என்கிட்ட இருகிறது கருப்பு பணம் இல்லிங்கோ!
கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் யோகா குரு ராம்தேவ் தான் நடத்தும் டிரஸ்டுகளின் சொத்து மதிப்பு 1100 கோடி என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது தன் உதவியாளர் பாலகிருஷ்ணா ராம்தேவ் நடத்தும் நான்கு டிரஸ்டுகளின் சொத்து மதிப்பு 426 கோடி என்றும் அதன் செலவினங்கள் 751 கோடி என்றும் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ராம்தேவின் வருமானம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய்சிங் கோரியதற்கேற்ப இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா, தாங்கள் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதாக கூறினார். ஆனால் ராம்தேவுக்கு நன்கொடை வழங்கும் நிறுவனங்களின் பெயர்களை அளிக்க மறுத்து விட்டார். "மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று கொள்ளலாம்" என்றார்.
No comments:
Post a Comment