![]() | |
. | |
. | |
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழியை, அவரது சகோதரரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தபோது, உணர்ச்சிபெருக்கால் கனிமொழி கண்ணீர் விட்டு அழுததாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. | |
. | |
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியை நேற்று மாலை 4 மணியளவில் திமுக பொருளாளரும், கனிமொழியின் சகோதரருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கனிமொழி அடைக்கப்பட்டுள்ள 6ம் எண் அறையில் சுமார் 30 நிமிட நேரம் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டாலினை பார்த்ததும், சோகத்தை அடக்க முடியாமல் உணர்ச்சிப்பெருக்கால் கண்ணீர் விட்டு அழுததாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அவரை தேற்றியதுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழில் உரையாடியதாக அவர் கூறியுள்ளார். ஸ்டாலினுடன் சென்றிருந்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் கனிமொழியை சந்தித்து அவர் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, சிறை விதிகளுக்கு கீழ்படிந்து நடந்து கொள்கிறார் என்றும், அவர் தனக்காக மற்றவர்களை போல எந்த வசதியையும் கேட்கவில்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். திகார் சிறையில் உள்ள கைத்தொழில் கூடங்களுக்கு கனிமொழி சென்று அங்கு வேலை செய்பவர்களுடன் பேசுவார் என்றும், தங்களது வேலைப்பாடுகளை கனிமொழியிடம் காட்டி அவர்கள் பெருமிதம் கொள்வார்கள் என்றும் அதிகாரி கூறினார். கனிமொழியை சந்தித்த பின்னர் முதலாம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவையும், அதன் பின்னர் 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ள கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரையும் ஸ்டாலின் சந்தித்து பேசினார். ராசாவின் உடல்நலம் குறித்து விசாரித்த ஸ்டாலின் அவருடன் நீண்ட நேரம் தற்போதைய அரசியல் நிலை குறித்தும் விவாதித்தார். |
நெற்றிக்கண்

Tuesday, June 28, 2011
கனிமொழி கண்ணீர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment