நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Wednesday, June 15, 2011

செவ்வாய் கிரகத்தில் காந்திஜி உருவம் கொண்ட பாறை


செவ்வாய் கிரகத்தில் மகாத்மா காந்தியின் முகத் தோற்றமுள்ள பாறை ஒன்று இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய விண்வெளிக் கழகம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்பிட்டர் எனும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இது தொடர்ந்து விண்வெளியிலிருந்து படங்கள் எடுத்து அனுப்பி வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்த போது அங்கு மகாத்மா காந்தியின் முகத் தோற்றமுடைய ஒரு பெரும் பாறையைக் கண்டதாக மட்டியோ லானியோ என்பவர் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியை நினைவுபடுத்தும் வழுக்கைத் தலை, கனத்த புருவம், மீசை ஆகியவற்றைக் கொண்ட தோற்றமுள்ள பாறையைக் கண்டதாக படங்களை ஆய்வு செய்த அவர் கூறியுள்ளார். இச்செய்தியை இங்கிலாந்து நாளேடான டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment