ரூ.1,500 எனும் நம்ப முடியாத விலையில் உலகின் மிகக் குறைந்த விலை கையடக்கக் கணணி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கபில் சிபல் இந்த மடிக்கணணியை அறிமுகம் செய்து வைத்தார்.
ஆகாஷ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கையடக்கக் கணணியை பிரிட்டனை சேர்ந்த டேட்டா வைண்டு நிறுவனம் தயாரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் 1,00,000 லட்சம் மாணவர்களுக்கு இந்த மடிக்கணணியை மத்திய அரசு மானியத்துடன் ரூ.1,500 விலையில் வழங்க இருக்கிறது.
வரும் நவம்பர் மாதம் முதல் இந்த கையடக்க கணணி வர்த்தக ரீதியிலும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக டேட்டா வைண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் மடிக்கணணி முழுக்க முழுக்க பாடத்திட்டத்துக்கு உதவும் வகையில் இருக்கும்.
ஆனால் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆகாஷ் மடிக்கணணியில் 3ஜி வசதியுடன் வருகிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ 2.2 வெர்ஷன் ஓபரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த கணணி 7 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆகாஷ் மடிக்கணணிக்கு ஏர்செல் நிறுவனம் சிம் கார்டுகளை வழங்க இருப்பதாக டேட்டா வைண்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வர்த்தக ரீதியில் இந்த கணணி ரூ.3,000 விலையில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் டேட்டா வைண்டு தெரிவித்துள்ளது.
தற்போது இந்திய மார்க்கெட்டில் ஏர்டெல் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தின் துணை நிறுவனமான பீட்டெல் நிறுவனம் ரூ.9,999க்கு மடிக்கணணியை விற்பனை செய்து வருகிறது. இதுவரை இந்த மடிக்கணணியே இந்திய மார்க்கெட்டில் குறைந்த விலை கணணியாக இருக்கிறது.
இந்த நிலையில் விரைவில் வர்த்தக ரீதியில் ஆகாஷ் கணணி அறிமுகம் செய்யப்பட்டால் மற்ற நிறுவனங்களின் கணணிகளுக்கு அது கடும் சவாலையும், போட்டியையும் ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment