நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Friday, June 10, 2011

2ஜி ஒதுக்கீட்டில் அதிகாரிகளை அச்சுறுத்தினார் ராசா: சிபிஐ இயக்குநர்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது, ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு, அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா அதிகாரிகளை அச்சுறுத்தினார் என சிபிஐ கூறியுள்ளது.நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) முன்பாக, சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் அளித்த தகவலில் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும், ராசாவின் முடிவுக்கு சாதகமாக செயல்படாத 2 அதிகாரிகள், தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெஹுராவால் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் சிபிஐ இயக்குநர் தெரிவித்துள்ளார்.
டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பம் காணாமல் போனதாகவும், அந்த நிறுவனம் மீண்டும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டதாகவும் சிபிஐ இயக்குநர் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment