நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, October 3, 2011

ஊழல் அரசு அலுவலர்கள் மர்ம மரணம்

தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். அது உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அரசியல்வாதிகள் பலருக்கு எந்தப் பிரிவின் படி தான் பதவியேற்றிருக்கிறோம் என்பது கூடத் தெரியாது. ஏன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றால் கூட என்னவென்று தெரியாது. ரவுடியாய் திரிந்தவர்களுக்கு வேண்டுமானால் கிரிமினல் சட்டங்கள் பற்றிய சில விபரங்கள் தெரியும். இந்திய அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் வக்கீல்களாய் இருப்பதை இவ்விடத்தில் வாசகர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
இந்த வக்கீல்கள் தான் பெரும் பெரும் பதவிகளுக்கு வருகின்றார்கள். அதற்கு ஒரு உதாரணம் உலகத்தில் இதுவரை எவருமே செய்யாத ஊழல் புகழ் மன்னன் திரு ராஜா. அதை மூடி மறைத்துக் கொண்டிருக்கும் திரு ப.சிதம்பரம் போன்றோர்கள். மக்கள் கவனிக்க வேண்டிய அம்சம் இது. வக்கீல்கள் சரியில்லை என்றால் இந்தியாவை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்று விடுவார்கள். இப்போதைய மன்மோகன் சிங் அரசு அதைத்தானே செய்து கொண்டிருக்கின்றது என்கின்றீர்களா?
ஒன்றுமே தெரியாமல் வரும் அரசியல்வாதிகளை ஊழல்வாதியாய் மாற்றுவதே “அரசு அதிகாரிகள்” தான் என்பதை நாமெல்லாம் அறிவோம். அப்படிச் செய்யும் அரசு அதிகாரிகளின் நிலையோ எதிர்காலத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறது. இப்படி ஊழலுக்குத் துணை போன ஒரு அரசு அதிகாரியை எதிர்கட்சி அமைச்சர் ஒருவர், அதிகாரிக்குத் தெரியாமலே அவரின் மனைவியை ஆட்டயப் போட்டு விட்டார்.  இப்போது அதிகாரி “தற்கொலை” செய்து கொள்ளும் மன நிலையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.
சண்டைக்காரனை நம்புவதை விட சாட்சிக்காரனை நம்பலாம் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் சண்டைக்காரர்களுக்கு ஒன்றுமே ஆவதில்லை. சாட்சிக்காரர்கள் தான் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். வம்பு என்றால் சாதாரண வம்பு இல்லை. செத்துப் போகின்றார்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்தால் அவர்களுக்கு துணை போனவர்களின் பரிதாபக் கதையை ஒரு பத்திரிக்கை விரிவாய் எழுதி இருக்கிறது. அதை இந்த இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.
இறந்து போனவர்கள் கதைகள் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் பாடுகிறார்கள். எலும்பை ஊடுருவிச் செல்லும் உரத்தக் குரலில் அவர்களுடைய மரணங்களைப் பற்றிய சதிகளை, பின்னணி சக்திகளை, மூடி மறைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றி. லக்னோவின் மாவட்டச் சிறைச்சாலை ஒன்றில் இந்த ஆண்டு ஜூன் 22 அன்று துணை தலைமை மருத்துவ அதிகாரி யோகேந்திர சிங் சாசன், தோல் பெல்ட்டில் தூக்கில் தொங்கி மரணமடைந்தார். அவருடைய மரணமும் மர்மங்கள் அடங்கியது. அக்டோபர் 2010, ஏப்ரல் 2011 இல் கொல்லப்பட்ட அவருடைய இரண்டு தலைமை அதிகாரிகளான வினோத் ஆர்யா, பி.பி. சிங் ஆகியோருடைய மரணத்தில் அவர் முக்கிய குற்றவாளி. சாசன் இறந்த சம்பவம் ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுகையில் முக்கியமான சாட்சிகள் மர்மமான முறையில் கொல்லப்படும் சம்பவங்களுக்கு  சரியான  உதாரண மாக இருக்கிறது. தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தில் கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் 1808.76 கோடி ரூபாய் நிதியைப் பெற்றது. இத்திட்டம் தொடர்பான ஊழலில் சாசனும் மற்றவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். மருத்துவக் கருவிகள் வாங்கியதாகவும், வாகனங்கள் வாங்கியதாகவும் சொல்லப்பட்டு பெருமளவுக்கு பணம் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு. பட்டப் பகலில் கொள்ளை அடித்ததாக உ.பி.யில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பின. சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கிறது. இதில் மாயாவதி அரசின் சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் புபுசிங் குஷ்வாஹா விசாரிக்கப் பட்டார். “
ஊழலுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகள் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருந்தாக வேண்டும் போலிருக்கிறது. அதிகாரிகள் மட்டுமல்ல தனி மனிதர்களும் கூடத்தான். இல்லையென்றால் “சாதிக் பாட்சா” போல அனாதையாய் தூக்கில் தொங்க நேரிடும்.
இது கல்கி காலம் போலும். பழிக்குப் பழி வாங்க முனைகிறார் கடவுள். ஒழுங்கற்றவர்களுக்கு “மரணம்” பரிசாய் கிடைக்கும் போல.
- பஞ்சர் பலராமன்
பட இணைப்பு உதவி : தி சண்டே இந்தியன் பத்திரிக்கை

Thanks to அனாதி

No comments:

Post a Comment