நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Friday, October 14, 2011

மூணாறு விடுதியில் சென்னை பெண் கொலை. பலருடன் தொடர்பு வைத்து உறவு கொண்டதால் ஷமீலாவைக் கொன்றேன்- கணவர் பரபரப்பு கடிதம்

 ஈரோடு: கேரள மாநிலம் மூணாறில் உள்ள விடுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மகேஷ் குமார், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
கேரள மாநிலம், மூணாறு பார்வதி அம்மன் கோவில் அருகே தனியார் தங்குவிடுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 7ம் தேதியன்று இளம்ஜோடி ஒன்று வந்தனர். கணவன்-மனைவி எனக் கூறி அறை எடுத்துத் தங்கினர். தங்களின் பெயர் மகேஷ் மற்றும் ஷியாமளா என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் மகேஷ் வெளியில் போய் விட்டார். அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் விடுதி ஊழியர்கள் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஷியாமளா உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் வந்து ஷியாமளாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஷியாமளாவின் கைப்பையில் பெங்களூர் நிறுவன முகவரி ஒன்றும், சென்னை மேற்கு மாம்பல முகவரியும் கிடைத்தன. அதை வைத்து விசாரித்தபோது சென்னை வீட்டில் 2 மாதங்களுக்கு முன்பு வரை ஷியாமளா தங்கியிருந்தது தெரிய வந்தது. பின்னர் வீட்டை காலி செய்து விட்டதும் தெரிய வந்தது.

ஷியாமாளவுடன் தங்கியிருந்த மகேஷ் குமாரைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்கள் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர். இந்த நிலையில், தற்போது மகேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே பட்டிமணியக்காரன் பாளையம் என்ற இடத்தில் மகேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஷியாமாளவும், மகேஷ் குமாரும் கணவன் மனைவி என்றும் தெரிய வந்துள்ளது. இதை ஷியாமளா மற்றும் மகேஷ் குமாரின் உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காதல் மணம் புரிந்தவர்கள்

பட்டிமணியக்காரன் பாளையம்தான் மகேஷ்குமாரின் சொந்த ஊராகும். 30 வயதாகும் இவரது தந்தை பெயர் சுப்பிரமணியன். இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். பிளஸ்டூ வரை படித்துள்ளார் மகேஷ்குமார். தனது வீட்டினருடன் கோபித்துக் கொண்டு 13 வருடங்களுக்கு முன்பே ஊரை விட்டு வெளியேறி விட்டார் மகேஷ். அதன் பின்னர் கோவை, திருப்பூர், பெங்களூர், சென்னை என பல ஊர்களில் வேலை பார்த்துள்ளார்.

சென்னையில் வேலை பார்த்தபோதுதான் ஷியாமளாவுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 3 வருடங்களுக்கு முன்பு இருவரும் கல்யாணம் செய்து கொண்டுள்ளனர். இந்தக் கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இருப்பினும் இருவரும் அதைப் பொருட்படுத்தாமல் சந்தோஷமாகத்தான் குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், பெங்களூரில் வேலை பார்த்து வந்தார் ஷியாமளா. அப்போது அங்கு அவருடன் வேலை பார்த்த ஒருவருடன் ஷியாமளாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்துள்ளார் மகேஷ் குமார். இந்த நிலையில்தான் இருவரும் மூணாறு போயுள்ளனர். அங்குதான் ஷியாமளாவை கொலை செய்துள்ளார் மகேஷ் குமார்.

ஷியாமளாவைக் கொலை செய்த பின்னர் நேராக தனது சொந்த ஊருக்கு வந்து விட்டார் மகேஷ். அங்கு தனது வீட்டில் தங்கிய அவருக்கு ஷியாமளாவின் நினைவு வாட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சட்டைப் பையிலிரு்து இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன. ஒன்றை தனது மனைவி குறித்தும், இன்னொன்றில் தனது தந்தை, தாயார் அமுதா, தங்கை பிரபா ஆகியோருக்கும் எழுதியுள்ளார் மகேஷ்.

தந்தைக்கு எழுதிய கடிதத்தில், உங்களுக்கு மகனாகப் பிறந்து எந்த கடமையையும் செய்யவில்லை. அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பெண் குழந்தையாக பிறந்து உங்களின் முழுமையான அன்பை பெறுவேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஷியாமளாவுக்கு சென்னைதான் சொந்த ஊர். இவரது வீடு மேற்கு மாம்பலம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ளது. இவரது தாயார் பெயர் ராணி. ஷியாமளாவுக்கு 23வயதாகிறது. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார்.

தனது மகள் மரணம் குறித்து அறிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் ராணி. சென்னைக்கு வந்த கேரள போலீஸாரிடம் கொல்லப்பட்டது தனது மகள்தான் என்று கூறி கதறியழுதார் அவர். பின்னர் ராணியும், அவரது உறவினர்களும் கேரள போலீஸாருடன் மூணாறு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் ஷியாமளாவின் உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.

என்னைக் காதலித்து மணம் புரிந்த ஷமீலா, என்னைத் தவிர மேலும் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நேரம் காலம் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்ததால்தான் அவளைக் கொன்றேன். மேலும் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் நடிகனும் நேரம் காலம் இல்லாமல் தொடர்ந்து அவளுடன் தொடர்பு வைத்திருந்தான். இந்த ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் காட்டிக் கொலை செய்தேன் என்று தற்கொலை செய்து கொண்ட கணவர் மகேஷ் குமார் பரபரப்பு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

மூணாறில் சென்னையைச் சேர்ந்த பெண் ஷமீலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பெண்ணைக் கொன்றதாக கருதப்பட்ட மகேஷ் குமார் அவரது கணவர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால் மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் பட்டிமணியக்காரன் பாளையத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கில் பெரும் திருப்பு முனை ஏற்பட்டது.

தற்கொலை செய்வதற்கு முன்பு மகேஷ் குமார் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அதில் போலீஸாருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில் மகேஷ் குமார் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய போலீசாருக்கு, எனக்கு தெரியும், என்னை நீங்கள் குறிவைத்து தேடி வருகிறீர்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆம் நான்தான் இதை செய்தேன். வேறு நான் என்ன செய்ய?...

படித்த பெண்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக வெளிநாட்டு கலாசாரத்துக்கு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வெளிநாட்டுக்காக உழைக்கும் அவர்கள், எதையும் தவறாக நினைப்பது இல்லை. எல்லாமே வெறும் இன்பத்துக்கானது தான் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான, உண்மையான, உணர்வுப்பூர்வமான உறவுகள் தேவையில்லை. அவர்களுக்கு கலாசாரம், கணவர், சமூகம், குடும்பம் பற்றிய கவலையே கிடையாது.

படிப்பும், பணமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும், எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. அப்படி அவர்கள் செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விட்டால் ஸாரி என்கிற ஒற்றை வரியில் பிரச்சினைக்குரிய நபரை சரி செய்துகொள்கிறார்கள். அப்படி அவர்கள் சமாதானம் அடையவில்லை என்றால், கவலைப்படாமல் ஆட்களை மாற்றிக் கொள்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடிப்பது எப்படி என்பது அவர்களுக்கு தெரியும்.

எல்லா வாக்குறுதிகளையும் மறந்துவிட்டு காதல், நிகழ்வுகள், மறக்க முடியாத நினைவுகள், கவனிப்பு இவை எதுவுமே அவர்களின் மனதில் நிலைப்பதில்லை. எதையும் மிக சுலபமாக மறந்து விட்டு புது வாழ்வை எளிதாக, குறுகிய காலத்திலேயே தொடங்கி விடுவார்கள். அவர்களால் முடியும். அவள் செய்தாள்...

சரி... மீண்டும் அவளை நான் அடைந்த பிறகு, அவளை எச்சரித்தேன். அழுது, கெஞ்சி அவளிடம் வேண்டிப்பார்த்தேன். எந்த பிரயோசனமும் இல்லை. நான் அவளுக்கு 2 முறை வாய்ப்பு கொடுத்தேன். நான் அவளை மன்னித்து என்னோடு வாழ மீண்டும் அனுமதித்தேன். அவளுடைய மாமா மற்றும் வீட்டு உரிமையாளருக்கு இது தெரியும். (ஏனென்றால் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் அவளுக்காக மட்டுமே வாழ்ந்தேன்).

ஆனால் அவள் மீண்டும் என்னுடைய மன்னிப்பை தவறாக பயன்படுத்த தொடங்கினாள். ஆகவே நான் விவாகரத்து பெற விரும்பி மனு செய்தேன். அவள் அதை புரிந்து கொண்டு தெளிவான மனநிலையில் என்னோடு திரும்பி வருவாள் என்று நினைத்தேன்.

எப்படி இருந்தாலும் இந்த காதல் கதையின் கடைசி கட்டத்துக்கு வந்தாகி விட்டது. என்னுடைய வாழ்க்கை பயணம் கடைசி கட்டத்துக்கு பயணித்தது (அது ஏற்கனவே முடிந்து விட்டது. எப்போது அவள் வழி தவறினாளோ அப்போதே வாழ்க்கை முடிந்து விட்டது).

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவளுக்கு எந்த குறையும் வைக்காமல் சந்தோஷமாக இருக்க விரும்பினேன். அந்த காரணத்தால்தான் மீண்டும் ஒருமுறை தேனிலவுக்காக அழைத்துச்சென்றேன். நான் அனைத்து வகையிலும் மகிழ்ச்சியை கொடுத்தேன்.

என்னுடைய திட்டம் நான் தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான். அவள் அவளுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால்...

இறுதியாக நான் அவளிடம் பிச்சைக்காரனை போல மண்டியிட்டு வேண்டினேன். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

ஒரு தாய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும்போது, அவளுடைய குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொள்வது போல... நானும் என் குழந்தையாக கருதிய அவளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

ஆனால், அதையும் ஒருநாள் தள்ளிப்போட்டேன். ஏனென்றால் அவளுடன் தொடர்பு வைத்து இருந்த 3 வாலிபர்களை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். முயற்சியும் செய்தேன்.

ஷாமுக்காக நான் எதையும் செய்ய துணிந்தேன். நான் எடுத்த இந்த முடிவுக்காக கடவுளாலோ, அரசாங்கத்தாலோ பழிக்குப்பழி தீர்க்கப்படும்.

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது நான் தவறான தகவல்கள் தருகிறேன் என்றால், தயவுசெய்து கடந்த 6 மாதங்களாக ஷமிலாவின் மொபைல் பில்லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். திருமணமான ஒரு பெண், அதிகாலை 3 மணி வரை எப்படி பேசியிருக்கிறாள், `சாட்டிங்' செய்து இருக்கிறாள் என்று...

தயை கூர்ந்து சமூகத்துக்கு தொல்லை கொடுக்கும் இது போன்றவர்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (இந்திய சட்டப்படி யார் கொலை செய்ய காரணமாக இருக்கிறார்களோ அவர்களையும் கைது செய்ய வேண்டும்...)

எங்கள் வாழ்வில் நுழைந்த முக்கிய குற்றவாளி தினமும் காலை 9.10 மணி முதல் நான் திரும்பி வரும் வரை அவன்தான் அவளுடன் வசித்து வந்தான்.

2-வது ஒருவன். அவனுடன் கடந்த ஜுலை 20 மற்றும் 21-ந் தேதிகளில் தங்கி இருந்தாள். அவனுடன் ஒரே அறையில் தங்கி இருக்கும் மேலும் ஒருவனும் அவளை பங்கிட்டுகொண்டார்கள்.

4-வதாக பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமானவன், எந்த நேரம் என்று பார்க்காமல் மெசேஜ் அனுப்புவது, பேசுவது என்று தொடர்ந்து வந்தான். குறிப்பாக அதிக அளவில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தான்.

இதுபோல் பேஸ் புக் இணையதளம் மூலம் அறிமுகமான மற்றொருவனும் நள்ளிரவு நேரங்களில் தொடர்ந்து பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருந்தான்.

6-வது முக்கிய நபர் மதுரையை சேர்ந்தவன். இவன்தான் மனதை மயக்கி அவளை, அவனுடைய மற்ற மீடியா நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிமுகப்படுத்திவைத்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பகல் 12.45 மணிக்கு 3 பேர் அவளை ஒரு காரில் அழைத்துச்சென்று ஓட்டலில் 6 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்தார்கள்.

(அவர்கள் காரில் அழைத்துச்சென்ற நேரம் நான் குறுக்கே புகுந்து காரை தடுத்தேன். அவர்கள் 3 பேரும் என்னை பிடித்து வீதியில் தள்ளினார்கள். அப்போது ஷமிலா என்னிடம் நீ போ, என்னுடன் வராதே என்று விரட்டினாள். அவள் சென்ற 6 மணி நேரமும், அவளுடைய மொபைல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது).

டிவியில் காமெடி நிகழ்ச்சி நடத்துபவன்

டி.வி. நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடிகராக இருப்பவன் தினமும் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை போனில் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதுமாக இருப்பான். இவனுடைய தொடர்பு கடந்த 30-ந் தேதிவரை ஷமிலாவுடன் இருந்தது. (ஷமிலா என்னிடம் திருந்தி விட்டதாக கூறினாள். அவளுடைய வாழ்க்கையையும், என்னுடைய ஆழமான நம்பிக்கையையும் புரிந்துகொண்டதாக கூறினாள். நான் குறிப்பிட்ட இந்த நபர்களிடம் பேசமாட்டேன்... இனிமேல் இதுபோன்ற செயலை செய்ய மாட்டேன் என்று என்னிடம் கூறி இருந்தாள்). அவை எல்லாம் நாடகம் என்பதும், என்னை முட்டாளாக்க அவள் நடத்திய நாடகம் என்பதையும் செப்டம்பர் 18-ந் தேதி அவள் அவர்களுடன் தங்கியபோது புரிந்துகொண்டேன்.

8-வதாக ஒருவன். இவன் அந்த டி.வி. நடிகரின் நண்பன். இவனும் அந்த செப்டம்பர் 18-ந் தேதி பார்ட்டியில் அவளை பகிர்ந்து கொண்டவன். இவனும் ஷமிலாவை மிகவும் கவர்ந்து, நள்ளிரவில் போன் பேசியும், மெசேஜ் அனுப்பியும் வந்தான்.

9-வதாக ஒருவன் ஒரு பகுதிநேர வேலை தொடர்பாக அவளை அணுகி, அந்த நாள் முதல் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி குறுகிய காலத்தில் நட்பை வளர்த்துக்கொண்டவன். இதுபோலவே 10-வதாக ஒருவனும் ஷமிலாவுடன் தொடர்பு வைத்திருந்தான். இவர்கள் தவிர ஏராளமான எண்களில் இருந்து நள்ளிரவு மெசேஜ் மற்றும் போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். (இந்த எண்களை குறிப்பிட்டு கடிதத்தை முடித்து உள்ளார்).

என்று அதில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை 11ம் தேதி அவர் எழுதியுள்ளார். ஷமீலாவுடன் தொடர்பு வைத்திருந்த 10 பேரின் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட்டு அவர்களது முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


தற்கொலை செய்துகொள்ளும் முன்பு மகேஷ்குமார் எழுதிய உருக்கமான கடிதம்

மூணாறில் சென்னையைச் சேர்ந்த பெண் ஷமீலாவை கொலை செய்த அவரது கணவர் மகேஷ்குமார் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு ஒரு நோட்டில் 21 பக்கத்திற்கு தந்தை சுப்பிரமணியன், தாய் அமிர்தம், தங்கை பிரபா, மைத்துனர் ஈஸ்வரன் ஆகியோருக்கு உருக்கமான கடிதம் எழுதி அந்த நோட்டை தன் வீட்டு குளியலறையில் வைத்திருந்தார். இது தவிர போலீசாருக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

அப்பா... கடந்த 10 ஆண்டுகளாக நான் உங்களை இவ்வாறு கூப்பிட்டது இல்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க கிட்ட பேசணும்னு நிறைய முறை நினைத்தேன். ஆனால், பேச முடியவில்லை. உங்ககிட்ட ஒன்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பரவாயில்லை, இப்போது எழுத்து மூலம் சொல்லி விடுகிறேன்.

வாழ்க்கையில் நான் இப்படி கஷ்டப்பட நீங்கள் காரணம் இல்லை. எல்லாம் நான் பிறந்த நேரம், விதிதான். நீங்கள் எதுவும் வருத்தப்பட வேண்டாம். அடுத்த ஜென்மத்திலேயும் உங்களுக்கு குழந்தையாக பிறப்பேன். உங்களோட அன்பை முழுமையாக பெற "பெண் குழந்தையாக'' பிறப்பேன். இந்த ஜென்மத்தில் இதுவரைக்கும் ஒரு நல்ல பொறுப்பான பையனாக உங்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை. அடுத்த ஜென்மத்தில் உங்களை நன்றாக பார்த்துக்கொள்வேன். என்னை மன்னிச்சுடுங்க அப்பா...

அம்மா... உங்களுக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. சத்தியம் செய்து கொடுக்கும்போதே தெரியும். ஏன்னா நீங்க எங்கிட்ட, நான் எதுவும் தவறான முடிவை எடுத்து விடக்கூடாது என்று கேட்டு இருந்தீங்க. ஆனால் வேறு வழியில்லை. என்னை முழுசா புரிந்து கொண்டது நீங்கள்தான். அம்மாவை பிடிக்காமல் யாராவது இருப்பார்களா? என்னோட நேரம், எல்லாம் இருந்தும் தனியா இருந்தேன்.

நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டபோது கூட எங்கள ஏங்க விடாம பார்த்துக்கொண்ட உங்கள் தாய்மைக்கும், அன்புக்கும் நான் எப்பவும் அடிமை. பக்கத்து வீட்டில் உனக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தாலும் அத எங்களுக்கு கொண்டு வந்து தரும் அன்பு என் அம்மாவை தவிர யாருக்கு வரும். எனக்கு ஏதாவது சந்தோஷமாக இருந்தாலோ, நீ நல்லா இருந்தாலோ என்னை பக்கத்துல கூப்பிட்டு வெச்சு கன்னத்துல முத்தம் வைக்கணும்னு ஆசை. (இப்ப வெச்சுக்கிறேன் அம்மா) உம்மா...

பிரபா... நீ என்னுடைய தங்கச்சியா இருந்தாலும் தங்கச்சின்னு அதிகம் கூப்பிட்டது இல்லை. உன்னை நினைத்தாலே என் கண்கள் கலங்கி விடுகிறது. இதை எழுதும்போதுகூட எழுத முடியாமல் அழுது கொண்டு எழுதினேன்.

இந்த ஜென்மத்தில் நம்மால் முழுமையாக அண்ணன், தங்கையாக பாசத்தையோ, அன்பையோ பரிமாறிக்கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்து விடு. நீ தான் என்றென்றும் என் தங்கை.

மச்சான்... என்னால் உங்களுக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தாச்சு. இனி அது இருக்காது. உங்க பேச்சை மீறிதான் நான் இந்த தப்பை செய்யுறேன். வேற வழியில்லை மச்சான். என்னால் ஷமிலா இல்லாமல் இருக்க முடியாது அதான். உங்கள விட்டு நான் இப்படி பாதியில் போறதுக்கு என்னோட வாழ்க்கைப் பயணம் முடியும் நேரம் வந்தாச்சு. அவ்வளவுதான் என்னை மன்னிச்சுடுங்கோ.

வாழ்ந்தால் மரியாதையோடும், மானத்தோடும், நாலுபேர் பாராட்டுகிற மாதிரி கம்பீரமாக சந்தோஷமாக வாழ வேண்டும். அந்த வாழ்க்கை எனக்கு அமையவில்லை. நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் முடியவில்லை. அதுக்காக ஷமிலாவிடம் எத்தனையோ முறை விட்டுக்கொடுத்து எல்லாத்தையும் மன்னித்து, கெஞ்சி, மிரட்டி அழுதுகூடப் பார்த்தேன். ஆனால் முடியவில்லை.

சாப்பிட்டு போட்ட எச்சில் இலை மாதிரி தூக்கி வீசிட்டு போய்ட்டா மாமா. நன்றி மறந்து விட்டு, வேறு உலகத்துக்கு போய்ட்டா. தொடர்ந்து அவமானப்பட்டு முட்டி, மோதி என் மனைவியை என் பக்கம் திருப்ப நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுவிட்டேன். ஏனென்றால் என்ன இருந்தாலும் தப்பை உணர்ந்து அவள் வந்து விடுவாள் என்று நினைத்தேன். அவளுக்கு பிடிச்ச விஷயங்களை சென்னையிலேயே அவ்வப்போது தீர்த்து வைத்துக்கொண்டு இருந்தேன்.

புத்தியை மாத்தி வச்சிருக்காங்களோ என்று நினைத்து கோவிலுக்கு கூட்டி போய் மாந்திரீகம் செய்து விட்டுக்கூட வந்தேன். ஆனால் என்கிட்ட பொய் சொல்வதே அவளுக்கு வாடிக்கையாக இருந்து விட்டது. ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடம் அவள் மாறிவிட மாட்டாளா?, பழைய நினைவுகளை தூக்கிப்போட்டுவிட்டு வரமாட்டாளா? என்று ஏங்குவேன். ஆழமா போய் விட்டதால் அவள் வர விரும்பவில்லை.

3 அல்லது 4 நாட்கள் சுற்றுலா கூட்டிட்டு போய் எனது காதலை உணர்வுப்பூர்வமாக பக்கத்தில் இருந்து அவளுக்கு காட்டினால் திருந்த வாய்ப்பு இருக்குமோ? என்று நினைத்துதான் மூணாறுக்கு செல்ல முடிவு செய்தேன். அதனால் தான் மூணாறு சென்றோம். இதுல திருந்தி வாழ்ந்தால் வாழலாம். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

அவள் திருந்தி மனம் மாற வேண்டும் என்பதற்காக எல்லாம் செய்தேன். பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் சென்றேன். அவளும் சந்தோஷமாக இருந்தாள். அவள் மனதில் உண்மையாக எந்த வித மாற்றமும் வரவில்லை. பழைய ஷமிலா எனக்கு கிடைக்கவில்லை. ஒரு வாய்த் தகராறில் இப்படி ஆகிவிட்டது.

ஒரு தாய் எப்படி தன் குழந்தையை கொன்று விட்டு பின்பு அவளும் மாய்த்துக்கொள்வாளோ அப்படித்தான் இதுவும். என் குழந்தையை விட்டு செல்ல மனம் இல்லை.

இதோ நான் செல்கிறேன் இப்போது... இது இன்று நேற்று எடுத்த முடிவு இல்லை. நாங்கள் காதலிக்கும்போதே எடுத்த முடிவு. எனக்கு வாழ்க்கை, கனவு, லட்சியம், ஒரே ஆசை எல்லாம் எனது மனைவி ஷமிலா தான். அவள்தான் என்னுடைய உலகம். ஷமிலாவை என் உடலில் இருந்தோ, மனதில் இருந்தோ பிரிக்க முடியாது. ரத்தத்தோட ஊறிய விஷயம். இது அவளுக்கே நல்லா தெரியும். ஏன்னா நான் அவளுக்காகவே வாழ்ந்தவன்.

அவளோட ஆசைதான் என்னுடைய ஆசை. அவளுக்கு பிடித்ததுதான் எனக்கும் பிடிக்கும். எனக்கென்று எதுவும் இல்லாமல் அவளுக்காக 6 வருடமாக வாழ்ந்துவிட்டேன். இப்போது திடீரென்று என்னை தனியாக வாழச் சொன்னால் என்னால் எப்படி முடியும். என்னால் ஷமிலாவை மறக்க முடியவில்லை. என் மூளை செயல் இழக்கும் வரைக்கும் ஷமிலாவுக்கு நான்தான் அப்பா, கணவன், காதலன் (4 மாதங்களுக்கு முன்பு வரைக்கும்).

அவ என்ன தப்பு செய்தாலும், அவமானப்படுத்தினாலும் அவள் மேல் எனக்கு கோபமே வராது. தெரியாம பண்ணுறா என்று தான் இருந்தேன். நான் வாழ்ந்தால் அது ஷமிலாவுடன் மட்டும் தான். என் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதுக்கு காரணம் ஷமிலாவாக தான் இருக்க வேண்டும். அது என் சாவுக்கும் கூட. என் வாழ்க்கை இப்படித் தான் கடைசி வரைக்கும். சோகம்... சோகம்... நானே முடிக்கிறேன் இந்த கதையை.

எங்கள் காதல் உண்மையானதுதான். அது என்றைக்கும் மாறாது. அவளால் தான் இந்த வாழ்க்கை கிடைத்தது. இப்ப அவளே அதை எடுத்துக்கிட்டா. எத்தனையோ நிமிடங்கள் இப்பவே செத்துப்போனாலும் பரவாயில்லைங்கிற அளவுக்கு வாழ்ந்து இருக்கிறோம். அத மனசுல வைச்சு சந்தோஷமா பிரிகிறேன். தயவு செய்து என் கையில் இருக்கிற கடிதத்தை போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இதுதான் என்னுடைய கடைசி ஆசை.

ஷமிலாவை சாதாரணமாகவே பிரிய முடியாத என்னால், இப்பொழுது அவள் மண்ணில் இல்லை என்று தெரிந்தும் எப்படி இருக்க முடியும். துக்கமும், அழுகையும் தாங்கமுடியவில்லை. அதுதான் சென்னை போன காரியத்தை பாதில முடிச்சுட்டு, என் உயிர் என் சொந்த ஊர்ல போகனும்னு வந்துட்டேன் என்று அவர் அதில் குறிப்பிட்டு கடித்ததின் கீழ் ஷமிலா மகேஷ் என்று கையெழுத்திட்டுள்ளார்.

மனைவியைக் கொன்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய மகேஷ் அங்குதூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து ஊரை திரண்டு போனது. ஆனால் மகேஷின் பெற்றோரும், தங்கையும் மட்டும் போகவில்லை.

ஆனால் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்ததும், தங்கையின் பிரசவத்திற்காக நண்பரிடம் ரூ. 60,000 கொடுத்து வைத்திருந்ததையும் அறிந்ததும் அவர்கள் பதறிப் போனார்கள். பாசம் உந்தித் தள்ள சுமார் 2 மணி நேரம் தாமதமாக போய் அவரது உடலைப் பார்த்து கதறினர்.

மகேஷ் குமார் தற்கொலையும், அதற்கு முன்பு அவரது மனைவி ஷமீலாவை அவர் கொலை செய்ததும் தமிழகத்தையும் கேரளாவையும் உலுக்கியுள்ளது. ஒரு காதல் வாழ்க்கை எப்படி கள்ளத் தொடர்புகளால் சிக்கி சீரழிந்து சின்னபின்னமாகிப் போனது என்பதை தனது கடிதங்கள் மூலம் உலகுக்கே அறிவித்து விட்டு செத்துள்ளார் மகேஷ்குமார்.

மூணாறு விடுதியில் தனது மனைவியைக் கொலை செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்த மகேஷ்குமார் அங்கு தனது காதல் மனைவியின் நினைவை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாவதற்கு முன்பு போலீஸாருக்கு மகேஷ் குமார் எழுதி வைத்த விரிவான கடிதம் இப்போது மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனது மனைவியின் லீலைகள், அவரது கள்ளத் தொடர்புகள், அதனால் தான் பட்ட வேதனைகள், அவமானங்கள், தனது வாழ்க்கையை சீரழித்த அயோக்கியர்கள் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார் மகேஷ் குமார்.

மேலும் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்கள் குறித்த விவரங்களையும், அவர்களது தொலைபேசி எண்களையும் கூட அவர் குறித்து வைத்துள்ளார்.

இந்தக் கடிதம் ஈரோடு போலீஸாரையே அதிர்ச்சி அடைய வைத்து உலுக்கி விட்டதாம். அழகான காதல் வாழ்க்கை இப்படி அகோரமாக சிதைந்து போக காரணமாக இருந்த யாரையும் விடாமல் அத்தனை பேரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ் குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 10 பேரையும் பிடித்துக் கைது செய்து வழக்குத் தொடர போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகேஷ் குமார் கடிதத்தில் உள்ள ஒருவரையும் விடாமல் கைது செய்ய வேண்டும் என்பதற்காகவும், இந்த வழக்கில் எந்த அளவும் பிசகு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காவும், திருமணமானவர்களின் வாழ்க்கையில் புகுந்து சீரழிக்கும் கயவர்களுக்கு இது சரியான பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் போலீஸார் இந்த வழக்கை மிகவும் கவனத்துடன் கையாள முடிவு செய்துள்ளனராம்.

மதுரையைச் சேர்ந்த ஒருவன்தான் ஷமீலாவை மிகப் பெரிய அளவில் தன் பக்கம் இழுத்து சீரழித்ததாக கூறப்படுகிறது. இவனைத்தான் மகேஷ்குமாரும் மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளார். எனவே இவனை முதலில் பிடிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மகேஷ்குமாருக்குத் தெரிந்து 10 பேர்தான் உள்ளனரா அல்லது அதற்கு மேலும் ஷமீலாவுடன் வேறு யாரேனும் தொடர்பு வைத்திருந்தனரா என்பதை அறியவும் போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பத்து பேரையும் பிடித்து விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்றும் தெரிகிறது.

இதனால் ஈரோடு மகேஷ்குமார், ஷமீலா மரண வழக்கு மிகப் பெரிய பரபரப்பான விஷயமாகியுள்ளது.

No comments:

Post a Comment