நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Sunday, June 12, 2011

ஒரே வரிசையில் இருக்கை ஒதுக்காவிட்டால் சபை நடவடிக்கைகளை புறக்கணிப்போம்

 ‘‘திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரே வரிசையில் இருக்கைகள் ஒதுக்காவிட்டால் சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள மாட்டோம்’’ என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டசபை  கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் திமுக உறுப்பினர்கள் இன்று புறக்கணிப்பு செய்தனர். அதன்பின்னர் சட்டசபை வளாகத்தில் திமுக சட்டப்பேரவை தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

சட்டபேரவையில் நேற்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் மீது திமுக உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அந்த தீர்மானத்தின் மீது சட்டபேரவை திமுக துணை தலைவர் துரைமுருகன் ஆதரித்து பேசினார். எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் இந்த தீர்மானத்தின்மீது பேசும்போது திமுக அரசை இழித்தும் பழித்தும் திமுக தலைவரை கேலியும் கிண்டலும் செய்து பேசி இருக்கிறார். இதற்கு துரைமுருகன் ஆட்சேபனை தெரிவித்து பேசினார். இருந்தபோதிலும் கூட விஜயகாந்த் தரக்குறைவான பேச்சை அடுக்கிக் கொண்டே போய் உள்ளார்.
 

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
 இதற்கு விளக்கம் தர துரைமுருகன் முற்பட்டபோது, ‘விஜயகாந்த் பேசி முடித்ததும் பேச வாய்ப்பு தரப்படும்’ என்று சபாநாயகர் கூறினார். ஆனால் கடைசி வரை பேச வாய்ப்பு தரவில்லை. இதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த  நேரத்தில்கூட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அருகில் வந்து தேமுதிக உறுப்பினர்கள் கேலியும் கிண்டலுமாக பேசுவதும் நுழைவாயிலில் இடை மறிப்பு செய்வதும், வேட்டியை மடித்துக்கொண்டு தாக்க முற்பட்டதும் நடந்திருக்கிறது. முன் மற்றும் பின் வரிசையில் திமுக  எம்.எல்ஏக்களுக்கு ஒரே வரிசையில் இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என்று சபாநாயகர் ஜெயகுமாரிடம், தலைவர் என்ற முறையில் கடிதம் கொடுத்தேன். இன்று காலை அதற்கு பதில் கடிதம் வந்தது. அதில் சட்டமன்ற விதிகளின்படிதான் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் அப்படி அல்ல. எங்கள் ஆட்சி காலத்தில் பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்குமே அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. எனவே எங்களுக்கு ஒரே வரிசையில் இருக்கைகள் ஒதுக்கித் தராவிட்டால் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள மாட்டோம்.

ரொம்ப முக்கியம்!
Thanks to Dinakaran

No comments:

Post a Comment