நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Thursday, June 9, 2011

மாட்டிக் கொண்ட மாறன்….


இதன் அடிப்படையில் தான், தயாநிதி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது, விமான நிலையத்தில் கூவியது எல்லாம். இன்று, தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக, சென்னை அண்ணா சாலையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

IMG_0240

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்தி விட்டு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தொலைத் தொடர்புத் துறை சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் மதிவாணன், இந்த கடிதம் தொடர்பான விபரங்களைக் கூறினார்.
 legal_notice_Page_2
legal_notice_Page_3
legal_notice_Page_4

legal_notice_Page_5
legal_notice_Page_6
legal_notice_Page_7

2009 பாராளுமன்றத் தேர்தலின் போது, முதன் முறையாக 323 இணைப்புகள் குறித்த செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து செல்வி.ஜெயலலிதா, இந்த விவகாரத்தை பொதுக் கூட்டத்தில் பேசினார். அது தேர்தல் நேரம் என்பதால், உடனடியாக இந்தச் செய்திக்கு மறுப்பு வெளியிட வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டது. அப்போது, சென்னைத் தொலைபேசியின் தலைமைப் பொது மேலாளராக இருந்த, வேலுச்சாமி என்பவர் திமுகவுக்கும், குறிப்பாக தயாநிதி மாறனுக்கும் மிகுந்த நெருக்கமாக இருப்பார். தயாநிதி சென்னையில் இருந்தால், தினமும், அவர் இல்லத்திற்கு செல்லும் அளவுக்கு தயாநிதியின் தொண்டர் அடிப்பொடியாக இருந்தார். அவர், ஒரு கடிதத்தை தயார் செய்து, அந்தக் கடிதத்தில் அப்போதைய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, இந்தக் கடிதத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார், அதனால் கையொப்பம் இடுங்கள் என்று, மிரட்டி மீனலோசனியிடம் கையொப்பம் பெற்றார் என்ற தகவலைக் கூறினார்.

அரசு ஊழியர்கள் பணியாற்றுகையில் நெருக்கடிகளும், மிரட்டல்களும் வருவது இயல்பே. அந்த மிரட்டல்களையெல்லாம் சமாளித்துதான் பணியாற்ற வேண்டும். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், தவறுக்கு துணை போகக் கூடாது… தூக்கிலா போட்டு விடுவார்கள் ?   அன்று மீனலோசனி கொடுத்த கடிதம் தான், இன்று வரை தயாநிதி மாறனை திமிரோடு இருக்கச் செய்திருக்கிறது. மேலும், மீனலோசனி, இரண்டு எண்கள் இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில், ஒரே ஒரு எண்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று, பொய்யான சான்றை அளித்துள்ளார். அதனால், மீனலோசனி மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை கட்டாயம் எடுக்க வேண்டும் என்றே சவுக்கு கருதுகிறது.
 IMG_0235
மேலும் தொடர்ந்த மதிவாணன், கேடி சகோதரர்கள் எவ்வளவு அற்பத்தனமாக நடந்து கொண்டார்கள் என்பதையும் தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் சன் டிவி அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருந்த போது, பிஎஸ்என்எல் இணைப்புகளைத் தான் பயன்படுத்தி வந்தார்கள்.   அந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு செல்கையில், பிஎஸ்என்எல்லுக்கு 10 லட்சம் ரூபாய் பாக்கி வைத்து விட்டு சென்றார்கள், அந்தத் தொகையை இன்று வரை கட்டவில்லை என்றும் தெரிவித்தார். அலுலவகம், அறிவாலயத்தை விட்டு, புதிய இடத்துக்குச் சென்றதும், இந்தப் பாக்கித் தொகையை கட்டுவதை தவிர்ப்பதற்காக, தனியார் நிறுவனத்திடம் இணைப்புகளைப் பெற்றார்கள் என்றும் கூறினார்.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பாக 10 ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கி வந்த பிஎஸ்என்எல், இன்று நஷ்டத்தில் இயங்குவதற்கு, இது போன்ற செயல்களே காரணம் என்றும் தெரிவித்தார்.

தயாநிதி மாறன், கேபினெட் அமைச்சராக இருக்கும் வரை, உருப்படியான விசாரணை எதுவுமே நடைபெற வாய்ப்பில்லை அதனால், தயாநிதி மாறன் ராஜினாமா செய்யும் வரை காத்திருக்காமல், உடனடியாக மன்மோகன் சிங் தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், தயாநிதி மாறனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 440 கோடி ரூபாயை உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 23dayanidhi_2_63753_637539a
இந்த ஆர்ப்பாட்டம் இத்தோடு நிற்காது என்றும், அடுத்த கட்ட போராட்டங்கள் தொடரும் என்றும் கூறினார்.

நாங்கள் தொழிற்சங்க வாதிகள். எங்களுக்கு அரசியல் நோக்கம் கிடையாது. பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனம் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் கூறினார்.
24371500

போன வாரம் வரை இப்படி இருந்த இணைய பக்கம்.....

van

இன்னைக்கு இப்படி மாறிப்போச்சே எப்புடி... ?
தொழிற்சங்கங்கள் தான் இந்நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை இது நாள் வரை காப்பாற்றி வைத்துள்ளன. தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்சைனையை கையில் எடுத்திருப்பதை சவுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. இந்த தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தை இப்படியே நிறுத்தி விடாமல், தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று சவுக்கு எதிர்ப்பார்க்கிறது.   வாழ்த்துக்கள் தோழர்களே….

Thanks to
சவுக்கு

No comments:

Post a Comment