நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Tuesday, June 14, 2011

தயாநிதி மாறனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்-சிபிஐ

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனை உடனடியாக பதவி விலக உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் நீடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதே நல்லது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாநிதி மாறன் மீது புதிய குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் அவர் பதவி விலகியதை பிரதமர் மன்மோகன் சிங் உறுதி செய்ய வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நீதின்றத்தில் நடைபெறும் நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் பதவியில் இருந்தபோதுதான் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

லோக்பால் மசோதா வரைவு குழுவில் மற்ற அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து விட்டு தான் மட்டும் காங்கிரஸ் மட்டும் அதில் இடம் பெற்றுள்ளது. கடும் கண்டனத்துக்குரியது.

அரசியல் கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு மசோதா தயாரிக்கப்பட்டாலும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற அரசியல் கட்சிகளின் ஒத்துவைப்பு அவசியம் என்பதை அரசு உணர வேண்டும்.

பிரதமர் அலுவலகம், நீதிமன்ற அமைப்புகள் அனைத்தும் விசாரணை வரம்புக்குள் வர வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும். இதற்கான காரணங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிப்போம்.

லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் பொதுமக்கள் பிரதிநிதிகள் ஐந்து பேரை சேர்த்துவிட்டு பின்னர் அவர்களைப் பற்றி விமர்சிக்கும் வேலையை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது மிக மோசமான நடைமுறையாகும் என்றார்.

Thanks to Sathis777

No comments:

Post a Comment