நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Friday, July 8, 2011

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லியில் நேற்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அமைச்சரவை ஆலோசனைக்கு பின்னர் தனது இல்லம் திரும்பிய தயாநிதி மாறன், ஓரிரு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் பிரதமர் இல்லம் வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்தது. அப்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை தயாநிதி மாறன் பிரதமரிடம் அளித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியின்போது, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். 
அப்போது ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கக்கோரி,  ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்ததாகவும், அதில் கால தாமதம் செய்ததாகவும், அதனால் தனது கம்பெனியை மலேசிய நிறுவனத்துக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் புகார் கூறியிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ நேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சிவசங்கரனின் புகார் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

No comments:

Post a Comment