தி.மு.க உள்ளாட்சி தேர்தலில் பரிதாப தோல்வி அடைந்துள்ளது.அதுவும்
தே.மு.தி.க அதிர்ச்சி தோல்வி..ராமதாஸ்,திருமாவளவ்ன் கட்சிகள் சைபர் மார்க்
வாங்கியிருக்கின்றன..மக்கள் ஜயலலிதா பக்கமே என நிரூபித்து இருக்கும் இந்த
தேர்தலில் ,கருணாநிதி மீது மக்கள் கோபம் இன்னும் தீரவில்லை போலும்.
தி.மு.க சில நகராட்சிகளும்(23 இடங்கள் முன்னிலை,8 வெற்றி),பேரூராட்சி (104
இடங்களும்,அ.தி.மு.க 247)நகராட்சி,பேருராட்சி கவுன்சிலர்கள் மட்டுமே பெறும்
நிலை உள்ளது.தே.மு.தி.க பேரூட்சியில் சில கவுன்சிலர் மட்டுமே
பெற்றுள்ளது.தி.மு.க வினர் மீதான பொய் வழக்குகளை கண்டு மக்கள் கொதித்து
போயுள்ளனர்.சமச்சீர் கல்வி விசயம்,கூடங்குளம் பிரச்சினை,கரண்ட்
கட்,துப்பாக்கி சூடு என எத்தனையோ பிரச்சினைகள் ஜயலலிதாவுக்கு எதிராக
திருப்பிவிட்ட போதிலும் ஜெயலைதாவின் இந்த மாபெரும் வெற்றி அவர் ஒரு புரட்சி
தலைவிதான் என்பதை தெள்ல தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது..ஆளுங்கட்சிதான்
ஜெயிக்கும் இது தெரியாதா என சொன்னாலும் வரலாற்றில் எப்போதும் இல்லாதபடி
கூட்டணி கட்சி இல்லாமல் வெற்றி பெறுவது அதுவும் அசுர பலத்துடன் ஜெயிப்பது
சாதாரணமா.எதிர்கட்சிகளின் ஓட்டு வங்கிகள் செல்லாகாசாகிவிட்டன..முழு ரிசல்ட்
வந்த பின் இவர்களின் உண்மையான ஓட்டு வங்கி லட்சணம்
தெரிந்துவிட்டது.இவர்களுக்கு எங்குமே ஆதரவு இல்லை.இவர்கள் சொந்த ஊரிலும்
கூட..வைகோ வின் ம்.தி.மு.க கணிசமான இடங்களை பெற்றுள்ளது.அவருக்கு
வாழ்த்துக்கள்.நல்ல மனுசன்.வெறும் வாய்சவடால் விடுவதில்லை.கடுமையாக
தமிழனுக்கு உழைக்கிறார்.
இனிமேல் தொகுதி பேச்சுவார்த்தைன்னு ஒருத்தரும் போயஸ்கார்டன் பக்கம் போக முடியாது..கூட்டணியில் சேர்த்தா போதும் என்பதே பெரிய விசயம்.கொடுத்ததை வாங்கிக்க வேண்டியதுதான்.இல்லைன்னா இப்படி மரண அடிதான்.ராமதாஸ்,திருமாவளவன் எல்லாம் எங்களுக்கு ஓட்டு வங்கி இருக்கு..வட மாவட்டங்களில் செல்வாக்கு இருக்குன்னு ஏமாத்துனாங்க..இப்போ எல்லாம் வெட்ட வெளிச்சமாயிருச்சி..உங்க ஊர்லியே ஜெயிக்க முடியலையாமா..?
Thanks to Sathis777
No comments:
Post a Comment