நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Saturday, October 22, 2011

இந்தியா இருள்கிறது!


ன்மோகன் சிங் ஒரு மரபார்ந்த அரசியல்வாதி இல்லை என்பதாலேயே, மக்களின் உணர்வுகள் அவருக்குப் புரிவது இல்லை என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அது பெரும் தவறு. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை அவர் நிரூபித்துக்கொண்டேதான் இருக்கிறார்!கூடங்குளம் அணு உலைச் செயல்பாடுகளை முடக்கக் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்த அன்று, டெல்லியில் அரசு ஆதரவு ஊடகங்கள் புல்லரித்தன, நாட்டின் கடைக்கோடிக் கிராம மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டத்துக்கும்கூட பிரதமர் முக்கியத்துவம் அளிக்கிறார் என்று. அதே நாளில்தான், 'இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருக்கலாம் என்றும் 1,000 கோடி வரை இத்தகைய போராட்டங்களுக்காக அந்தச் சக்திகள் களம் இறக்கி இருக்கலாம்’ என்றும் இந்திய அணு சக்தித் துறை, மத்திய உளவுத் துறைக்கு ஒரு குறிப்பை அனுப்பி இருக்கிறது.
ஒரு போராட்டத்தை முடக்கவும் போராடும் மக்களைக் கொச்சைப்படுத்தவும் இதைவிட ஓர் அரசாங்கம் நாசூக்கா கவும் தந்திரமாகவும் செயல்பட முடியுமா என்ன?போராட்டக்காரர்களிடம், ''மக்களுடைய பாதுகாப்புதான் முக்கியம்'' என்று திரும்பத் திரும்ப வாக்குறுதி அளித்தார் பிரதமர். ஆனால், அதற்கு முதல் நாள்தான் கூடங்குளம் அணு உலை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார். எதிர்கால வளர்ச்சிக்கு அணு சக்தியின் தேவை எந்த அளவுக்கு முக்கியம் என்று அவருடைய கட்சிக்காரர்கள் பிரசங்கம் நடத்தினார்கள்!போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதமரை நன்கு புரிந்துவைத்து இருந்தார்கள். அவருடைய பசப்பு வார்த்தைகளில் அவர்கள் ஏமாறவில்லை. அடுத்தகட்டப் போராட்டத்துக்கு நாள் குறித்தார்கள்.  அணு உலைச் செயல்பாட்டுக்கு ஆதரவாக தமிழக முதல்வருக்கு பிரதமர் இரண்டாவது கடிதம் அனுப்பியபோது, கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை மீண்டும் போராட்டக் களமானது. இந்த முறை தொடர் உண்ணாவிரதத்துடன் சாலை மறியல், அணு உலை முற்றுகைப் போராட்டங்களையும் கையில் எடுத்திருக்கிறார்கள் மக்கள்.இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை இந்தியா எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. இந்தப் போராட்டத்தில் அமர்ந்திருக்கும் மக்களில் பெரும்பான்மையினர் அடித்தட்டு மக்கள் - ஏழை மீனவர்கள் - படிப்பறிவு அற்றவர்கள். ஆனால், அவர்கள் அவர்களுக்காக மட்டும் போராடவில்லை; உலகளாவிய ஒரு பிரச்னைக்காகப் போராடுகிறார்கள், அசாத்தியத் துணிச்சலுடனும் உறுதியுடனும்!
இந்தக் கட்டுரை உருவாக்கத்தின்போது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மணிக்கு 2.7 மைக்ரோ சீவெர்ட்ஸ் அளவுக்கு அணுக் கதிர்வீச்சு பரவி இருக்கும் செய்தியை பி.பி.சி. அறிவிக்கிறது. யகொஹாமாவில் உள்ள ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ரத்தப் புற்றுநோயை உருவாக்கும் 'ஸ்ட்ரான்டியம் - 90’ கதிரியக்கப் பொருள் கண்டறியப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. பூகம்பம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷிமா அணு உலை பாதிக்கப் பட்டது மார்ச் மாதத்தில். இப்போது அக்டோபர் மாதம். டோக்கியோ ஃபுகுஷி மாவில் இருந்து 230 கி.மீ. தொலைவில் இருக்கிறது. யகொஹாமா நகரமோ இன்னும் அதிக தொலைவில் இருக்கிறது. இந்தச் செய்திகள் வெளியான அதே நாளில்தான் பத்திரிகைகளில் இந்திய அணு சக்தித் துறை கொடுத்துள்ள விளம்பரம் சொல்கிறது, 'அணு உலைகள் பாதுகாப்பானவை; கவலை வேண்டாம்’ என்று!கடந்த ஒரு வாரமாக நிலக்கரித் தட்டுப்பாட்டால் நாடே இருளில் சிக்கி இருக்கிறது. பல மாநிலங்களில் 9 மணி நேரம் வரை மின் வெட்டு. கிராமங்களில் மொத்த மின் விநியோகமே 2 அல்லது 3 மணி நேரம்தான்!
இந்தியாவின் எரிசக்தித் தேவையில் 55 சதவிகிதத் தேவையை நிலக்கரிதான் பூர்த்திசெய்கிறது. மின்சாரத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஏற்கெனவே பற்றாக்குறை நிலவுகிறது. தவிர, இப்போது வெள்ளம், தொடர் போராட்டங்கள் காரணமாக நிலக்கரி உற்பத்தி கடுமையாகப் பாதித்து இருப்பதால், முன்னெப்போதும் சந்திக்காத சிக்கலைச் சந்தித்து இருக்கிறது நம்முடைய எரிசக்தித் துறை. நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிறுவுத்திறனான 99,503 மெகா வாட்ஸில் பாதி அளவு திறன்கொண்ட 29 முக்கிய அனல் மின் உற்பத்தி நிலையங்கள், அடுத்த சில நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பையே வைத்திருக்கின்றன. சீரான மின் உற்பத்திக் குக் குறைந்தது ஒரு மாதக் கையிருப்பு அவசியம்.இப்போது ஏற்பட்டு இருக்கும் சிக்கலை, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் அரசு கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். ஆனால், இது ஓர் எச்சரிக்கை. தொழில் துறை சார்ந்து வளரும் ஒரு நாடு, எரிசக்தித் துறையில் தொலைநோக்கோடு திட்டங்களைத் தீட்ட வேண்டிய அவசியத்தையும் புதிய எரிசக்திக் கொள்கையை உருவாக்க வேண்டிய தேவை யையும் நிர்பந்திக்கும் எச்சரிக்கை!
ஒருபுறம், நம்முடைய எரிசக்தித் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம், அணு சக்தி அதற்குத் தீர்வு இல்லை என்பதும் தெரிகிறது. என்ன செய்யலாம்? 
விகடன் 

தி.மு.க,காங்கிரஸ்,தே.மு.தி.க,பா.ம.க உள்ளாட்சி தேர்தலில் பரிதாப தோல்வி

தி.மு.க உள்ளாட்சி தேர்தலில் பரிதாப தோல்வி அடைந்துள்ளது.அதுவும் தே.மு.தி.க அதிர்ச்சி தோல்வி..ராமதாஸ்,திருமாவளவ்ன் கட்சிகள் சைபர் மார்க் வாங்கியிருக்கின்றன..மக்கள் ஜயலலிதா பக்கமே என நிரூபித்து இருக்கும் இந்த தேர்தலில் ,கருணாநிதி மீது மக்கள் கோபம் இன்னும் தீரவில்லை போலும்.

தி.மு.க சில நகராட்சிகளும்(23 இடங்கள் முன்னிலை,8 வெற்றி),பேரூராட்சி (104 இடங்களும்,அ.தி.மு.க 247)நகராட்சி,பேருராட்சி கவுன்சிலர்கள் மட்டுமே பெறும் நிலை உள்ளது.தே.மு.தி.க பேரூட்சியில் சில கவுன்சிலர் மட்டுமே பெற்றுள்ளது.தி.மு.க வினர் மீதான பொய் வழக்குகளை கண்டு மக்கள் கொதித்து போயுள்ளனர்.சமச்சீர் கல்வி விசயம்,கூடங்குளம் பிரச்சினை,கரண்ட் கட்,துப்பாக்கி சூடு என எத்தனையோ பிரச்சினைகள் ஜயலலிதாவுக்கு எதிராக திருப்பிவிட்ட போதிலும் ஜெயலைதாவின் இந்த மாபெரும் வெற்றி அவர் ஒரு புரட்சி தலைவிதான் என்பதை தெள்ல தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது..ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் இது தெரியாதா என சொன்னாலும் வரலாற்றில் எப்போதும் இல்லாதபடி கூட்டணி கட்சி இல்லாமல் வெற்றி பெறுவது அதுவும் அசுர பலத்துடன் ஜெயிப்பது சாதாரணமா.எதிர்கட்சிகளின் ஓட்டு வங்கிகள் செல்லாகாசாகிவிட்டன..முழு ரிசல்ட் வந்த பின் இவர்களின் உண்மையான ஓட்டு வங்கி லட்சணம் தெரிந்துவிட்டது.இவர்களுக்கு எங்குமே ஆதரவு இல்லை.இவர்கள் சொந்த ஊரிலும் கூட..வைகோ வின் ம்.தி.மு.க கணிசமான இடங்களை பெற்றுள்ளது.அவருக்கு வாழ்த்துக்கள்.நல்ல மனுசன்.வெறும் வாய்சவடால் விடுவதில்லை.கடுமையாக தமிழனுக்கு உழைக்கிறார்.
10 மாநகராட்சி மேயர் பதவிகளும் அ.தி.மு.க வசமே .தமிழ்கத்தில் 6 பெண் மேயர்கள்.ஈரோட்டில் முதன்முறையாக பெண் மேயராக மல்லிகா பரமசிவம்.பெரியார் கனவு நிறைவேறியது.சென்னையில் அ.தி.மு.க இதுவரை மேயர் பதவியை பிடித்ததில்லை.எம்.ஜி.ஆர் காலத்திலும் கூட.அந்த சாதனையையும் இப்போது நிகழ்ந்துள்ளது.இதன் மூலம் எம்.ஜி.ஆர் கனவும் நிறைவேறியது..

இனிமேல் தொகுதி பேச்சுவார்த்தைன்னு ஒருத்தரும் போயஸ்கார்டன் பக்கம் போக முடியாது..கூட்டணியில் சேர்த்தா போதும் என்பதே பெரிய விசயம்.கொடுத்ததை வாங்கிக்க வேண்டியதுதான்.இல்லைன்னா இப்படி மரண அடிதான்.ராமதாஸ்,திருமாவளவன் எல்லாம் எங்களுக்கு ஓட்டு வங்கி இருக்கு..வட மாவட்டங்களில் செல்வாக்கு இருக்குன்னு ஏமாத்துனாங்க..இப்போ எல்லாம் வெட்ட வெளிச்சமாயிருச்சி..உங்க ஊர்லியே ஜெயிக்க முடியலையாமா..?

Thanks to Sathis777

Friday, October 21, 2011

சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!

 
அரசு தரும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யும் கிரண்பேடி, தன்னை அழைப்பவர்களிடம் முழுக் கட்டணத்தையும் வசூலித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ஹஸாரே குழுவில் முக்கிய அங்கம் வகிப்பவர் கிரண் பேடி. ரமோன் மக்சாசே விருதுபெற்றவர். இந்திய அரசின் உயர்ந்த கேலன்டரி விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றவர். இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ள அரசு வகை செய்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி விருப்ப ஓய்வு பெற்று, டீம் அன்னா பெயரில் டிவிக்களில் குழாயடிச் சண்டை நடத்தி வருகிறார். ஹஸாரேவின் கூட்டங்களில் இவர்தான் பிரதான பேச்சாளர். ஊழலை எதிர்ப்பு என்ற பெயரில், இவரது பேச்சில் தெறிக்கும் அராஜகமும் சர்வாதிகார மனோபாவமும் பலரையும் முகம் சுழிக்க செய்து வரும் நிலையில், கிரண் பேடியின் அல்பத்தனத்தை தோலுரித்துக் காட்டியுள்ளன ஆங்கில நாளிதழ்கள்.

ஓய்வில் உள்ள கிரண் பேடியை, பல்வேறு என்ஜிஓக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பொரேட் நிறுவனங்கள் சொற்பொழிவாற்ற அழைக்கின்றன.

இந்த சொற்பொழிவுக்காக அவருக்கு பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட், ஐந்து நட்சத்திர தங்குமிடம் என சகல வசதிகளும் செய்து தருகிறார்கள். தனி அன்பளிப்புகளும் உண்டு.

ஆனால் கிரண்பேடியோ, இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தனக்கு அரசு வழங்கும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்துள்ளார். ஆனால், தனியார் அமைப்புகளிடமிருந்து முழுக் கட்டணத்தையும் வசூலித்துள்ளார். அதுமட்டுமல்ல, பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்துள்ளார்.

கிரண்பேடி கேலன்டரி விருது பெற்றவர். இவருக்கு அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் 75 சதவீத சலுகை வழங்கப்படும். இவரது கேலன்டரி விருது எண் 433. இந்த சலுகையை முழுதாக அனுபவிக்கும் கிரண்பேடி, பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தை முழுவதுமாகப் பெற்று வந்துள்ளார் பல ஆண்டுகளாக.

அவர் பயணம் செய்த எகானமி விமான டிக்கெட்டுகள், என்ஜிஓக்களிடம் பிஸினஸ் கிளாஸுக்காக பணம் வசூலித்ததற்கான ரசீதுகள் என 12-க்கும் மேற்பட்ட ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி, இதுபோல பயணம் செய்து அதிகப்படியாக கட்டணத்தை வசூலித்துள்ளார் கிரண் பேடி.

2006-ம் ஆண்டு இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் இருந்தபோதே இதுபோன்ற ஏமாற்று வேலையைச் செய்துள்ளார். அரசு அதிகாரியான இவர், இதுபோல செய்திருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். நேரடியாக லஞ்சம் பெற்றதற்கு சமமான இந்தக் குற்றச்சாட்டுக்கு பிசிஏ எனப்படும் அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சட்டப்படி தண்டனை உண்டு!

இந்த டிக்கெட்டுகள் மற்றும் பில்களுக்கான தொகையை கிரண் பேடி, தான் தலைவராக உள்ள இந்தியா விஷன் பவுண்டேஷன் பெயரில் காசோலைகளாகப் பெற்றுள்ளார். இவரது கணக்காயர் வியாஸ் இதுகுறித்துக் கூறுகையில், கிரண்பேடி தனது சொற்பொழிவுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வசூலித்த தொகையை விட மிகக் குறைவாகத்தான் செலவிட்டுள்ளார். இதனால் அவரது கணக்கு பொருந்தி வரவில்லை. ஆனால் இது ஒரு சேமிப்பாக காட்டப்பட்டுள்ளது, என்றார்.

கிரண்பேடியின் தில்லு முல்லு - சில ஆதாரங்கள்:

செப்டம்பர் 29, 2011: டெல்லி - ஹைதராபாத் பயணம் - ஏர் இந்தியா ஃப்ளைட் எண் ஏஐ 560- எகானமி க்ளாஸ். அடுத்த நாள் ஏஐ 539 விமானத்தில் டெல்லி திரும்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்ட தொகை ரூ 17134 மட்டுமே.

ஆனால் கிரண்பேடி கணக்கு காட்டியுள்ள தொகை ரூ 73,117!

டெல்லி - ஹைதராபாத் - சென்னை விமானத்தில் வந்த கிரண் பேடி, மீண்டும் டெல்லி - சென்னை - டெல்லி விமானத்தில் திரும்பியுள்ளார். சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்த அவர், பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான முழுத் தொகையை வசூலித்துள்ளார்.

மே 30, 2011: டெல்லி - புனே கிங்பிஷர் விமானத்தில் பயணம் செய்த அவர், ஜெட் ஏர்வேஸில் திரும்பியுள்ளார். இதற்கு மொத்த பயணக் கட்டணம் ரூ 12458. ஆனால் கிரண்பேடி வசூலித்துள்ளது ரூ 26386.

நவம்பர் 25, 2010: டெல்லி - மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற அவர் அடுத்த நாள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார். இதற்கான பயணக் கட்டணம் ரூ 14097. கிரண்பேடி வசூலித்த தொகை ரூ 42109.

2009, 2008, 2007 மற்றும் 2006-ம் ஆண்டுகளிலும் இதுபோல பல முறை சிக்கன வகுப்பில் பயணித்த கிரண்பேடி, தான் செலவழித்ததை விட 5 மடங்கு அதிக தொகையை வசூலித்துள்ளார்.

ஊழல் ஒழிப்பு பற்றி வாய்கிழிய பேசும் கிரண் பேடி, தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்த அளவு முறைகேடு செய்துள்ளது எந்த வகையில் சேரும் என கேள்வி எழுப்பியுள்ளனர் ஹஸாரே எதிர்ப்பாளர்கள்.

Thanks to OneIndiaTamil