மதுரை: குடும்ப அரசியல் தான் திமுக தோல்விக்கு காரணம் என திமுகவினரே கூறி வருவது வருத்தம் தருவதாக உள்ளது என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வேதனை தெரிவித்தார்.
மதுரையில் மாவட்ட திமுக பொருளாளர் மிசா. பாண்டியன் இல்லத் திருமணவிழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது,
தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில் தான் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அதிக அளவில் வழங்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை.
குடும்ப அரசியல் தான் திமுக தோல்விக்கு காரணம் என திமுகவினரே கூறி வருவது வருத்தம் தருவதாக உள்ளது. மாற்று கட்சியினர் அப்படி கூறுவதில்லை. ஆனால் நமது கட்சியினர் தான் இது போன்று தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இது எனக்கு பெரும் மனவேதனையைத் தருகிறது. கட்சிகாரர்களுக்காக அதிக அளவு உதவிகள் செய்துள்ளேன். இதை அவர்கள் மறந்து விடக்கூடாது.
இனி மேல் திமுகவினர் நடத்தும் இல்ல விழாக்களில் அண்ணா படமும், திமுக தலைவர் கலைஞர் படமும் மட்டுமே போட வேண்டும்.
உங்களுக்கு என் மீது அதிக பாசம் இருந்தால் மட்டும் எனது படத்தை போடலாம். ஆனால் எனது குடும்பத்தினர் படங்களையோ அல்லது அவர்களது பெயர்களையோ கண்டிப்பாக போடக் கூடாது.
அவ்வாறு போடப்படும் நிகழ்ச்சிகளில் நான் நிச்சயம் கலந்து கொள்ளமாட்டேன் என்றார்.

Thanks to One India
No comments:
Post a Comment