நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Saturday, June 11, 2011

தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தமிழகம், புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால் வாக்கு வங்கியை இழந்துவிடக்கூடாது என்பதால் தமிழகத்தில் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சந்தேஷ் பத்திரிகையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.newsreporter.in/wp-content/uploads/2011/05/DMK-UPA-break-out-boycott-dinner.jpg 
2ஜி வழக்கில் திமுக எம்பி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் அவசரமாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும்நிலையில் திமுகவை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.2ஜி ஊழலால்தான் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்பட்டன என அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மறுஆய்வுசெய்ய வேண்டும். கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால் வாக்குவங்கியை இழந்துவிடக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Thanks to Dinamani

No comments:

Post a Comment