நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Monday, June 20, 2011

சாய்பாபா அறக்கட்டளை வாகனத்தில் கடத்தப்பட்ட ரூ. 35 லட்சம் பணம் சிக்கியது

சத்ய சாய் அறக்கட்டளைக்குச் சொந்தமான வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தப் பணம் ரொக்கமாக கட்டுக் கட்டாக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணம் சத்ய சாய் மத்திய அறக்கட்டளைக்குச் சொந்தமானதாக கருதப்படுகிறது. இந்த பண விவகாரம் தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அனந்தப்பூர் மாவட்ட எஸ்.பி. ஷா நவாஸ் காசிம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு வாகனத்தில் ரூ. 35 லட்சம் பணம் கொண்டு செல்லப்பட்டது. அந்தப் பணத்தை தடுத்து நிறுத்தி போலீஸார் பணத்தைப் பறிமுதல் செய்தனர். கொடிக்கொண்டா சோதனைச் சாவடியில் இந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வேன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். பணம் குறித்த விவரம் குறித்ுத விசாரித்து வருகிறோ்ம் என்றார் அவர்.

No comments:

Post a Comment