நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, July 11, 2011

தயாநிதிமாறனின் மோசடி-கலைஞரின் ஆத்திரம்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய,தயாநிதிமாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.பிரதமரின் கெஞ்சலுக்கிணங்க, அவர் இந்த முடிவை எடுத்தார் எனத்தெரிகிறது.விஜயகாந்த் அலுவலகத்திற்கு கம்யூனிஸ்டுகள் சென்றதை வானமே இடிந்தது போல ஃப்ளாஸ் நியூஸ் காட்டிய சன் டிவி இன்று,இறுக்கிகட்டிக்கொண்டு இருக்கிறது.


சும்மா சும்மா என்னை பத்தி அவதூறு பரப்பினா கேஸ் போடுவேன்னு மிரட்டி பூச்சாண்டி காட்டினியே தம்பி...இப்ப கிழிக்க போறாய்ங்களே இதுக்கு என்ன சொல்றீங்க..இனி நீங்களும் நிம்மதியா தூங்க முடியாது.இந்த மாதம் இறுதிக்குள் சி.பி.ஐ மற்றொரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.அதில் தயா பெயரும் இடம்பெறும் என தெரிகிறது.விரைவில் தயாவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்து திஹார் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ முடிவு செய்திருப்பதாக செய்தி.

அடேங்கப்பா...இனிமேல் நம்ம பப்பு பிரதமர்கிட்ட வேகாதுன்னு தாத்தாவும் அமைதியாகிட்டாரு.கழுத்தை பிடிச்சு தள்ளுறதுக்கு முன்னாடி நாமளே போயிடலாம்னு ராஜினாமா கொடுத்துட்டாரு...600 கோடி கொடுத்து அமைச்சர் ஆன தயாநிதி.இதை நான் சொல்லலை.நீராராடியா சொன்னது.இதுவரைக்கும் 680 கோடி கொடுத்து அமைச்சர் பதவி வாங்கினேன்னு தயா மறுப்பு தெரிவிக்கலை.நல்லா சம்பாதிக்கத்தான் 600 கோடி தாத்தா கிட்ட பேரன் கொடுத்தார்.அப்புறம் எதுக்கு தாத்தா,தயா பிரச்சனையை அவரே பார்த்துக்குவார்னு சொன்னார்...?நேத்தே பிரதமர்கிட்ட தயாவை நீக்குவதில் அப்ஜெக்‌ஷன் இல்லை என சொன்னது ஏன்..?

அப்படீன்னா பேரன்கிட்ட வாங்கின 600 கோடியை திருப்பி கொடுப்பாரா தாத்தா..?

எது எப்படியோ..இரண்டு முறையும் முழுசா மத்திய மந்திரி பதவியை தயாவால் அனுபவிக்க முடியலை.கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேர் இருக்கும்போது,லஞ்சம் கொடுத்து அமைச்சர் ஆனா இதுதான் கதி.உடன்பிறப்புகளின் சாபம் சும்மா விடுமா..?

தாத்தா ஏன் இவ்வளவு கோபமா இருக்கார்..?கொசுக்கடியிலும்,கடுமையான வெக்கை ரூமில் தன் மகள் மலரை போல வாடிக்கிடக்க இந்த தயாதான் காரணம் என்பதை கண்டுபிடித்துவிட்டதால் கோபமாக இருக்கிறார்.அதனால்தான் ஒரு பக்கம் சிவஷங்கரனையும் தூண்டி விட்டு,கனிமொழி சிறைக்குள் நடத்தும் கேம் ஷோக்கு தாத்தா பச்சைக்கொடி காட்டிவிட்டார்.பதவிக்கு ஆபத்து என்ற போது,ஒரு போஸ்டர் ஒட்டும் உடன்பிறப்புக்கு கொடுக்கும் மரியாதை கூட கொடுக்காமல்,உன் பிரச்சனையை நீயே பார்த்துக்க என சொல்லி, முகத்தை திருப்பிக்கொண்டார் தாத்தா.

என்ன செய்றது.போஸ்டர் ஒட்டும் உடன் பிறப்புக்கும்,வாழ்க கோஷம் போடும் உடன்பிறப்புக்கும் குவார்ட்டரும்,கோழிபிரியாணியும் இருந்தா போதும்..சாகும்வரை விசுவாசமா இருப்பாங்க.அவங்க என்னிக்கும் அப்படியேதான் இருக்காய்ங்க.
 
Thanks to Sathis777

No comments:

Post a Comment