நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Tuesday, June 28, 2011

2 ஜி வழக்கு: கரீம் மொரானிக்கு கிடைக்குமா ஜாமீன்?


Kareem Morani
டெல்லி: 2 ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இந்திப் பட இயக்குநர் கரீம் மொரானியின் உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், இந்தி சினிமா இயக்குநர் கரீம் மொரானி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 52 வயதான அவர் ஜெயிலில் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. உடல்நிலை மோசமாக உள்ளதால் கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதி அஜித் பாரிஹோகி விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட பின்னர் வழக்கின் அடுத்த விசாரணையை ஜுலை 5-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

கனிமொழி உள்பட 2 வழக்கில் கைதான அனைவருக்கும் ஜாமீன் மறுத்தவர் இதே நீதிபதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலையைக் காரணம் காட்டி கரீம் மொரானிக்கு ஜாமீன் வழங்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
  

No comments:

Post a Comment