நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Wednesday, October 12, 2011

'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் மாறன் சகோதரர்கள் சிக்கியது எப்படி?: சிபிஐ வெளியிடும் தகவல்கள்

\'2ஜி ஸ்பெக்ட்ரம்\' ஊழல் வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? என்பது குறித்து சிபிஐ தரப்பில் வெளியாகியுள்ல தகவல்கள் வருமாறு:

ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சிவசங்கரன் என்பவர் நடந்த்தி வந்தார். இவர் கடந்த 2005ம் ஆண்டு தனது நிறுவனத்துக்கு \'2ஜி ஸ்பெக்ட்ரம்\' அலைவரிசையை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் மனு செய்தார். அப்போது தயாநிதிமாறன் தொலைத்தொடர்பு மந்திரியாக இருந்தார். ஏர்செல் நிறுவனத்துக்கு \'2ஜி ஸ்பெக்ட்ரம்\' அலைவரிசை உரிமம் வழங்காமல் தயாநிதிமாறன் காலதாமதம் செய்து வந்தார்.

இதற்கிடையில், சிவசங்கரனை அழைத்து பேசிய தயாநிதிமாறன் மலேசிய தொழில் அதிபர் அனந்தகிருஷன் நடத்தும் \'மேக்சிஸ் கம்யூனிகேஷன்\' நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்ரு விடுமாறு நிர்ப்பந்தம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

இதனால் சிவசங்கரன் தனது ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். அடுத்த ஒரு மாதத்தில் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமைகளை தயாநிதி மாறன் ஒதுக்கீடு செய்தார். இதில்தான் தயாநிதிமாறனின் பங்கு இருப்பது குற்றச்சாட்டாக கூறப்பட்டது.

இந்த நிலையில், \'2ஜி ஸ்பெக்ட்ரம்\' அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற மேக்சிஸ் நிறுவனம், தனது துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ நெட்வொர்க் நிருவனத்தின் மூலமாக சன் டி.வி. குழுமத்துக்கு டொந்தமான சன் டி.டி.எச். நிறுவனத்தில் ரூ.600 கோடி முதலீடு செய்தது.

\'2ஜி ஸ்பெக்ட்ரம்\' அலைவரிசை ஒதுக்கீட்டை தயாநிதி மாறன் செய்து கொடுத்ததற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம், சன் டி.டி.எச். நிறுவனத்துக்கு ரூ.600 கோடி கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சிவசங்கரனிடம்சிபிஐ விசாரணை நடத்தியது. அவரும் இது தொடர்பாக பல உண்மைகளை கூறி வாக்குமூலம் கொடுத்தார்.

மேக்சிஸ் நிறுவன அதிகாரிகளிடமும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணைகளுக்கு பிறகு மேற்கண்ட குற்றச்சாட்டுகள் உரிய ஆதாரங்கள் கிடைத்ததாக சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. அதன் பிறகுதான் மத்திய மந்திரி பதவியில் இருந்து தயாநிதிமாறன் விலகினார். இதன்பிறௌ, சிபிஐயின் பிடி மேலும் இறுகியது.

இந்த நிலையில், தயாநிதிமாறன் தொலைத்தொடர்புத் துறை மந்திரியாக இருந்தபோது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை தனது குடும்ப நிறுவனமான சன் .டி.வி.க்காக முறைகேடாக பயன்படுத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்தது. மந்திரி என்ற முறையில் தயாநிதிமாறனுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒரு தொலைபேசி இணைப்பு வழங்கியிருந்தது. வெளிப்படையாக பார்த்தால் ஒரு இணைப்பு மட்டுமே தயாநிதி மாறன் வீட்டுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரியும். ஆனால் போர்ட்கிளப் ரோட்டில் உள்ள தயாநிதிமாரன் வீட்டுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பொதுமேலாளர் பெயரில் 323 தொலைபேசி இணைப்புகள் தனியாக வழங்கப்பட்டன.

இந்த இணைப்புகள் எல்லாம் தயாநிதிமாறன் வீட்டில் இருந்துசன் டி.வி.அலுவலகத்துக்கு விசேஷ கேபிள்கள் மூலம் திப்பிவிடப்பட்டு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டை தயாநிதிமாறன் உறுதியாக மறுத்துவந்தார்.

ஆனால் சிபிஐ அதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பான ஆவணங்களை தருமாறு கடந்த வாரம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் சிபிஐ கேட்டுள்ளது. இவ்வாறு 323 தொலைபேசி இணைப்புகளை தவறாக ப்யன்படுத்தியதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது.

சோதனை நடத்தப் பட்ட மாறன் வீடு

DSC_0357

DSC_0360

DSC_0391
உள்ளே நுழையும் மு.க.தமிழரசு.

இது தொடர்பான விசார‌ணையும் தயாநிதிமாறனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் மாறன் சகோதரர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment