நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, October 3, 2011

சன் டிவி மற்றும் கலைஞர் டிவி – தொலைக்காட்சி : ஓர் அலசல்


Sun TVகடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பரத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய பெருமை சன் டிவியையே சேரும். ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு 70% க்கு மேல் இது மட்டுமே காரணம். ஆனால், தற்போது சன் டிவியின் வியபார ஒழுங்கிண்மையால், தி.மு.கவிற்கே சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. மோசடித்தனமானது.
Karunanidhi2. சன் டிவி குழுமம் நடத்திய சுமங்கலி கேபிள் நெட்வொர்க் மக்கள் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தது. பிற சேணல்களைப் பார்க்க விடாமல் செய்தது. அதிக கட்டணம் வசூலித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டியது. தாங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செய்ய வேண்டும். பிற யாரும் தலையெடுக்கக் கூடாது என்ற மனப்பாண்மையில் செயல்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸை விட மோசமாக செயல்பட்டார் கலாநிதி மாறன். இதற்கு இவரது தம்பி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தன் துறையைப் பயன்படுத்தி அனைத்து உதவிகளும் செய்தார்.

3. செய்திகளில் 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என்ற சொல்லை நீண்ட காலமாகப் பயன்படுத்தினர். தற்போது தான் நிறுத்தி உள்ளனர். சன் டிவிக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டம் பாராட்டுக்கு உரியது.

4. தமிழ்நாட்டின் உயிராதாரமான பிரச்சினைகளுக்கு, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதும் கலைஞர், ஜெயலலிதா கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டாம் என கவர்னரிடம் தன் பேரனுடன் சென்று கேட்டார். தயாநிதி மாறனும், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் இது தொடர்பாகப் பேசுகின்றனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு கட்சியா?
Dayanidhi Maran5. தினகரனை, சன் டிவி வாங்கியதே ஒரு முறையற்ற வணிக நடவடிக்கை. இது போன்ற வணிக நடவடிக்கைகள் அமெரிக்காவில் தான் நடைபெறும். பல பத்தாண்டுகளாக, தினத்தந்தி தமிழ் நாட்டில் விற்பனையில் முதலிடம் பெற்று விளங்கியது. இந்து வெறி நாளிதழான 'தின மலர்' எவ்வளவு முயன்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே தினத்தந்தியை தாண்ட முடிந்தது. இந்து வெறியர்கள் பரவலாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட தினமலர் நாளிதழால், தினத்தந்தியின் விற்பனையை தாண்ட முடியவில்லை. தற்போது, சன் டிவி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் தினகரன், தமிழ் முரசு நாளிதழ்களில் வேலை செய்யும் செய்தியாளர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தினமலரில் இருந்து ஒரே நேரத்தில் வேலையில் இருந்து நின்று சன் டிவியின் பத்திரிக்கைகளில் வேலைக்கு சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. அடக்க விலையை விட குறைத்து விற்பது, இலவசப் பொருட்கள் என விற்று பிற நாளிதழ்களை பாதிக்கும் சன் டிவி நிறுவனத்தின் இதழ்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

6. மத்திய அரசின் செய்திகளை வெளியிடும் போது, தயாநிதி மாறனின் செய்திகளை மட்டுமே வெளியிடுவது, பிற அமைச்சர்களின் செய்திகளை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசின் நலத்திட்டங்களை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே வெளியிடுவது, திமுகவிலேயே தயாநிதி மாறன், ஸ்டாலின் ஆகியோரை மட்டுமே காட்டுவது, அன்பழகன், துரைமுகன் - போன்ற தலைவர்களை செய்திகளில் காட்டாமல் இருப்பது, கூட்டணிக் கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிப்பது என பட்டியலிட்டு மாளாது சன் டிவியின் அழிம்புகள்.

சன் டிவி..இந்த ஆண்டு லாபம் ரூ.367 கோடி!


suntv.jpg 
தென்னக தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கும் சன் குழுமம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக லாபத்தை ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் மொத்த லாபம் ரூ.268.82 கோடி. இந்த ஆண்டு லாபம் ரூ.366.98 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 98.16 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் நெட்வொர்க்கின் மொத்த வருமானம் இந்த ஆண்டு 27.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் மொத்த வருமானமாக ரூ.925.99 கோடியை ஈட்டியுள்ளது இந்த நிறுவனம். இது கடந்த ஆண்டு 726.40 கோடியாக இருந்தது.
இக்குழுமத்தின் நிகர லாபம் கடந்த நிதியாண்டை விட இந்த ஆண்டு 32.7 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சன் குழுமத்தின் இந்த லாப அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இன்றைய பங்குச் சந்தையில் (சென்செக்ஸ்) ரூ.280 ஆக இருந்த சன் டிவியின் பங்குகள் ரூ.319 வரை விலை போயின.
 
வினியோகஸ்தர்களை மிரட்டிய வழக்கில், சென்னை கே.கே.நகர் போலீஸ் அனுப்பிய சம்மனில், "சன் டிவி' கலாநிதி ஆஜராகவில்லை. சேலத்தைச் சேர்ந்த கந்தன் பிலிம்ஸ் உரிமையாளர் செல்வராஜ்; இவர், கடந்த 1ம் தேதி, கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதில், "தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் வினியோக உரிமையை, சன், "பிக்சர்ஸ்' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, சேலம் பகுதிக்கு கொடுப்பதாக, 1.25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து, பணத்தை பெற்றுக் கொண்டார்.
ஒப்பந்தப்படி, வினியோக உரிமையை தனக்கு கொடுக்காமல், தியேட்டர் உரிமையாளர்களுக்கு வினியோகித்து விட்டார். பணத்தை கேட்ட போது, அதில், 82.53 லட்ச ரூபாயை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். புகாரை அடுத்து, கடந்த 3ம் தேதி, சக்சேனா கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தள்ளப்பட்டார். கோர்ட் உத்தரவின்படி, சக்சேனாவை இரண்டு நாட்கள், "கஸ்டடி'யில் எடுத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையின் போது, சக்சேனா, "நான், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஊழியன் மட்டுமே. என் முதலாளி(கலாநிதி) சொன்னதைத் தான் செய்தேன். வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சக்சேனா மீது, சேலத்தைச் சேர்ந்த சண்முகவேல் மற்றும், "மாப்பிள்ளை' படத் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் புகார் அளித்ததையடுத்து, அந்த வழக்குகளிலும் சக்சேனா, ஐயப்பன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். சக்சேனா அளித்த தகவலின் அடிப்படையில், சன் குழும நிர்வாக இயக்குனரான கலாநிதியை, நேற்று(புதன் கிழமை) காலை 10 மணிக்கு ஆஜராகக் கூறி, கே.கே.நகர் போலீசார், கடந்த திங்களன்று சம்மன் அனுப்பினர். கலாநிதி, போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை வந்தாக வேண்டும் என்பதால், பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.

பரபரப்பான சூழலில், காலை 10:15 மணிக்கு, பாட்சா என்பவர் தலைமையில் ஏழு வக்கீல்கள், கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில், விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகி, கலாநிதி சார்பில் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், கலாநிதி, சொந்த விஷயமாக தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், வரும், 26ம் தேதி சென்னை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஐயப்பன், விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதால், தானும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில், கலாநிதி திடீரென வெளிநாடு பயணம் சென்றதாக தெரிகிறது. எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் கலாநிதி சம்பந்தப்பட்டிருப்பதால், அவருக்கு கால அவகாசம் கொடுப்பதா அல்லது அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் கைது செய்வதா என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கலாநிதி எங்கே? : திங்களன்று சம்மனை பெற்ற கலாநிதி, நேற்று முன்தினம் பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்று, அங்கிருந்து, "சுவிஸ்' விமானம் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்று விட்டார். எப்போதும், விமானத்தில் முதல் வகுப்பிலேயே பயணம் செய்யும் கலாநிதிக்கு, அந்த வகுப்பில், அப்போது, "சீட்' இல்லை எனக் கூறி விட்டனர். "பிசினஸ் வகுப்பில்' பயணம் செய்வதை தவிர்க்கும் கலாநிதி, வேறு வழியில்லாமல், "பிசினஸ்' வகுப்பிலேயே, அவரது கன்னடத்து மனைவி காவிரியுடன், "ஜூரிச்' நகரத்துக்கு பறந்து விட்டார்.  

தயாநிதி வீடு-சன் டிவி அலுவலத்திற்கிடையே ரகசிய எக்ஸ்சேஞ்ச்-ரூ. 400 கோடி இழப்பு என சிபிஐ புகார்

ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.
இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.
இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன்.
இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.
ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.
இதுகுறித்து விசாரித்த சிபிஐ இதுதொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.
அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ.
என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து திமுக தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது.
தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன்.
இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச்சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.
டிஜிடல் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.
இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.
வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
சிபிஐ இதுகுறித்து புகார் கூறியும் கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.
சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும் கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

சன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் மரணம்


ராமநாதபுரத்தில் கடந்த வாரம் கலாநிதி மாறன், ஏசி குமாரவேல், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் இருவர் ஆகியோரின் பேரில் கொலைமிரட்டல் புகார் கொடுத்தவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், கலாநிதி மாறன் மற்றும் சுமங்கலி கேபிள் ஆபரேட்டர்கள் இருவர், ஏசி குமாரவேல் ஆகிய நால்வர் மீது ஜூலை 27ம் தேதி ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார் மனு அளித்தார்.



அதில், தன்னை மிரட்டி ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள பொருள்களை அபகரித்து தனக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த கலாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் எஸ்பி அனில்குமார் கிரியிடம் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த புகாரின் சுருக்கம்...

நான் 1998 முதல் கேபிள் ஆபரேட்டராக இந்தப் பகுதியில் தொழில் செய்துவந்தேன்... 2008ல் இங்கே ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க ரூ. 15 லட்சம் செலவில் தேவையான சாதனங்களை வாங்கி வைத்திருந்தேன். இந்நிலையில், கலாநிதிமாறன் தூண்டுதலில் என்னை மதுரை மதிச்சியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், என்னை மிரட்டினர். அந்தக் கட்டுப்பாட்டு அறையை மூடிவிடு, இல்லை என்றால் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சிலவற்றை உன் பேரில் எழுதி உள்ளே தள்ளிவிடுவேன் என்று ஏசி குமாரவேல் மிரட்டினார். அதைத் தொடர்ந்து, கலாநிதி மாறன் என்னை ஃபோனில் மிரட்டினார்.

என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக ரூ. 15 லட்சம் பெறுமான பொருள்களை அபகரித்துக் கொண்டு, என்னை மேலும் தொழிலில் ஈடுபட முடியாமல் தடுத்து விட்டனர். கடந்த 4 வருடங்களாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

என்னை ஃபோனில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய கலாநிதி மாறன், சுமங்கலி கேபிள் விஷன் விநியோகஸ்தர்கள் சரவணன் மற்றும் கமலக்கண்ணன், ஏசி குமாரவேல் ஆகியோர் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கேபிள் தொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தினாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர், அல்லது காணாமல் போயுள்ளனர். அவர்கள் குறித்த விசாரணையை போலீஸார் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பி அனில் குமார் கிரியிடம் புகார் அளித்தார்.

இவரின் இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன போலீஸார், விசாரணையைத் துவக்கினர். இந்நிலையில், நாகராஜன் மாரடைப்பால் (டவுட்டு)  காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். நன்றி தினமணி .





No comments:

Post a Comment