தயாநிதி மாறன் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் இந்தியா
முழுவதும் இன்று காலை முழுவதும் பரபரப்பை கிளப்பி
விட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதம் இப்போது பொருளாதாரத்தில் மிக
வேகமாக வளர்ந்த,தொழிலில் அசுர வளர்ச்சி காட்டிய இந்த சகோதரர்களையும்
விழுங்க போகிறது.கலாநிதி மாறன் இப்படி களி திங்கவா இவ்வளவு வேகமா
முன்னேறினீங்க..? நீங்களும் ஒரு அம்பானியாகி என் தந்தை முரசொலி மாறனின்
கனவு என 500 ரூபாய்க்கு டிடிஹெச் தருவீங்க..101 ரூபாய்க்கு தமிழனை ஸ்பைஸ்
ஜெட் விமானத்தில் டில்லி கூட்டிட்டு போய் தொழில் புரட்சி பண்ணி உலகையே
திரும்பி பார்க்க வைப்பீங்கன்னு நினைச்சேன்.இப்படி சில்லறைதனமா
நடந்துகிட்டு மாட்டீகிட்டீங்களே சார்?
சன் டிவி வளர்ச்சி சாதாரண வளர்ச்சி அல்ல..இந்தியாவின் இயக்க சக்திகளில்
முக்கியமானவர்கள் டாடா,அம்பானி,லட்சுமி மிட்டல் என்றால் அவர்களுக்கு அடுத்த
இடம் நோக்கி மீடியா லைனில் முன்னேறியவர் கலாநிதி.அதற்கு இந்திய அரசு
இயந்திரத்தை முற்றாக சுழல விட்டவர் தயாநிதி.5 வருடங்கள் அரசு இயந்திரத்தை
தன் அண்ணன் கம்பெனிக்கு அடிமையாக்கியதற்கு தண்டனைதான் இப்போது அண்ணன்,தம்பி
அனுபவிக்க போவது.....
Thanks to Sathis777
No comments:
Post a Comment