நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, October 13, 2011

ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜாங்கிட்..


Jangid_IPS

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை விமான நிலையத்தில் வாகன நிறத்த காண்ட்ராக்ட் எடுத்திருந்த நவ்பாரத் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.  அந்த சோதனையின் போது, விமானநிலைய காவல்நிலையத்திலும், புறநகர் காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினர் வசூல் செய்யும் மாமூல்களை தேதி வாரியாக பதிவு செய்து வைத்திருந்தனர்.  இப்படி பதிவு செய்யப் பட்டிருந்த டைரியை கைப்பற்றியது சிபிஐ.

கைப்பற்றப் பட்ட டைரியில் உள்ள விபரங்கள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. தமிழக அரசு புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு அதை விசாரணைக்காக அனுப்பியது.  புறநகர் கமிஷனர், அதை ஜனவரி 2010ல் செயின்ட் தாமஸ் மவுன்ட் துணை ஆணையர் வரதராஜுவுக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்த டைரியில் இருந்த விபரங்கள் என்னவென்றால், விமான நிலைய உதவி ஆணையராக இருந்த குப்புசாமி என்பவர் 3 வருடங்களாக மாதந்தோறும் 5 ஆயிரம் வாங்கினார்.   மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பல்வேறு தேதிகளில் பணம் வாங்கியுள்ளார்.   எஸ்.ஐ முனுசாமி, தலைமைக் காவலர் பாண்டியன், போக்குவரத்து எஸ்.ஐ, எஸ்.ஐ.லட்சுமணன், சிவா என்ற போலீஸ், பெண் எஸ்.ஐ சுப்புலட்சுமி, எஸ்.ஐ கன்னியப்பன், எஸ்.ஐ.சிவா, எஸ்.ஐ சுப்ரமண்யம், சர்கிள் இன்ஸ்பெக்ட்ர், பெண் எஸ்.ஐ.சசிகலா, போலீசுக்கு நன்கொடை 25,000 என்று அந்தப் பட்டியல் நீளுகிறது.
 Jaffer_Jangid
இது போல ஊழல் விவகாரங்களில் கிடைக்கும் ஆதாரங்கள், வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப் படும்.    ஆனால், கடந்த திமுக ஆட்சியில் தான் விதி மீறலுக்கு எல்லையே கிடையாதே.

அதனால் ஜாங்கிட்டிடம் இந்தப் புகார் அனுப்பி வைக்கப் படுகிறது.   இதை விசாரிக்கும் பொறுப்பில் இருந்த துணை ஆணையர் வரதராஜு ஒரு வருடம் இந்தப் புகாரை கட்டி வைக்கிறார்.   இந்தப் புகார் வந்த பிறகும், விமான நிலைய உதவி ஆணையர் குப்புசாமி உட்பட யாருமே மாற்றல் செய்யப்  படக் கூட இல்லை.

சரியாக ஒரு வருடம் கழித்து, 2011 ஜனவரி இறுதியில், வரதராஜு அவசர அவசரமாக ஒரு விசாரணை அறிக்கையை தயார் செய்கிறார்.   அந்த விசாரணையில் குற்றம் சுமத்தப் பட்டிருக்கும் காவல்துறையினர் ஒருவரைக் கூட விசாரிக்கவில்லை. ஒருவரையும் விசாரிக்காமல் அவர் அளித்த அறிக்கையில் அற்புதமாக ஒரு காரணத்தை சொல்கிறார்.

நவ்பாரத் என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணியாற்றும் வர்கீஸ் மற்றும் ரஞ்சித் மாதவன் ஆகியோரை விசாரித்தேன். அவர்கள் இருவரும் தங்கள் வாக்குமூலத்தில் நவ்பாரத் என்டர்பிரைசஸ் முதலாளி தங்களுக்கு போதுமான ஊதியம் தரவில்லை.  மாதம் 10 ஆயிரம் தான் தருகிறார்.  அதனால் நாங்களே போலீசருக்கு மாத மாமூல் கொடுப்பது போல பொய்க் கணக்கு எழுதி அந்தப் பணத்தை முதலாளிக்கு தெரியாமல் கையாடல் செய்து விட்டோம் என்று கூறினார்களாம்.
 IMG_0001
IMG_0002
இவர்கள் வாக்குமூலத்தைக் கண்ட வரதராஜு, தனது அறிக்கையில், நவ்பாரத் நிறுவன ஊழியர்களே நடந்த உண்மையை ஒப்புக் கொண்டார்கள்  என்பதால், இதில் இனிமேல் விசாரிக்க ஏதுமில்லை என்று அறிக்கை அளிக்கிறார்.
 Varadha_Raj._13
வரதராஜு ஐபிஎஸ்
சரி, ஒரு வருடமாக தூங்கிக் கொண்டிருந்த வரதராஜு திடீரென்று அறிக்கை அளிக்க காரணம் என்ன ?   சோழியன் குடுமி சும்மா ஆடுமா ?  அறிக்கை அளித்த ஒரு சில நாட்களிலேயே விமான நிலைய உதவி ஆணையராக இருந்த குப்புசாமி, டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக்கப் படுகிறார்.
Kuppusamy_TNPSC1
தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப் பட்ட குப்புசாமி
எப்படி இருக்கிறது ?   இந்த குப்புசாமிதான் ஆண்டுக்கணக்கில் உழைத்து க்ரூப் 1 தேர்வுகளும் மற்ற தேர்வுகளுக்காகவும் தயாரிப்பில் ஈடுபட்டு உழைத்த இளைஞர்களின்  தலையெழுத்தை தீர்மானிக்கப் போகிறவர்.  இவர் இந்தப் பதவியைப் பெறுவதற்காக ராசாத்தி அம்மாளுக்கு 3 கோடி கொடுத்து இந்தப் பதவியை ‘வாங்கினார்’ என்பது கூடுதல் தகவல்.  ஒரு சாதாரண டிஎஸ்பிக்கு 3 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பது ஜாங்கிட்டுக்கே வெளிச்சம்.

சரி வரதராஜு அறிக்கை சரி என்றே வைத்துக் கொள்ளுவோம். இப்படி பொய்யான கணக்கு வழக்குகளை எழுதி ஏமாற்றிய அந்த வர்கீஸ் மீதும் ரஞ்சித் மாதவன் மீதும் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டாமா ?   ஏன் செய்யவில்லை ?

விமான நிலைய உதவி ஆணையராக இருந்த குப்புசாமி ராசாத்தி அம்மாளை அணுகியதும், தன் மீது நிலுவையில் இருக்கும் இந்தக் குற்றச் சாட்டு குறித்து, ஜாங்கிட்டிடம் தெரிவிக்கிறார் குப்புசாமி.  அம்மையார் ஏற்பாடு செய்வார்கள். தடையாக இருப்பது இந்த புகார் மட்டும் தான் என்கிறார்.  கவலையே படாதீர்கள் நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று வரதராஜுவுக்கு ஆணையிடுகிறார் ஜாங்கிட்.  வரதராஜு என்பவர், ஜாங்கிட்டின் விசுவாசமான அடிமை.  சொன்ன காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்தார்.

இது போல திமுக குடும்பத்தினருக்காகவும், ட்ராலி பாய் பாண்டியனுக்காகவும் ஜாங்கிட் செய்து கொடுத்த காரியங்கள் ஒன்று இரண்டல்ல. ஜாங்கிட்டுக்கு காவல்துறையில் ஏராளமான எதிரிகள் உண்டு.  ஆனாலும், அத்தனை எதிரிகளையும் சமாளித்து, கடைசி வரை தன்னை யாருமே அசைக்க முடியாத வகையில் இருந்ததுதான் ஜாங்கிட்டின் சாமர்த்தியம்.   ஜாங்கிட்டுக்கு கருணாநிதி குடும்பத்தில் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தவர் கருணாநிதியின் மருத்துவர் டாக்டர் கோபால்.  இந்த கோபாலைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் சொல்வதெல்லாம் உண்மையின் இந்தப் பகுதியை படிக்கவும். அதனால் தான் அவர் ஜெகஜ்ஜாலக் கில்லாடி.

ஜாங்கிட்டுக்கு பகுதி நேரம் தான் காவல்துறை அதிகாரி பணி.  முழு நேரப் பணி ரியல் எஸ்டேட்.  இவர் மதுரையில் எஸ்.பி யாக இருந்த காலத்திலேயே ரியல் எஸ்டெட் தொழிலை தொடங்கினார்.   தற்பொழுது உயர் உயர் அதிகாரிகள் குடியிருக்கும் மணப்பாக்கம் பகுதி லே அவுட் ஜாங்கிட் போட்டதுதான்.  ஜாங்கிட்டுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளை விட, பத்திரிக்கை யாளர்களைத் தான் ரொம்பவும் பிடிக்கும்.     புறநகர் பகுதியில் க்ரைம் பீட் பார்க்கும் பத்திரிக்கையாளர்களை குளிப்பாட்டுவார்.   புறநகரில் க்ரைம் பீட் பார்த்து விட்டு, ஜாங்கிட்டிடம் பொறுக்கித் தின்னாத பத்திரிக்கையாளர்களே கிடையாது என்னும் அளவுக்கு.

ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், தமிழக அரசியல், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றி தவறான எந்த செய்தியும் வராமல் பார்த்துக் கொள்வதில் ஜாங்கிட்டின் சாமர்த்தியமே தனி. இந்த அத்தனைப் பத்திரிக்கைகளிலும், தன்னிடம் பொறுக்கித் தின்னும் உளவாளிகளை வைத்திருப்பார் ஜாங்கிட்.  இவரைப் பற்றி ஏதாவது தவறான செய்திகள் ஒரு வேளை தப்பித் தவறி வந்து விட்டால்  உடனடியாக அந்த நிறுவனத்திடம் பேசி மறுப்பு போடச் சொல்லுவார்.   அவர்கள் மறுத்தால் உடனே வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்.   சம்பந்தப் பட்ட பத்திரிக்கை நிறுவனங்கள், வக்கீல் நோட்டீஸ் வந்த உடனேயே அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஜாங்கிட்டின் உளவாளிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பேச்சுவார்த்தையின் முடிவில், ஜாங்கிட் ஒரு பெரிய தில்லாலங்கடி.  வில்லாதி வில்லன்.   ஜேம்ஸ் பாண்ட்.  என்று ஆகா ஓகோ என புகழ்ந்து ஒரு செய்தி வந்ததும், வழக்கை வாபஸ் வாங்குவார் ஜாங்கிட்.
 Jan---15-i
வெளிப்படையாக மற்ற அதிகாரிகளிடம் பேசும் போது, ஜாபர் சேட்டை எனக்கு பிடிக்காது, ஜாபர் எனக்கு எதிரி என்றெல்லாம் மார் தட்டிக் கொண்டாலும், இவரே ஜாபர் சேட்டுக்கு ஒரு விசுவாசமான அடிமையாகத் தான் இருந்திருக்கிறார்.  ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இப்போது ஜாபர் சேட்டோடு பேசுவதையே தவிர்த்து வருகிறார்.  ஆட்சி மாறியதும், நாகர்கோவில் போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பு அதிகாரியாக, அரசுப் பேருந்துகளின் பழைய உதிரி பாகங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியை செய்து வருகிறார்.

நவீன நெற்றிக் கண் என்று ஒரு பத்திரிக்கை வெளி வருகிறது.  இதன் ஆசிரியர் ஏ.எஸ்.மணி.   தராசு என்ற பத்திரிக்கையில் இவர் பணியாற்றிய போது அங்கே லே அவுட் ஆர்டிஸ்டாக இருந்தவர்தான் கோபால். பிறகு தராசு ஆசிரியர் ஷ்யாமோடு ஏற்பட்ட கருத்து வேறுபடு காரணமாக பிரிந்து வந்து நெற்றிக் கண் பத்திரிக்கையை தொடங்கி நடத்தி வருகிறார்.

தமிழக காவல்துறையில் அருண் என்று ஒரு ஐபிஎஸ் அதிகாரி இருக்கிறார்.  இவர் பேண்டில் ஜிப் வைத்து தைக்க மாட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.   திருமணம் ஆவதற்கு முன்பு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரியை தீவிரமாக காதலித்தார்.   அவரோடு காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்தார்.    நீ இல்லாமல் நான் இல்லை என் உயிரே என்று காதல் டயலாக்குகளை அள்ளி விட்டார்.  அந்த அதிகாரியும் இவரை நம்பி உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.
 Arun_IPS
காமக் கொடூரன் அருண்
ஆனால் ஒரே நேரத்தில் அருண் மற்றொரு பெண் ஐஆர்எஸ் அதிகாரியையும் காதலித்து வந்ததை அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி அறியவில்லை.  இந்த ஐஆர்எஸ் அதிகாரியின் தந்தை அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.    யாரைத் திருமணம் செய்வது என்ற சிக்கல் வந்த போது, நீதிபதியை பகைத்துக் கொண்டால், தன் வேலைக்கு வேட்டு வைத்து விடுவார்கள் என்பதை உணர்ந்த அருண், ஐபிஎஸ் அதிகாரியை கழற்றி விட்டு விட்டு, ஐஆர்எஸ் அதிகாரியை கரம் பிடித்தார். திருமணம் ஆனாலும் அருண் வேலி தாண்டிய வெள்ளாடாகவே இருந்து வந்தார்.  பாடுன வாயும், ஆடுன காலும் சும்மா   இருக்குமா ?  உடனே சவுக்கு வாசகர்கள் அருணை காமக் கொடூரன் அருண் என்று சொல்லக் கூடாது.

அருண் அண்ணா நகரில் துணை ஆணையராக இருந்த போது, நடிகை மும்தாஜ் வீட்டுக்கு அடிக்கடி சென்று, மும்தாஜ் காறித் துப்பி அனுப்பியதாகவும் ஒரு தகவல் கூறுகிறார்கள்.    அண்ணா நகரிலிருந்து செயின்ட் தாமஸ் மவுன்ட்டுக்கு அருண் மாறுதலாகிறார்.  அங்கே மஞ்சுளா என்ற ஒரு பெண் எஸ்.ஐ பணியாற்றினார்.    இந்த மஞ்சுளாவை வளைக்கலாம் என்று முடிவெடுத்த அருண், மஞ்சுளாவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவது, இரவு நேரங்களில் கால் செய்வது என்று தன் லீலைகளை தொடங்கினார்.   மஞ்சுளா ஒன்றும் ஒத்து வருவதாக இல்லை என்பது தெரிந்ததும், இரவு நேர ரோந்துப் பணிகளுக்கு மஞ்சுளாவை தன்னோடு வருமாறு உத்தரவிட்டார். ரோந்துப் பணிகளில் செல்லும் சமயங்களில் மஞ்சுளாவை தொடுவது, சீண்டுவது என்று தனது லீலைகளை துவக்கினார்.  தொந்தரவுகள் எல்லை மீறுவதை கண்டு பொறுக்க முடியாத மஞ்சுளா, இந்தச் செய்தியை நெற்றிக் கண் ஆசிரியர் மணியிடம் சொல்கிறார்.   நெற்றிக் கண் இதழில் அருணின் லீலைகள் பற்றி செய்தி வருகிறது.  செய்தியை படித்த அருணின் மனைவியான ஐஆர்எஸ் அதிகாரி, அருணை காறித் துப்பியிருக்கிறார்.

கடும் கோபம் அருண், அப்போது தமிழகத்தின் சக்ரவர்த்தியாக இருந்த ஜாபர் சேட்டிடம் இது குறித்து தகவல் சொல்லுகிறார்.   “சார் இந்த மாதிரி என்னைப் பற்றி நியூஸ் போட்டிருக்கிறார்கள். இது மட்டும் இல்லை உங்களைப் பற்றியும் நியூஸ் போட்டிருக்கிறார்கள்.  நம்ப சிஎம் துணைவியார் பத்தியும் நியூஸ் போட்டிருக்கிறார்கள்” என்கிறார்.  சரி என்ன பண்ணலாம் என்று ஜாபர் கேட்டதற்கு, அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்.  எனக்கு அனுமதி மட்டும் கொடுங்கள் என்று கேட்கிறார்.  உடனே ஜாபர் சக்ரவர்த்தி அனுமதி கொடுக்கிறார்.
 jaffar_sait_3

பேரைக் கேட்டாலே....   நாறுதுல்ல.....
பாண்டிச்சேரியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த மணியின் கார் செக்போஸ்டில் மடக்கப் படுகிறது.  அந்தக் காரில் மணியோடு, அவரின் மகள் ரேகாவும் இருக்கிறார்.  ரேகா எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்.   மடக்கப் பட்ட கார், பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு எடுத்துச் செல்லப் படுகிறது.  மணியும், அவரது உதவியாளர்கள் இருவரும், ரேகாவும் காவல்நிலையத்தினுள் அழைத்துச் செல்லப் படுகிறார்கள்.

ரேகாவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, அவர் துப்பட்டாவை எடுக்கச் சொல்லி, வீடியோ எடுக்கிறார்கள்.  அப்போது அருண், “நான்  இப்படி வீடியோ எடுத்ததை பத்தி உங்க அப்பன எழுதச் சொல்லு” என்கிறார்.

மணி நிர்வாணப்படுத்தப் பட்டு சராமாரியாக அடிக்கப் படுகிறார்.   டேபிளின் மீது படுக்கப்போட்டு லத்திக் கம்புகளால் அடித்துத் துவைக்கிறார்கள்.   அப்போது அந்த நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மணியை உட்கார வைத்து அவர் வாயை வலுக்கட்டாயமாக திறக்கிறார்.   அவர் வாயில் மலம் கரைத்து ஊற்றப் படுகிறது. அருண் மணியின் மீது சிறுநீர் கழிக்கிறார்.
 Arun-DC
மறுநாள் மணி மீதும், அவர் மகள் மீதும், மற்ற இருவர் மீதும் துப்பாக்கியால் ஒரு பெண்மணியை மிரட்டியதாக வழக்கு பதியப் படுகிறது.  நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தப் படும் போது மணி அனைத்து விபரங்களையும் நீதிபதியிடம் சொல்கிறார்.     மணியின் அருகே வந்து அவர் மீது மல நாற்றம் வீசுவதை பார்த்த நீதிபதி, அத்தனை விவகாரங்களையும் பதிந்து கொள்கிறார்.

மணியும் மற்றவர்களும் சிறையில் அடைக்கப் பட்டார்கள்.   மணி சிறையில் அடைக்கப் பட்டதால் பத்திரிக்கை வெளிவராமல் நின்று விடும் என்று எதிர்ப்பார்த்த அருணுக்கு அதிர்ச்சி.  அடுத்த வாரமே தவறாமல் பத்திரிக்கை வெளி வந்தது.   பத்திரிக்கை எப்படி வெளி வந்தது என்று கடும் கோபம் அடைகிறார் அருண்.  விசாரித்த போது மணியின் மகனும் பொறியியல் பட்டதாரியுமான பார்த்திபன் என்பவர் பத்திரிக்கையை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் என்பத தெரிந்தது.

உடனே இந்த விபரத்தை அப்போது சென்னை நகரின் கூடுதல் கமிஷனராக இருந்த ஜாங்கிட்டிடம் தெரிவிக்கிறார் அருண்.   உடனே, பார்த்திபன் மீதும், அவர் தாயார் தனலட்சுமி மீதும், பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்மணியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை முயற்சி செய்ததாக குற்ற எண் 1028/2007 ல் ஒரு வழக்கு பதியப் படுகிறது.   இந்த வழக்கில் முன் ஜாமீன் பெறுகிறார்கள் பார்த்திபனும் அவர் தாயாரும்.  அப்போது கண்டிஷனின் படி கையெழுத்து போடுவதற்காக நுங்கம்பாக்கம் காவல்நிலையம் சென்ற போது, அந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஆறுமுகம், “ஏண்டா……   …… ……. ……. ………” என்று தகாத வார்த்தைகளால் திட்டி, பார்த்திபனை பத்திரிக்கை நடத்தக் கூடாது என்று மிரட்டுகிறார்.

IMG_8498
அழகிரி மகனிடம் பல் இளிக்கும் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்
இந்த வழக்கில் யாரை கொலை செய்ய மிரட்டினார்கள் என்று பார்த்திபன் மீதும், அவர் தாயார் மீதும் வழக்கு பதிவு செய்தார்களோ, அந்தப் பெண்மணி நீதிமன்றத்துக்கு வந்து, அந்தப் புகார் ஒரு பொய்யான புகார்.  நான் இவர்கள் வீட்டில் பல முறை சாப்பிட்டிருக்கிறேன் இவர்களுக்கு எதிராக பொய் சொல்ல மாட்டேன் என்று சொன்னதன் அடிப்படையில் இந்த வழக்கு 2009ல் தள்ளுபடி செய்யப் பட்டது.

45 நாட்கள் கழித்து மணி ஜாமீனில் வெளி வருகிறார்.  சில ஆண்டுகள் அமைதியாக போகிறது.  இதற்குள் ஜாங்கிட் புறநகர் கமிஷனராகிறார்.     அப்போது ஜாங்கிட்டுக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வரும் நேரம்.   நெற்றிக்கண் பத்திரிக்கையில் யாருடைய பெயரையும் போடாமல் பதவி உயர்வு பெறும் ஒரு வட நாட்டு போலீஸ் அதிகாரி, நல்ல பதவி பெறுவதற்காக பெரிய இடத்துக்கு 5 கோடி லஞ்சம் கொடுத்திருக்கிறார் என்று ஒரு செய்தி வருகிறது.

அவ்வளவுதான்.  ஜாங்கிட்டுக்கு வந்ததே கோபம்.    மணி மீண்டும் கைது செய்யப் படுகிறார்.  அவரோடு அவருக்கு உதவியாக இருந்த ஒரு இளைஞனையும் கைது செய்கிறார்கள். அந்த இளைஞன் யாரென்றே தெரியாமல், அவர்தான் மணியின் மகன் என்று நினைத்து, ஏற்கனவே துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நிலுவையில் இருந்த வழக்கின் சாட்சிகளை மிரட்டினார்கள் என்று புதிய வழக்கு பதியப் பட்டது.   இந்த சம்பவம் நடந்ததாக இவர்கள் கூறும் போது, பார்த்திபன் டெல்லியில் இருந்தார்.    குரோம்பேட்டை காவல்நிலையத்தில் மணி லாக்கப்பில் அடைக்கப் படுகிறார்.    விடியற்காலை 3 மணிக்கு ஜாங்கிட் குரோம்பேட்டை காவல்நிலையத்திற்கு வருகிறார். அப்போது அந்த காவல்நிலையத்தில் சந்திரசேகர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.
Netrikkan_Mani_1
நெற்றிக் கண் ஆசிரியர் மணி
ஜாங்கிட்டிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஜாங்கிட் முன்னிலையிலேயே மணியை சராமாரியாக அடிக்கிறார்.  இரண்டு காவலர்கள் மணியின் இரண்டு கால்களையும் 180 டிகிரிக்கு விரிக்கிறார்கள்.  (இந்த சித்திரவதைக்கு பெயர் பஞ்சாப் கட்.  சவுக்குக்கும் சிபி.சிஐடி போலீசார் இதே டெக்னிக்கைத்தான் கடைபிடித்தார்கள்)  வலி தாங்க முடியாமல் மணி கதறுகிறார்.  அப்போது மணியின் தொடை மீது ஏறி குதித்தார் ஜாங்கிட்.    இந்தச் சித்திரவதையும் போதாது என்று மீண்டும் மணியை நான்கு பேர் பிடித்துக் கொள்ள, அவர் வாயில் மலத்தை கரைத்து ஊற்றினார்கள்.
Chandrashekar-Ins
கழிப்பறை சுத்திகரிப்பு தொழிலாளி சந்திரசேகர்.
அத்தனை சித்திரவதைகளுக்கும் மணி ஆட்படுத்தப் பட்டதற்கான ஒரே காரணம் ஜாங்கிட்டைப் பற்றி மணி செய்தி போட்டதுதான்.  அந்தத் தகவல் பொய்யாக இருக்குமேயானால் ஜாங்கிட் நெற்றிக் கண் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கலாம்.  மேலும், ஜாங்கிட் நல்ல பதவிக்காக கருணாநிதியின் காலை அல்ல, கருணாநிதி வீட்டு கழிவறையையே நக்குவார் என்பது ஊருக்கே தெரியும்.   மணியின் வாயில் மலத்தை வலுக்கட்டாயமாக ஊற்றினார் ஜாங்கிட்.

ஆனால் மலத்தை உண்டால் நல்ல பதவி தருகிறேன் என்று கருணாநிதி சொல்லியிருப்பாரேயானால், ஜாங்கிட் விருப்பத்தோடு மலத்தை உண்டிருப்பார்.  பதவிக்காக எதையும் செய்பவர்தான் இந்த ஜாங்கிட்.  ஒரு சக மனிதனின் வாயில் மலத்தை ஊற்றும் இவர் ஜாங்கிட் அல்ல.  கிழிந்த ஜாக்கெட்.

தற்போது ஜாங்கிட் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா ? இரண்டு வாரங்களாக சென்னையில் முகாமிட்டு, தற்போது அதிமுக ஆட்சியில் பலமாக உள்ள காவல்துறை அதிகாரிகளை சந்தித்து எப்படியாவது தன்னை சென்னைக்கு மாறுதல் வழங்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

வாசகர்கள் யாருக்காவது அரசாங்கத்தில் நல்ல தொடர்புகள் இருந்தால், அதைப் பயன்படுத்தி ஜாங்கிட்டுக்கு நல்ல பதவியை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

Thanks to சவுக்கு

No comments:

Post a Comment