சவுக்கு யாரைப் பார்த்து இப்படி கேட்கிறது என்று வியக்காதீர்கள். நக்கீரன் இதழை நடத்துபவர்களை பார்த்துதான் இப்படி கேட்கிறது. இன்று வெளி வந்துள்ள நக்கீரன் இதழில் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. "மீண்டும் எரியும் தினகரன் வழக்கு" என்று. "அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பார்க்கப் பட்ட ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறது ஜெ.அரசு. மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் 2007ல் தாக்கப் பட்டு, தீவைக்கப் பட்டு 3 உயிர்கள் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐயும் மாநில அரசும் மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. திமுகவில் யாருக்கு செல்வாக்கு என்று தினகரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பால் அழகிரி ஆதரவாளர்கள் வெகுண்டனர். அட்டாக் பாண்டி தலைமையிலான 16 பேர் டீம் தாக்குதலில் இறங்கியதில் வினோத், கோபி, முத்து ராமலிங்கம் ஆகிய 3 ஊழியர்கள் பலியாயினர். அப்போதைய திமுக அரசு இதை சிபிஐ யிடம் ஒப்படைத்தது. அட்டாக் பாண்டிக்கும் அவருடனான 16 பேருக்கும் நேரடித் தொடர்பில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.” என்று தொடர்கிறது அந்தக் கட்டுரை. இந்தச் செய்தியை வெளியிட உங்களுக்கு துளி கூட வெட்கமாக இல்லையா என்று நக்கீரனைப் பார்த்து கேட்க விரும்புகிறது. ஏன் அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்க விரும்புகிறது என்று நினைப்பவர்கள், இந்த ஆண்டு ஏப்ரல் 6 அன்று, இது தொடர்பாக சவுக்கில் வெளி வந்த இந்தக் கட்டுரையை படிக்கவும். படித்து விட்டு நீங்களே சொல்லுங்கள். ப் பட்ட ஒரு மிகக் கேவலமான பத்திரிக்கை என்பதை சவுக்கு வாசகர்கள் நன்கு அறிவீர்கள். உண்மைகளை மறைப்பது, பொய்ச் செய்திகளை வெளியிடுவது, நல்லவர்களை தூற்றுவது, பொய்யர்களையும், புரட்டுக் காரர்களையும், நல்லவர்களாக எழுதுவது (ஆ.ராசா போல) நக்கீரன் பத்திரிக்கைக்கு கைவந்த கலை என்பதை அறிவீர்கள். இது தவிரவும், நடிகை த்ரிஷா குளிக்கும் போது ரகசியமாக எடுத்த வீடியோ, இணையத்தில் உலவிய போது, அந்த படத்தை ஃப்ரேம், ஃப்ரேமாக போட்டு, இணைய வசதி இல்லாதவர்களிடமும் அதை எடுத்துச் சென்று, த்ரிஷாவை மானபங்கப் படுத்தியது நக்கீரனே…. நித்யானந்தாவை அம்பலப்படுத்துகிறோம் என்ற போர்வையில், ரஞ்சிதாவை மானபங்கப் படுத்தியதும் நக்கீரனே…. இது மட்டும் அல்லாமல், எண்ணிலடங்கா குடும்பங்களை நாசப் படுத்தியதில் நக்கீரனுக்கு முக்கியப் பங்கு உள்ளது. இது தவிரவும், தற்போது, இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் 117 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்ட நக்கீரன், அவற்றில் 68 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று போட்டிருக்கிறது. மீதம் உள்ள தொகுதிகளுக்கான முடிவுகள் அடுத்த இதழிலாம். அதாவது இவர்கள் கணக்குப் படி, திமுக கூட்டணி 136 தொகுதிகளில் வெற்றி பெறுமாம். நக்கீரன் பத்திரிக்கையும், அதன் இணை ஆசிரியரான குருமாராஜும் செய்த ஊழல்களை முதன் முதலில் அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே.. சவுக்கு தளம் அதை அம்பலப்படுத்திய போது, சவுக்கு மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டு, குருமாராஜ், சவுக்கைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் இறங்கினார். சில பத்திரிக்கையாளர்கள் குருமாராஜைப் பற்றி தவறாக எழுதச் சொல்லி, சவுக்கைத் தூண்டுகிறார்கள் என்று குமுறினார். தான் அப்பழுக்கற்றவன் என்றார்…. நேர்மையின் உருவம் என்றார்….. ஆனால், அடுத்தடுத்து ஆதாரங்களோடு, சவுக்கு குருமாராஜை அம்பலப்படுத்தியதும், குருமாராஜின் வேஷம் கலைந்தது. ![]() இதற்கு முத்தாய்ப்பாக, டிசம்பர் மாதம், சிபிஐ குருமாராஜ் வீட்டில் நடத்திய சோதனைகள் அமைந்தன. முதலில், சிபிஐ எந்த ஆதாரங்களையும் எடுத்துச் செல்லவில்லை, எதையும் கைப்பற்றவில்லை என்று பொய்யுரை கூறிய குருமாராஜ், படிப்படியாக உண்மைகள் வெளிவந்ததும் வாயைப் பொத்திக் கொண்டார். அடுத்து, குருமாராஜ், சாதிக் மரணத்தில், வகித்த பங்கைப் பற்றியும் சவுக்கு செய்திகளை வெளியிட்டதும், மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். சிபிஐ தன்னைக் கைது செய்யுமோ என்ற அச்சத்திலே குருமாராஜ் இருப்பதாக குருமாராஜுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நக்கீரன் பத்திரிக்கை பொய்ச் செய்திகளையும், உண்மைகளை திரித்தும், புகைப்படங்களை மோசடி செய்தும் வெளியிடுவது வழக்கமே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேற எங்கும் கொடுக்கவில்லை….. மாவட்ட நீதிபதி முன்பாக அளித்துள்ளார். நக்கீரன் பொய்ச் செய்திகள் வெளியிடும் என்பதை நக்கீரன் பத்திரிக்கையின் இணை ஆசிரியரான குருமாராஜே தெரிவித்த பிறகு, வேறு என்ன ஆதாரம் வேண்டும். குருமாராஜ் எங்கே இது போல சொன்னார் ? மதுரை தினகரன் அலுவலகத்தில், நடந்த அந்த கொடூரச் செயலை மறந்திருக்க மாட்டீர்கள்…. அந்த வழக்கில் தான், இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப் பட்டது. ![]() தினகரன் பணியாளர்கள் எரித்துக் கொல்லப் பட்ட உடனே, சன் டிவி, வெளியிட்ட தலைப்புச் செய்தி என்ன தெரியுமா ? “ரவுடி அழகிரியின் அட்டகாசம்” என்பதுதான்.. அந்த செய்தி வெளியான போது, சட்டப் பேரவை நடந்து கொண்டிருந்தது. வசந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டிருந்த கருணாநிதி, சட் டிவியில் என்ன செய்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். “ரவுடி அழகிரி” என்ற வார்த்தையை கேட்டவுடன், கொதித்துப் போன கருணாநிதி, குருமாராஜை அழைத்து, தாக்குதலுக்கு ‘அட்டாக் பாண்டி’ தான் காரணம் என நக்கீரனில் அட்டைப் பட செய்தி போடச் சொல்லி உத்தரவிட்டார். ![]() குருமாராஜ் பத்திரிக்கையாளராக இருந்தால், உண்மை என்ன, இதில் அழகிரியின் பங்கு என்ன என்பதையெல்லாம் விசாரிப்பார். அவர் ப்ரோக்கர் இல்லையா ? கருணாநிதியின் உத்தரவுப் படி அப்படியே செய்தியை வெளியிட்டார். நக்கீரன் இதழில், அட்டைப் படத்தில், அழகிரியைப் பற்றி கருத்துக் கணிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அட்டாக் பாண்டி உள்ளிட்டவர்கள் கொதித்துப் போய் தினகரன் அலுவலகத்தை கொளுத்தி மூன்று பேரை கொன்று போட்டதாக செய்தி வெளியிடப் பட்டது. எப்படி விசாரணை நடத்துகிறார்கள் என்று பார்த்து விடுவோம் என்று நினைத்த கருணாநிதி, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ தனது விசாரணையை முடித்த பிறகு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த நீதிமன்றத்தில் தான், குருமாராஜ், இப்படிப் பட்ட ஒரு வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். ![]() சம்பவம் நடந்த அன்று, நக்கீரன் மதுரை நிருபர் ஒளி ராஜா மற்றும், புகைப்படக்காரர் அண்ணல் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் எடுத்து அனுப்பிய புகைப்படங்களையும் செய்தியையும் வைத்துத் தான் நக்கீரன் கவர் ஸ்டோரி வெளி வந்தது. இந்த அண்ணல், மதுரை நீதிமன்றத்தில் விசாரணையின் போது சம்பவம் நடந்த நாளன்று தனக்கு வயிற்று வலி (அன்னைக்குன்னு பாத்து எப்பிடிடா உனக்கு வயிறு வலிக்குது) என்பதால், மிகவும் தாமதமாக, மதியம் 2 மணிக்குத் தான் தினகரன் அலுவலகம் சென்றதாகவும், அங்கே கடும் புகை இருந்ததாகவும், அவற்றை புகைப்படம் எடுத்து சென்னை நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இவர் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்திலோ, சம்பவம் நடக்கத் தொடங்கிய 30 நிமிடங்களுக்குள் அங்கே இருந்ததாகவும், நக்கீரன் இதழில் வந்த அட்டைப் படம் உள்ளிட்ட படங்களை தான்தான் எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார். நிருபர் ஒளி ராஜா, இன்னும் சூப்பர். சம்பவம் நடந்த அன்று தான் அந்த இடத்திலேயே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார். ![]() இது தொடர்பாக சாட்சியம் அளித்தார் நக்கீரனின் இணை ஆசிரியர் குருமாராஜ். ஒளிராஜா மற்றும் அண்ணல் நக்கீரனில் பணியாற்று பவர்கள் தான். அவர்கள் இருவரும் அளித்த புகைப்படங்கள் மற்றும் செய்தியை வைத்துத் தான் நக்கீரன் 16.05.2007 நாளிட்ட கவர் ஸ்டோரி வந்தது. ஆனால் அதற்குப் பிறகு ஒரு அந்தர் பல்டி அடித்தார் பாருங்கள் குருமாராஜ்…. அந்த புகைப்படங்களும், செய்தியும், சிடியில் வந்ததாம். ஆனால் எப்படி வந்தது என்பது தெரியாதாம். ஈமெயிலா, கொரியரா, தபாலா, அல்லது நேரிலா என்பது சுத்தமாக நினைவில் இல்லையாம். (திருவான்மியூர்ல பொண்டாட்டி பேர்ல வீடு வாங்குனதாவது ஞாபகம் இருக்கா இல்லையா ?) ‘நீங்கள் ஒளிராஜாவும், அண்ணலும் செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பியதாக தெரிவிக்கிறீர்கள், ஆனால், அவர்கள் நாங்கள் செய்தியும் அனுப்பவில்லை, புகைப்படமும் அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்களே…. என்று கேட்டதற்கு, ‘அதுதான் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார். குருமாராஜை, கவுண்டமணி பாணியில் தான் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். ‘டேய் பச்சிலை புடுங்கி…. ஃபோட்டோ எப்டிடா வந்துச்சு ?’ என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் என்பதால் கேட்கவில்லை. அடுத்து குருமாராஜ், முக்கிய விஷயம் ஒன்றை தெரிவிக்கிறார். நக்கீரன் இதழில், புகைப்படங்களை, மார்ஃபிங் எனப்படும், ஒட்டு வேலை செய்து வெளியிடுவது வழக்கம் தான். இது போல பல புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறோம். முதலமைச்சரும், தயாநிதி மாறனும், அட்டாக் பாண்டியோடு இருப்பது போல, வெளியிட்டிருக்கும் புகைப்படமே நாங்கள் மார்ஃபிங் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு சாட்சி என்று கூறியிருக்கிறார். ![]() ![]() ![]() மேலும், தனது சாட்சியத்தில், “தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பிரபாகரன், தற்போதைய செய்தித் தாளை வைத்திருப்பது போல அட்டைப் படம் வெளியிட்டோம் என்று கூறியுள்ளார். (இதை வைத்து எத்தனை லட்சம் சம்பாதித்தீர்கள் அயோக்கியர்களே…. !) இதை விட, குருமாராஜ் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் பாருங்கள்….. அய்யய்யய்யய்யோ…. சூப்பரோ சூப்பர். “ஒரு ஆணின் முகத்தை, ஒரு பெண்ணின் ஒடலோடு பொறுத்தி, பல முறை நக்கீரனில் செய்தி வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறார். எப்படி இருக்கிறது ? இதுதான் நக்கீரன். இந்த பத்திரிக்கையை 8 ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு நக்கீரன் கொடுக்கும் மரியாதையைப் பார்த்தீர்களா ? தாங்கள் அனுப்பிய புகைப்படத்தையும், செய்தியையும், நான் அனுப்பவில்லை என்று கூறிய நக்கீரன் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டாம் ? அந்த இரண்டு ஊழியர்களும், இன்னும் நக்கீரனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இணை ஆசிரியராக இருக்கும் குருமாராஜே இப்படி பொய் செய்தி வெளியிடுவோம் என்று சொல்லும் போது, மற்றவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும். ![]() குருமாராஜைப் பற்றி சவுக்கு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அந்தப் பொறுப்பை தனது வாசகர்களிடமே விட்டு விடுகிறது. இப்போது சொல்லுங்கள். இதை எழுத நக்கீரனுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்ட கேள்வி சரிதானே ? Thanks to |
நெற்றிக்கண்

Thursday, June 30, 2011
உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?
சிக்கலில் தயாநிதி மாறன்
ஆ.ராசாவுக்கு ஆச்சாரியா தயாநிதி மாறனுக்கு கெளதம்.. 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, ஆ.ராசாவின் உதவியாளர் ஆசிர்வாதம் ஆசாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதே போல், தயாநிதிமாறனின் கூடுதல் தனிச் செயலாளராக இருக்கும் கெளதம், சிபிஐ வலையில் சிக்கி உள்ளார். ஏர்செல் சிவசங்கரன் சிபிஐயில் கொடுத்த புகார் தொடர்பாக, கெளதமிடம் வாக்குமூலம் வாங்க சிபிஐ முயற்சியில் உள்ளது. இதனால் தயாநிதிமாறன் அதிர்ச்சியடைந்துள்ளார். சிபிஐ, கெளதம் மூலமாக தயாநிதிமாறன் கைது படலத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதை முறியடிக்க தயாநிதிமாறன் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது. கெளதம் சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று, வேறு பெயரில் அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சையின் போது கெளதத்தை பார்க்க, தயாநிதிமாறன் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ஆனால் கெளதம் முரசொலி மாறன் பேரவையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் சந்திரசேகரை வரச் சொன்னார், அப்போலா மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி, தஞ்சாவூருக்கு சென்றுவிட்டார். தஞ்சாவூரில் சில நாட்கள் இருந்த கெளதம், அங்கிருந்து கேரளா மாநிலம் சென்றுவிட்டதாக தெரிகிறது. கடந்த 22 நாட்களுக்கு மேலாக, தயாநிதிமாறனுடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறார். ஆனால் சிபிஐ அதிகாரிகள் அவரை சந்தித்து வருகிறார்கள். யார், யார் கெளத்ததை சந்திக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள, கெளதம் இருக்கும் இடங்களில் தயாநிதிமாறன் வேவு பார்க்க சிலரை நியமித்துள்ளார். அவர்கள் சில நாட்களுக்கு முன்பு கெளதம் எங்கு போனார் என்று தெரியவில்லை என்று கூறியதால், தயாநிதிமாறன் அதிர்ச்சி அடைந்தார். சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த கெளதம், அயல்பணியில் முரசொலிமாறனிடம் பிஏவாக பணிபுரிந்தார். முரசொலிமாறனுக்கு மறைவுக்கு பிறகு தயாநிதிமாறனிடம் பிஏவாக தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார், அதனால் நம்பிக்கையாக ஏர்செல், மேக்ஸிஸ் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் கெளதம் மூலமாக காயை நகர்த்தினார் தயாநிதிமாறன். ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபரான சிவசங்கரன் சிபிஐயிடம் தந்த வாக்குமூலத்தில், 2004-2007ம் ஆண்டு காலத்தில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை அவரது நண்பரான மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு வற்புறுத்தினார் என்று கூறியிருந்தார். மேலும் இந்தியாவில் பிற பகுதிகளிலும் தனது செல்போன் சேவையை விரிவாக்க லைசென்ஸ் கோரி தொலைத் தொடர்புத்துறையை அணுகியபோதெல்லாம், அந்த பைல்களையும் கோரிக்கைகளையும் தயாநிதி மாறன் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும், ஏர்செல் நிறுவனத்தை அனந்த கிருஷ்ணனுக்கு விற்றே ஆக வேண்டும் என்று மிரட்டியே பணிய வைத்ததாகவும், ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றவுடன் அந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 14 மண்டலங்களில் செல்போன் சேவை தொடங்க தயாநிதி உடனே லைசென்ஸ் தந்ததாகவும் சிவசங்கரன் கூறியிருந்தார். இந்த விவகாரங்கள் குறித்து லண்டன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 10 நிதி ஆலோசகர்களுக்கும் முழு விவரமும் தெரியும் என்றும் சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 12ம் தேதி அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று அங்கு சிவசங்கரன் குறிப்பிட்ட நபர்களில் 2 முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும் அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்டு இந்தக் குழு கடந்த 19ம் தேதி இந்தியா திரும்பியது. இந்த வாக்குமூல விவரங்கள் தயாநிதி மாறனை பெரும் சிக்கலில் மாட்டிவிடும் என்று தெரிகிறது. இதேபோல இன்னொரு அமலாக்கப் பிரிவு-சிபிஐ அதிகாரிகள் குழு விரைவில் சிங்கப்பூருக்கும் செல்கிறது. அங்கு இந்த டீல் குறித்து விவரம் அறிந்தவர்கள் என்று சிவசங்கரனால் சுட்டிக் காட்டப்பட்ட நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி அங்கேயே அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யும் முடிவு செய்துள்ளது.. லண்டனில் வாக்குமூலம் பெறப்பட்ட இரு நபர்களும், தயாநிதிமாறனின் பிஏ கெளதம் பற்றி கூறியுள்ளார்கள். இதை தொடர்ந்து கெளதம் சிபிஐ கண்காணிப்புக்கு கீழ் வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மிகவும் அப்செட் ஆன மத்தியமைச்சர் தயாநிதிமாறன் 27.6.11 அன்று ஏர் இந்தியா விமானத்தில் டில்லி காலை 6மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். காலை 6.40 மணி ஏர் இந்தியா விமானத்தில் மு.க.ஸ்டாலின் டில்லி செல்வதால், மாஜி அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 100 பேர் வந்திருந்தனர். இதைப்பார்த்த தயாநிதிமாறன் ஏர் இந்தியா விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு, கிங் பிஷ்ஷர் விமானத்தில் டில்லி சென்றார். மத்தியமைச்சர் தயாநிதிமாறன் பிடி இறுகுவதால், திமுக தலைமை தயாநிதிமாறனை காப்பாற்றுவதில் அக்கறை செலுத்தாத காரணத்தால், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் இவர்களை சந்திப்பதை தயாநிதிமாறன் விரும்பவில்லை. அதனால் கெளதம் சிபிஐ பிடியில் சிக்கி வாக்குமூலம் எதுவும் கொடுக்க முடியாதபடி முரசொலிமாறன் பேரவை நிர்வாகிகள் மூலம் அடுத்த கட்ட முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் தயாநிதிமாறன்.. தயாநிதிமாறன், அமைச்சர் பதவியை காப்பாற்றிக்கொள்ள, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமதுபட்டேல் மூலம் முயற்சி மேற்க்கொண்டார், ஆனால் ராகுல்காந்தி, தயாநிதிமாறன் சந்திப்புக்கு முட்டுகட்டையாக உள்ளார். அவர் ஆ.ராசாவுக்கு பதிலாக அமைச்சர் பதவி, தயாநிதிமாறன் நீக்கப்பட்டவுடன் அவருக்கு பதிலாக அமைச்சர் பதவி திமுகவுக்கு கொடுப்பதை விரும்பவில்லையாம். அதனால் திமுக தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.. நன்றி புதிய தமிழகம் |
Subscribe to:
Posts (Atom)