லண்டன், ஜூன் 15- இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறியுள்ளார்.இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ காட்சிகளின் முழு தொகுப்பை "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற பெயரில் "சேனல் 4" ஒளிபரப்பியது. இதில், பெண்களின் கைகளை கட்டி அவர்களது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, முன்னாள் புலி ஒருவரை கத்தியை வைத்து மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் பெண் புலிகள் கொல்லப்பட்டு கிடப்பது உட்பட பல கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த காட்சிகளை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் மீது இலங்கை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரிட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கருத்து தெரிவித்தார்.இதனிடையே, சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் "யு டியூப்" உட்பட பல்வேறு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை இலங்கை மீறியிருப்பதற்கு, சேனல் 4 முன்பு ஒளிபரப்பிய காட்சிகள் ஆதாரமாக உள்ளது என்று ஏற்கெனவே ஐநா நிபுணர் குழு கூறியிருந்தது. இந்நிலையில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து முழுமையான விடியோ வெளியாகியுள்ளதால், அதிபர் ராஜபட்ச அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உலகமே கண்டனம் செய்யும் போது இந்திய இலங்கைக்கு கப்பல் விடுவது கேவலமானது ! வெட்கபவேண்டியது !!
No comments:
Post a Comment