
இருவரும் டில்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்களது பிணை மனுக்கள் சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்திலும் டெல்லி மேல்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் உள்ளது.அவர் கலைஞர் ரி.வி.யில் முக்கிய பங்குதாரராக செயற்பட்டுளார்.அவருக்கு அரசியல் பின்னணி உள்ளதால் பிணையில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று டில்லி மேல் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.
இதையடுத்து கனிமொழியும் சரத்குமாரும் உச்சநீதிமன்றத்தில் பிணை மனுத் தாக்கல் செய்தனர்.கடந்த 10 ஆம் திகதி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.13 ஆம் திகதி பிணை மனுக்கள் விசாரணைக்காக வந்தன.மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி இதற்கு ஒரு வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
சி.பி.ஐ.குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கனிமொழி தரப்பில் உச்சநீதிமன்றில் சனிக்கிழமை 47 பக்க பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கனிமொழி சார்பில் சட்டத்தரணி வி.ஜி.பிரகாசம் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் கலைஞர் ரி.வி.க்கு சுவான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வாவிடம் இருந்து ரூ.200 கோடி பணம் முறைப்படி கடனாகத்தான் பெறப்பட்டுள்ளது.இதில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை.வர்த்தகம் தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது.அதை சி.பி.ஐ.தவறாக சித்திரித்துள்ளது.
ரூ.200 கோடி கடனுக்கு சந்தை நிலைவரப்படி வட்டி வழங்கப்பட்டுள்ளது.இதில் எல்லா சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்து.டில்லி மேல்நீதிமன்றம் சரியாக ஆராயாமல் கனிமொழியின் பிணை மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை கனிமொழியின் பிணை உச்சநீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது.அப்போது சி.பி.ஐ.தரப்பிலும் கனிமொழி தரப்பிலும் ஆஜராகி வாதாடுகிறார்கள்.இருதரப்பு வாதங்களும் முடிந்த பிறகு பிணை மனு தீர்ப்பு வழங்கப்படும்.
உச்ச நீதிமன்றில் கனிமொழி பிணை மனு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் பி.சதாசிவம் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் விலகிக் கொண்டனர்.இதனால் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி,பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்பு கனிமொழியின் பிணை மனு விசாரணை நடைபெறுகின்றது.
No comments:
Post a Comment