நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Saturday, July 9, 2011

எந்நேரமும் கைது செய்யப்படும் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் மகன்


சேலம் கன்னங்குறிச்சி அருகில் உள்ள சின்னக்கொல்லப்பட்டியைச்சேர்ந்தவர் முத்துக்குமார்.   இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் ஜாகீர் அம்மாபாளையம் இடத்தில் உள்ளது.

இந்த நிலத்தை கடந்த 2010ம் ஆண்டு சூர்யா தங்கவேலு என்பவர் தன்னுடைய நிலம் என்று கூறி
சூரமங்களம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வீரபாண்டி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ராஜேந்திரனுக்கு பவர் கொடுத்து பத்திரம் பதிவு செய்து கொடுத்துவிடுகிறார்.
முன்னாள் எம்.எல்.. ராஜேந்திரன் தனது ஆதரவாளர்களூடன் சென்று நிலத்தை சேதப்படுத்தி விவசாயம் செய்ய முடியாதபடி செய்துவிட்டார்.
இது சம்பந்தமாக 2010ம் ஆண்டு கொடுக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்போது நில அபகரிப்பு சம்பந்தமான புகார்களை பதிவு செய்து வரும் சேலம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம்  முத்துக்குமார் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் முன்னாள் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினரும், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான  ராஜா என்கிற ராஜேந்திரன் மீதும், சூர்யா தங்கவேலு மீது சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ராஜா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் முன்னாள் எம்.எல்.., ராஜா எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment