யேக பேட்டி

ரஞ்சிதா.. பாரதிராஜாவின் அறிமுகத்தில் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ரஞ்சிதா அறிமுகமான புதிதில் எப்படி பரபரப்பை ஏற்படுத்தினாரோ, அதை விட பரபரப்பு ஏற்பட்டது, நித்யானந்தாவோடு இருந்ததாக கூறப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பான போது.

பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்திருந்த ரஞ்சிதாவை சவுக்கு சார்பாக சந்தித்தோம். சவுக்கில், ரஞ்சிதாவுக்கு நடந்த அநியாயங்களை கண்டித்து எழுதியிருந்ததை படித்திருந்த ரஞ்சிதா, சவுக்குக்கு பேட்டி என்றதும், உடனே ஒப்புக் கொண்டார். ஆட்சி மாறியவுடன், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரஞ்சிதா தான் பட்ட வேதனைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
 
சன் டிவியிலும், நக்கீரனிலும் இந்தக் காட்சிகள் வெளியான போது எப்படி உணர்ந்தீர்கள் ?

இந்தக் காட்சி வெளியான போது, நான் கேரளாவில் ஷுட்டிங்கில் இருந்தேன்.   முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. நான் சம்பந்தப் பட்டதாக சித்தரித்து வெளியிடும் காட்சியை என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் எப்படி வெளியிடுவார்கள் என்ற அதிர்ச்சி தான் மேலோங்கியது. நம்பர் ஒன் சேனல் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சேனலில் இப்படிப் பட்ட ஒரு காட்சியை எப்படி ஒளிபரப்புவார்கள், அதுவும், சம்பந்தப் பட்ட நபர்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமலா ஒளிபரப்புவார்கள் என்று முதலில் நம்பவவே முடியவில்லை.
 pic12
நான் சினிமாவில் ஹீரோயினாக இருந்த காலத்திலேயே பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காத காரணத்தால் இது பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. உடனடியாக எனக்கு மனதில் தோன்றியது, சென்னைக்கு திரும்பி, என்னுடைய தரப்பை சொல்லி, பொது மக்களிடம் இது உண்மையல்ல என்று சொல்லி இதை மறுக்க வேண்டும் என்பதே.   ஆனால், என் நண்பர்களும், உறவினர்களும், சென்னைக்கு திரும்பாதே என்று உறுதியாக தடுத்து விட்டார்கள்.

சினிமா நடிகை என்பதால் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம் அவள் வாழ்கையை நாசப்படுத்தலாம் என்ற உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. என்னைப் போல எத்தனை பெண்களுக்கு இந்த கொடுமையிலிருந்து வெளியேறி வரும் துணிச்சல் இருக்கும் ? இவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் இப்படிச் செய்தது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.   இந்த கஷ்டத்திலிருந்து முழுமையாக வெளிவருவதற்கு எனக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது.

இந்த காரணத்தினாலேயே நான் எந்தப் பத்திரிக்கைக்கும் இது வரை பேட்டி அளிக்காமல் இருந்தேன்.

என்னுடைய அடையாளத்தையே அழித்து விட்டார்கள்.   எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடு ஏதாவது உள்ளதா ?


இந்த காட்சிகள் ஒளிரப்பப் படும் முன்பு மிரட்டப் பட்டீர்களா ?

சன் டிவியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப் படும் முன்பு போனில் அழைத்து, நித்யானந்தாவின் மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கப் போவதாகவும், அவரின் திருவண்ணாமலை ஆசிரமத்தில் போதைப்பொருட்களை வைத்து அதை கைப்பற்றப் போவதாகவும், என்னை விபச்சார வழக்கில் கைது செய்யப் போவதாகவும், நித்யானந்தா மீது நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப் போவதாகவும் கூறினார்.

இதையடுத்து என் குடும்பம் மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியது. மிகுந்த அச்சத்திற்கு ஆளானார்கள். நான் உடனடியாக கிளம்பி அமெரிக்கா சென்று விட்டேன்.

அதற்கு முன்பாகவே பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே லெனின் மூலமாக மிரட்டல் தொடங்கியது.   நேரடியாக என்னையும், ஆசிரம நிர்வாகிகளையும் லெனின் மிரட்டத் தொடங்கினார்.   ஏற்கனவே நித்யானந்தா அவர்கள் சொல்லியது போல முதலில் 100 கோடிக்கு தொடங்கிய பேரம் 60 கோடியில் வந்து நின்றது.
 ranjitha-46248-680x1024
நீங்கள் சொல்வது போல, அந்த காட்சிகள் பொய்யாக இருந்தால் நீங்கள் எதற்காக பேரம் பேச வேண்டும் ?

எங்களை மிரட்டிய ஸ்ரீதர் என்ற வழக்கறிஞர் உள்ளிட்ட நபர்கள், அவர்கள் ஒரு மிகப் பெரிய மனிதர் சார்பாகவே பேரம் பேசுவதாக தெரிவித்தனர்.   அந்தப் பெரிய மனிதர் யாரென்று தெரிந்து கொள்ள விரும்பினோம்.   அது தெரியாவிட்டால், நாளை இந்த மிரட்டல் தொடர்ந்து நடக்கும் என்றே நினைத்தோம்.   அந்தப் பெரிய மனிதரை ஆசிரமத்திற்கு வர வைப்பதற்காக மட்டுமே 25 லட்ச ரூபாய் பணம் வாங்கிச் சென்றனர். ஆனால் சொன்னபடி பெரிய மனிதர் வரவில்லை, மார்ச் மாதத்தில் சன் டிவியில் ஒளிபரப்பப் பட்டதுதான் தெரியும்.

உங்கள் மீது தமிழக காவல்துறையால் வழக்கு பதியப்பட்டதா ?

என் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை. ஆனால் நித்யானந்தா அவர்கள் மீது சென்னை நகர காவல்துறையால் வழக்கு பதியப்பட்டது.   யாரோ சில வழக்கறிஞர்கள், நித்யானந்தா எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்று கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டதாக அறிந்தேன்.

அது தவறு என்று நினைக்கிறீர்களா ?

காவல்துறை என்பது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா ? அந்த காட்சிகள் ஒளிபரப்பான போது, இது போன்ற காட்சிகளை ஒளிபரப்பியது தவறு என்று சென்னையைச் சேர்ந்த கல்யாணி என்ற வழக்கறிஞர் சென்னை நகர காவல்துறையிடம் சன் டிவி மீதும், நக்கீரன் மீதும், தினகரன் மற்றும் தமிழ் முரசு மீதும் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லையே ?  நித்யானந்தா மீது நான் எந்தப் புகாரும் கொடுக்காத நிலையில் எதற்காக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படி நியாயமாக நடந்து கொள்ளும் காவல்துறையாக இருந்திருந்தால், வழக்கறிஞர் கல்யாணி மீதான புகாரின் மீதும் அல்லவா வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் ?

தமிழ்நாட்டுக்கு வந்தால் கைது செய்யப் படுவேன் என்று அப்போது செய்திகள் பரப்பப் பட்டன.   இது போன்ற கீழ்த்தரமான காட்சிகளை ஒளிபரப்பி அச்சில் ஏற்றிய பத்திரிக்கைகளை கைது செய்யாமல், இதனால் பாதிக்கப் பட்டுள்ள என்னை கைது செய்வேன் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு உண்மையில் இந்நாட்டில் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகமே எனக்கு ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகளைப் பற்றி என்ன நினைத்தீர்கள் ?

எனக்கு ஏற்பட்ட அவமானமும் துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் நேரக் கூடாது. என்னுடைய வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு கட்டாயப்படுத்தவும் முடியாது.     எனக்கு ஏற்பட்ட இந்த அநீதி களையப்படுவதற்காகவாவது ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைத்தேன். அவ்வாறே நடந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

இந்தச் சிக்கலில் இருந்து எப்படி வெளிவந்தீர்கள் ?
 ranjitha-27229-680x1024
எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு.   பகவத் கீதையும் ஆன்மீகமும் எனக்கு இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற தைரியத்தை வழங்கியது.   இதற்கு உரிய தண்டனை சம்பந்தப் பட்டவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் நம்பினேன்.

நக்கீரன் பத்திரிக்கையை சார்பாகவும் மிரட்டப் பட்டீர்களா ?

நக்கீரன் சார்பாகவும் ஒருவர் என்னை நேரடியாக மிரட்டினார்.   பணம் கொடுத்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டப் பட்டேன்.   நக்கீரன் இதழில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆசிரமத்தில் ஒரு நாய் இறந்துவிட்டது என்றும், அதை என்னுடைய கணவரோடு தொடர்பு படுத்தி, என் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டனர். இந்த விவகாரத்தில் எந்த வகையிலும் சம்பந்தப் படாத என் கணவரின் புகைப்படத்தை வெளியிடுவது எந்த வகையில் நியாயம்.   துளி கூட எந்த வகையிலும் சம்பந்தப் படாத என் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டதால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு இவர்கள் தானே பொறுப்பு.
என் தொடர்பாகவும், நித்யானந்தா தொடர்பாகவும் செய்திகளை வெளியிட்ட காமராஜ் என்பவர், தினகரன் நாளிதழ் எரிப்பு தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் மார்ஃபிங் செய்வது நக்கீரன் பத்திரிக்கைக்கு வழக்கமே என்றும், பெண் உடலில் ஆண் தலையைப் பொறுத்தி உண்மை போல செய்திகளை வெளியிட்டிருக்கிறோம் என்றும், தினகரன் சம்பவம் தொடர்பாக அட்டைப் படத்தில் வெளியான புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப் பட்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சாட்சியம் அளித்திருக்கிறார். இப்படிப் பட்ட பத்திரிக்கையை நடத்தும் ஒரு நபர், என்னைப் பற்றி கேள்வி எழுப்பி செய்திகள் வெளியிடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ?

அந்தக் காமராஜ் என்வரின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய போது, நீரா ராடியா என்பவர் நடத்தும் ஒரு நிறுவனத்தில் அவர் மனைவி ஜெயசுதா வேலை பார்ப்பதாக செய்தி வெளியிட்டதற்காக மான நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிந்தேன்.   வேலை பார்க்காத ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தாக வந்த செய்தி மான நஷ்டம் ஏற்படுத்தினால், எனக்கு ஏற்பட்ட மான நஷ்டத்திற்கு ஈடு உண்டா ?   தன் மனைவியைப் பற்றி வந்த செய்தியால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை போல பல மடங்கு எனக்கு ஏற்படும், ஏற்பட்டிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டாமா ? தன் மனைவியைப் போலத்தான் ஊரில் உள்ள மற்ற பெண்களும் என்று நினைத்தால், இது போன்ற செய்திகளை வெளியிட மாட்டார்கள்.
 K14l
இது தவிர வேறு யாரும் மிரட்டினார்களா ?

இந்தக் கட்சிகள் ஒளிபரப்பான பிறகு, இவற்றை நியாயப் படுத்துவதற்காக, ஒவ்வொரு ஊரிலும், நித்யானந்தா ஆசிரமத்திற்கு எதிராக பொது மக்களே போராட்டம் நடத்துவதாக சன் டிவியைச் சேர்ந்தவர்கள் அவர்களே போராட்டங்களை உருவாக்கி நடத்தினார்கள்.   என்னுடைய நண்பர்கள் கூட தாக்கப் படுவோம் என்று அஞ்சினார்கள்.   அவர்கள் விரும்பாததால் பலரின் பெயரைக் கூட நான் இப்போது குறிப்பிட இயலாது.   அந்தச் செய்தியை திரித்து, திரித்து தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக சன் டிவி மற்றும் நக்கீரன் வெளியிட்டு வந்தார்கள்.   இப்படி எட்டு மாதங்களாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதிலேயே இவர்களின் உள்நோக்கம் எனக்கு நன்கு புரிந்தது.

அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

நான் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன்.   இந்த புதிய அரசின் நிர்வாகத்தின் கீழ் நியாயம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.   அந்த தைரியத்தின் அடிப்படையில் தான் நான் புகார் அளித்தேன்.   நான் எனக்காக மட்டும் இந்தப் புகாரை அளிக்கவில்லை.   எனக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஆனால், எனக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு காரணமானவர்கள், தண்டிக்கப் பட்டால் தான், இது போல மற்ற பெண்களை தவறாகச் சித்தரித்து, அதன் அடிப்படையில் இழிவான வியாபார லாபம் தேடும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.     எனக்கு ஏற்பட்ட இந்த அவமானமும் துன்பமும், வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என்று நினைக்கிறேன்.   என் விவகாரம் மூலமாக இது போன்ற அநியாயங்கள் என்றுமே அரங்கேறக் கூடாது என்றும் நினைக்கிறேன்.

பேட்டியை முடித்து வெளி வரும் போது, ஒரு உறுதியான ரஞ்சிதாவை பார்க்க முடிந்தது.

Thanks to SAVUKKU

Saturday, July 23, 2011

எய்ட்ஸ் இல்லா இந்தியா எப்போது?

லக அளவிலான எய்ட்ஸ் பாதிப்பு தர வரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு, 10-வது இடம். 95,000 இளைஞர்கள் இந்தியா வில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்கிறது ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை.''பாலியல் தொழிலாளர்களுக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும்தான் எய்ட்ஸ் வரும் என்பது தவறு. 25 வயதுக்குக் கீழ் உள்ள எந்த இளைஞரும் இந்த அபாய வளையத்துக்குள் வரக்கூடிய வாய்ப்புஉள்ளது. விடலைப் பருவத்தில் ஓர் இளைஞனுக்குத் தன் உடல் குறித்த சந்தேகங்களைக் குடும்பத்தில் யாருடனும் ஆலோசிக்க முடியாத சூழலில், அரைகுறை புரிதல் உடைய தன் நண்பர்களுடன் இது தொடர்பாக ஆலோசிக்கும்போதுதான் தவறு களுக்கான தாழ்ப்பாள் திறக்கிறது. பள்ளிப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்த்தல், பாலியல் தொழிலாளர்களையும், திருநங்கைகளையும், ஆண்-ஆண் உறவு கொள்பவர்களையும் அரவணைத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல் இவைதான் எய்ட்ஸ் பாதிப்புகளைக் குறைப்பதற்கான வழிகள். இதேபோல, திருமணத்துக்கு முந்தைய 'ஹெச்.ஐ.வி. வாலன்டரி டெஸ்டிங்’ ரத்தப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது'' என்கிறார் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் இணை இயக்குநர் (தகவல், கல்வி மற்றும் தொடர்பு) அலெக்ஸ் பரிமளம்.

ஐ.நா. அறிக்கையின் இன்னோர் அதிர்ச்சியான அம்சம்... பாதிக்கப்பட்ட இள வயதினரில் 46,000 பேர் பெண்கள். ''பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அறிய, ஒன்றிரண்டு வழிகள்தான் இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களிடம் செய்யப்படும் எய்ட்ஸ் பரிசோதனை இதில் பிரதானமானது. இந்த வகை பரிசோத னையால் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையை எய்ட்ஸ் நோய்த் தொற்றில் இருந்து ஒரு பெண்ணால் தடுக்க முடியும். ஆனால், யாரையும் கட்டாயப்படுத்த முடியாதே?

பள்ளி, கல்லூரிகளில் எய்ட்ஸ் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்கிறார்கள். ஆனால், 'தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம்’ சார்பில் நடத்தப் பட்ட கூட்டத்தில், நமது கல்வித் துறையும் சுற்றுலாத் துறை அமைச்சகமும் பங்கேற்கவே இல்லை. பொறுப்பு வாய்ந்த அமைச்சகங்களே இப்படிப் பொறுப்பு இல்லாமல் இருப்பது நியாயமா?



தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி. எனப்படும் 'ஆன்ட்டி ரெட்ரோவைரல் தெரபி’ வழங்கப்படுகிறது. ஆனால், ஜி.ஹெச்சில் உள்ள கவுன்சிலர்களுக்கு, நோயாளிகளைப்பற்றிய விவரங்களை 'டேட்டா என்ட்ரி’ செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. பிறகு எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை கூற இயலும்? தவிர, எய்ட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்ட பெண்கள் ஒன்றாகக் கூடிக் கலந்துரையாட, சென்னை, திருவண்ணாமலை, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டும்தான் 'டிராப்பிங் சென்டர்’கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களில் மட்டும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினால் போதுமா?'' என்கிறார் 'பாசிட்டிவ் விமன் நெட்வொர்க்’ அமைப்பின் தேசியத் தலைவர் கௌசல்யா.

ஒவ்வொரு நாளும் 7,000 பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.  

இந்தியாவில் 'எய்ட்ஸ்’ நோய்க்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சி, சென்னை காச நோய் ஆய்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மையத்தின் ஆய்வுத் தலைவரான மருத்துவர் ராமநாதன் சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

 

''ஹெச்.ஐ.வி. வைரஸ் அவ்வப்போது தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும். இதை மரபணு திடீர் மாற்றம் (ஜெனிட்டிக் மியூட்டேஷன்) என்பார்கள். அதனால்தான், இந்த நோய்க்கான தடுப்பு மருந்தையோ அல்லது இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தையோ கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய மருந்துக்காகப் பல ஆய்வுகள்நடக் கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது'' என்கிறார் ராமநாதன்.

எய்ட்ஸ் இல்லாத நாளைய இந்தியாவே நமக்கான இந்தியா!


விகடன் 

உடன்பிறப்பே.....

ஜுலை 2010ல் ஜுனியர் விகடன் பொட்டு சுரேஷைப் பற்றி மடக்கப் பட்ட மதுரைத் திலகம் என்று செய்தி வெளியிட்டதும், அதற்காக ஜுனியர் விகடன் அலுவலகத்தை அடித்து நொறுக்குவோம் என்று பொட்டு சுரேஷ் தினமலரில் விளம்பரம் கொடுத்ததும், பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதையும் ஒட்டி, ஜுலை மாதத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது.  இன்று பொட்டு சுரேஷ் பாளையங்கோட்டையில் பாம்புக்கும் பல்லிக்கும் நடுவினில் இருக்கையில், இந்தக் கட்டுரையை மீண்டும் பதிப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

 உடன்பிறப்பே,
நெடுநாட்களாக உனக்கு கடிதம் எழுதாமல் இருந்தேன்.  ஆனால் எழுதியே தீர வேண்டிய சூழலை சில குடிலன்கள் உருவாக்கியுள்ளதால், உன்னை இக்கடிதம் வாயிலாக சந்திப்பதைத் தவிர வேறு என்ன வழி ?
உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழக மக்கள் ஒரு ரூபாய்க்கு அரிசி உண்டு, இலவச வண்ணத் தொலைக்காட்சி கண்டு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் நலம் கொண்டு, எனக்கு அளிக்கிறார்கள் மலர்ச் செண்டு.  இதை குலைக்க வருகிறது மவுண்ட் ரோடு வண்டு.
சமீப காலமாக நடக்கும் நிகழ்ச்சிகளை நீயும் கவனித்திருப்பாய் என்று நினைக்கிறேன். கழக அரசு ஏதோ பத்திரிக்கையாளர்களை அடக்குவதாகவும், மிரட்டுவதாகவும், ஒடுக்குவதாகவும், ஓட ஓட விரட்டுவதாகவும் திட்டமிட்டு விஷமத்தனம் பரப்பப் பட்டு வருகிறது என்பதை நீ அறிவாய்.   பொய்யாலும் புரட்டாலும் தமிழகத்தை இருட்டுக் கூடாரமாக வைத்திருக்க வேண்டும் என்று புறப்பட்டுள்ளார்கள் சில புல்லுருவிகள்.  
ஆற்காடு வீராச்சாமி இருக்கும் போது, புதிதாக எதற்காக தமிழகத்தை இருளில் ஆழ்த்த வேண்டும் ?  வேறு எந்த மாநிலத்திலும், நாட்டிலும் இல்லாத வகையில் கழக ஆட்சியிலேதான் இருட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சரை ஏற்படுத்தி வைத்திருக்கிறானே இந்தக் கருணாநிதி ! பிறகெதற்கு இப்படி ஒரு பதர்களின் கூட்டம் தலைகொழுத்து ஆடுகிறது ?
கருணாநிதி ஆட்சியிலே வழக்கறிஞர்கள் தாக்கப் பட்டார்கள், நீதிபதிகள் தாக்கப் பட்டார்கள், உழைப்பாளர்கள் தாக்கப் பட்டார்கள், உத்தப்புரத்திலே தலித்துகள் தாக்கப் பட்டார்கள், பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்டார்கள், என்று கூக்குரலிடுகிறார்களே  !!!  இவர்கள் கூற்றிலிருந்தே புரியவில்லையா, இந்தக் கருணாநிதி பாரபட்சமில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் தான் தாக்கியிருக்கிறான் என்று.  
அந்த அம்மையாரைப் போல பாரபட்சமாக நடந்து கொள்ளும் பாரம்பரியத்தில் வந்தவனல்ல நான்.   அறிஞர் அண்ணா என்னை அப்படி வளர்க்கவுமில்லை, பெரியார் அதை எனக்கு கற்றுக் கொடுக்கவுமில்லை.  அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதையும் இந்த பதர்கள் அறியவில்லை.
1_1
பதவி போய் நான் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போது பாருங்கள்.. …  எத்தனை பாசத்தோடு இந்தக் கருணாநிதி பத்திரிக்கைகளின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று. 2001 முதல் 2006 வரை, பத்திரிக்கை சுதந்திரத்தைப் பற்றியும், பத்திரிக்கையாளர்கள் அடக்கப் படுவது பற்றியும் நான் பேசாததையா இன்று கூக்கூரலிடும் நரிகளின் கூட்டம் பேசி விட்டது ?
பொட்டு என்பவர் யார் ?.  என்னைப் போலவே பிற்பட்ட வகுப்பில் பிறந்து, சமுதாயத்தில் முக்கியப் புள்ளியாக உயர்ந்து நிற்பவர்.   அந்தப் பொட்டை திருஷ்டிப் பொட்டாகச் சித்தரித்து எழுதியிருக்கிறது இன்று புதிதாக அவதாரம் எடுத்திருக்கும் அண்ணா சாலை ஆரியக் கூட்டம்.
தமிழகத்திற்கே விடிவெள்ளியாக விளங்கும் அஞ்சா நெஞ்சனின் கரத்தை மதுரையில் மட்டுமல்லாமல், கொடை ரோட்டிலும் வலுப்படுத்தும் அன்பு இளவல் பொட்டின் நெற்றிப் பொட்டில் தாக்குவது போலல்லவா எழுதியிருக்கிறார்கள் ?
என் அன்பு மகனைப் பற்றியும் அன்பு மகனுக்கு பொட்டு செய்யும் சேவையை இந்த குள்ளநரிகளால் செய்ய முடியுமா ?   கொடை ரோடு முழுவதுமே சொல்லுமே பொட்டின் சேவைகளை.. … … … .. .. .. .. . ..
இன்று இல்லாமல் இருந்தாலும் என்றுமே என் அன்பிற்குரிய பிரபாகரனுக்கு ஒரு பொட்டு அம்மான் போலத்தானே என் அன்பு மகனுக்கு இந்தப் இந்தப் பொட்டு.  அந்தப் பொட்டை போற்றும் அண்ணாசாலை ஆரியக் கூட்டத்திற்கு மதுரைப் பொட்டு வேப்பங்காயாய் கசப்பதேன் ? விளக்கெண்ணையாய் இருப்பதேன் ? அவர் பிற்பட்ட வகுப்பிலே பிறந்து, முற்பட்ட வகுப்பினருக்கே சவால் விடும் வகையில் வளர்ந்திருப்பதால் தானே ?
இன்று என் ஜால்ராவாக மாறியிருக்கும் அன்பு உடன்பிறப்பு கலைஞானி கமலஹாசன் அன்றே பாடியிருக்கிறாரே “சாந்துப் பொட்டு, ஒரு சந்தனப் பொட்டு “ என்று.   கலைஞானி மட்டுமா ?   கண்ணதாசனும் “பொட்டு வைத்த முகமோ“ என்று அருமை பொட்டைப் பற்றி பாடியிருக்கிறாரே .. … …

pottu_suresh
கர்நாடக கண்மணி அருமை நண்பர் முரளியும் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா“ என்று பாடியிருக்கிறாரே ?
ஆனால் இந்த அண்ணா சாலை ஆரியக் கூட்டம் இந்தப் பாடல்களையெல்லாம் கேட்காமல், பொட்டுவை ஏதோ ஸ்டிக்கர் போட்டு போல எழுதியிருக்கிறார்களே கழுகார் என்ற பகுதியில்…  அந்தக் கழுகின் சிறகை உடைக்க வேண்டாமா ?  அந்த கழுகை கழக உடன்பிறப்புகள், புறநானூற்று புலிகளைப் போல புறப்பட்டு புசிக்க வேண்டாமா ?  புரட்டி எடுக்க வேண்டாமா ?  அதைத்தானே அறிவித்தார்கள் ஒரு விளம்பரம் மூலமாக .. … ?  இதில் என்ன  தவறு இருக்கிறது ?   இதற்கு அய்யோ அய்யய்யோ என்று கூப்பாடு போடுகிறார்களே ?
என்றுமே நான் “செய்வதைச் சொல்வோம், சொல்வதைச் செய்வோம்“ என்றுதானே சொல்லி வந்திருக்கிறேன்.   செய்யப் போவதை வாயால் சொல்லாமல், ஒரு பத்திரிக்கையின் வாயிலாக விளம்பரம் மூலமாகச் சொல்வது ஒரு நற்பண்பன்றோ ?
உண்மையைச் சொன்னால் அடித்துஉதை; அதைமுன்கூட்டியே தினமலர்வழிச் சொல்
என்று அய்யன் வள்ளுவரே தெரிவித்திருக்கிறார்.  அந்த அய்யன் வழி வந்தவனல்லவா நான் ?
அந்த அம்மையார் கட்சியினர் மட்டும் மூன்று மாணவிகளை எரித்துக் கொலை செய்து விட்டார்கள், கழகம் இது போல் ஏதாவது செய்யாவிட்டால், நாளை கழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக இது அமைந்துவிடும் என்பதற்காகத் தானே தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் அதே போல், மூன்று பேரை எரித்துக் கொன்றனர் அன்பு உடன்பிறப்புகள் ?  அன்று தினகரன் அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து எழுதிய ஏடுகள், “திடீரென உள்ளே புகுந்த“   “திடீர் தாக்குதல்“ என்றல்லவா எழுதின ?  
அதுபோல ஒரு அவச்சொல் வரக் கூடாது என்பதற்காகத் தானே பத்திரிக்கையில் விளம்பரம் தரப்பட்டுள்ளது.   வரப் போகிறோம்.  தரப் போகிறோம் என்பதை அருமை நண்பரின் உதவியோடு அருமையான விளம்பரமாக தந்திருக்கிறோம்.
ஒரு செய்தி ஆசிரியரின் கைது தினமலர் நாளேட்டை எப்படி வழிக்கு கொண்டு வந்திருக்கிறது பார்த்தாயா உடன்பிறப்பே ? இதே போல அண்ணா சாலை ஆரியக் கூட்டத்தையும் வழிக்கு கொண்டு வருவது எனது கடமை அல்லவா ?  அந்தக் கடமையை செய்யத் தவறினால் கருணாநிதி கடமை தவறிய கயவன் என்று வரலாறு வையாதா ?  
நான் என்ன இந்தப் பத்திரிக்கைகளை எழுத வேண்டாம் என்று தடுக்கிறேனா ?  எதிர்க்கிறேனா ?   இவர்களுக்கு செய்தி தரவேண்டும் என்பதற்காகத் தானே தினமும் ஒரு பாராட்டு விழா, திறப்பு விழா, திருமண விழா, திரைப்பட விழா என்று கலந்து கொள்கிறேன்.   இவர்களுக்காகத் தானே தினமும் ஒரு அறிக்கை விடுகிறேன்.    இவர்களுக்காகத் தானே என் குடும்பத்தினரையும் தினமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளேன் ?
இதைப் பற்றியெல்லாம் எழுதாமல், தப்பும் தவறுமாக, அந்த அம்மையார் விடும் அறிக்கைகளையெல்லாம் வெளியிடுவதும் உண்மையை மறைக்கும் வேலை தானே ?  பொய்யை வாரி இறைக்கும் காரியம் தானே ?
பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இன்னும் இந்த பத்திரிக்கைகளை எல்லாம் சொந்தமாக வாங்காமல் இருக்கிறேன்.
நானே ஒரு பத்திரிக்கையாளன் ஆகையால், இந்த விகடன், குமுதம், தினத்தந்தி, தினமணி, தினமலர், கல்கி, போன்ற அனைத்துப் பத்திரிக்கைகளையும் நானே சொந்தமாக வாங்கி, அதில் என்னைப் பற்றி நானே அத்தனை பக்கங்களையும் எழுதி நிரப்ப வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் அவாவை, பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால் ஒத்தி வைத்திருக்கிறேன்.  ஆனால், இதைச் செய்தே ஆகவேண்டும் என்ற  நெருக்கடிக்கு என்னைத் தள்ளுவது போலத்தானே இருக்கிறது இந்த விபீடணர்கள் நடத்திய செவ்வாய்க் கிழமை கூட்டம் ?
தினமலர் குழுமத்தைப் போன்ற பிற்பட்ட ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்து முன்னேறியவர்களும், இந்து ராம் போன்று, தாழ்த்தப் பட்ட சமூகத்தின் பிறந்து முன்னேறியவர்களும் இருப்பதால்தானே, இன்று இந்த பார்ப்பனர்களின் கூட்டத்தை அடக்கி வைக்க முடிகிறது ?  இந்த பார்ப்பனர்களின் சதிச் செயலை, முரசொலியிலே தொடர்ந்து  “காதற்ற ஊசி“ எழுதி வருவதை நீ படித்திருப்பாய் என்பதை நான் அறிவேன் உடன்பிறப்பே.
கலைஞானி நடித்த சலங்கை ஒலி படம் பார்த்திருப்பாய்.  அந்தப் படத்திலே ஒரு காட்சி. நடனமாடிக் கொண்டிருக்கும் கலைஞானியை ஜெயப்ரதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.  அப்போது திடீரென்று மழை வரும்.   அந்த மழையில் ஜெயப்ரதா நனைவார்.  அப்போது, ஜெயப்ரதா தலையில் விழுந்து நெற்றியில் வழிந்து, ஜெயப்ரதாவின் பொட்டை மழை நீர் அழிக்க எத்தனிக்கும் போது, கலைஞானி ஓடிச் சென்று அந்த பொட்டு அழியாமல் காப்பார்.
அது போலத்தானே அன்பு உடன்பிறப்பு பொட்டுவை அழிக்க துடிக்கிறார்கள்.  கலைஞானி போல, வேகமாகச் சென்று தடுக்க முடியாது என்றாலும், மெதுவாகச் சென்றாவது, பொட்டு அழியாமல் பாதுகாக்க வேண்டியது எனது கடமை அல்லவா ?
பாதுகாக்க தேவையான  நடவடிக்கைகளை எடுக்காது இருந்தால், சோடையாகி விட்டான் தமிழன், சோரம் போய்விட்டான் தமிழன், சோதாக்களின் கூட்டத்திலே ஒருவனாகி விட்டான் தமிழன், தன் சுகமொன்றே போதுமென்று சுயமரியாதை இழந்து விட்டான் தமிழன் என்பது உறுதியாகி விடாதா ?
1580963828_4ea23b4ece_b
இந்நிலை உறுதியாகி விட்டால், அண்ணாசாலை ஆரியக் கூட்டம் இன்னும் வேகமாக சுழற்றும் வாளை, பொட்டுவைப் பற்றி எழுதி நிரப்புவார்கள் தாளை, இதைப் பொறுத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறானா, பொட்டு என்ற காளை ?
இதயத்தில் பதிந்திருக்கிற கொள்கைக்கும் ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்புக்கும் மாசு வராமல் காப்பாற்றுகிற கடமையை கழக அரசு செய்துள்ளது என்பதற்கான சான்றுதானே தினமலர் விளம்பரம் ?
ப்ரஸ் கிளப்பில் விபீடணர்கள் கூடி நடத்தும் போராட்டத்தை, ஜிம்கானா கிளப்பிலும், காஸ்மாபாலிடன் கிளப்பிலும், முடித்து வைக்கத் தெரியாதா இந்தக் கருணாநிதிக்கு ?  அண்ணா சாலை ஆரியக் கூட்டம் என்னிடம் சரணடைந்து பேச்சு வார்த்தைக்கு நேரம் கேட்டிருப்பதை போராட்டம் நடத்தும் அந்த விபீடணர்கள் அறிவார்களா ?
அன்புடன்
மு.க.

Thanks to Savukku

அழகிரி உத்தரவின் படியே தா.கிருஷ்ணன் கொல்லப் பட்டார்

அழகிரி உத்தரவின் படியே தா.கிருஷ்ணன் கொல்லப் பட்டார் என்று நாம் சொல்லவில்லை. அழகிரியின் கண்ணுக்கு கண்ணாக, இருந்த எஸ்ஸார் கோபி தான் இப்படிச் சொல்கிறார்.

ARV_ALAGIRI_4489e
நேற்று முன்தினம், நில அபகரிப்பு மோசடிக் புகாரில் சிக்கியுள்ள பொட்டு சுரேஷ் மற்றும் எஸ்ஸார் கோபியின் வீடுகளில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த சோதனையின் போது, பொட்டு சுரேஷ் வீட்டில் இருந்து எஸ்ஸார் கோபி அழகிரிக்கு எழுதிய கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி, உளவுத்துறையால் பத்திரிக்கைகளுக்கு லீக் செய்யப் பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த கடிதத்தில் உள்ளவற்றை அப்படியே சவுக்கு வாசர்களுக்கு அளிப்பதில் சவுக்கு பெருமை கொள்கிறது.

Letter_02

Letter_01

Letter_03


Letter_04

  நான் உயிராக நினைத்து இருக்கும் அண்ணன் அழகிரி அவர்களுக்கு, உங்களின் உண்மை விசுவாசி தம்பி எஸ்ஸார் கோபி எழுதிக் கொள்ளும் உள்ளத்தின் வெளிப்பாடு.

முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். எதற்காக என்றால் நான் தீவிர அரசியலுக்கு வரக் காரணம் பணம் சம்பாதிப்பதற்காகவோ பதவி வாங்குவதற்காகவோ அல்ல. என் குடும்பமே லீலாவதி கொலை வழக்கில் சம்பந்தப் படாமலே சிக்கியதால் மருதுவையும் மாமா முத்துராமலிங்கம் அவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

அதனால்தான் ஒரு வெறியுடன் தங்கள் கட்டளைகளை செய்ய முடிந்தது. உதாரணம் அருப்புக் கோட்டைத் தொகுதி இடைத் தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெறச் செய்தோம். அந்த வழக்குக்காக ஏழு வருடம் அலைந்து வெற்றி பெற்றேன். அடுத்து மிசா பாண்டியன் கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் தங்களின் விசுவாசி என்ற ஒரே காரணத்துக்காக 50 ரூபாய் வழிப்பறி செய்ததாக வழக்கு போட்டார்கள். அதுவும் நம்முடைய ஆட்சியில். அந்த வழக்குக்காக இரண்டு வருடம் அலைந்து அந்த வழக்கை முடித்தேன். அடுத்து தங்களை கட்சியை விட்டு நீக்கிய நேரத்தில், என்னுடைய ஏரியாவில் தான் முதன் முதலாக பஸ் எரித்தோம். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. அதே போல் வெளியில் சொல்ல முடியாத எவ்வளவோ விஷயங்களைச் சொன்னீர்கள். சீனிவேல் MLA அலுவலகத்தை எரித்தது. அக்னி ராஜ் வீட்டில் காரை எரித்தது. PTR அலுவலகத்தில் கண்ணாடி உடைத்தது. இவை எல்லாமே நீங்கள் சொல்லி நான் செய்தது. கடைசியாக தா.கி கொலை. இந்த வழக்கில் நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. ஒவ்வொரு போலீஸ் காரனும் கேட்ட கேள்வி இருக்கிறதே.. சொல்லவே நா கூசுகிறது. அவ்வளவு கேவலமாக பேசினார்கள். உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். உன் மனைவியிடம் எப்படி படுப்பாய் செய்து காமி என்று S.I. ஜெயக்குமார் என்பவன் கேட்டான். இதை விட கேவலமாக ஒரு மனிதனை அசிங்கமாக கேட்பதற்கு வார்த்தைகள்  இருக்கிறதா ? இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதைப்பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று இப்போது நினைக்கிறேன். நண்பர் சுரேஷ் அவர்கள் என்னிடம் பேசும்போது என் உடன் உள்ள ஒவ்வொருவருக்கும் பதவி கொடுத்தாகி விட்டது. உங்கள் தம்பி சேர்மேன், கார்த்திக் ஒன்றிய செயலாளர், சேட் நகர் செயலாளர், சீனி வட்டச் செயலாளர் அப்புறம் எனக்கு தலைமை செயற்குழு உங்கள் கோட்டா முடிந்தது என்று சொன்னார். என் தம்பியை சேர்மேன் ஆக்கும் எண்ணம் சத்தியமாக எனக்கு கிடையாது. கார்த்திக்கைத் தான் நான் சேர்மேன் ஆக்குவேன் என்று சொன்னேன். ஆனால் என் குடும்பமே அதை எதிர்த்து என் தம்பிக்கு வாங்கிக் கொடுக்க என்னை நிர்பந்தித்தார்கள். அதனால் தான் நான் என் அம்மாவிடம் இன்று வரை பேசாமல் இருக்கிறேன். அந்த சேர்மன் பதவியை கைப்பற்ற 30 லட்ச ரூபாய் வரை செலவு செய்துதான் சேர்மன் ஆக்கினேன். கார்த்திக், சீனி, சேட் போன்றவர்களுக்கு பதவி கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் ஒன்றும் சும்மா வாங்கவில்லை. அவர்களும் வழக்கில் சிக்கி சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆட்கொள்ளப் பட்டார்கள். நமக்காக கஷ்டப்பட்டவர்களுக்கு…..

எதற்கு எடுத்தாலும் நண்பர் சுரேஷ் சொல்வது உங்கள் குடும்பத்திற்கு ஒரு பதவி கொடுத்து விட்டாகி விட்டது என்று. திரும்ப திரும்ப நான் பதவி கேட்கும் போதெல்லாம் இதையே சொல்வார். அப்படி பார்த்தால் தளபதி தங்கைக்கு நகராட்சி தலைவர் பதவி, தளபதிக்கு MLA சீட், அதில் தோற்ற பின்பு நகர் மாவட்டச் செயலாளர் பதவி, கவுஸ் பாட்ஷாவிற்கு துணை மேயராக இருக்கும் போதே அதை ராஜினாமா செய்து விட்டு MLA பதவி. இவர்கள் எல்லாம் அப்படி உங்களுக்காக என்ன தியாகம் செய்தார்கள். நான் செய்த தியாகத்தில் 1% ஆக விசுவாசத்துடன் நடந்து இருப்பார்களா ? நான் கவுன்சிலர் சீட் கேட்டேன், ஆவின் சேர்மேன் கேட்டேன். எதையாவது கொடுத்தீர்களா ? ஏன் கொடுக்கவில்லை என்ற காரணமும் எனக்கு தாங்கள் சொல்லவில்லை. எல்லாரையும் போல எனக்கும் பதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்காதா   அப்படி நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டேன் அண்ணன் அவர்களே..

துரோகம் என்பது எங்கள் வம்சத்திற்கே தெரியாது. மனதில் பட்டதை பேசுவேன். ஒருவரைப் பற்றி போட்டுக் கொடுப்பதோ, பொய் சொல்லவோ எனக்குத் தெரியாது. பத்து ஆண்டு காலம் உங்களின் விரல் அசைவிற்காக காத்திருந்து ஒவ்வொரு வேலையையும் மன நிறைவோடு செய்திருக்கிறேன். மத்திய தொகுதி இடைத் தேர்தலில் ராஜன் செல்லப்பாவையும், முன்னாள் அமைச்சர்களையும் ஓட ஓட விரட்டி அடித்தேன். அதிமுக கரை வேட்டியே தெரியாத அளவுக்கு அந்த தேர்தல் நடத்தி வெற்றி பெற்றோம். நீங்கள் பதவி கொடுத்த யாராவது இப்படி செய்தார்களா ? நாளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னை சும்மா விடுவார்களா ? இதை ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை. யாரோ ஒருவரை திருமங்கலத்தில் வேட்பாளராக நிறுத்தப் போகிறீர்கள். என்னை ஏன் மறந்தீர்கள். எனக்கு என்ன தகுதி இல்லை ? இன்று (16.12.2008) உங்கள் வீட்டிற்கு வந்தேன். வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்லி அனுப்பினீர்கள். அதற்கு நீங்களே கூப்பிட்டு, இப்ப வேண்டாம் எஸ்ஸார் பின்னாடி பார்ப்போம் என்று சொன்னால் நான் என்ன கேட்காமலா போய் விடுவேன். இவ்வளவு கஷ்டப்பட்ட போதும் எங்காவது உங்களைப் பற்றி விமர்சனம் பண்ணியதுன்டா, ஒரு வார்த்தை கூட உங்களை குறைத்துப் பேசியிதில்லை. நான் பதவி கேட்கும் போதெல்லாம் என்னை தட்டி கழித்தால் நான் என்ன செய்வேன். யாரிடம் தான் போவேன். எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது. நீங்களே பதவி கொடுக்கவில்லை என்றால் எனக்கு யார் பதவி கொடுப்பார்கள். இன்று உங்களால் பதவிக்கு வந்த எல்லோரும் உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் தான். என்னை மட்டும் ஏன் ஒதுக்கி வைத்துள்ளீர்கள். இப்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் எல்லோருமே பணம் பதவிக்காக அரசியல் பண்ணுகிறார்கள். நான் வழக்கில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்து நானும் வழக்கில் சிக்கி பல இன்னல்களை சந்தித்து விட்டேன். இப்போது எல்லா பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் தான்.     அதற்கு என்னுடைய நன்றி.
இனிமேல் ஆவது நிம்மதியாக என் மனைவி குழந்தைகளுக்கு ஆக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மனதில் பட்டதை எழுதி விட்டேன். நான் எழுதியதில் ஏதாவது அண்ணன் மனம் புண்படும்படி எழுதியிருந்தால் என்னை மன்னித்து விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் தங்கள் நலம் விரும்பும்
எஸ்ஸார் கோபி
17.12.2008

Thanks to Savukku

கட்டண உயர்வை அறிவித்தது ஏர்டெல்

தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதால் செல்போன் கட்டணங்கள் உயருகிறது. இந்தியாவில் தொலை தொடர்பு புரட்சியை ஏற்படுத்துவதற்காக செல்போன் சேவை தொடங்குவதற்கான லைசென்சும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடும் ஒன்றாக இணைத்து வழங்கப்பட்டு வந்தன. இதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008-ம் ஆண்டிலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் குற்றம் சாட்டினார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தொலை தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்து புதிய அறிவிப்பினை மத்திய தொலைத்தொடர்பு மந்திரி கபில்சிபல் வெளியிட்டார். 
 
 
செல்போன் சேவை வழங்குவதற்கான லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் இனி தனித்தனியாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர் கூறியதாவது:- 1999-ம் ஆண்டில் புதிய தொலை தொடர்பு கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. டெலிபோன் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அக்கொள்கையில் தொலை தொடர்பு லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் சேர்த்து வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தொலைத்தொடர்பு துறையில் போட்டி அதிகரித்து விட்டதால் புதிய கொள்கைக்கு மாற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே இனி லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் ஒன்றாக வழங்கப்பட மாட்டாது, உரிமம் பெற்றவர்கள் எந்த விதமான தொலைபேசி சேவையை வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். அதற்கு தேவையான ஸ்பெக்ட்ரத்தை சந்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். இந்த புதிய கொள்கை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. 
 

புதிய தொலை தொடர்பு கொள்கை காரணமாக ஏர்டெல், ஏர்செல், வோடா போன் ஆகிய நிறுவனங்கள் கூடுதலான ஸ்பெக்ட்ரத்தை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டும். மேலும் லைசென்ஸ் வழங்கும்போது தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏலம் அல்லது எந்த வழிமுறையை பரிந்துரைக்கிறதோ அந்த வழி முறை கடைபிடிக்கப்படும். இந்த புதிய கொள்கையால் செல்போன் கட்டணங்கள் உயர்ந்து உள்ளன. முதல் வரிசையில் உள்ள ஏர்டெல் நிறுவனம் உயர்த்தி உள்ளது .
 
 
இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், பிரீ-பெய்டு கட்டணங்களை 20 சதவீத அளவிற்கு உயர்த்தியுள்ளது. அட்வான்டேஸ் பேக் பயனாளர்களுக்கு நிமிடத்திற்கு 50 பைசாவாக உள்ளூர் அழைப்புகள் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு இனி, 60 பைசா என்ற அளவிலும், லேண்ட்லைன் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 90 பைசா என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கான கட்டணம் ரூ. 1 என்றும், தேசிய எஸ்எம்எஸ்களுக்கு ரூ. 1.50 என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ப்ரீடம் பேக் எனப்படும் செகண்ட்ஸ் அடிப்படையாகக் கொண்ட சந்தாதாரர்களுக்கு செகண்டிற்கு 1 பைசா என்ற அளவில் இருந்த உள்ளூர் மற்றும் எஸ்டிடி கட்டணம் இனி, செகண்டிற்கு 1.2 பைசா என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு முதற்கட்டமாக, டில்லி, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, கேரளா மற்றும் மத்தியபிரதேசத்தில் அமலுக்கு வந்துள்ளதாகவும், விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. ரேட் கட்டர் கார்டு உபயோகிப்பவர்கள், அந்த கார்டின் வேலிடிட்டி முடிந்தவுடன் இந்த புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Thanks to MalaiKhahidam