நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, August 29, 2011

ராஜீவ் கொலை வழக்கு..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்சி ரிப்போர்ட்


ராஜீவ்-காந்தி-கொலை
இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!

நன்றி – சூரியகதிர்,எள்ளாளன்
 
&  Thanks to SATHIS777

Sunday, August 28, 2011

உண்ணாவிரதத்தை முடித்தார் அண்ணா ஹசாரே

தில்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த அண்ணா ஹசாரே 288 மணிநேர உண்ணாவிரதத்துக்குப் பிறகு இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.இதை மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியாக அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடி வருகின்றனர்.அண்ணா ஹசாரேவின் 3 முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக நாடாளுமன்றம் நேற்று அறிவித்ததையடுத்து அவர் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.ஐந்து வயதுடைய சிறுமிகள் இருவர் ஹசாரேவுக்கு இளநீரும், தேனும் வழங்கி அவரது உண்ணாவிரதத்தை முடித்துவைத்ததனர்.உண்ணாவிரதத்தை முடித்த அண்ணா ஹசாரே, பொதுமக்கள் அளித்த ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.மேலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்காக ஊடகத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Saturday, August 27, 2011

எப்படி மன்னிப்பது ?

நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது, உயர்ந்து கொண்டிருக்கிறது.   போராட்டம் நடக்கவில்லை.  மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப் பட்டது சிறிய முணுமுணுப்புக்களை தவிர போராட்டம் ஏதும் நடக்கவில்லை.  இந்தியாவின் இறையாண்மையை அடகு வைக்கும் வகையில், அமெரிக்காவோடு அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது யாரும் பேசவில்லை.

இது போல இன்னும் எத்தனையோ பிரச்சினைகளை நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்கள், ஒரு கிழவன் உண்ணாவிரதம் இருந்தால் அவர் பின்னால் சென்று விடுவார்களா என்ற இறுமாப்பே….

காங்கிரஸ் கட்சி தனது தந்திரமான உபாயங்களை பயன்படுத்தி இந்த இயக்கத்தை சிதைக்கலாம் என்று தொடர்ந்து முயற்சித்து வந்திருக்கிறது.

ஈழத்தில் போர் தொடங்கிய காலம் முதலாக ரகசியமாக சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளை செய்து வந்தது, அம்பலப்படுத்தப் பட்டது முதலாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. ஜனவரியில் முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகு, ஒட்டு மொத்த தமிழகமுமே கொதித்து எழுந்தது.  தமிழகமெங்கும் போராட்டங்கள் கிளம்பின.  ஆனாலும், திமுகவின் தயவால், 2009 பாராளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.  தமிழக மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் காலில் போட்டு மிதித்து விட்டு, தமிழ் மக்களை அழித்தது காங்கிரஸ் கட்சி.

அதே போல ஒரு தந்திரத்தை அன்னா ஹசாரே விவகாரத்திலும் கடைபிடித்து வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் கட்சி கையாண்ட உத்தி, இந்த விவகாரத்தில் பலிக்காமல், கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது.

அன்னா ஹசாரேவிடம் இருக்கம் நேர்மையில் ஒரு துளி கூட இல்லாத பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றும், 1000 ரூபாய் நோட்டை ஒழித்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று அற்புதமான யோசனைகளை தெரிவித்த ஒரு நபரை, தன் அமைச்சர்களை அனுப்பி, விமான நிலையத்திலிருந்து வரவேற்று, அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி, பிறகு அந்த நபரை இரவோடு இரவாக கைது செய்து முகத்தில் கரியைப் பூசிக் கொண்டது காங்கிரஸ்.  இந்துத்வா பின்னணி உள்ள ஒரு மோசடிப் பேர்விழியை நள்ளிரவில் கைது செய்தபோது எழுந்த எதிர்ப்பைப் பார்த்த உடனேயே காங்கிரஸ் விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், தன் அகந்தையை கைவிடாமல், உச்சானிக் கிளையின் அமர்ந்து கொண்டு, அதே ஆணவத்தோடு அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒழித்து விடலாம் என்று நினைத்ததாலேயே இன்று கடும் நெருக்கடியில் ஆழ்ந்திருக்கிறது காங்கிரஸ்.

anna-hazare
அன்னா ஹசாரே, ஏப்ரல் மாதத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கிய உடனேயே, அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி மழைக்காலக் கூட்டத் தொடரில் வரைவு மசோதாவை அறிமுகப் படுத்துவோம் என்று உத்தரவாதம் அளித்தது காங்கிரஸ். அதன் பிறகு தொடர்ச்சியாக நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்த எந்த யோசனைகளையும் ஏற்க மறுத்தது.  மாறாக, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மீதும் ஏதாவதொரு புகாரை தெரிவித்து, அவர்களை இழிவுப் படுத்தி அதன் மூலம் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்ற தவறான அணுகுமுறையைக் கடைபிடித்தது.

இந்த தந்திரமான உத்திகளை காங்கிரஸ் கட்சி கையாள நினைத்த அதே வேளையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலை எழுந்திருப்பதை கவனிக்கத் தவறியது. ஐந்து நிமிடம் வெயிலில் நடக்கக் கூட சம்மதிக்காத உயர் நடுத்தர வர்க்கம், மழை வெயிலைப் பொருட்படுத்தாமல், சாலையில் இறங்கிப் போராடும் என்பதை காங்கிரஸ் கட்சி கவனிக்கத் தவறியது.

இன்றைய சந்தைப் பொருளாதார, நுகர்வுக் கலாச்சாரச் சூழலில், தன் பக்கத்து வீட்டுக் காரனுக்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவி செய்ய மறுக்கும் ஒரு மோசமான சமூக சூழலில், பொதுப்பிரச்சினைக்காக யார் போராடப் போகிறார்கள் என்ற மாயையில் காங்கிரஸ் ஆழ்ந்திருந்தது.

உலக வரலாற்றில், நெருக்கடி முற்றும் போது மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள், அந்த போராட்டத்தின் முன்னே எப்படிப்பட்ட ஆணவம் மிக்க அரசுகளும் அடி பணிந்து தான் ஆக வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி கவனிக்கத் தவறியது. சுதந்திரம் கிடைத்த பிறகு முதலில் வெளி வந்த முந்த்ரா ஊழல் முதல், இன்று வரை தொடர்ந்து நடக்கும் ஊழல்களைப் பார்த்து புழுங்கிக் கொண்டிருந்த மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அன்னா ஹசாரே வெளிப்பட்ட போது, மக்கள் தன்னெழுச்சியாக அவர் பின்னால் அணி திரளத் தொடங்கினர்.  இன்று தேசத்தைப் பீடித்திருக்கும் பிரச்சினைகளில் பலவற்றில் மக்கள் ஒன்றுபடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.

சாதீய ஒடுக்கு முறைக்கு எதிராக போராட அழைத்தால், நகரத்தில் வாழும் மக்கள், அது எங்கள் பிரச்சினை இல்லை என்பார்கள்.   விவசாயிகளின் தற்கொலைகள், அவர்கள் மனசாட்சியை உலுக்குவதில்லை.  விலைவாசி உயர்வைப் பார்த்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று உறுதி பூணுவார்கள்.   ஆனால் இவர்கள் அனைவருமே ஒன்றுபடும் தளம் ஒன்று உண்டு என்றால் அது ஊழல் தான்.     பிறப்புச் சான்றிதழ் வாங்குவதிலிருந்து, சுடுகாட்டில் எரியூட்டுவது வரை, அன்றாடம் பல்வேறு வேலைகளுக்கு தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை லஞ்சமாக தருவது யாருக்குமே ஏற்புடையதாக இருக்காது.   இருந்தாலும், தங்கள் தலையெழுத்தை நொந்து கொண்டு, லஞ்சம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.  அந்த லஞ்சத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன் என்று எல்லோராலும் நம்பப் படும் ஒரு நபர் கிளம்பிய போது, தேசம் அவர் பின்னால் அணி திரண்டதில் ஆச்சர்யம் இல்லை.

மக்களின் அந்தக் கோபத்தை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி, அவர் மீது சேற்றை வாரிப் பூசுவதன் மூலமாக போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தது.  “தலை முதல் கால் வரை ஊழல் பேர்விழியான ஒருவர் ஊழலைப் பற்றி பேசுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று அன்னா ஹசாரேவைப் பற்றி மனீஷ் திவாரி கூறினார். அதே மனீஷ் திவாரி  இன்று மன்னிப்புக் கேட்டுள்ளார்.  நேற்று வரை திமிராக பேசிக் கொண்டிருந்த கபில் சிபல், ப.சிதம்பரம், அம்பிகா சோனி போன்றோரை ஆளையே காணவில்லை.

உண்ணாவிரதம் தொடங்கும் நாளன்று காலையில் அன்னா ஹசாரேவைக் கைது செய்தது காங்கிரஸ் கட்சி.  ஆனால், இன்று அன்னா ஹசாரே என்ன சொன்னாலும் கேட்கிறோம் என்று சரணாகதி அடைந்துள்ளது.  நல்ல அரசியல் அனுபவம் உள்ள தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சமே இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் கட்சி இப்படி அந்தர் பல்டிகள் அடிப்பதற்காக காரணம். ஏறக்குறைய அன்னா ஹசாரவின் அத்தனை கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வந்துள்ளது.

இந்தக் கோரிக்கைகளை போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பேச்சுவார்த்தையின் மூலமாக ஏற்றுக் கொண்டிருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரையாவது தவிர்த்திருக்கலாமே…. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இயல்பு இதுதான்.  துரோகங்களின் வரலாறே காங்கிரஸ் கட்சி.

நாளை பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தில், காங்கிரஸ் அல்லாத கட்சிகள், இந்த தேசத்தின் மக்கள் இருக்கும் மனநிலையை புரிந்து கொண்டு விவாதத்தில் பங்கெடுக்க வேண்டும்.  மக்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளத் தவறிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இருக்கும் நிலைமையை மற்ற கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அன்னா ஹசாரே போராட்டம் உணர்த்தும் செய்தி.

Thanks to SAVUKKU

அம்ம்மா,,,அம்ம்ம்மா...ஓடு..ஓடு..நிக்காம ஓடு..!!

செப்டம்பர் 9ஆம் தேதி சாந்தன்,முருகன்,பேரறிவாளனுக்கு தூக்கு என வேலூர் சிறைத்துறை அதிகாரி மூவரிடமும் தெரிவித்தார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது..முதலவர் ஜெயலலிதா இவர்கள் தண்டனையை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இருந்தால் அதை பயன்படுத்தினால் மகிழ்ச்சி.இவர்களுக்காக சட்டமன்றத்தில் ஜெ..குரல் கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.மூவரும் வை.கோ...சொன்னதன் பேரில் முதல்வருக்கு கருணை மனு அனுப்பியிருக்கின்றனர்.
---------------------------------------

100 நாளில் ஜெ..செய்த சாதனைகளில் முக்கியமனது மக்களிடம் இருந்து தி.மு.க வினரால் மிரட்டி வாங்கப்பட்ட,நிலங்களையெல்லாம் மக்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டதுதான்...சட்டம் தன் கடமை செய்தது.தன்னை கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில் ஆடிய தி.மு.க வினருக்கு ,சரியான ஆப்பு வந்தது..ஜெ..உருவில்.

இதற்கிடையில் வழக்கிற்கு பயந்து தமிழ்கம் முழுவதும் பல முன்னாள் மந்திரிகள்,விவசாயிகளிடம் பறித்த நிலத்தையெல்லாம் சத்தமில்லாமல் திருப்பி கொடுத்துவிட்டார்களாம்..மேற்க்கொண்டு குத்தகை பணம் ?என ஒரு அமவுண்டும் கொடுத்து அனுப்பினார்களாம்...அந்த பயம் இருந்தா சரி.இது ஜெ..வின் முக்கிய சாதனை இல்லையா....அம்மா ஆட்சி..மக்கள் மகிழ்ச்சி.
------------------------------------------------
Thanks to Sathis777

மு.க.அழகிரியை பார்த்து பூமாதேவி சிரிச்சிட்டா

நான் சொல்வதை தமிழர்கள் கேட்கவில்லை என்றார் கருணாநிதி.

அய்யா,உங்க பேச்சை திஹார் சிறையில் இருக்குற,கனி ,ராசாவாவது கேட்குறாங்களா..?...அதான் மூலையில உட்கார வெச்சாச்சே அப்புறம் இன்னும் என்ன முனகல்..?தமிழன் ஓட்டை போட்டுட்டு அவனவன் வேலையை பார்க்க போயிட்டான்..உங்க பேச்சை கேட்க ஒரு பய இல்லை...
-
-----------------------------
                                     இவர்தான் வருங்கால இந்திய பிரதமராம்

ஒரு சட்டம் ஊழலை ஒழித்து விடாது என ராகுல் காந்தி திருவாய் மலர்ந்தார்.
ஏய்யா அன்னா ஹசாரேவை மூணாவது முறையா ஏமாத்த தான் இந்த தத்துவ முத்தா..?பிரதமர் பதவியை லோக்பால் வரம்புல சேர்த்த சொன்னா,உங்க கிட்ட யாரு அறிவுரை கேட்டா..?

இன்னிக்கு எந்த ஏழை வீட்டுக்கும் ரொட்டி தின்ன போகலையா ராகுல்ஜி?
------------------------------
எங்க ஊர் பகுதியில் ஒருவர் மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமான 5 ஏக்கர் பூமியில் விவசாயம் பார்க்குறார்.வருசா வருசா கந்தாயம் ரொம்ப கம்மியான அமவுண்டை அரசுக்கு கட்டிடுறாராம்.நிலத்தை விக்க முடியாது..அனுபவிக்கலாம்...அதுக்கு எப்பவும்,உரிமையாளர் மைசூர் மகர்ராஜாதான்.
------------------------
மு.க.அழகிரி மீது தாசில்தாரை அடித்த வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க..100 பக்க குற்ற பத்திரிக்கை தயார்னு சொல்றாங்க..கிரானைட் சம்பந்தமான வழக்குல அவர் மகனுக்கும் காப்பு ரெடின்னு சொல்றாங்க...நேருவை தொடர்ந்து அழகிரியை பார்த்தும் பூமா தேவி சிரிக்க ஆரம்பிச்சிட்டா.பாளை சிறைக்கு சகாக்களை பார்க்க போனப்ப கம்முனு வந்திருக்கலாம்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,அ.தி.மு.க வினரை அரெஸ்ட் செய்வோம்னு சொன்னாரு...சொல்லி 24 மணி நேரத்துல நேரு கைது,அழகிரிக்கு குற்றப்பத்திரிக்கை...ம்..நடக்கட்டும்...அழகிரிக்கு கலைஞர் செய்த ஒரே நல்ல விசயம்...அவரை எம்.பி..ஆக்குனதுதான்..இல்லைன்னா எப்பவோ விடியக்காலை 3 மணிக்கு மதுரை போலீஸ் தூக்கியிருக்கும்.
கலைஞர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர்தான்னு ஒத்துக்குறேன்..
--------------------------------
Thanks to SATHIS777

Friday, August 26, 2011

support Jan LokPal


 

The Government has put condition to get 25 crore people to support Jan LokPal.   To give your support call
02261550789
 (as given by Kiran Bedi)
from your Mobile Number.
Your call will disconnect after 1 ring and your Number Registered automatically.
You will get an SMS confirming this.   I did this.
Do it and pass to all your friends to make India corruption free.
It is now or never.
No charges for Call.
--Jai Hind.

Wednesday, August 24, 2011

அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படுகிறதா ?

அன்னா ஹசாரே போராட்டம் தொடர்பாக தொலைக்கட்சி சேனல்களில் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களில் இடம்பெறும் முக்கிய விஷயங்கள்,
அன்னா ஹசாரேவின் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா ?
இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டும் தானே ?
pict13
நடுத்தர வர்க்கம் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதிகளா ?
அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும்  மிரட்டுகிறார்களா ?
15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலையில்லையா ?
120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?
pict17
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இந்தப் போராட்டம் ஊடகங்களால் பெரிது படுத்தப் படுகிறதா என்பதற்கான பதில் ஆம் மற்றும் இல்லை.
ஊடகங்களின் டிஆர்பி ரேட்டிங்குகளை நிர்ணயிப்பவர்கள் ஆங்கில செய்தித் தாள் மற்றும் ஆங்கில தொலைக்காட்சிகளைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர் தான்.   அந்த நடுத்தர வர்க்கத்தினரின் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு விஷயத்தையும் இந்த ஊடகங்கள் புறக்கணிக்க முடியாது.   டெல்லி விமானநிலையத்தில் பழுது ஏற்பட்டுள்ளது, ஏசி வகுப்பில் கட்டணம் குறைக்கப் பட்டுள்ளது, மல்டி ப்ளெக்சுகளில் சுகாதாரம் இல்லை, கேஎப்சி சிக்கனில் கொழுப்பு அதிகமாக உள்ளது, ஐஐடியில் கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளது போன்ற விபரங்கள், இந்த ஊடகங்களால் செய்தியாக்கப் படுவதற்கான காரணம் இதுதான்.
ஆனால் இந்த ஊடகங்களால்தான் இந்தப் போராட்டமே நடக்கிறது என்கிறா வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.  தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை தகவல்களுக்காக பார்த்துத் தெரிந்து கொண்டு, தன்னெழுச்சியாக வரும் கூட்டமே அதிகம்.   மும்பையில் வேலை நிறுத்தம் செய்யும் டப்பாவாலாக்கள் அர்னாப் கோஸ்வாமியைப் பார்த்துத்தான் போராட்டத்தில் குதித்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.   இந்தப் போராட்டத்தை லைவாக கவர் செய்வதால், தங்கள் டிஆர்பி ரேட்டிங் கூடும் என்ற சுயநல நோக்கத்தாலேயே இப்படி லைவ் கவரேஜ் செய்கிறார்கள்.
இதே புதுதில்லியில், நாட்டின் பல மூலைகளிலும் இருந்து, பல்வேறு மலைவாழ் மக்கள், விவசாயிகள், போன்றவர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால், அந்தப் போராட்டங்கள் இந்த தொலைக்காட்சிகளின் கண்ணுக்குத் தெரிவதில்லை.  காரணம், நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு, மலைவாழ் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகள் ஒரு பிரச்சினையாகவே தெரிவதில்லை.

pict3
இது நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் மட்டுமே என்றால் இருக்கலாம் அதில் என்ன தவறு என்றுதான் கூற முடியும்.  ஏழை மக்களை விட நடுத்தர மக்கள், இந்த ஊழலால் மிக அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள் என்பது இதற்கு ஒரு முக்கிய காரணம்.  கிராமப்புரங்களில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஏழை விளிம்பு நிலை மக்களை, ஊழல் பெரிய அளவில் பாதிப்பதில்லை.  ஏனெனில், ஊழலை அவன் நேரடியாக சந்திக்கும் நேர்வுகள் குறைவு. ஆனால் நடுத்தர, உயர் நடுத்தர மக்கள், லஞ்சத்தை நேரடியாக பல நேர்வுகளில் சந்திக்கிறார்கள்.    பைக்குகள், கார்கள் வாங்குகையில் ஆர்டிஓ ஆபீஸ்களில் லஞ்சம் கொடுப்பதில் தொடங்கி, வீட்டு மனை மற்றும் வீடுகள் வாங்குககையில் பல்வேறு அனுமதிகளுக்காக லஞ்சம் கொடுப்பது வரை, இவர்கள் நேரடியாக லஞ்சத்தை சந்திக்கும் நேர்வுகள் அதிகம் என்பதால், இவர்கள் போராட்டத்தில் குதிப்பதில் வியப்பில்லை.
pict2
ஏழை விளிம்புநிலை மக்கள் பங்கேற்காத இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரலாமா என்ற கேள்விக்கு தர வேண்டும் என்பதே பதில்.  ஏனெனில், விளிம்புநிலை மக்கள் நேரடியாக பாதிக்கப் படாவிட்டாலும், மறைமுகமாக அவர்கள் பாதிக்கப் படுவது, பன்னாட்டு நிறுவனங்களால்.  உதாரணமாக, காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடக்கையில், டெல்லியிலிருந்து 20 ஆயிரம் ஏழை மக்கள் அப்புறப் படுத்தப் பட்டனர்.  சென்னையில், உயர் விரைவு பாலம் கட்டும் விவகாரத்தில், ஆயிரக்கணக்கான சேரி மக்கள் அப்புறப் படுத்தப் பட்டார்கள்.  இந்த இரண்டு விவகாரங்களிலுமே, கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.   இந்த ஊழல் காரணமாக நேரடி பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஏழை மக்களே.    இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளும், பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளும், புதிய லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் படுவார்களேயானால், அதனால் பயனடையப் போவது ஏழை விளிம்பு நிலை மக்கள் தானே…. ? இது தவிரவும், சுற்றுச் சூழலுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறு தொழிற்காலைகளுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் லோக்பால் மசோதாவால் தண்டிக்கப் பட்டால், அதனால் சுற்றுச் சூழல் பாதிக்காமல் தடுக்கப் பட்டால் அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் தானே பலனடைவார்கள் ?
நடுத்தர மக்கள் மட்டுமே இந்தியாவின் பிரதிநிதியா என்றால், நடுத்தர மக்களும், இந்தியாவின் பிரதிநிதிகளே….  நடுத்தர மக்களை ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றால், விளிம்பு நிலை மக்களை மட்டும் இந்தியாவின் பிரதிநிதிகளாக இந்த அரசியல்வாதிகளாக ஏற்றுக் கொள்வார்களா என்ன ?   ஏழை விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நிறைவேற்று உள்ளார்களா என்ன ? குறைந்தபட்சம் அந்த மக்களின் வறுமையைக் கூட போக்கவில்லையே இந்த அரசியல்வாதிகள்…!!!!
pict14
இது நடுத்தர மக்களின் போராட்டம், ஆனால் நடுத்தர மக்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், எதற்காக காங்கிரஸ் அரசாங்கம் அன்னா ஹசாரேவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது ?   நீங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை, ஆகையால் நாங்கள் உங்களோடு பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று எளிதாக சொல்லியிருக்க முடியுமே …..
சரி, நடுத்தர வர்க்கம் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதிகள் இல்லை என்றால், இன்று பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதிகளா என்ன ?   பிரதமர் மன்மோகன் சிங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் இல்லையே ? மக்களவையில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் சேர்த்தால் அவர்கள் மட்டும் என்ன 120 கோடி மக்களின் பிரதிநிதிகளா என்ன ?
இவர்கள் அனைவருமே தேர்தலில் போட்டியிட்ட தொகுதியில் 100 சதவிகித வாக்குகளைப் பெற்றார்களா என்ன ?  தேர்தலில் வாக்குப் பதிவே 60 சதவிகிதம் தானே… ? அதிலும் பாதியைத்தானே பெற்றிருக்கிறார்கள் ?  இவர்கள் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவின் பிரதிநிதியா ?
pict4
அன்னா ஹசாரேவின் குழுவினர் பாராளுமன்றத்தையும் அரசையும் மிரட்டுகிறார்களா ?
இதை தலைகீழாக அல்லவா பார்க்க வேண்டும் ?   அண்ணா ஹசாரே குழுவினர், ஆயுதம், அரசு அதிகாரம் ஏதும் இல்லாமல், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அரசு அல்லவா டெல்லி போலீசை வைத்து அன்னா ஹசாரே குழுவினரை மிரட்டப் பார்த்தது ?  இந்தியா முழுவதையும் ஆளும் ஒரு கட்சி, காவல்துறையை வைத்து போராட்டத்தை முடக்கலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ் கட்சி அல்லவா ?  எங்களுக்கும் டெல்லி போலீசின் நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை என்று இரண்டு மணி நேரம் பேசினாரே ப.சிதம்பரம் ?  சரி. மிரட்டுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்படி மிரட்டியே இந்த அரசு, பணியாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறதென்றால், மிரட்டாமல், கோரிக்கை மனு கொடுத்தால் செவி சாய்த்து விடுவார்களா என்ன ?  மேலும், இந்த பிரச்சினை இப்போது தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம், ஏப்ரலில் வலுப்பெற்றது.  அதன் பிறகு, அன்னா ஹசாரே குழுவினரோடு ஏறக்குறைய 100 மணி நேரத்துக்கும் மேல் இந்த அரசின் மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்களே… இப்போது காட்டும் இந்த வேகத்தை ஏப்ரல் மாதம் முதல் காட்டியிருந்தார்களேயானால், இன்று இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காதே…
15 நாட்களில் சட்டம் கொண்டு வருவது சாத்தியமா ?
pict5
மனமிருந்தால் மார்க்கமுண்டு.   15 நிமிடங்களில் 17 சட்டங்களை நிறைவேற்றியது இதே பாராளுமன்றம் தான்.   அதற்காக லோக்பால் மசோதா விவாதமின்றி நிறைவேற்றப் பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லையே…..   விவாதித்து நிறைவேற்ற இரண்டு நாட்கள் அல்லது நான்கு நாட்கள் போதாதா ?  மேலும், அரசு நினைத்தால், பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட இயலுமே… இத்தனை நாள் செய்யாததை இப்போதாவது செய்யுங்கள் என்று எழுந்துள்ள கோரிக்கை நியாயமற்றது அல்லவே.
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை இல்லையா ?
சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை என்பதை யாருமே மறுக்கவில்லையே.. அந்த வேலையைச் செய்யுங்கள் என்றுதானே கேட்கிறார்கள்.  40 ஆண்டுகளாக ஒரு சட்டத்தை அறிமுகப் படுத்தப் பட்ட நிலையிலேயே துருப்பிடிக்க வைத்த காரணத்தாலே தானே இன்று போராட்டம் நடந்திருக்கிறது.  இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்தப் போராட்டத்துக்கு அவசியமே இருந்திருக்காதே….  மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க அறிமுகப் படுத்தப் பட்ட மசோதா 15 ஆண்டுகளாக சட்டமாக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதே… இதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களின்  லட்சணம்.
120 கோடி மக்களின் பிரதிநிதியாக அன்னா ஹசாரேவின் குழுவினரை எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ?
pict12
ஒட்டு மொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாக மஹாத்மா காந்தியை பிரிட்டிஷார் ஏற்றுக் கொள்ளவில்லையா ?  அவ்வாறு ஏற்றுக் கொண்டுதானே காந்தியோடு பேச்சுவார்த்தை   நடத்தினார்கள் ?  மேலும், ஏற்கனவே கூறியது போல, ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் பிரதிநிதி   அல்லவே !!  உதாரணமாக ஒரு தொகுதியில் 10 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் வாக்களிப்பவர்கள் 6 லட்சம்.  சராசரியாக, அன்றைய தேர்தல் நிலைமைகளைப் பொறுத்து, இந்த 6 லட்சத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றதில்லையா ?  அவ்வாறு வெறும் 2 லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றாலும் அவரைத்தானே அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக கருதுகிறார்கள்.   வெறும் 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்ட ப.சிதம்பரம் இன்று அமைச்சராக இல்லையா ?
சோனியா காந்தி தலைவராக உள்ள தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) கூட பல்வேறு சட்டங்களின் வரைவுகளை தயாரித்துத் தருகிறதே…  அந்த அடிப்படையில் உருவான சட்டம் தானே ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ?   அந்த தேசிய ஆலோசனைக் குழு 120 கோடி மக்களின் பிரதிநிதியா என்ன ?
இன்று நடைபெற்று வரும் இந்தப் போராட்டமானது, கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள ஊழல்களை செய்து விட்டு, அதை மறைக்க கடும் முயற்சிகளை எடுத்த இந்த அரசாங்கத்தின் மீதானது.  ராசா தவறே செய்யவில்லை, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு ஜீரோ லாஸ் என்று பச்சைப் பொய்யைப் புளுகி விட்டு, கூச்சமில்லாமல் லோக்பால் மசோதாவைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லும் அரசாங்கத்தை எப்படி மக்கள் நம்புவார்கள் ?  ஊடகங்கள் எழுதும் வரை, அரசாங்கம், காமன்வெல்த் போட்டிகளில் ஊழலே நடைபெறவில்லை என்றுதானே சாதித்துக் கொண்டு இருந்தது ?  இந்த அன்னா ஹசாரே பிரச்சினை எழுவதற்கு முன்பு கூட, ஷீலா தீக்ஷித்தைக் காப்பாற்றத் தானே காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து கொண்டு இருந்தது. தயாநிதி மாறனை கடைசி வரை காங்கிரஸ் காப்பாற்றவில்லையா ?
pict15
சோனியாவின் குடும்ப நண்பர் ஒத்தாவியோ கொட்டரோச்சியை காப்பாற்றி, பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவர் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டீசை சத்தம் போடாமல், நீக்கி, முடக்கி வைக்கப் பட்டிருந்த அவருடைய வெளிநாட்டு வங்கிக் கணக்கை சத்தமில்லாமல் ரிலீஸ் செய்து, சோனியாவின் நண்பரை காப்பாற்றியது அத்தனையும் சிபிஐ தானே ?
எதை வைத்து நம்பச் சொல்கிறார்கள் இந்தக் காங்கிரஸ் அரசை ?

Thanks to SAVUKKU

பேரறிவாளன் - 'நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!''


ழப் படுகொலைகள் உண்​டாக்கிய துயரமே தமிழக மனங்​களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரை​யும் காப்பாற்றக் கோரி கட்சி வேறு​​பாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்​டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்​தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே... 
முதலில் பேரறிவாளன்...
''எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?'' 
''முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''
''தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?''
''அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!''
''தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''
''மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே  உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!''
''கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?''
''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது  என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''
அடுத்து முருகன்...
''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''
''மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!''
''தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?''
''எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி!''
அடுத்து ம.தி.சாந்தன்...
''ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?''
'கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும். கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன்.  இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா? 
நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார்.  ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.
 
'நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார்.  ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான்  நளினியை சாந்தன் அறிவார்’  என்கிறார்.

நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?

சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள்  தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.  இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''

''கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?''

''என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!'' 


 
  நன்றி : ஜூனியர்  விகடன்

ஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர்- கனிமொழி


 
2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் விற்பனை செய்வதில்லை என்று அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர் என்று திமுக எம்பி கனிமொழி சிபிஐ நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், இன்று கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும், இது தொடர்பாக ராசா, பிரதமர், சிதம்பரம் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான ஆதாரத்தையும் (minutes of the meeting) அவர் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

இந்த விவகாரத்தில் எனக்குத் தெரியாமலேயே ராசா தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வரும் நிலையில், கனிமொழி இன்று சமர்பித்த ஆதாரம், அவருக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், கனிமொழியால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அவரை கைது செய்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமரும் சிதம்பரமும் கூறியுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில் பிரதமரும், நிதியமைச்சராக இருந்த சிதம்பரமும் சேர்ந்து தான் ராசாவுடன் முடிவெடுத்துள்ளனர். நாட்டுக்கு இழப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ள பிரதமர், சிதம்பரத்தின் கருத்தே, நாட்டுக்கு இழப்பு என்ற புகாரே தவறானது என்பதை உறுதி செய்ய போதுமான சாட்சியாக உள்ளது.

எப்போது நாட்டுக்கு இழப்பு என்ற வாதம் தனது பலத்தை இழக்கிறதோ.. அப்போதே கனிமொழி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டும் பலம் இழக்கிறது.

அதே போல இந்த விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரி யூகத்தின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்னும் ஏற்கவில்லை. இதனால் அந்த அறிக்கையை ஒரு சாட்சியாக இந்த நீதிமன்றம் ஏற்க முடியாது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபம் அடைந்ததாக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகியவற்றின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் யூனிநார் ஆகியவற்றுக்கு விற்பனை செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும் அவர்கள் தங்களது உரிமங்களை விற்பனை செய்யவில்லை. எனவே அதில் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார்.

ஆகஸ்ட் 23.. அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம்!

அடிமை வியாபாரத்தையும், அது ஒழிந்த விதத்தையும் நினைவுப்படுத்தும் சர்வதேச தினம் தான், 'அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினம்' (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition).
மனித இன வரலாற்றில் அடிமை வியாபார முறையையும், அதனை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீவிர  நடவடிக்கைகளை யாரும் அவ்வளவு சுலபமாக மறகக் முடியாது.  சர்வதேச அளவில் அடிமை வியாபாரத்தைப் பற்றியும், அதனை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் நினைவூட்டும் தினமான இது கடந்த  1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1998-ல் ஹைத்தி நாட்டிலும், 1999-ல் செனகல் நாட்டிலும் இந்தத் தினத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இந்தத் தேதியில் ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றன.
'அடிமை' வரலாறு..
கடந்த 1791, ஆகஸ்ட் 22-ம் தேதி இரவும் ஆகஸ்ட் 23ம் தேதியும் செயின்ட் டோமிங் (Island of Saint Domingue) என்கிற நாட்டில் (தற்போதைய ஹைத்தி நாடு) அடிமை வியாபாரத்துக்கு எதிரான கிளர்ச்சி ஏற்பட்டது. இது கலவரமாக உருவெடுத்தது. இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் இனியும் தொடரக் கூடாது என்பதை  நினைவுகூரும் விதமாகவே இந்தத் தினம் உருவானது. அடிமை முறை என்பது உங்களின் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும். நம் ஊர்களில் கூட செங்கல் தயாரிப்பு சூளைகள் போன்றவற்றில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக குறைந்த கூலிக்கு வேலை வாங்குவதாக அணமை ஆண்டுகளில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொதுவாக, மற்ற மனிதர்களை அவர்களின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் விலைக்கு வாங்கி அல்லது அடிமைப்படுத்து அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக வேலை வாங்கும் முறையை அடிமை முறை. 
விலை நிர்ணயம்...  
ஓர் அடிமையின் விலை என்பது  அந்த அடிமையின் உருவம், வயது, உடல் வலிமை, பணிவு மற்றும் அடிமைத் தனத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. வசதி படைத்த கிரேக்கர்கள் பத்து, இருபது அடிமைகளை கூட வைத்திருக்கிறார்கள். கிரேக்க அடிமைகள் சொந்த பெயரை பயன்படுத்த முடியாது. ஏஜமானர்களே பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த மனிதாபிமானமற்ற அடிமை முறை வரலாற்றுக் காலம் முதல் பல நாடுகளில் நடைமுறையில் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அடிமைகள் என்பவர்கள் மனிதநேயம் சிறிதும் இல்லாமல் அவர்களின் எஜமானர்களால் நடத்தப்பட்டனர். கிட்டத்தட்ட உணர்வு இல்லாத சடப்பொருள்களாகவே அடிமைகள் நடத்தப்பட்டிருக்கிறார்கள். பல நாடுகளில் பெண் 'செக்ஸ்' அடிமைகள் கூட இருந்திருக்கிறார்கள். அடிமைமுறையின் முக்கிய மூல காரணமாக, பணம், பொருள் மற்றும் பூமியின் மீதான ஆசை, மற்றவர்களை அடக்கி ஆளும் ஆதிக்க ஆசையே இருந்திருக்கிறது. 

  உலகில் உள்ள பெரிய மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் எல்லா இனங்களும் தங்களை விட கீழ் நிலையிலிருந்த இனத்தவர்களை கொடுமையான அடிமை முறை மூலம் கடுமையான வேலை வாங்கி இருக்கிறார்கள். அந்த அடிமைகளை அடித்து உடைத்து காயப்படுத்தி துன்புறுத்தி இருக்கிறார்கள். அதே நேரத்தில், அவர்களுக்கு சரியான உணவு, உடை, உறைவிடம் எதையும் வழங்காமலே இந்தக் கொடுமைகளை மேற்கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ஐரோப்பியர்கள், அடிமை முறையை ஓர் உற்பத்தி முறையாக உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாக மாற்றினார்கள். உலகிலிருந்த அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பியர்களின் அடிமை முறை மிகவும் மோசமான முறையாக வர்ணிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக அடிமை முறை தொடர்ந்திருக்கிறது. அடிமை முறையால் சுமார் 6 கோடி ஆபிரிக்கர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பல கோடி அடிமைகள் சித்திரவதை, நோய், மன துயரத்தால் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். 
குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை..!
பழங்காலத்தில் இனங்கள் இடையே போர் ஏற்படும் போது, தோல்வி நாட்டின் மன்னர்கள், போர்வீரர்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாம் கூட அடிமைகளாக கருதப்பட்டனர். மெசபடோமியா கலாச்சார கால நீதிமுறைகளில் அடிமுறை முறை என்பது சமூக வழக்காக இருந்துள்ளது. பெண்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது மற்றும் அவர்களை பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது பழங்காலத்திலிருந்து இன்று வரை அடிமைமுறையின் மோசமான நிகழ்வாக இருக்கிறது. அடிமைகளை கொண்டு கல் உடைத்தல், கட்டிடம் மற்றும் சுரங்க வேலை, பண்ணை வேலை, அரண்மணை வேலை போன்றவற்றில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அரசர்கள் வீட்டு வேலை செய்ய பெரும்பாலும் அடிமைகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கல்வெட்டுகள் மூலம் அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது என தெரிய வந்திருக்கிறது. புராதன எகிப்தியர் போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தி இருக்கிறார்கள். அடிமைகள் முதலில் அரசர் குடும்பத்துக்கு சொந்தமாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசாக கொடுக்கலாம். இந்த அடிமைகளை கொண்டு கடுமையான மற்றும் மனிதர்கள் செய்ய கூசும் வேலைகளை வாங்கி இருக்கிறார்கள். யூத இனம், எகிப்து, கிரேக்கம், அரேபியா, சீனாவிலும் அடிமைமுறை பெரும்பங்கு வகித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அடிமைகள் சந்தையில் விற்கப்பட்டனர். அடிமைக்குப் பிறந்தவர்களும் அடிமையே என்றாக்கி இருந்தனர். பழங்காலத்தில் ஏதென்ஸில் 21,000 மனிதர்களும் அவர்களுக்கு சேவை செய்ய 4,00,000 அடிமைகளும் இருந்திருக்கிறார்கள்.   
புராதன காலத்தில் அடிமை முறை காணப்பட்டதாக கூறப்படுகிறது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு பெயரில்லை, அவர்கள் திருமணம் கிடையாது. சொத்து இருந்தால் பறிமுதல் என பல கொடுமைகள் நடந்தேறி இருக்கின்றன.
 
சோழர் காலத்தில்..!
பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் பெரிய அளவில் இருந்ததாக தெரியவில்லை.  அதே நேரத்தில், தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. ராஜாக்களும், வசதி படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். அடிமைகள் மீது ஆடு, மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச் சின்னம், சிவன் கோவில் அடிமைகளுக்கு திரிசூலச் சின்னம், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னம் இடப்பட்டன. மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணம் எடுத்தது. ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்திருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இரு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள், தோல்வி அடைந்தவர்களை ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு அடிமையாக விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தன் இனத்தவர்களை பிடித்துக் கொடுத்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.
அடிமை வியாபாரம் நடத்த மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவர்கள் அமெரிக்க நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர். இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களில் சம்பளம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடாமலேயே வாழ்நாளை கழித்திருக்கிறார்கள். மதங்களும் மன்னர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18- ம் நூற்றாண்டின் பின் பகுதியில்தான் அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787-ல் ஆரம்பிக்கப்பட்ட 'அடிமை ஒழிப்பு குழுவின்" முதல் தலைவர்.
பிரெஞ்சு புரட்சியின் போது முதல் குடியரசு பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. மாவீரன் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19- ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அடிமைகளில் பலர் பலசாலிகளாக இருந்தனர். அவர்கள் கூடி பேச வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. சிந்தனை மற்றும் கருத்து வெளியிடும் உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் ஹைத்தி நாட்டில் 1791, ஆகஸ்ட் ஆகஸ்ட் 23 ம் தேதி அடிமைகள் புரட்சி செய்தனர். ஐ.நாவின் நடவடிக்கையால் சிலி 1823-ல், ஸ்பெயின் 1837-ல், டொமினிகன்  குடியரசு 1844-ல், ஈகுவடார் 1854-ல், பிரேசில் 1888-ல் அடிமை முறையைத் தடை செய்தன. 
பராக் ஒபாமா..
அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே இன்றைக்கு அவர்கள் அமெரிககவின் ஜனாபதி ஆப்பிரகாம் லிங்கன் முயற்சியால் அங்கு சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள் . கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் முன்னேறி இருக்கிறார்கள். வெவ்வேறு வடிவங்களில் இன்றளவும் ஆங்காங்கே அடிமை முறை விரவிக் கிடக்கின்றன. இந்த இழிநிலைக்கு எதிராக, பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களைக் காத்த நேபாளத்தின் அனுராதா கொய்ராலா போன்ற சமகால சமூகப் போராளிகளும் தொடர்ந்து பாடுபட்டு வருவதும் கவனத்துக்குரியது.20ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்றவை, பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட முடியாது. குறிப்பாக, ஏழை தொழிலாளர்கள், பணக்கார முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுவது இன்றும் நடக்கிறது. - இன்று உலகம் முழுக்க சுமார் 13 கோடி சிறுவர்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இது அடிமை முறையின் நவீன வடிவமாக இருக்கிறது. வீட்டு பணிப்பெண்களும் இதில்தான் அடக்கம்.   
சரவணன் 
விகடன்

Tuesday, August 23, 2011

சமச்சீர் கல்வி வெற்றி விழா புறக்கணிப்பு : அழகிரி அதிருப்தி காரணமா?

 
சமச்சீர் கல்வி வெற்றி விழா கூட்டங்களை, அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு மாவட்டங்களில் நடத்தாததால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரம் துவங்கியதிலிருந்தே, தி.மு.க.,வில் உட்கட்சி பூசல்கள் நிலவுகின்றன. சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின், தி.மு.க.,வில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு பதில் தெரியாததால், கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, அழகிரி ஆதரவாளர்களும், ஸ்டாலின் ஆதரவாளர்களும் இரு துருவங்களாக செயல்படுவதால், கட்சி தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. இரு தரப்பையும் ஒற்றுமைப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், அழகிரி தரப்பில் தொடர்ந்து, கருத்து வேறுபாடான சூழல் அதிகரித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், தேர்தல் தோல்வி, பொதுக்குழுவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் ஆகியவற்றை தாண்டி, சமச்சீர் கல்வி விவகாரத்தில் தி.மு.க., மகிழ்ச்சியடைந்தது.

தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் கல்வியை அமல்படுத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், அதை தி.மு.க.,வினர் வெற்றி கொண்டாட்டமாக்கினர். இதற்காக, 30 மாவட்டங்களிலும், தி.மு.க., சார்பில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும், சமச்சீர் கல்வி வெற்றி விழா அறிவிக்கப்பட்டது. சென்னை பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்கேற்றார். இதில், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் அழகிரியின் கட்டுப்பாட்டில், அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கும் நான்கு மாவட்ட கூட்டங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு இடங்களில், கடந்த 19ம் தேதி கூட்டம் நடக்கவில்லை. இதில் தஞ்சாவூர் மாவட்டம், அழகிரியின் கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும், அங்கு அழகிரி ஆதரவாளரான திருச்சி சிவா, பங்கேற்காததால் கூட்டம் நடக்கவில்லை. பின், அங்கு மட்டும் நேற்று ஸ்டாலின் பங்கேற்று கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வில் தென்மண்டல ஒருங்கிணைப்பாளரான அழகிரிக்கு, தலைமை கழகம் உரிய மரியாதை கொடுக்கவில்லை. முக்கிய அறிவிப்புகளை அவர், கட்சி பத்திரிகையை பார்த்தோ, அல்லது அறிக்கை வந்த பிறகோ தான் அறிய முடிகிறது. சட்டசபையில் கனிமவளக் கொள்ளை நடந்ததாக அமைச்சர் வேலுமணி பேசிய விஷயத்தில், தலைமைக் கழகம் தனியாக அறிக்கை விடவில்லை. வேளாண்துறை மானியத்தில், உர மானியம் தொடர்பாக அழகிரி அமைச்சராக உள்ள ரசாயனத் துறையை கண்டித்து, தமிழக சட்டசபையில் பேசினர். இதுகுறித்து, தி.மு.க., தலைவரிடம், நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் கூறாமல் அழகிரியிடம் கேட்கச் சொல்லி நழுவி விட்டார். இதுமட்டுமின்றி, தி.மு.க., வெற்றிக்காக பாடுபட்ட, அழகிரியின் ஆதரவாளர்கள் பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டதாலும், அழகிரி தரப்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனால், நெருக்கடியான நேரத்தில், வெற்றி விழா கொண்டாடுவது நல்லதல்ல என்பதால், அதை தவிர்த்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, பாளையங்கோட்டை சிறையில் உள்ள அழகிரி ஆதரவாளர்களான பொட்டு சுரேஷ், தளபதி போன்றவர்களையும், திருச்சி சிறையில் உள்ள அட்டாக் பாண்டியையும், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். ஆனால், ஸ்டாலினை மதுரை மாவட்ட நிர்வாகிகள் யாரும் வரவேற்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to Dinamalar

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசு

  
அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக 40 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராமச்சந்திரன் (தளி) "பல தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் தனியார் நிறுவனம் நடத்தும் பள்ளி ஒன்றில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தும் மாணவர்களுக்கும் பகுதி நேர வகுப்புகளும், அதிகக் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு முழுநேர வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. உயர் நீதிமன்றமே அதைக் கண்டித்துள்ளது. இதுபோன்ற பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். அப்போது குறுக்கிட்டு அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது: தனியார் பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி சிங்காரவேலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் வசூலிப்பதாக இக்குழுவுக்கு 444 புகார்கள் வந்துள்ளன. அரசுக்கு நேரடியாக 40 புகார்கள் வந்துள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் புகார் கூறப்பட்டுள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு நேரடியாக வந்துள்ள புகார்களின் அடிப்படையில் 40 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னையில் திரையுலகினர் உண்ணாவிரதம்

      
ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் சென்னையில் இன்று உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர்.அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் காலை 9 மணியில் இருந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் நடிகர் தியாகு, இயக்குநர்கள் மனோபாலா, சேரன், தயாரிப்பாளர்கள் சித்ராலட்சுமணன், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத பந்தலில் பேசினர்.எனினும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் இந்த உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.