நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Tuesday, June 14, 2011

ஜெயலலிதாவை பழிவாங்கும் சன் டிவி

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்( தேர்தல் முறைகேடு) , மற்றும் தயாநிதி ( ஸ்பெக்ட்ரம் ஊழல் ) ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது வலியுறுத்தினார். முன்னதாக பிரதம‌ரை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக 30 பக்கம் கொண்ட கோரிக்கை மகஜரை பிரதமரிடம் ஜெ., வழங்கினார்.

சந்திப்பிற்கு பின்னர் ‌ஜெ., நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கடந்த 2009 தேர்தலில் முறைகேடு செய்து ப.சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். இத‌ைனை அ.தி.மு.க., ‌‌தொடர்‌ந்து கூறி வருகிறது. இவர் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். எங்களது கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றார். டேட்டா என்ட்ரி செய்யும் ஆப்ரேட்டர் மூலம் இதி்ல குளறுபடி செய்து விட்டார். அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த பிரச்னை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மோசடி செய்து வெற்றி பெற்று நாட்டை ஏமாற்றியிருக்கிறார் உள்துறை அமைச்சர் சிதம்பரம் . எனவே அவர் தமது பதவியில் இருந்து விலக வேண்டும்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி அவரே பதவி விலகியிருக்க வேண்டும் அவர் பதவி விலகாததால் தயாநிதியை, பிரதமர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியின்போது அவர்கள் தங்களுக்கு சொத்து சேர்ப்பதிலேயே குறியாக இருந்தனர். குடும்ப ஆட்சியே அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது. விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் எவ்வித கவலையும் அடையவில்லை என்றார்.தி.மு.க.,வினர் மீது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது தி.மு.க.,மீது தாம் எதுவும் கிரிமினல் வழக்கு போட யாருக்‌கும் சிக்னல் கொடுக்கவில்லை என்றார்.

தயாநிதியை பதவி விலக சொல்ல வேண்டும் என டில்லி மீடியாக்களிடம் ஜெயலலிதா பேசிக்கொண்டிருக்கும்போதே சமச்சீர் கல்வி திட்டம் இந்த வருடமும் தொடர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்தது...
.1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை தொடரலாம்..அதற்கு மேல் உள்ள பாடங்கள் குறித்து நிபுணர் குழு அமைத்து அவர்கள் இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்தபின் அறிவிக்கப்படும்..என நீதிபதிகள் குறிப்பிட்டனர்,...

இதனை கலைஞர் டிவி அமைதியாக சொல்லிக்கொண்டிருக்க,சன் நியூஸ் சேனலோ அலறியது....தேர்தல் சமயத்தில் விஜயகாந்த் ,கம்யூனிஸ்ட் பேச்சு நடத்திய போது அ.தி.மு.க கூட்டணி உடைந்தது என அலறியதே அதே போல..பெரிய எழுத்துக்களில் வேறு எந்த செய்தியையும் காட்டாமல் ,எமர்ஜென்ஸி டைம் போல ஒளிபரப்புகிறார்கள்....அய்யோ மாணவர்கள் என்ன செய்வார்கள் என்கிறார்கள்...இது முக்கிய செய்திதான்..ஆனால் அதை பார்ப்பவர்களுக்கு முக்கிய தலைவர்கள் இறந்து போனார்களோ என அஞ்சும் அளவுக்கு பயமுறுத்துகிறார்கள்....

தயாநிதியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜெ..டெல்லி மீடியாக்களிடம் பேட்டி கொடுத்த பின் இந்த மாற்றம்....தேர்தல் முடிவு வரும்போது..ஜெயா டிவி செய்திகள் போல ஜெ..வுக்கு ஆதரவாக செய்தி போட்டதும்...ஜெ...தயாவை மறந்துவிடுவார் என நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது..அவர் மறக்கவில்லை என்றதும் ...பிரளயம் நடந்தது போல செய்தி வெளியிடுகிறார்கள்.


டில்லியில் சூறாவளியாய் சுழலும் ஜெவை கண்டு நடுங்கி சோனியா இத்தாலி போய்விட்டாரோ என்னவோ...உள்துறை அமைச்சருக்கு எதிராக டில்லியில் முழக்கமிட்ட ஜெ..துணிச்சல் எந்த தலைவருக்கும் வராது..நிச்சயம் டில்லி மீடியாக்கள் திகைத்துதான் போயிருக்கும்.



த்யாநிதி விசயத்தில் பிரதமர் குழம்பி கொண்டிருக்கும் நேரத்தில்..ஜெ.. உடனே பதவியை விட்டு நீக்க வேண்டும் என சிங்கம் போல கர்ஜனை செய்ததை கண்டு பூனை போன்ற நம் பிரதமர் நடுங்கிதான் போயிருப்பார்

Thanks to Sathis777

No comments:

Post a Comment