நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Sunday, July 10, 2011

நில அபகரிப்பு விசாரணை துவக்கம்: கே என் நேரு மறுப்பு

 
திருச்சியில் உள்ள  மாவட்ட திமுக கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்துக்கு நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான புகார் குறித்து போலீஸ் கமிஷனர் மாசானமுத்து விசாரணையை துவக்கி உள்ளம்ர். இந்த விசாரணையின் போது புகார்தாரர் சுரேஷ்குமார் போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் நில ஆவணங்களை ஒப்படைத்தார்.

கடந்த திமுக ஆட்சியின் போது அக்கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.  இத்தகைய நில அபகரிப்பில் ஈடுபட்டவர்களிடமிருந்து நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து மாவட்டம்தோறும் நில அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்க போலீசில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. 

இந்த நிலையில் திருச்சியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கு 1.8 ஏக்கர் நிலம் அபரிக்கப்பட்டதாக ஜி.ஆர்.சுரேஷ்குமார் என்பவர் போலீசில் புகார் தெரிவித்தார்.ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் தனது மூதாதையர் சொத்து என்றும் அந்த நிலத்தில் கலைஞர் அறிவாலயத்திற்கான வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ள என்று அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.இந்த புகார் குறித்து திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து விசாரணையை துவக்கி உள்ளார்.

புகார்தாரர் சுரேஷ்குமாரிடம் போலீஸ் கமிஷனர் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தினார். அப்போது சுரேஷ்குமார் கலைஞர் அறிவாலயத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் தனது சொத்து என்பதற்கான உண்மை சான்றிதழ்களை தாக்கல் செய்தார்.

கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்த திமுகவைச் சேர்ந்த துணை மேயர் அன்பழகன் மற்றும் அவருடன் வந்திருந்த வழக்கறிஞர்கள், கலைஞர் அறிவாலயத்துக்காக எந்த ஒரு தனிப்பட்ட நபருடைய சொத்தும் அபகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பாக சுரேஷ்குமார் என்பவருடைய சொத்து ஆக்கிரமிக்கப்பட வில்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் சர்ச்சைக்குரிய நிலத்தில்  மாநகராட்சி சாலை அமைத்துள்ளது. இந்த நிலத்தை கட்சி அலுவலகம் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தனர்.இது குறித்து விரிவான பதில் எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் கொடுக்கப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் கூறுகையில், ஆவணங்களை சரி பார்த்து வருவதாகவும் இந்த பிரச்சனை குறித்து மாநகராட்சியிடமும் விளக்கம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் புகார்தாரர் சுரேஷ்குமார் கொடுத்த ஆவணங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த நிலத்தை மீட்டு நில உரிமையாளரிடம் நாங்கள் கண்டிப்பாக கொடுப்போம் என்று கமிஷனர் தெரிவித்தார்.

கலைஞர் அறிவாலயத்துக்கு நிலம் அபகரிக்கப்பட்டதாக சுரேஷ்குமார் கொடுத்த புகாரில் கூறிய குற்றச்சாட்டுக்களை முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், புகார்தாரர் சுரேஷ்குமாரை தான் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்றும், கலைஞர் அறிவாலய நிலத்திற்கும் புகார்தாரர் நிலத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். (டிஎன்எஸ்)

No comments:

Post a Comment