நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Sunday, October 16, 2011

ரகசியமாக மனைவியைப் பார்த்த பிரபுதேவா- நயனதாரா கொதிப்பு- தடுமாறிப் புலம்பும் பிரபுதேவா!

நயனதாராவை நம்பி மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்த பிரபுதேவா, மனைவியையும், குழந்தைகளையும் மறக்க முடியாமல் நயனதாராவுக்கு தெரியாமல் ரகசியமாக அவர்களைப் பார்த்து வருகிறார். இதை அறிந்த நயனதாரா கடும் கோபமடைந்து மும்பையில் உள்ள தனது வீட்டை விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார். அங்கு விரைந்த பிரபுதேவாவை அவர் வீட்டுக்குள்ளேயே விடவில்லை. இதனால் பிரபுதேவா பெரும் அதிர்ச்சியுடன் சென்னை திரும்பியுள்ளாராம்.

பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே ஒரு பெரும் சினிமா மாதிரிதான் இருக்கிறது. நடனத்திலும், நடிப்பிலும், உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த சமயத்தில், அதிரடியாக ரமலத்தை ரகசியமாக மணம் புரிந்தார் பிரபுதேவா. இதை பல ஆண்டுகள் வரை ரகசியமாகவே வைத்திருந்தார். ரமலத்துடன் நிழல் உலக வாழ்க்கை நடத்தி குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நீண்ட காலமாகவே ரமலத் தனது மனைவி என்ற அங்கீகாரத்தை வெளியுலகுக்குக் காட்டாமலேயே வாழ்ந்து வந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதை பகிரங்கப்படுத்தினார்.

ரமலத்தை, பிரபுதேவாவின் வீட்டில் சுத்தமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் பிரபுதேவாவின் குழந்தை இறந்தது. இதனால் ஏற்பட்ட சோகத்தில் அவர் இருந்தபோதுதான் நயனதாரா குறுக்கிட்டார்.

நயனதாராவின் ஆறுதல் பின்னர் காதலாக மாறி இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினர். இதனால் ரமலத் விஸ்வரூபம் எடுத்தார். என்னை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார் நயனதாரா. அவரிடமிருந்து எனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இதனால் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இரு தரப்பிலும் முட்டல் மோதல் தொடங்கியது. பெரும் புயலும், சூறாவளியுமாக போய்க் கொண்டிருந்த இந்த விவகாரம் இறுதியில் பரஸ்பர விவகாரத்து என்ற நிலைக்கு வந்தது. பெரும் தொகையும், சொத்துக்களையும் கொடுத்து ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா.

அதன் பின்னர் மும்பையில் நயனதாராவுடன் வாழத் தொடங்கினார். இருவருக்கும் கல்யாணம் நடந்து விட்டதாக ஒரு தகவலும், இல்லை என்ற தகவலும் பரவியது. நடந்தால் சொல்வேன் என்று பிரபுதேவாவே விளக்கினார். இருப்பினும் பிரபுதேவாவும், நயனதாராவும் மும்பையில் சேர்ந்துதான் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபுதேவா வாழ்க்கையில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. மனைவி, குழந்தைகளைப் பிரிந்து விட்டாலும் கூட அவர்களை மறக்க முடியவில்லையாம் பிரபுதேவாவால். இதனால் நயனதாராவுக்குத் தெரியாமல் அவர் தொடர்ந்து ரமலத், அவரது இரு குழந்தைகளையும் சென்னைக்கு வந்து பார்த்துப் பேசி வருகிறாராம். குழந்தைகளை வெளியில் கூட்டிச் சென்று வருகிறாராம்.

இது நயனதாராவுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தாராம். அதுதான் எல்லாத்தையும் கணக்குத் தீர்த்து விட்டாயிற்றே, இன்னும் என்ன பாசம் என்ற ரீதியில் அவர் பிரபுதேவாவை போனில் பிடித்து சண்டை போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனது மும்பை வீட்டை விட்டு கேரளாவுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். இதை அறிந்த பிரபுதேவா அதிர்ச்சி அடைந்தார்.

உடனே சென்னையிலிருந்து கேரளாவுக்கு ஓடியுள்ளார். நயனதாரா வீட்டை அடைந்த அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே விட மறுத்து விட்டார் நயனதாரா. இதனால் தெருவிலேயே நின்றிருந்தாராம் பிரபுதேவா. கிட்டத்தட்ட 2 மணி நேரம் தெருவில் நிற்க வைத்து விட்டார் நயனதாரா. இதனால் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பிரபுதேவா அங்கிருந்து கிளம்பி வந்துள்ளார். செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் நயனதாரா பேசவில்லையாம். போனை ஆப் செய்து விட்டாராம்.

சென்னை திரும்பிய பிரபுதேவா தற்போது தப்பு செய்து விட்டேனே என்ற ரீதியில் நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா, நயனதாரா குடும்ப வாழ்க்கை தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
Thanks to OneIndia

No comments:

Post a Comment