என்னடா சீனா உங்களோடு ஒரே அக்கப்போராக அல்லவா...இருக்கிறது...? அருணாசல பிரதேசம் எங்களுடையது என்றீர்கள்...முந்தாநாள்,அங்குள்ளவர்களுக்கு தனியாக சீனா பாஸ்போர்ட் கொடுத்தீர்கள்....நேற்று விடுதலைபுலிகளை ஒடுக்க,இலங்கைக்கு டன் டன்னாக ஆயுதங்களை வழங்கினீர்கள்..
இந்தியா கலடியில் இருக்கும் நாட்டுக்கு ,இந்தியா தலையில் இருக்கும்,இவன் எதுக்கு இவ்வளவு இறங்கி வரான்னு..இந்தியாவுக்கு புரியவே இல்லை...இன்னிக்கு..இமயமலையில் உற்பத்தி ஆகி சீனா வழியாக ஓடிவரும் பிரம்மபுத்திரா நதியை வழிமறித்து அதில் அணை கட்டி வருகிறது சீனா....தண்ணீரை மடை திருப்பி அவர்கள் நாட்டுக்கு முழுமையாக பயன்படும்படி செய்துகொண்டுவிட்டனர்...
இவ்வளவு சீரியசான ஒரு விசயத்தை நமது வெளியுறவு துறை மந்திரி எப்படி ஆட்சேபம் செய்திருக்க வேண்டும்..?ஆனால் இவர் சொல்கிறார்..இதனால் எந்த பிரச்சனையும் இல்லை...பிரம்மபுத்ரா நீர் பிடிப்பு பகுதிகள் அருணாச்சல பிரதேசம்,அஸ்ஸாமில் இருக்கிறது அதனால் கவலைப்பட வேண்டாம்...என்ன கொடுமை..எதிர்கால சந்ததியினரின் நீர் ஆதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த முக்கிய பிரச்சனையில் நமது மந்திரி இப்படி இருக்கிறார்...
சீனா வின்,பிரம்மபுத்ரா பிராஜக்ட் படம்
இவர் பதவியில் இருக்கும் வரை இவருக்கு பிரச்சனையான விசயத்தில் தலையிட விரும்பவில்லை...அதுதான் இந்த மழுப்பலுக்கு காரணம்..பாரதம் மிகப்பெரிய நாடு...இந்த நாட்டின் மிக உயரிய ஒரு பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் இவ்வளவு மந்தமாகவும்,அலட்சியமாகவும்,தொலைநோக்கு பார்வையில்லாமல் இருப்பது நம் துரதிர்ஷ்டம்.
--------------------------
இலங்கையின் அடிமை போல செயல்படுகிறது இந்தியா...அன்று இலங்கைக்கு ஆயுதங்களை சீனாவுக்கு போட்டியாக அள்ளி அள்ளி கொடுத்தது..மேப் வரைந்து பாகம் குறித்து...புலிகள் இங்கதான் இருக்காங்க..போய் அடிங்க என்று தள்ளிவிட்டது இந்தியா...போர் முடிந்து,எங்களுக்கு வருமானத்து ரெடி பண்ணி கொடுன்னு இலங்கை உத்தரவிட்டிருக்கும் போல...தூத்துகுடி-இலங்கை கப்பல் போக்குவரத்தை என்னவோ சாதனை போல பிலடப் கொடுத்து..இது தமிழ்கத்தின் வரபிரசாதம் போல சீன் கிரியேட் செய்கிறார்கள்..கலைஞர் முதல்வராக இருந்தால்...தமிழா திருவள்ளுவர் சிலை வைத்தேன்..வ.உ.சி.கனவை நனவாக்கி கப்பல் விட்டேன்...இதை சரித்திரம் சொல்லும் என்றிருப்பார்...
இலங்கையின் போர்குற்றம் மறைக்க,இலங்கையின் சுற்றுலாதுறை வளர்ச்சி அடைந்து,அன்னிய செலவாணி பெருக நடக்கும் இந்த நாடகத்தை ஜெ..வனமையாக கண்டித்துள்ளார்..தூத்துக்குடி மக்களின் ஓட்டு வங்கியை நினைத்து பாராமல் அவர் இந்த கப்பல் போக்குவரத்தை உடனே நிறுத்த வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
அதேபோல இலங்கையில் மீள் குடியேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நேரில் கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.
Thanks to Sathis777
No comments:
Post a Comment